Monday, January 04, 2016

தகவல் வளங்கள்

யாழ். பல்கலைக்கழக நூலகத்தின் முதல் நிலைத் தகவல் வளங்கள்: ஒழுங்கமைப்பு, பயன்பாடு பராமரிப்பு



ஆய்வுச் சுருக்கம்

(அறிவியல் ரீதியில் நோக்கும் போது சமூகத்தின் அதி உயர் கல்வி நிறுவனமாக இருக்கின்ற பல்கலைக்கழகம் ஒன்றின் ஆய்வுத் தேவைக்கு அதிகமாக உதவுபவை முதல் நிலைத் தகவல் வளங்களே. எனினும் பொருளாதார நோக்கில் பார்க்கும் போது வளர்ச்சியடைந்த தேசங்களின் ஆய்வு முயற்சிகள் அதிக பொருட் செலவில் தரம் மிக்க நூல்கள், ஆய்வறிக்கைகள், பருவ இதழ்கள் போன்ற வடிவில்; எமது நூலகத்தை வந்தடைகின்ற அதே சமயம், வெளியீட்டுக்கான வாய்ப்பின்றி அல்லது வெளியீட்டுச் செலவை ஈடு கட்டும் வாய்ப்பின்றி பெறுமதி மிக்க முதல்நிலைத் தகவல் வளங்கள் சர்வ தேச தராதரத்துக்கு ஏற்ப பதிப்பிக்கப்படாமல் யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தில் காணப்படுகின்றன. கையெழுத்துப் பிரதிகளாக, செய்தித் தாள் கட்டுரைகளாக, சிறுநூல்களாக, சிறப்பு மலர்க் கட்டுரைகளாக இலை மறை காயாக இருக்கும் பிரதேச முக்கியத்துவம் வாய்ந்த சிறந்த ஆய்வு முயற்சிகளையும் அதன் முக்கியத்துவத்தையும், அவை பேணிப் பாதுகாக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் ஓரளவேனும் வெளிக்கொணர இக் கட்டுரை முயல்கிறது.)




அறிமுகம்

ஷஒரு நாட்டுக்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ வெளியிடப்பட்ட, வெளியிடப்படாத அனைத்து தகவலும் தகவல் வளங்கள்; எனப்படும்ஷ என தகவல் வளங்கள் என்ற பதத்தை வரைவிலக்கணப்படுத்தும் தன்மை காணப்படினும் கூட1 தகவல் சாதனங்களிலிருந்து பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படும் தகவலே பெரும்பாலும் வளம் என்ற பெயரால் குறிக்கப்படுகிறது. இவை பதிவேடுகளில் பதியப்பட்ட நூல்கள், பருவ இதழ்கள் போன்ற அச்சு வடிவ ஊடகங்களாகவோ அல்லது சுவடிகள், ஓவியங்கள் போன்ற அச்சு வடிவற்ற ஊடகங்களாகவோ அதுவுமன்றி தகவலைப் பரப்பும் வல்லமை மிக்க நிறுவனங்களாகவோ, தகவலை மூளையில் பொதிந்து வைத்திருக்கும் ஆற்றல் பெற்ற ஆராய்ச்சியாளர்கள,; அறிவியலாளர்கள் போன்ற மனித வளங்களாகவோ இருக்கலாம். தகவல் வளங்கள் அவற்றின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் முதல் நிலைத் தகவல் வளங்கள், இரண்டாம் நிலைத் தகவல் வளங்கள், மூன்றாம் நிலைத் தகவல் வளங்கள் என மூவகைப்படுத்தப்படுகின்றன 2.




உண்மையான ஆய்வு அபிவிருத்திகளை, அவற்றின் புதிய பிரயோகங்களின் விளக்கங்களை, அல்லது பழைய கருத்துக்களுக்கான புதிய விளக்கங்களை உடனுக்குடன் தாங்கி வரும் வெளியீடுகள் அனைத்தும் முதல்நிலைத் தகவல் வளங்கள் (Primary information resources) எனப்படுகிறது. ஆய்வாளர் ஒருவரால் உருவாக்கப்படுகின்ற புதிய தகவல்கள் அனைத்தும் இந்த முதல்நிலைத் தகவல் வளங்களின் ஊடாக குறிப்பிட்ட சமூகத்தைச் சென்றடைகிறது. ஒழுங்குபடுத்தப்படாத வளங்களாக இவை இருப்பதனால் இவற்றைப் பயன்படுத்துவது எளிதல்ல. இவற்றின் பூரண பயன்பாட்டிற்குப் பாவனையாளர் இரண்டாம் நிலைத் தகவல் வளங்களிலேயே பெருமளவில் தங்கியிருக்க நேரிடும். மிக முக்கியமான தகவல் மூலாதாரங்களாகக் கருதப்படும் இவ்வளங்கள்

• புதிய அபிவிருத்திகள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிவிப்பதன் மூலம் அத்துறை தொடர்பாக அதிக அறிவு நிலையில் இருக்க உதவுதல்,

• ஒரே மாதிரியான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதைத் தடுத்தல்,

• புதிய தகவல்களை உருவாக்குவதற்கு ஏனையோர்களுக்கு உதவுதல் போன்ற வழிகளில் ஆய்வாளர்களுக்குப் உதவுகின்றன.

ஒரு குறிப்பிட்ட பொருட்துறையின் வளர்ச்சி வீதமானது அத்துறை சார்ந்து வெளிவரும் முதல் நிலைத் தகவல் வளங்களின் தொகையிலேயே பெருமளவு தங்கியுள்ளது. தனிப்பொருள் நூல்கள், அறிக்கைகள், ஆய்வுக்கட்டுரைகள், முதல்நிலைப் பருவ இதழ்கள், சிறு நூல்கள், காப்புரிமை இலக்கியங்கள், நியமங்கள், தடை செய்யப்பட்ட ஆவணங்கள், அரச வெளியீடுகள், கையெழுத்துப் பிரதிகள், சுவடிகள் போன்றவை முதல்நிலை தகவல் வளங்களாகக் கருதப்படுகின்றன.




1. பல்கலைக்கழக நூலகமும் முதல்நிலைத் தகவல் வளங்களும்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் சிறப்புக் கவனம் செலுத்தப்படும் முதல்நிலைத் தகவல் வளங்களாக நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள், சிறுநூல்கள், அறிக்கைகள், அரச ஆவணங்கள,; கையெழுத்துப் பிரதிகள், மற்றும் செய்தித் தாள்கள், செய்திக் கடிதங்கள், செய்தியறிக்கைகள், பருவ இதழ்கள், ஆண்டு மலர்கள் என்பவற்றை உள்ளடக்கிய தொடர் வெளியீடுகள்; போன்றவற்றைக் கொள்ள முடியும்.

இவற்றுக்குள் அரிய வளங்களாகவும் பெறுமதி மிக்கதாகவும் கருதப்பட்டு ஆவணக் காப்பகப் பகுதியில் பாதுகாக்கப்படும் முதல்நிலைத் தகவல் வளங்களின் எண்ணிக்கையை அட்டவணை 1 எடுத்துக் காட்டுகிறது. 3 இப்புள்ளிவிபரமானது 2004 யூலை வரை நூலகத்தால் பெற்றுக்கொள்ளப்பட்டதாகும்.




அட்டவணை 1

பொருட்துறை ஆய்வுக்கட்டுரை சிறு நூல்கள் மலர்கள் பருவ இதழ்(தொகுதி)

பொது 08 31 123 72 (299)

தத்துவம் 09 39 03 07(35)

சமயம் 24 889 221 21(46)

சமூக அறிவியல் 121 1178 431 29(205)

மொழி 32 140 02 01

அறிவியல் 23 102 06 16(103)

தொழினுட்பம் 27 172 10 32(111)

கலை 11 186 16 14(75)

இலக்கியம் 76 662 89 09(20)

வரலாறும் புவியியலும் 32 467 23 67(109)


மூலம்: புள்ளிவிபரப் பதிவேடு-ஆவணக்காப்பகப்பகுதி




1.1 ஆய்வுக்கட்டுரைகள் Dissertations

வழிகாட்டுபவரின் மேற்பார்வையின்கீழ் முதுநிலைப் பட்டத்துக்காக அல்லது கலாநிதிப் பட்டத்துக்காகப் பல்கலைக்கழகத்தை அல்லது கல்வி சார்ந்த நிறுவனமொன்றைச் சேர்ந்த மாணவர் ஒருவரால் மேற்கொள்ளப்படும் ஆய்வின் முடிவில் எழுதப்படும் அறிக்கையே ஆய்வுக் கட்டுரை எனப்படுகிறது. 4 உண்மையான ஆய்விற்கான சான்றுகளை இக்கட்டுரை உள்ளடக்க வேண்டும் என்பதுடன் குறிப்பிட்ட துறை சார்ந்த ஆய்வாளர்களுக்கு வேண்டிய முக்கிய ஆவணங்களாக இவை வடிவமெடுக்கின்றன. ஆய்வுக்கட்டுரையில் உள்ள சில முக்கிய தகவல்கள் பின்னர் முதல்நிலைப்பருவ இதழ்களில் அல்லது நூல்களில் வெளியிடப்படுவதெனினும் குறிப்பிட்ட சில தரவுகளுக்கு மூல ஆய்வுக்கட்டுரையிலேயே தங்கியிருக்க வேண்டும் என்பதனால் இவை முக்கியமான முதல்நிலைத் தகவல் வளங்களாக கருதப்படுகின்றன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்படுகின்ற முதுமாணி, முது தத்துவமாணி, கலாநிதிப் பட்டம் போன்றவற்றுக்கான ஆய்வுமுயற்சிகள் அனைத்தும் ஆவணக்காப்பகப் பகுதியில் பாதுகாக்கப்படுகின்றன. இதைவிட தமிழ்மொழி, இலக்கியம் போன்ற துறைகளில் இந்திய பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் சிலவும் இங்கு சேர்க்கப்பட்டிருக்கின்றன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் மதிப்பீட்டுக்கென இந்தியப் பல்கலைக்கழகங்கள் சிலவற்றிலிருந்து ஆய்வுக்கட்டுரைகள் இங்கு அனுப்பி வைக்கப்படுவதே இதற்கான காரணமாகும். இத்துடன் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் இலங்கை சார்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் சிலவற்றின் ஒளிப்படப்பிரதியும் ஜீhழவழஉழிலஸ் இங்கு காணப்படுகிறது.

பொருட்துறை சார்ந்து இங்கு காணப்படும் ஆய்வுக்கட்டுரைகளின் எண்ணிக்கையை அட்டவணை 1 எடுத்துக்காட்டுகிறது. இங்கு சமூக அறிவியல் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளே(117) கூடுதலாகக் காணப்படுகின்றன. கல்வியியல் சார்ந்து மேற்கொள்ளப்படும் ஆய்வு முயற்சிகள்(69) அதிகமாக இருப்பதே இத்தகைய அதிகரிப்புக்குக் காரணமாகும். அறிவியல், தொழினுட்பம் சார்ந்த துறைகளில் ஆய்வுக்கட்டுரைகள் மிகவும் குறைவாகவே உள்ளன. 1990 களுக்குப் பின்னர் இத்துறைகளில் எவ்வித ஆய்வுக்கட்டுரைகளும் நூலகத்தினால் பெறப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 5




1.2 சிறு நூல்கள் Pamphlets

ஆவணக் காப்பகப்பகுதியின் மதிப்புக்குப் பெருமை சேர்க்கும் இன்னோர் முதல்நிலைத் தகவல் வளமாகக் கருதப்படுவது இங்கு ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும் சிறு நூல்களாகும். நிரந்தரமாகக் கட்டப்படாத அச்சு வடிவ ஆக்கம் எதுவும் சிறுபிரசுரம் அல்லது சிறு நூல் என்ற பதத்தால் குறிப்பிடப்படுமெனினும் 6 சர்வதேச பட்டியலாளர் மகாநாட்டில் தீர்மானிக்கப்பட்டதன்படி ஆகக் குறைந்தது 5 பக்கங்கள் உடையதாகவும் 48 பக்கங்களுக்கு மேற்படாததாகவும் உள்ள பருவஇதழ் அல்லாத வெளியீடுகள் அனைத்தும் இவ்வகைக்குள் அடங்குகின்றன7. கட்டப்படாதபோதும் சில சிறு நூல்கள் அதிக பக்கங்களைக் கொண்டமைந்ததாகவும் நிரந்தரப் பெறுமதியுடையதாகவும் இருக்கக்கூடும். செய்முறைத் தொழினுட்பம், தொழிற்பயிற்சி, பிரயாணம், ஆராய்ச்சி முடிவுகள், புகழ்பெற்ற சொற்பொழிவுகள், செய்தியறிக்கைகள், கருத்து முரண்பாட்டைத் தோற்றுவிக்கும் கட்டுரைகள், நிகழ்கால விவகாரங்கள், அரசியல் விவகாரங்கள் போன்ற முக்கிய அம்சங்களைத் தாங்கிவரும் இவை ஆய்வாளர்களுக்கு மிகப் பெறுமதி வாய்ந்த தகவல் மூலங்களாக இருப்பதுடன், விசேட நூலகங்களில்; இவற்றிற்கே கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மிகக் குறைந்தளவு நூல்களே கிடைக்கக்கூடியதாக உள்ள பொருட்துறை சார்ந்த தகவல்களை வழங்குவதற்கு மிகப் பயனுள்ள தகவல் மூலமாக இவை உள்ளன.

பருவ இதழில் வெளி வருகின்ற முக்கிய கட்டுரைகளின் பிரதிகள், றோணியோவில் தட்டச்சு செய்யப்பட்ட பல்கலைக்கழக நினைவுப்பேருரைகள், செய்தித்தாள் துணுக்குகள், முக்கியமான கட்டுரைகளைக் கொண்ட பருவஇதழின் ஒற்றை இதழ்கள் போன்றவை இந் நூலகத்தில் கணிசமானளவுக்கு சேகரிக்கப்பட்டு நிலைக்குத்துக் கோப்புகளில் வகுப்பெண் ஒழுங்கில் பராமரிக்கப்படுகின்றன. இங்குள்ள சிறுநூல்களின் அண்ணளவான எண்ணிக்கையை அட்டவணை 1 தெளிவாகக் காட்டுகிறது. சமூக அறிவியல், இலக்கியம், சமயம் போன்ற துறைகளில் அதிகளவு சிறு நூல்கள் உள்ளன. அரசியல்(336), பொருளியல்(246), கல்வி(310) போன்ற துறைகளில் அதிகளவு சிறுநூல்கள் காணப்படுகின்றன.8

நூலகவியல் விதிமுறையின் படி சிறு நூல்களில் பெரும்பாலானவற்றை குறுங்கால எழுத்து மூலங்களாகக் கருதி காலத்துக்குக் காலம் அவற்றை நூல் இருப்பிலிருந்து நீக்கும் தன்மை பல நாடுகளில் வழக்கிலிருப்பினும் எமது சமூகத்தைப் பொறுத்தவரை இத்தகைய நடைமுறை பொருத்தமற்றதொன்றாகும். இங்கு அச்சிடுதற் தொழினுட்பமானது பொருளாதார ரீதியாக ஆக்ககர்த்தாக்களின் அறிவுருவாக்கத்திற்கு உதவும் நிலைக்கு இன்னும் வரவில்லை. இத்தகைய தன்மையானது பெறுமதி மிக்க ஆய்வு முயற்சிகளை சிறு நூல்களின் வடிவிலோ அல்லது கையெழுத்துப் பிரதிகளின் வடிவிலோ அதுவுமன்றி நிறுவன ரீதியாக இடையிடையே வெளியாகும் சிறப்பு மலர்களிலோ வெளியிடுவதற்கு நிர்ப்பந்திப்பதன் காரணமாக ஏனைய பிரதேசங்களைப் போன்று இங்கு இத்தகைய சிறுநூல்கள் குறுங்காலப் பெறுமதியுடையவையாகக் கருதப்படக்கூடிய வாய்ப்பு இல்லை என்பதுடன் இவை மிகக் கவனமாக பேணப்படவேண்டியதும் அவசியமாகும். வேறு எங்குமே கிடைத்தற்கரிய சிறுநூல்களின் மூலப் பிரதிகளும் இங்கு உண்டு. ஒளிப்படப்பிரதி எடுத்து வாசக பயன்பாட்டுக்கு விடப்பட முடியாதளவுக்கு மிகப் பாதிப்புற்று, நொருங்கும் நிலையிலுள்ள சில மூல நூல்களை அவற்றின் மூல வடிவத்தில் பேணக்கூடிய வகையில் வளர்ச்சியடைந்த தொழினுட்பமுறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு முறைகளை இங்கு கையாளவேண்டிய அவசியம் உண்டு.




1.3 சிறப்பு மலர்கள்

ஆராய்ச்சி நோக்கில் பார்க்கும்போது ஆய்வுக்கட்டுரைகளுக்கு அடுத்ததாக வாசகரின் பயன்பாட்டுக்கு உதவும் இன்னோர் முக்கிய வளமாக சிறப்பு மலர்கள் காணப்படுகின்றன. தனிப்பட்ட மனிதர்கள் அல்லது நிறுவனங்கள் சார்ந்து கொண்டாடப்படும் ஆண்டு விழா, பொன் விழா, வெள்ளி விழா போன்ற சிறப்பு மலர்களாகவோ அல்லது நினைவு மலர்களாகவோ இவை இருக்கலாம். இவற்றிலிருந்து வேறுபட்டதாகக் குறிப்பிட்ட துறை சார்ந்த நிறுவனங்களால் வருடாவருடம் வெளியிடப்படும் ஆண்டு மலர்கள், பருவ இதழ்களாகக் கருதப்பட்டு பருவ இதழ்களுடன் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அட்டவணை 1 இன்படி சமூக அறிவியல் சார்ந்த மலர்களே இங்கு அதிகம் காணப்படுகின்றன. சமூக அறிவியல் துறையில் உள்ள கிட்டத்தட்ட 431 மலர்களில் 390 மலர்கள்; கல்வி நிறுவனம் சார்ந்து வெளியிடப்பட்டவையாகும். சமயத்துறையில் காணப்படும் கிட்டத்தட்ட 222 மலர்களில் பெரும்பாலானவை இந்து சமய ஆலயங்கள் சார்ந்து வெளியிடப்படும் மலர்களாகும். பொது ஆண்டு மலர்களில் கணிசமானவை சனசமூக நிலையங்கள், இதழியல் துறை சார்ந்தவை. இலக்கிய ஆண்டு மலர்களும் கணிசமானளவுக்குக் காணப்படுகின்றன.




1.4 பருவ இதழ்கள் Periodicals

குறிப்பிட்ட தலைப்பினை உடையதாகவும் ஒழுங்கான கால இடைவெளியில் வெளியீடு செய்யப்படுவதாகவும் இறுதி இதழ் எப்போது வெளிவரும் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்க முடியாததுமான வெளியீடே பருவ இதழ் எனப்படுகிறது.9 செய்தியறிக்கைகள், சஞ்சிகைகள், செய்திக்கடிதங்கள், சங்க நடவடிக்கைக் குறிப்பேடுகள் போன்ற பெயர்களில் வெளியாகும் வெளியீடுகள் அனைத்தும் பருவ இதழ்கள் என்ற பொதுப் பெயருக்குள் அடங்குகின்றன. பெரும்பாலான ஆரம்ப இலக்கியங்கள் யாவும் பருவ இதழ் வடிவிலேயே வெளியாகின்றன. அறிவியல் ரீதியான தகவல்களைப் பரிமாற்றம் செய்வதற்கான பிரதான தொடர்பு சாதனமாக கருதப்படும் இவை உண்மையான ஆய்வுகளை உடனுக்குடன் அறிக்கைப்படுத்துகின்றன. பருவ இதழ்களை அவற்றின் கால அடிப்படையில் நாளிதழ்கள்;, வார இதழ்கள், இருவார இதழ்கள், மாத இதழ்கள், இரு மாத இதழ்கள், காலாண்டு இதழ்கள், அரையாண்டு இதழ்கள்;, ஆண்டு இதழ்கள் என வகைப்படுத்தலாம்.

பருவ இதழ்களை அவற்றின் உள்ளடக்கத்தைக் கொண்டு பொதுப்பருவ இதழ்கள், பொருட் பருவ இதழ்கள் என இருவகையாகப் பிரிக்கலாம். குறிப்பிட்ட ஒரு பொருட்துறை சார்ந்ததாக இல்லாமல் அரசியல், ஆக்க இலக்கியங்கள், விளையாட்டு, சினிமாச் செய்திகள், விளம்பரங்கள் போன்றவற்றை உள்ளடக்கி வெளிவருபவை பொதுப்பருவ இதழ்களாகும். எ-டு இந்தியா ருடே, தாயகம், மல்லிகை போன்றவை. காத்திரமான ஆக்கங்களைக் கொண்டிராது செய்தித் துணுக்குகள் பொழுதுபோக்கு அம்சங்கள் போன்றவற்றைத் தாங்கி வரும் பொதுப் பருவ இதழ்கள், சஞ்சிகைகள் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன. பொருட்துறை சார்ந்து வெளியிடப்படும் பருவ இதழ்கள் பொருட் பருவ இதழ்கள் என அழைக்கப்படுகின்றன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தினால் தற்போது பெற்றுக் கொள்ளப்படும் பருவ இதழ்களின் மொத்த எண்ணிக்கையை அட்டவணை 2 தருகிறது.10




அட்டவணை 2


ஈட்டல் முறை வெளியூர் உள்ளுர் மொத்தம்
தமிழ் ஆங்கிலம் தமிழ் ஆங்கிலம்



கொள்வனவு 22 18 28 44 112

அன்பளிப்பு 10 217 23 48 298

பரிமாற்றம் - 05 - 06 11

மொத்தம் 32 240 51 98 421

(மூலம்: புள்ளிவிபரப் பதிவேடு, பருவ இதழ்ப்பகுதி)




கொள்வனவு, அன்பளிப்பு, பரிமாற்றம் என்ற மூன்று வழிகளில் 421 பருவ இதழ்கள் பெற்றுக் கொள்ளப்படுகின்றன. இதில் 149 பருவ இதழ்கள் உள்ளுரிலிருந்தும் 272 பருவ இதழ்கள் வெளியூரிலிருந்தும் பெற்றுக்கொள்ளப்படுகின்றன. அன்பளிப்பு மூலமான பருவ இதழ்களே கூடுதலாக இருப்பதைப் புள்ளிவிபரம் எடுத்துக் காட்டுகிறது. சுவெற்ஸ் ஜளுறுநுவுளுஸ தகவல் நிறுவனமானது கடந்த ஆண்டுகளில் நிதிப் பற்றாக்குறை காரணமாக இடைநிறுத்தப்பட்ட பருவ இதழ்களில் கணிசமானளவு தொகையினை அன்பளிப்பாக வழங்க முன் வந்தமையே அன்பளிப்பில் ஏற்பட்ட அதிகரிப்புக்குக் காரணமாகும். பொதுவாகக் கடந்த காலங்களில் 200க்கும் மேற்பட்ட பருவ இதழ்கள் கொள்வனவு மூலமாக பெற்றுக் கொள்ளப்பட்டபோதும் 2001ம் ஆண்டிலிருந்து நிதி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாக கொள்வனவு மூலமான பருவ இதழ்களின் எண்ணிக்கை சரிபாதியாகக் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பருவ இதழ்களின் பொருட்துறை சார்ந்த வகைப்பாட்டை அட்டவணை 3 எடுத்துக் காட்டுகிறது.

அட்டவணை 3

பொருட்துறை எண்ணிக்கை

பொது 67

தத்துவம் 08

சமயம் 24

சமூக அறிவியல் 111

மொழி 22

அறிவியல் 60

தொழினுட்பம் 63

கலை 18

இலக்கியம் 06

புவியியலும் வரலாறும் 42

(புள்ளிவிபரப் பதிவேடு - 2004, பருவ இதழ்ப்பகுதி)




1.5 அறிக்கைகள் Reports

குறிப்பிட்ட செயற்திட்டம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடர்பான தகவல்களை ஆய்வுப்பணியாளர்கள் தமது துறைசார்ந்த ஆர்வலர்களுக்குப் பயன்படத்தக்கவகையில் தொகுத்துத் தயாரிக்கப்படும் வெளியீடே அறிக்கைகள் எனப்படுகிறது11. நடைமுறையில் இருக்கும் ஆய்வு அபிவிருத்தித் திட்டங்களின் முடிவுகளை வெளியிடுவதே அறிக்கைகளாகும். ஒரு நாட்டில் அரசாங்கத்தின் அதிகாரத்துடன் வெளியிடப்படும் நம்பகரமான, அதிகாரபூர்வ வெளியீடுகளாக இவை இருப்பதுடன் உள்ளுர், பிரதேச, தேசிய, சர்வதேசிய ரீதியாக குறைந்த விலையில் இவை வெளியீடு செய்யப்படுகின்றன. பெரும்பாலான அறிக்கைகள் வெளியீடு செய்யப்படுவதோ அல்லது பருவ இதழ்க் கட்டுரைகளின் தரத்திற்கு பதிப்பிக்கப்படுவதோ இல்லை. அறிக்கைகளில் தொகுக்கப்படும் பெறுமதி வாய்ந்த தகவல்கள் பின்னர் பருவ இதழ்க் கட்டுரைகளில் சேர்த்துக்கொள்ளப்படுவதன் காரணமாக அறிக்கைகளின் காலம் ஒருசில வருடங்களுக்கே மட்டுப்படுத்தப்பட்டிருப்பினும் அந்த ஒருசில வருடங்களுக்கும் மிகப் பெறுமதி மிக்க தகவல் வளமாக இவை கருதப்படுகின்றன. ஏனெனில் பருவ இதழ்க் கட்டுரைகள் பூரணப்படுத்தப்பட்ட பணிகளையும் வெற்றிகரமாக முடிக்கப்பட்ட பணிகளையும் மட்டுமே சேர்த்துக் கொள்ளும் அதேசமயம் அறிக்கைகளோ ஆய்வுகளின் ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டங்களையும் பிரதிபலிப்பதுடன் நின்றுவிடாது இடைநிறுத்தப்பட்ட ஆய்வுப்பணிகளையும் தோல்வியில் முடிவடைந்த ஆய்வுப்பணிகளையும் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கான முக்கிய தகவல் மூலமாகக் கருதப்படுகினறன.; இவற்றை பின்வரும் மூன்று பரந்த பிரிவுகளுக்குள் வகைப்படுத்த முடியும். 12

• அரச உதவியுடன் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுக்கான அறிக்கைகள் (இராணுவ விஞ்ஞானத்துறை சார்ந்த அறிக்கைகள்)

• தொழிற்துறை உதவியுடன் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுக்கான அறிக்கைகள். இவை வர்த்தக பாதுகாப்புக்கு உட்பட்டவையாகவும் நிறுவனத்துக்கு வெளியே கிடைக்க முடியாதவையாகவும் உள்ளன.

• கல்விசார் ஆய்வுகளுக்கான அறிக்கைகள். இவை எந்தவொரு பாதுகாப்பு அம்சங்களுக்கும் உட்பட்டவையல்ல.




அரச ஆவணப்பகுதியின் கணிசமானளவு பகுதி அறிக்கைகளுக்கென்றே ஒதுக்கப்பட்டிருக்கிறது. தொகை மதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தின் புள்ளி விபரப் பதிவேடுகள், மத்திய வங்கி போன்ற வங்கி சார்ந்த அறிக்கைகள், மற்றும் திணைக்கள அறிக்கைகளை இப்பகுதி கணிசமானளவு கொண்டிருக்கிறது.

1.6 வெளியிடப்படாத ஆவணங்கள் Unpublished resources

கையெழுத்துப் பிரதிகள், ஆய்வுகூடக் குறிப்பேடுகள், நாட்குறிப்பேடுகள், தனிப்பட்டவர்களுக்கு எழுதப்படும் முக்கிய கடிதங்கள், நிறுவனங்கள்pன் கோப்புகள், உள்ளக ஆய்வு அறிக்கைகள், உருவப்படங்கள், வாய்மொழி வரலாறுகள், நாணயங்கள் போன்ற வெளியிடப்படாத தகவல் வளங்களும் முதல்நிலைத் தகவல் வளங்களாகக் கருதப்படுகின்றன. குல சபா நாதன், க.சி.குலரட்ணம் போன்ற அறிஞர்களின் பெறுமதி மிக்க கையெழுத்துப்பிரதிகள் முதல் நிலைத் தகவல் வளங்களின் காத்திரத் தன்மைக்கு மேலும் மெருகூட்டுகின்றன.

1.7 அரசாங்க வெளியீடுகள்; Government documents

அரசாங்கத்தினால் வெளியிடப்படுகின்ற உத்தியோக பூர்வமான வெளியீடுகள் அரசாங்க வெளியீடுகள் எனப்படும். சட்டங்கள் விசேட ஆணைக்குழு அறிக்கைகள் போன்றவற்றை வெளியிடுகின்றன. மசோதாக்கள், சட்டங்கள், பாராளுமன்ற விவாதங்கள், பருவகால ஆணைப்பத்திரங்கள்,நீலப்புத்தகம் போன்ற ஆவணங்கள் அரச ஆவணப்பகுதியில் ஒழுங்குபடுத்தப்பட்டுன.

1.8நூலுருவற்ற சாதனங்கள்

சுவடிகள், ஓவியங்கள்,படங்கள், வரைபுகள், நுண்படங்கள், கணினி சாதனங்கள், பத்திரிகைத் துணுக்குகள் கையெழுத்துப் பிரதிகள் போன்றவையும் முதல்நிலைத் தகவல்களைத் தருபவை. யாழ்.பல்கலைக்கழக நூலகத்தில் இவற்றின் சேகரிப்பு மிகவும் குறைவு என்றே சொல்ல முடியும்.

2.ஒழுங்கமைப்பு
2.1 ஆவணக் காப்பகப்பகுதி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தின் வாசகரது ஆய்வுத் தேவையைப் பூர்த்தி செய்கின்ற பிரதான பிரிவாகக் கருதப்படுவது அதன் ஆவணக்காப்பகப்பிரிவும் அரச வெளியீடுகளுக்கான பிரிவும் ஆகும். ஷஉள்ளடக்கத்தின் பெறுமதியைக் கருத்தில் கொண்டும், சான்றாக காட்டும் பொருட்டு உருவமைப்பில் பாதிப்பு ஏற்படுவதை கூடுதலான வரை தவிர்ப்பதை கருத்தில் கொண்டும்; ஒரு ஆவணத்தை அதன் மூல வடிவில் நிரந்தரமாகப் பேணுவதற்கென விசேடமாக வடிவமைக்கப்படும் அமைப்பு அல்லது அமைப்பின் ஒரு பகுதியே ஆவணக்காப்பகமாகும்ஷ என்ற வரைவிலக்கணத்திலிருந்து அப்பாற்பட்டதாக, கிடைத்தற்கரிய நூல்களின் இருப்பிடமாக, இலங்கை சார்ந்து வெளியிடப்படும் ஆக்கங்களின் சேமிப்பிடமாக, இப்பிரிவு தொழிற்படுகிறது. முதல்நிலைத் தகவல் வளங்களின் கணிசமான பகுதியை உள்ளடக்கியிருக்கும் இப்பகுதியை ஆவணக்காப்பகம் என அழைப்பதைவிட ஆராய்ச்சிப்பகுதி என அழைப்பது கூடுதல் பொருத்தமானது. நூல்கள், ஆய்வுக்கட்டுரைகள், சிறப்பு மலர்கள், சிறு நூல்கள், பருவ இதழ்கள், வரலாற்று முக்கியத்துவம் மிக்க நூல்கள், கையெழுத்துப் பிரதிகள் போன்ற பெறுமதிமிக்க வளங்களை இப்பகுதி தன்னகத்தே கொண்டிருக்கிறது. பொதுவாக இலங்கை தொடர்பாக இலங்கையர்களாலும் வெளிநாட்டு அறிஞர்களாலும் எழுதப்பட்ட நூல்களே இப்பகுதியில் பராமரிக்கப்படுகின்றது..

ஆய்வுக்கட்டுரைகள் அனைத்தும் ஆவணக்காப்பகப் பிரிவில் மரத்தாலான கண்ணாடி அலுமாரிகளில் பொருட்துறை சார்ந்து ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. சிறு நூல்களில் ஓரளவு பகுப்பாக்கம்இ பட்டியலாக்கம் செய்யப்பட்டு பரந்த பொருட் தலைப்புகளி;ன் கீழ் சிறுபிரசுரப் பேழைகளில் ஒழுங்குபடுத்தப்பட்டு மரத்தாலான கண்ணாடி அலுமாரிகளில் வைக்கப்பட்டிருக்கின்றன. கணிசமானளவு சிறுநூல்களுக்கு பட்டியல் பதிவுகள் மேற்கொள்ளப்படவேண்டியுள்ளது. பொருட்துறைகளுக்கிடையிலான தொடர்புத் தன்மையை அடிப்படையாகக் கொண்டு அத்தகைய ஆக்கங்களை ஒன்றாகச் சேர்த்துக் கட்டி அதற்கு நூல் வரவுப்பதிவெண் கொடுத்து நூல் இருப்புப் பகுதியில் சேர்க்கும் முயற்சி கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டதெனினும் வாசகரின் பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டு நோக்கின் இவை சிரமம் தரும் ஒன்றாகவே இனங்காணப்பட்டிருக்கிறது. சிலசமயங்களில் பொருட்துறைகளுக்கிடையிலான தொடர்புத் தன்மை, நூலின் அளவு போன்றவற்றைக் கருத்தில் கொள்ளாமலும்; பல சிறு நூல்கள் ஒன்றாகச் சேர்த்து கட்டப்பட்டிருக்கும் தன்மையும் இனங்காணப்பட்டிருக்கிறது. ஒரு தாளில் இருக்கும் தகவல் கூட ஆராய்ச்சி நோக்கில் மிகப் பெறுமதி வாய்ந்ததாக இருப்பதனால் இவை தனித்தனியாக அதற்குரிய பொருட்துறை சார்ந்த நிலைக்குத்துக் கோப்புகளில் பேணப்படவேண்டியது அவசியமாகும். இடப் பெயர்வுக்கு முன்னர் ஒழுங்காக கோவைப்படுத்தப்பட்டு பட்டியலிடப்பட்டு பருவ இதழ்ப்பகுதியின் பராமரிப்பில் இருந்த பெறுமதி மிக்க கையெழுத்துப் பிரதிகளின் ஒரு தொகுதியை ஆவணக் காப்பகப் பகுதியில் ஒழுங்கமைக்கும் முயற்சி அண்மையில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.




2.2 அரச ஆவணப் பகுதி

பாராளுமன்ற விவாதங்கள், மசோதாக்கள், சட்டங்கள், பருவகால ஆணைப்பத்திரங்கள், பாராளுமன்றத் தொடர்கள், நீலப்புத்தகம் போன்றவை அரச ஆவணப் பகுதியில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றன. ஆவணக்காப்பகப்பகுதியுடன் இணைந்ததாக இயங்கும் அரச ஆவணப்பகுதியின் 50 வீதத்துக்கும் மேற்பட்ட இடத்தை நிரப்பும் அறிக்கைகள் வாசகரின் பயன்பாடு கூடிய வளமாகவும் கருதப்படுகின்றன. பொதுவாக இலங்கை சார்ந்து வெளியிடப்படும் அறிக்கைகளே இங்கு வைக்கப்பட்டுள்ளது. றழசடன னநஎநடழிஅநவெ சநிழசவஇ hரஅயn னநஎநடழிஅநவெ சநிழசவ போன்ற வெளிநாட்டு அறிக்கைகள் இருப்புப் பகுதி, உசாத்துணைப் பகுதி போன்றவற்றில் பராமரிக்கப்படுகின்றன.

2.3 பருவ இதழ்ப்பகுதி

பருவ இதழ்கள் அனைத்தும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தின் தளப்பகுதில் அமைந்திருக்கும்; பருவ இதழ்ப் பகுதியில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றன. நடப்புப் பருவ இதழ்கள் வாசகர் சேவைப் பகுதியுடன் இணைந்ததாகவும், பழைய இதழ்கள் அதற்கென தனியாக இயங்கும் பருவ இதழ் இருப்புப் பகுதியிலும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. கட்டப்பட்ட பருவ இதழ்கள் அனைத்தும் நூலாக கருதப்பட்டு வரவுப் பதிவெண் கொடுக்கப்பட்டு நூல் இருப்புப் பகுதியில் தனியாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. செய்திக் கடிதங்கள் அதற்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சிறுபிரசுரப்பேழைகளில் வைக்கப்பட்டு பருவஇதழ்ப்பகுதியில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றன.

செய்தித் தாள்களும் பருவ இதழ்ப்பகுதியின் பராமரிப்பிலேயே இருக்கின்றன. இவற்றில் இலங்கை சார்ந்து வெளியிடப்பட்ட பருவ இதழ்கள், ஷகசடதபறஷ போன்ற மிகப் பழமை வாய்ந்த தமிழ்ப்பருவ இதழ்கள் பாதுகாக்கப்படவேண்டிய அரிய வளங்களாகக் கருதப்பட்டு ஆவணக்காப்பகப்பகுதியில் வைக்;கப்பட்டிருக்கின்றன. ஆவணக்காப்பகப் பகுதியில் பேணப்படும் முக்கிய பருவ இதழ் தலைப்புகளின் எண்ணிக்கையையும் அவற்றின் மொத்தத் தொகுதிகளின் எண்ணிக்கையையும் அட்டவணை 1 தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. இது தவிர பருவ இதழின் முதலாவது பிரதி கிடைக்கும் சமயங்களில் இவை அரிய நூலுக்கான பெறுமதி கொடுக்கப்பட்டு ஆவணக்காப்பகப் பிரிவில் பாதுகாக்கப்படுகின்றன.

2.4 நூலுருவற்ற சாதனங்களுக்கான பகுதி

நூலுருவற்ற சாதனங்கள் தனிப்பிரிவில் வைத்துப் பாதுகாக்கப்படவேண்டும் என்ற தீர்மானம் அண்மையில் மேற்கொள்ளப்பட்டு தனி அறையொன்றில் இதற்கான ஆரம்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. ஆவணக்காப்பகப்பிரிவில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சுவடிப்பேழைகள், திரு. கனகசபை அவர்களினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட இருபதுக்கும் மேற்பட்ட ஓவியங்கள், பருவ இதழ்ப்பகுதியினால் வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் பருவ இதழ்களுடன் இணைத்து அனுப்பப்படும் நுண் தாள்கள், இந்து சாதனம் போன்ற செய்தித்தாள்களைப் பேணும்பொருட்டு 1980களின் பிற்பகுதியில் நூலக நிர்வாகத்தின் கீழ் உருவாக்கப்பட்ட நுண்படங்கள் போன்றவற்றை அடித்தளமாகக் கொண்டு நூலுருவற்ற சாதனங்களுக்கான தனிப்பிரிவு ஒன்று உருவாக்கம் பெற்றுள்ளது. தற்போது பட்டியலாக்கப்பகுதியில் வைத்துப் பராமரிக்கப்படும் நவீன இலத்திரனியல் சாதனங்களான சீடிரோம், நெகிழ் வட்டுகள், வீடியோப் படப்பிரதிகள் போன்றவையும் காலப்போக்கில் இதனுடன் இணைக்கப்படக்கூடிய வாய்ப்புண்டு;.

3.பயன்பாடு

முதல் நிலைத் தகவல் வளங்கள் எனப்படுபவை பெரும்பாலும் ஆராய்ச்சிக்கு உதவுபவை. எனவே ஆராய்ச்சியாளர்களே இவற்றின் வாசகர்களாவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்பு இறுதி வருட மாணவர்களதும் பட்டப்பின்படிப்பு மாணவர்களதும் தேவைகளை கணிசமானளவுக்கு பூர்த்தி செய்பவையாக இந்த முதல் நிலைத் தகவல் வளங்கள் காணப்படுகின்றன. 2003 ஆகஸ்ட் தொடக்கம் 2004 யூலை வரையான காலப்பகுதியில் அரச ஆவணங்கள் தவிர்ந்த ஆவணக்காப்பகப்பகுதியின் முதல்நிலைத் தகவல் வளங்களைப் பயன்;படுத்திய வாசகர்களது எண்ணிக்கை 2311 ஆகும். 13 நூல்களும்(1158) ஆய்வுக் கட்டுரைகளுமே (1092) இங்கு அதிகளவு பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. சிறப்பு மலர்களுக்குரிய வாசகர்களாக 36 பேர் இனங்காணப்பட்டிருக்கின்றனர்.

சமயம், சமூக அறிவியல் ஆகிய பொருட் துறைகளைச் சார்ந்த மாணவர்கள் இவற்றை அதிகமாகப் பயன்படுத்தும் தன்மை இனங்காணப்பட்டுள்ளது. கடந்த யூலை மாதத்தில் பொருட்துறை சார்ந்த மாணவர்களின் பயன்பாட்டை அட்டவணை 4 எடுத்துக் காட்டுகிறது. 14

அட்டவணை 4

வாசகர் பயன்பாடு பொருட்துறை வாசகர் எண்ணிக்கை

பொது 12

தத்துவம் 59

சமயம் 61

சமூக அறிவியல் 137

மொழி 10

அறிவியல் --

தொழினுட்பம் 13

கலை 41

இலக்கியம் 35

வரலாறு 75

(வாசகர் பதிவேடு-2004 ஆவணக் காப்பகப் பகுதி)




3.1 ஆய்வுக் கட்டுரைகள்

ஆய்வுக் கட்டுரைகளின் பிரதான வாசகர்களாகக் கருதப்படுபவர்கள் பட்டப்பின்படிப்பை மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்களே. கல்வியியல் துறையில் முதுமாணிப்படிப்பை மேற்கொள்பவர்களும், டிப்ளோமா பயிற்சி நெறியை தொடர்பவர்களும் ஆய்வுக்கட்டுரை எழுதுவதற்கான ஆய்வு முறையியல் அறிவைப் பெறும் பொருட்டு ஆய்வுக்கட்டுரைகளைப் பயன்படுத்துகின்றனர். மொழி, தமிழ் இலக்கியம் சார்ந்த ஆய்வுக்கட்டுரைகள் பெரும்பாலும் ஆராய்ச்சியாளர்களினால் தகவல் பெறும் நோக்கத்துக்காக பயன்படுத்தப்படுகின்றது. கடந்த யூலை மாதத்தில் மட்டும் வாசகரால் 271 ஆய்வுக்கட்டுரைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்து சமயம்(75), புவியியல்(58), பொருளியல்(33), கல்வி(28), சமூகவியல்(26), இலக்கியம்(18), ஏனையவை(33) என்ற அடிப்படையில் ஆய்வுக் கட்டுரைகளின் பயன்பாடு இனங்காணப்பட்டிருக்கிறது. இந்து தத்துவம், அபவிருத்திப் பொருளியில் போன்ற துறைகள் அதிகமாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆய்வுக் கட்டுரைகளை முதலாம், இரண்டாம், மூன்றாம் வருட பட்டப்படிப்பு மாணவர்கள் பாடப்புத்தகமாக பயன்படுத்தும் தன்மை அதிகரித்துக் கொண்டு செல்லும் போக்கு அண்மைக்காலங்களில் இனங்காணப்பட்டிருக்கிறமை பயன்பாடு சார்ந்து இனங் காணப்படும் இன்னோர் முக்கிய அம்சமாகும். ஆரம்பத்தில் ஆய்வுத் தேவைக்கு உதவும் வகையில் பட்டப்படிப்பு இறுதி வருட மாணவர்களுக்கும் பட்டப்பின்படிப்பு மாணவர்களுக்குமே ஆய்வுக்கட்டுரைகளை பயன்படுத்துவதற்கான அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. குறிப்பாகத் தத்துவம், சமயம், புவியியல் சார்ந்து இப்போக்கு இனங்காணப்பட்டிருக்கிறது. இத்தகைய தன்மையானது எதிர்க்கணிய விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. ஆய்வுக் கட்டுரைகளுக்கான மேலதிக பிரதிகளைப் பெற்றுக் கொள்வது சாத்தியமற்றதாகையால் அரிய நூலாகக் கருதப்பட்டுப் பாதுகாக்கப்படும் ஒரேயொரு பிரதியும் அதிக பாவனை காரணமாக விரைவிலேயே பழுதடைந்து அடுத்த சந்ததிக்குப் பயன்படாமல் போகும் ஆபத்துண்டு. ஷநூல்கள் பாவனைக்கேஷ என்ற நூலகவியல் விதியானது பிரதிகள் பெறப்படமுடியாத சாதனங்களுக்கும், மிகப் பழமை வாய்ந்த அரிய நூல்களுக்கும், உள்ளடக்கத்தில் பெறுமதி இழக்காமல் அதேசமயம் கால மாற்றத்தால் உருவமைப்பில் உடைந்து போயிருக்கும் பெறுமதி மிக்க நூல்களுக்கும் எவ்வளவு தூரம் பொருத்தமானது என்பது மதிப்பீடு செய்யப்படவேண்டியதொன்றாகும்.




3.2 சிறு நூல்கள்

யாழ் பல்கலைக்கழக நூலகத்தில் சிறு நூல்களைப் பொறுத்து மிகப் பெறுமதி வாய்ந்த வளமாக கருதப்படும்; அதேசமயம் இவற்றுக்கான வாசகர்; பயன்பாட்டை விரல் விட்டு எண்ணக்கூடியளவிற்கு ஓரளவேனும் அறியப்படாத வளமாகவே இவை இருக்கின்றன. வாசகரினால் ஒரு தடவை அறியப்பட்டுவிடின் பின்னர் தொடர்ந்து அவரால் பயன்படுத்தப்படும் அளவுக்கு இதன் ஆய்வுப் பெறுமதி அதிகமாகும். அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள் முதற்கொண்டு முக்கியமான நூல்கள் வரை இவை பலதரப்பட்டதாக அமைகின்றன.




3.3 பருவ இதழ்கள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தின் மொத்த நிதி ஒதுக்கீட்டில் கிட்டத்தட்ட 90 வீதமானது பருவ இதழ் கொள்வனவுக்கே ஒதுக்கப்படுவதிலிருந்து இதன் முக்கியத்துவத்தை கண்டுகொள்ள முடியும். இவற்றில் வெளிவரும் தகவல்கள் நூல்களில் உள்ளவற்றிலும் பார்க்கப் புதியவையாகும். பல்கலைக்கழகத்தின் அனைத்து மட்ட வாசகரதும் பாடவிதானம், ஆராய்ச்சி, பொழுதுபோக்கு, போன்றவை தொடர்பாக உடனடித் தகவலை வழங்கும் வளங்களாக இவை இருக்கின்றன. ஆய்வுத் தகவல்களை வழங்கும் முதல்நிலைப் பருவ இதழ்கள் என்ற வகையில் இங்கு வெளிநாட்டு ஆய்வு முயற்சிகளை வெளிக் கொணருகின்ற வெளியூர்ப் பருவ இதழ்களின் ஈட்டலே அதிகமாக உள்ளது. உள்ளுர் ஆய்வு முயற்சிகளுக்கு அடிப்படையை வழங்குதல், வழிகாட்டுதல் என்பவற்றுடன் இவற்றின் பயன்பாடு மட்டுப்படுத்தப்பட்டுவிடுகிறது. உள்ளுர் பருவ இதழ்களைப் பொறுத்து பெரும்பாலானவை ஆய்வு முயற்சிகளைப் பெரிதும் உள்ளடக்காத, தகவல்களைத் தொகுத்து வழங்குகின்ற இரண்டாம் நிலைப் பருவ இதழ்களாகவோ அல்லது இலக்கிய வெளியீடுகளாகவோ இருப்பதனால் ஆய்வு முயற்சிக்கு இவை வழங்கும் பங்களிப்பு என்பது மட்டுப்படுத்தப்பட்டதாகவே இனங்காணப்பட்டிருக்கிறது. செய்தித் தாள்கள் ஆய்வு முயற்சிகளுக்குப் பெரும் உறுதுணையாக இனங்காணப்பட்டிருக்கின்றன. ஆண்டு மலர்கள் பலதரப்பட்ட அறிஞர்களதும் கட்டுரைகளை உள்ளடக்கியிருப்பதனால் ஆராய்ச்சியாளருக்குப் பெரிதும் பயன்படுவதாய் உள்ளன. பெருந்தொகை செலவழித்து அச்சுவடிவில் கொண்டு வருவதற்கான பொருளாதார மார்க்கமோ அதைச் சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்போ குறைவாக இருக்கின்ற சமூகம் ஒன்றின் ஆய்வு முயற்சிகளில் கணிசமானளவைப் பதிவாக்கும் வாய்ப்பை இத்தகைய மலர் வெளியீடுகளே வழங்குகின்றமையால் இவை அதிக பயன்பாட்டுக்குரிய வளமாகவும் பேணிப் பாதுகாக்கவேண்டிய வளமாகவும் இனங்காணப்பட்டிருக்கின்றன.




3.4 அறிக்கைகள்

அறிக்கைகள் மிக முக்கியமான முதல் நிலைத் தகவல் வளமாகும். குறிப்பிட்ட நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் ஆய்வு நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களைப் பெற உதவுதல், குறிப்பிட்ட செயற்திட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடர்பான விபரங்களை பெற உதவுதல், குறித்த துறையில் தோல்வியில் முடிவடைந்த செயற்திட்டங்களின் விபரங்களை வழங்குதல், குறித்த துறையில் அண்மைக்கால முன்னேற்றங்களை அறிய உதவுதல் போன்ற நன்மைகளை இவை வழங்குகின்றன. பொதுவாக அறிக்கைகள் புள்ளி விபரத் தகவலைப் பெற்றுக்கொள்ளுமுகமாகப் பயன்படுத்தப்படுவதனால் பெரும்பாலும் பொருளியல், புவியியல் ஆகிய துறைகளைச் சார்ந்த மாணவர்களே இதனை அதிகம் பயன்படுத்துகின்றனர்.




4. பராமரிப்பு

யாழ் பல்கலைக்கழக நூலகத்தின்; முதல்நிலைத் தகவல் வளங்களில் கிட்டத்தட்ட அனைத்துமே தாளை அடிப்படையாகக் கொண்டவையாகும். தகவல் வளங்களில், குறிப்பாக தாளை அடிப்படையாகக் கொண்ட நூலுருச்சாதனங்களில் ஏற்படும் பௌதிக ரீதியிலான பாதிப்பு அண்மைக்காலங்களில் நூலக தகவல் விஞ்ஞான துறையின் பிரதான தொழிற்றிறன்சார் விவகாரங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. 20ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலேயே தகவல் தொழினுட்ப உலகுக்குள் மனித சமூகம் நுழைந்துவிட்டபோதும் வடிவம், எழுத்து இரண்டிலும் நெகிழ்வுத் தன்மை கொண்டதாக, சிறியதாக, பாரமற்றதாக, விரும்பிய இடத்துக்கு எடுத்துச் செல்லக் கூடியதாக, முக்கிய அம்சங்களை வெட்டிச் சேகரிக்கக்கூடியதாக, பல பிரதிகள் எடுக்கக்கூடியதாக, தேவை முடிந்ததும் தூக்கி வீசக் கூடியதாக இருக்கக் கூடிய ஒரேயொரு சாதனம் நூலாகத் தான் இருக்க முடியும்15 என குறிப்பிடப்படும் அளவுக்குத் தாளை அடிப்படையாகக் கொண்ட சாதனங்களின் பயன்பாடு தகவல் யுகம் ஒன்றில் சுலபமாக மறைந்துவிடக் கூடிய அல்லது மறக்கப்பட்டு விடக்கூடிய வாய்ப்பு இல்லை என்றே சொல்ல முடியும். பொதுவாக தகவல் வளங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை உள்ளக காரணிகள், வெளியகக் காரணிகள் என இரு பெரும் பிரிவாக பிரிக்கலாம். உள்ளகக் காரணிகள் என்பவை தகவல் வளங்களின் பௌதிக வடிவமைப்புடன் தொடர்புடையது. வெளியகக் காரணிகளி;ல் உயிரியல் காரணிகள் பௌதிக இரசாயனக் காரணிகள், சூழல் காரணிகள், பேரழிவுகள் என்பவை முக்கியமானவை. 16




4.1 பௌதிக வடிவமைப்பு

.தாள்களுக்கு அழிவை ஏற்படுத்தும் பிரதான காரணி தாளில் செறிந்திருக்கும் அமிலத்தன்மையாகும். தாள்களின் நிரந்தரத்தன்மை தாளில் காணப்படும் அமிலத்தின் அளவில்ஜிர்ஸ தங்கியிருக்கிறது. வெளிறச் செய்தலுக்குப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள், மை வகைகள், காற்று அசுத்தமாக்கிகள், அமிலப்பரவல் போன்றவற்றால் தாளில் அமிலத்தன்மை உருவாகிறது. இந்த அமிலம் இறுக்கமான செலுலோசை சாதாரண அணுத்திண்மங்களாக உடைத்துத் தாளைப் பலவீனப்படுத்துகிறது. இது தவிர உயர் அமிலத்தன்மை உள்ள பொருள்களிலிருந்து அமிலத்தன்மை குறைந்த அல்லது இல்லாத பொருட்களை நோக்கி அமிலம் நகரமுடியும் என்பதால் அமிலத்தன்மையற்ற தாள்கள் கூட காலநிலை மாறுபாடுகளாலும் அமிலப்பொருட்கள் அருகில் இருப்பதன் மூலமும் அமிலத்தன்மையுள்ளதாக மாறலாம். ஓரு நூலில் இணைக்கப்படுகின்ற செய்தித்தாள் துணுக்கு விரைவிலேயே தானும் நிறம் மாறி நூலையும் மண்ணிறமாக மாற்றிவிடுவது இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். இதுமட்டுமன்றி ஈரப்பத விகிதத்தின் ஏற்ற இறக்கத்தினால் தாள்கள் பலதரப்பட்ட வீதத்தில் நீரை உறுஞ்சும் போதும், வெளிவிடும் போதும், தாள்களில் உள்ள நார்ப்பொருட்கள் விரிந்து சுருங்கும் போதும் ஏற்படும் உள்ளக அழுத்தங்கள் சாதனங்களில் நீண்டகால விளைவை ஏற்படுத்துகின்றன. நன்கு கட்டப்பட்ட நூலொன்றின் கோணலடைந்த நூல் மட்டை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இங்கு காணப்படும் தாளை அடிப்படையாகக் கொண்ட சாதனங்களில் கணிசமானவை அமிலத் தன்மை கூடிய தரங்குறைந்த தாள்களாகவே உள்ளன. ஆவணக்காப்பகப்பகுதியில் பாதுகாக்கப்படும் சாதனங்களில் கணிசமானவை மஞ்சள் நிறமுள்ள, நொருங்கும் தன்மை வாய்ந்த நூல்களாகவே இனங்காணப்பட்டுள்ளன. சூரிய ஒளி, அதிக வெப்பம் போன்றவற்றிலிருந்து மர அலுமாரிகள் ஓரளவுக்குக் காப்பு வழங்குகின்ற போதும், சீற் கூரையிலிருந்து நேரடியாகத் தாக்கும் வெப்பமும் மழை ஒழுக்குகளும் ஈரப்பத விகிதத்தில் சடுதியான ஏற்ற இறக்கங்களை கொண்டு வந்து நூலின் அழிவை வேகப்படுத்துவது தவிர்க்க முடியாதாக மாறியிருக்கிறது. ஆவணக்காப்பகப்பகுதியின் சமநிலையற்ற ஈரப்பத விகிதத்தைக் கட்டுப்படுத்துவதற்கேற்ற வகையில் குளிரூட்டல் வசதி மிக அவசியமாகும். செய்தித்தாள் பகுதியிலுள்ள அனைத்து வளங்களும் அதிக வெப்பம் காரணமாகவும் தரங்குறைந்த தாளில் உருவாக்கப்பட்டமையாலும் மஞ்சள் நிறமடைந்து மிகப் பாதிப்புற்ற நிலையில் காணப்படுகின்றன.




4.2 உயிரியல் காரணிகள்:-

• மனிதர்கள்:-ஆவண விரோதிகளில் மிகவும் ஆபத்தானதும், அறிவுசார் ரீதியில் அழிவை ஏற்படுத்தவல்லதுமான உயிரியாகக் காணப்படுவது ஆறறிவு படைத்த மனித உயிரி என்பதையே தகவல் விஞ்ஞானத் துறையின் அனுபவ அறிவு இனங்கண்டிருக்கிறது. மனித உயிரியால் ஏற்படுத்தப்படும் பாதிப்பு உற்பத்தியாளன், பாவனையாளன், பாதுகாவலன் என்ற மூன்று தன்மைகளின் அடிப்படையில் ஏற்படுகிறது. 17 இலாப நோக்கம் கருதிய மனிதனது உழைப்பும் முயற்சியும் இணைந்து நீண்ட நார்ப் பொருளைக் கொண்ட கனதியான நீடித்து உழைக்கக்கூடிய தாள்களின் உற்பத்தியிலிருந்து தரங்குறைந்த குறுங்கால வாழ்வுடைய தாள்களின் உற்பத்திக்கு வித்திட்டமை, தகவல் சாதனங்களுக்கு பொறிமுறை ரீதியிலும் இரசாயன ரீதியிலும் அழிவை ஏற்படுத்தும் ஒளிப்படப் பிரதியாக்கமுறை, நூலகங்களுக்குள்ளே வடிவமைக்கப்படும்; குடிநீர், வசதிகள் போன்றவை உற்பத்தி சார்ந்து ஏற்படும் மனிதப் பாதிப்பாக உள்ளது. இங்கும் கூட அமிலத் தன்மையைப் பரிசோதிப்பதற்கான தொழினுட்ப வசதியோ, அல்லது அவற்றை கூடிய விலை கொடுத்து வாங்கக்கூடிய நிதி வசதியோ இல்லாத காரணத்தால் தரங்குறைந்த தாள்களில் வெளியான நூல்களே அதிக இடத்தை நிரப்புகிறது. ஆவணக்காப்பகப்பகுதியிலுள்ள சாதனங்களும், பருவ இதழ்ப்பகுதியிலுள்ள சாதனங்களும் இரவல் எடுத்துச் செல்ல முடியாததாகையால் இவற்றுக்கான ஒளிப்படப் பிரதியாக்கப் பாவனை மிக அதிகமாகும்.

பாவனையாளர்கல்வி தொடர்பான போதிய அறிவின்மையால் நூலக இறாக்கைகளிலிருந்து நூலின் முதுகுப்புறத்தைப் பலவந்தமாக இழுத்து எடுத்தல், நூலை விரித்து வைத்து அதன் மேல் முழங்கைகளால் அழுத்தியபடி வாசித்தல், பக்க ஓரங்களை இறுதியாகப் படித்;த அடையாளத்துக்காக மடித்துவிடுதல், நூலின் பக்கங்களை கீழிருந்து மேலாக தட்டுவதன் மூலம் பக்கங்களைப் புரட்டுதல், படுத்திருந்து ஒரு கையால் பிடித்தபடி மறுகையால் பக்கங்களைப் புரட்டுதல் போன்ற கவனமற்ற கையாள்கையும் நூல் இரவல் பெறும் போது பிழையான பெயர்களைக் கொடுத்தல், அடையாள அட்டைகளைத் தவறான முறையில் பயன்படுத்தல், ஆவணங்களிலுள்ள பக்கங்கள், படங்கள், வரைபடங்கள் என்பவற்றை வெட்டியெடுத்தல், ஆவணங்களில் எழுத்துக்களின் கீழ்க் கோடிடுதல், பக்க ஓரங்களில் எழுதுதல், கொழுப்பு எண்ணெய்க்கறைகளை ஏற்படுத்துதல் போன்ற திட்டமிட்ட வகையில் ஏற்படுத்தும் பாதிப்புகளும் இங்கு அதிகமாகும்.

நூலின் பாதுகாவலர் என்ற வகையில் பணிநிலை அலுவலர்கள் நூல் தாங்கிகளுக்குள் நூல்களைப் பலவந்தமாகச் செலுத்த முனைதல், நூல் தாங்கிகள் இன்றி நூல்களைச் சாய்ந்த நிலையில் இறாக்கைப்படுத்தல்;, நூல்களை மிக நெருக்கமாக இறாக்கைப்படுத்துதல் போன்றன தாள்கள் கிழிவதற்கும், நூல் மட்டைகளின் கட்டுத் தளர்வதற்கும் ஏதுவாகிறது. நூல் வண்டிகள் இன்றி அல்லது மேல் மாடிகளுக்கு எடுத்துச் செல்வதற்கான வசதிகள் இன்றி நூல்களைக் கைகளில் காவிச் செல்லுதல் காரணமாக நூல்கள் கீழே விழுந்து கிழிபடுதல் தவிர்க்க முடியாததாக உள்ளது. நூல்களை இரவல் வழங்கும் செய்முறையில் நூல்களின் பின்புற அட்டைகளின் உட்பகுதியில் பின்புறப் பலம் கொடுக்காது திகதி முத்திரை இடும் போது ஆவணங்களின் கட்டு விட்டுப்போக வாய்ப்பு ஏற்படுகிறது.

தகவல் அமைப்பின் தலைமை அலுவலரினால் ஆவணங்களைப் பேணுதல் தொடர்பாக சரியான கொள்கை வகுப்போ, திட்டமிடலோ மேற்கொள்ளப்படாதுவிடின் அதுவும் திட்;டமிட்ட ஆவண விரோதச் செயலாகவே கருதப்படுகிறது. மிகக்குறைந்த கட்டுப்பாடுகளுடன் தகவல் வளங்கள்; வாசகரின் பாவனைக்கு விடப்படுமாயின் ஆவண மோசடியோ, களவோ, தவறான பாவனையோ தவிர்க்கப்படமுடியாததாகவே இருக்கும்.

• பேருயிரிகள்:-இலங்கை போன்ற வெப்பவலய நாடுகளில் ஆவணங்களுக்கு நேரடிப்பாதிப்பை உண்டு பண்ணும் காரணிகளாக இவை காணப்படுகின்றன. அடிக்கடி பாவனையில் இல்லாத நூல்களும், இருட்டறையில் வைக்கப்படும் நூல்களும் பேருயிரிகளின் தாக்கத்திற்கு அதிகம் உட்படுகின்றன. இந் நூலகத்தில் பேருயிரிகள் என்ற வகையில் இராமபாணம்;(ளுடைஎநசகiளா), அந்துப்பூச்சி(ஆழவாள), கறையான்(வுநசஅவைந)இ கரப்பான் (ஊழஉமசழயஉhநள) புத்தகப்புழு (டீழழமறழசஅ), புத்தகப்பேன்(டீழழம டiஉந) போன்றவற்றால் ஏற்படும் பாதிப்பு கூடுதல் இனங்காணப்படுகிறது. புகையூட்டல் போன்ற பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ளாமை காரணமாக இராமபாணம், அந்துப்பூச்சி போன்றவற்றின் தாக்கத்தால் ஆரம்பகாலங்களில் சாதனங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டு போகின்றது. மர அலுமாரிகளும், தற்போது பயன்படுத்தப்படும் பூச்சி உரூண்டை, மலத்தியோன் போன்ற பூச்சி கொல்லிகளும் கட்டுப்படுத்த முடியாதளவுக்குப் பரவிச் செல்லும் பேருயிரிகளின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு கொடுப்பது என்பது சாத்தியமற்றது. தளப்பகுதியின் வெடிப்புகளிலிருந்து வெளிக்கிளம்பும் கறையான்களுக்கு எவ்வாறு ஈடு கொடுப்பது என்பது பருவ இதழ்ப்பகுதியின் பிரதான பிரச்சனைகளில் ஒன்றாக மாறியிருக்கிறது.

• நுண்ணுயிரிகள்:-இவை ஒன்றில் பஞ்சு போன்ற படையாகவோ, மஞ்சள், பச்சை, கறுப்பு நிற வண்ணங்கள் நிறைந்த வடிவமைப்பாகவோ, தொப்பளங்கள் போன்றோ படர்ந்திருக்கும். இவை படர்ந்துவிட்டால் அகற்றுவது மிகவும் கடினமாகும். வெப்பநிலை, மிதமான ஈரப்பதன், பனி, கடும் இருட்டு, ஊட்டச் சத்துக்கள் போன்ற சூழல் காரணிகள் பூஞ்சண உருவாக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் துணை செய்கின்றன. நூலக சாதனங்களிற்குக் காலம் முழுவதும் நாசம் விளைவிக்கும் உயிரிகளாக இவை கருதப்படுகின்றன. தாள்களில் மண்ணிறப் புள்ளிகள் முதலில் உருவாகி பின் சாம்பல் நிறப்புள்ளிகளாக நிறமாற்றம் பெற்றிருப்பதைக் கொண்டு அவற்றை நுண்ணுயிரிகள் தாக்கியிருப்பதை அறியமுடியும்.




4..3 சூழல் காரணிகள்

தகவல் அமைப்பு ஒன்று அமைந்திருக்கும் இடமும் ,அங்குள்ள காலநிலையும் ஆவண வளங்களின் அழிவுக்குக் கணிசமான பங்களிப்பை வழங்குகின்றன. மாசடைதலானது திண்ம, திரவ, வாயு, ஆவி வடிவில் உருவாகலாம். பலதரப்பட்ட கைத்தொழில் செய்முறைகள், விபத்துகள், தகவல் அமைப்பின் உள்ளக செயற்பாடுகள், மின்னல், பூகம்பம், காட்டுத்தீ போன்ற சடுதியான இயற்கை நிகழ்வுகள், விலங்குகள், தாவரங்களின் இறப்புப் போன்ற மெதுவாக நடைபெறுகின்ற தொடர் செய்முறைகள் போன்றவற்றால் மாசடைதல் உருவாகிறது. தூசி, அழுக்கு, புகை, காற்று, உப்புத் துணிக்கைகள் போன்ற அசுத்தமாக்கிகளும், வாயுப் பொருட்களும் ஈரத்தன்மை போன்ற சாதாரண காரணிகளும் அழிவை ஏற்படுத்துகின்றன.18

நூலக சாதனங்களில் அதிகம் பரவிக் கிடப்பது தூசியாகும்.; நூலக இறாக்கைகள், சாதனங்கள், தளபாடங்கள் அனைத்தையும் இது ஆக்கிரமித்திருக்கிறது. ஆவணக்காப்பகப் பகுதி, அரச ஆவணக் காப்பகப் பகுதி என்பவை மர அலுமாரிகளைப் பயன்படுத்துவதனூடாக அசுத்தமாக்கிகளிலிருந்து கூடுதல் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்கிறது. எனினும் தாளை அடிப்படையாகக் கொண்ட சாதனங்கள் தமக்குள்ளேயே தூசியை உருவாக்கும் வல்லமை கொண்டமையால் அடிக்கொருதரம் இவை துப்பரவு செய்யப்படாதுவிடின் இதுவே நூற் பாதிப்பின் பிரதான காரணியாக அமைந்து விடும் அபாயம் உண்டு. ஊழியர் பற்றாக்குறையானது திறந்த இறாக்கைகளில் வைக்கப்பட்டிருக்கும் எண்ணுக்கணக்கற்ற பருவ இதழ்களைக் கொண்ட பருவ இதழ்ப்பகுதியினை தூசிப் படலமாக மாற்றியிருக்கிறது.




5. முடிவுரை

முதல்நிலைத் தகவல் வளங்கள் அனைத்தும் ஆய்வு முயற்சியில் ஈடுபட்டிருக்கும் எந்த நிறுவனத்துக்கும் ஆதாரமாக இருப்பவை. நூல் விநியோகஸ்தர் மூலமாகப் பணம் கொடுத்துப் பெற்றுக் கொள்ள முடியாதவை. தனிப்பட்ட ரீதியிலும் குழுவாகவும் சேகரிக்கப்படவேண்டியவை. பிரதேச முக்கியத்துவம் மிக்கவை. தனிக் கவனம் எடுத்து பாதுகாக்கப்படவேண்டியவை. இந்த நூலகத்தில் முதல்நிலைத் தகவல் வளங்கள் பெரும்பாலும் அறியப்படாத வளமாகவே இருக்கின்றன. முதல் நிலைத் தகவல் வளங்களின் அளவையும் அதன் தரத்தையும் கொண்டே ஆய்வு நிறுவனம் ஒன்றின் தரம் அளவிடப்படுகிறது. எனவே இவற்றின் சேகரிப்பு எவ்வளவுக்கெவ்வளவு முக்கியமோ அவ்வளவுக்கு இவற்றின் பராமரிப்பும் முக்கியமானதாகும்..




அடிக்குறிப்புகள்
Rajagopalan,T.S and Rajan,T.N. Agenda for National Information Policy.Handbook of Libraries,Archives & Information centres in India. vol.3-Information policies,systems and networks(1986),Information Technology Publications,New Delhi,p24.
Krishankumar.(1984),Reference services,Vikas,New Delhi,p98-103.
Library Statistics of the Archives&Government documents(2004)
Harrods,L.M.(1987).op.cit.
Library Statistics of the Archives&Government documents(2004)
Philipps,Eva,(1990),Documentation made easy: Vieweg,Wiesbaden,p106
Harrods,L.M(1987).opcit.,p580.
Readers record (2003-4),Archives
Harrods,L.M(1987).Ibid.,p596
Gs;sptpgug; gjpNtL>gUt ,jo;g; gFjp
Parker,C.C,and Turley,R.V(1975), Information sources in science and technology, Butterworths,London,p112.
Ibid
Readers record (2003-4),Archives
Ibid.
Licklider,J.C.R. (1965). Libraries of the future.Mass,MIT,Cambridge.
Harvey,Ross. Preservation in Libraries: Principles,strategies and practices for Librarians. London: Bowker,1993.
Ibid.
Pasce,M.W. (1988),Impact of environmental pollution on the preservation of archives and records: a RAMP study:UNESCO,Paris,p27










(Primary Information resources available at Library, University of Jaffna. Arrangement, Use & maintenance. [Cinthanai.vol.xiv, no.3; Nov. 2004)

பாடசாலை நூலகங்கள்

பாடசாலை நூலகங்கள் 

புதுயுகம் தரும் பெரும் பொறுப்புகள்



புது யுகம்

இது ஒரு தகவல் தொழினுட்ப யுகம். எல்லோர்க்கும் எல்லாம் என்ற ஆதிப் பொதுவுடமைத் தத்துவத்தின் அடிப்படையில் ஆரம்பித்த மனிதனது சமூக வாழ்வு விவசாயத்தை முதன்மையாகவும் நிலத்தை பிரதான மூல வளமாகவும் கொண்ட கைத்தொழிலுக்கு முற்பட்ட சமூகம் ஒன்றையும், கைத்தொழிலை முதன்மையாகவும் இயந்திரத்தை பிரதான மூல வளமாகவும் கொண்ட கைத்தொழில் சமூகம் ஒன்றையும், ஆய்வு நடவடிக்கைகளை முதன்மையாகவும் அறிவை பிரதான மூல வளமாகவும் கொண்ட கைத்தொழிலுக்குப் பிற்பட்ட சமூகம் ஒன்றையும் கடந்து முழுக்க முழுக்க தகவலைச் சுற்றியே பின்னப்பட்ட, தகவல் தொழிற் துறையை முதன்மையாகக் கொண்ட தகவல் சமூகம் ஒன்றில் தற்போது நடைபயில்கிறது.ஷ அறிவே ஆற்றல் என்ற புகழ் பெற்ற வாசகம் கைத்தொழில் சமூகத்துக்கு உரியதெனில் ஷதகவலே ஆற்றல் என்ற புது வாசகம் மூன்றாவது ஆயிரியத்தின் நுழைவாயிலுக்குப் பொருத்தமானது. 1980களில் கருக்கொண்ட தகவல் யுகத்தின் தோற்றப்பாடு 1990களில் வீச்சடைந்து இன்று உலகின் மூலைமுடுக்கெல்லாம் ஊடுருவியுள்ளது. மின்னாமல் முழங்காமல் ஓய்ந்த விவசாயப் புரட்சிக்கும,; மின்னி முழங்கி ஓய்ந்த கைத்தொழில் புரட்சிக்கும் அடுத்ததாக மனித சமூகம் சந்திக்கும் மாபெரும் புரட்சியாகக் கருதப்படுவது தகவல் புரட்சியாகும்.

தகவல் புரட்சிக்கு அடித்தளமாக அமைபவை கணினிகள். கணித்தல் செயற்பாடுகளுக்;கு உதவுவதற்கான கருவியாகக் கண்டுபிடிக்கப்பட்ட கணினி இன்று தனது ஐந்தாவது தலைமுறையில் உலகத்தை உள்ளங்கைக்குள் அடக்கக்கூடிய சர்வ வல்லமைமிக்க சக்தியாக உருவெடுத்துள்ளது. கணினித் தொழினுட்பம், தொலைதொடர்புத் தொழினுட்பம், கட்புல செவிப்புல தொழினுட்பம், நுண்பிரதியாக்கத் தொழினுட்பம் என்பன இணைந்த தகவல் தொழினுட்பச் சூழல் ஒன்று உருவாகியுள்ளது. வீடுகள் முதற்கொண்டு அலுவலகங்கள் வரை எங்கும் கணினி மயம். வீதிகள் தோறும் கணினிப் பயிற்சி நிலையங்கள். வேலைக்;கு உதவும் கருவியாக, அடுத்தவருடன் தொடர்பு கொள்ளும் தொலைபேசியாக, செய்தி அறிய உதவும் செய்தித் தாள்களாக,, அறிவைப் பெருக்க உதவும் நூலகமாக, பொருட்களை விற்க வாங்க உதவும் விற்பனைப் பிரதிநிதியாக, பொழுதுபோக்க உதவும் தொலைக்காட்சியாக என்று மனித வாழ்வின் அனைத்து தேவைகளையும் சிறிய கணினித் திரைக்குள் சாதிக்க இணையம் உதவுகிறது. தகவல் உருவாக்கத்தினதும் பெறுதலினதும் அளவிலும் வகையிலும் ஒவ்வொரு தேசத்தினதும் பொருளாதார அரசியல் சமூக சூழலானது பாதிக்கப்பட்டுள்ளது. உலகை வடிவமைக்கும் ஆற்றல் பெற்ற சக்தியாக உருவெடுத்துள்ள தகவலை அணுகுதல் பகிர்தல் பயன்படுத்தல் என்பவற்றில் வெற்றி பெற்ற ஓரு உலகில் நாம் வாழ்கிறோம்.

மனித இனம் தோன்றிய காலம் முதற் கொண்டு தன்னைச் சுற்றியுள்ளவை மீதான அவதானிப்புகளும், அவ் அவதானிப்புகளை பரிசோதனைக்குள்ளாக்கி தீர்வு காண முயலும் மனித மூளையின் ஆற்றலும், தான் பெற்ற அறிவை அடுத்துவரும் பயன்படுத்தும் வகையில் காலத்துக்குக் காலம் கிடைத்த எழுது பொருட்களில் பதிந்து வைக்கும் மனித சிந்தனையும் இணைந்ததால் தோற்றம் பெற்ற எண்ணற்ற மனித சிந்தனைப் பதிவேடுகளை அனைவரும் பயன்படுத்துவதற்கேற்ற வகையில் சேகரித்து ஒழுங்கமைத்து பாதுகாத்து பாவனைப்படுத்தும் பணியில் பல தகவல் நிறுவனங்கள் தோற்றம் பெற்றுள்ளன. எனவே நூல்களின் பாதுகாத்தல் அதற்கும் சற்று மேலே சென்று நூல்களை இரவல் கொடுத்து வாங்கும் பணியை செய்தல் என்ற நிலையிலிருந்து மாறி உருவத்திலும் உள்ளடக்கத்திலும் சிக்கல் வாய்ந்த கட்டமைப்;பைக் கொண்டதாக மாறியுள்ள தகவல் சாதனங்களை சிறந்த முறையில் கையாளும் பணிக்கு நூலகங்கள் மாறவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறன. அந்த வகையில் புதுயுகத்தின் பரிமாணங்களை உள் வாங்கவேண்டிய தேவை பாடசாலை நூலகங்களுக்கும் இருப்பது காலத்தின் கட்டாயமாகும்.




புதிய போக்குகள்

ஆகக் குறைந்து வகுப்பறை ஒன்றையே நூலகமாக கொண்ட பெரும்பாலான பாடசாலைகளில் மட்டுமன்றி நூலக வசதியை ஓரளவு கொண்ட தரம் கூடிய பாடசாலைகளிலும் கூட புதிய கட்டடம் ஒன்று அவசர அவசரமாக எழும்பிக் கொண்;டிருக்கிறது. சிலது பூரணப்படுத்தப்பட்டுள்ளது. சில முடியும் தறுவாயிலுள்ளது. சிலவற்றுக்கு அடித்தளம் போடப்படுகிறது... பாடசாலையில் கற்றல் இலக்குகளையும் செயல்முறைப்படுத்தக்கூடிய நோக்கங்களையும் பூர்த்தி செய்வதற்கான முக்கிய மூலக்கூறாக பாடசாலை நூலக கற்றல் வள நிலையம ஒன்றின் முக்கியத்துவத்தையும் பெறுமதியையும் கல்வி உயர்கல்வி அமைச்சானது உணர்ந்துள்ளதன் வெளிப்பாடே இவை. பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகளுக்கு கிட்டவாக நிற்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து ஆங்கில மொழியில் நூலக தகவல் விஞ்ஞான டிப்ளோமா பயிற்சி நெறியை கல்வியியல் கல்லூரிகள் தொடங்கியிருக்கின்றன. பயிற்சி முடித்து வெளியேறியுள்ள முதல் தொகுதி மாணவர்கள் பாடசாலைகளுக்குள் புகுந்து நூலகவியல் கற்பிப்பதற்கான வாய்ப்பின்றி ஆங்கிலம் கற்பித்துக் கொண்டிருக்கின்றனர். பாடசாலைகளுக்குள் நூலக உணர்வை ஏற்படுத்துவது மட்டுமன்றி நூலகக் கல்வியை பாடத் திட்டத்தில் புகுத்துவதற்கான தயார்நிலையின் சின்னங்களாக இவர்கள் விளங்குகின்றனர். பாடசாலைகளில் பட்டதாரி ஆசிரியர் அல்லது நீண்ட கால சேவை அனுபவம் உள்ள ஒருவர் ஆசிரிய நூலகராக நியமிக்கப்பட்டு அவர்களுக்கான ஐந்து நாள் செயலமர்வுகளை நூலக தகவல் விஞ்ஞானத்துக்கான தேசிய நிறுவனமும் மாகாண கல்வித் திணைக்களமும் இணைந்து பிரதேச ரீதியாக நடத்தியதைத் தொடர்ந்து பாடசாலை நூலகங்களை புனரமைக்கும் முயற்சிகள் துரிதமாக நடக்கின்றன. 2002 ல் கொழும்பில் நடத்திய ஷபாடசாலை நூலகத்தை ஒழுங்கமைத்தலும் முகாமை செய்தலும்ஷ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஐந்து நாள் செயலமர்வின் வெளிப்பாடாக, இது தொடர்பான கைநூல் ஒன்றும் வெளியிடப்பட்டிருக்கிறது. சர்வதேச நூலக தினதத்தை முன்னிட்டு கடந்த ஒக்டோபர் 21-27 வரை அனைத்து பாடசாலைகளிலும் நூலக வாரம் கொண்டாடப்பட்டு கருத்தரங்குகள் கண்காட்சிகள் சொற்பொழிவுகள் என நூலக செயற்பாடுகள் களைகட்டியிருந்தது மட்டுமன்றி சிறந்த முறையில் நூலக வாரத்தை கொண்டாடியவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கல்வித்திணைக்களம் கௌரவித்த நிகழ்வும் நடந்தேறியிருக்கிறது.




புதிய பொறுப்புகள்

தானங்களில் சிறந்தது வித்தியாதானம் எனப்படும் கல்வி.. கல்வியின் நோக்கங்கள் பல எனினும் அதன் பிரதான நோக்கம் சுயசிந்தனையுள்ள மனிதனை உருவாக்குதல். சுயசிந்தனையுள்ள மனிதனை உருவாக்குவதற்கு அறிவுசார் சிந்தனை அவசியம்.. ஷஎதனையும் உற்றுணர்ந்து, சீர்தூக்கிப் பார்த்து, நிதானித்து, எதிர் விளைவுகள் பக்க விளைவுகளை அடையாளங் கண்டு ,பயன்விளைவு ஆராய்ந்து, அனுகூலங்கள் பிரதிகூலங்களை கருத்தில் கொண்டு, ஒன்றைக் கூறும்- நம்பும் -தீர்மானிக்கும்- தீர்வு காணும்- செயற்படுத்தும்- அறிவும் மனப்பாங்கும் உடைய உள்ளம் அறிவு சார் உள்ளம் என்றும் அத்தகைய சிந்தனை அறிவு சார் சிந்தனை என்றும் கூறலாம்ஷ என படியாதவனின் படிப்பு என்ற நூல் கூறுகிறது. அறிவு சார் சிந்தனையை உருவாக்குவதற்கு பரந்த வாசிப்புத் திறன் முக்கியம். தான் எதிர் கொள்ளும் பிரச்சனைகளிலிருந்து விடுவிப்பதற்கு தனித்துவமான, தனக்குத் தானே நீதிபதியாகக் கூடிய வல்லமையை அளிப்பது இந்த பரந்து பட்ட வாசிப்புத் திறனே. வீட்டுச்சூழலில் இருந்து வெளியுலகுக்கு குழந்தை பிரவேசிக்கும் முதலாவது இடமாக பாடசாலைகள் இருப்பதனால் குழந்தையின் வாசிப்புப் பழக்கத்துக்கு அடித்தளம் போடும் நல்ல வாய்ப்பு பாடசாலை நூலகத்துக்கு ஏற்படுகிறது. நூலக சேவையற்ற கல்வி ஆன்மா இல்லாத உடலுக்கு ஒப்பானது; நாட்டின் எதிர்காலம் ஒப்படைக்கப்பட்டிருப்பது இன்றைய குழந்தைகளிடமே என்பது உண்மையானால் அந்த குழந்தைகளின் உள்ளத்தை கிட்டத்தட்ட 12 வருடங்கள் பண்படுத்தும் பாரிய கடமைப்பாட்டில் இருப்பவை பாடசாலைகள். பாடல்கள் கதை சொல்லல் மூலம் முன்பள்ளிகளில் தனது துருவி ஆராயும் பண்புக்கு களம் அமைக்கும் குழந்தைகள் வாசிப்பு பழக்கத்தின் மூலமே இப் பண்பை கட்டியெழுப்பலாம் என்ற அறிவை பெறக்கூடிய இடமாக பாடசாலை நூலகங்கள் இருத்தல் அவசியமானது. இது மட்டுமன்றி புது முயற்சிகளில் இறங்கும் குழந்தையின் இயல்பை ஊக்குவிப்பது சுயசார்புக் கல்வி மட்டுமே. புதிய பாடத்திட்டங்கள், கணிப்பீடுகள் யாவும் இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது மட்டுமன்றி எழுத்தறிவிக்கும் இறைவர்களையும் கற்பிப்பதற்கு கற்பவர்களாக மாறவேண்டிய நிலையை நிர்ப்பந்திக்கிறது.. இத்தகைய பின்னணியில்; புது யுகம் ஒன்றில் பாடசாலை நூலகங்கள் ஆற்றவேண்டிய பெரும் பொறுப்புகளை வாசகர் நூல்கள் நூலகர்; என்ற அம்சங்களின் கீழ் நோக்குதல் பொருத்தமானது.




வாசகர்

பாடசாலை நூலகத்தின் வாசகர் குழு இரண்டு. ஒன்று அறிவுத் தேடலுக்கும் ஆக்கத்துக்கும் உரிய மாணவ சமூகம். மற்றது கற்பிப்பதற்காக கற்கும் ஆசிரிய சமூகம். மாணவர்களை படிக்கும் தரத்தின் அடிப்படையில் ஆரம்பநிலை,இடைநிலை,உயர்நிலை என மூன்றாக வகைப்படுத்த முடியும். மனித வளர்ச்சிக்கட்டங்களின் அடிப்படையில் ஆரம்ப நிலை மாணவர்கள் பிள்ளைப்பருவத்துக்கும் இடைநிலை உயரநிலை மாணவர்கள் கட்டிளம் பருவத்துக்கும் உரியவர்கள். சர்வதேச நியமத்தின் அடிப்படையில் அனைவருமே சிறுவர்கள்.

பிள்ளைப்பருவம் என்பது 5-12 வயது வரையான பருவம். வீட்டுச்சூழலையும் விட்டுவிடாமல் பள்ளிச்சூழலுக்குள்ளும் முழுதும் அகப்பட்டுப்போகாமல் இருக்கும் இப்பருவத்தினரின் பிரதான தன்மை ஆராய்வூக்கமாகும். அறிவு வளர்ச்சிக்கு அடிப்படையானது ஆராய்வூக்கமாகும். மூன்று வயதில் முன்னிலைக்கு வரும் ஆராய்வூக்கமானது எட்டாவது வயது வரும்போது தீவிரமாக செயற்படத் தொடங்கி ஆக்கவூக்கத்துக்கும் அதன்பின்னர் பலவகைப் பொருட்களைத் தேடிச் சேர்க்கும் சேகரிப்பூக்கத்துக்கும் இட்டுச் செல்கிறது.. இந்த ஊக்கத்தை முளையிலேயே கிள்ளி எறிந்து விடாமல் அதை வளர்ப்பதற்கு உறுதுணையாக இருக்கும் முதலாவது காரணி குடும்பச் சூழல் ஆகும். மற்றய காரணி பாடசாலைச்சூழல். குழந்தையின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் ஆற்றல் பெற்றோருக்கு மட்டுமன்றி ஆசிரியருக்கும் சாத்தியமற்றது. எனவே கடிவாளக் கல்விமுறையை விட்டு சுயமாக கற்றலுக்கு வழிமுறை காணுதல் அவசியமானது இதையே புதிய கல்வித்திட்டங்கள் தற்போது கவனத்தில் எடுக்கின்றன சிந்தனா சக்தியும் நினைவாற்றலும் மிக்க இப்பருவத்தனரே நூலகரின் முதல் இலக்காக இருத்தல் அவசியம். தம்மைச் சுற்றியுள்ளவைகளை அவதானித்து அவை தொடர்பான உண்மை அறிவைப் பெற ஆர்வம் கொண்டிருக்கும் இப்பருவத்தினர் தான் வாசிப்புப் பழக்கத்துக்கும் சுயமாகக் கற்றலுக்குமான இலக்குகள்.

12 வயதில் தொடங்கி 18 அல்லது 20 ஆண்டுகள் வரை நீடிக்கும் கட்டிளம் பருவம் 20ம் நூற்றாண்டின் புதிய கண்டுபிடிப்பாகும். அதுவரை இப்பருவத்தினர் வளந்தோராகக் கருதப்பட்டு பொறுப்புமிக்க பணிகளில் வலிந்து ஈடுபடுத்தப்பட்டனர் ஓர் அமைதியற்ற சிக்கல் நிறைந்த பருவமாக இது கருதப்படுகின்றது.; முழுக்க முழுக்க வீட்டுச்சூழலிலிருந்து விடுபட்டு தனித்தியங்கும் விருப்பு அதிகமாக உள்ள இப்பருவத்தினரிடம் காணப்படும் பிரதான அம்சம் பாலுணர்வு. போதனைகளோ தண்டனைகளோ இவர்களிடம் எடுபடாது. தமது உணர்வுகளுக்கு தீனி போடும் எதையும் தேடி எடுக்கும் ஆற்றல் இவர்களிடம் உண்டு என்பதை யாரும் சொல்லிக்கொடுக்காமலேயே - இளவயதில் வாசிப்புப் பழக்கம் அற்றவர்கள் கூட- இவர்கள் பார்க்கும் படங்களிலிருந்தும் படிக்கும் கதைப்புத்தகங்களிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம். அதேசமயம் பிள்ளைப்பருவத்தினரைப் பொறுத்து பொழுதுபோக்குப்புத்தகமோ அல்லது பொது அறிவுப் புத்தகமோ வழிகாட்டினால் தான் உண்டு. இல்லாவிடில் வெறும் விளையாட்டுகளிலேயே அவர்கள் ஈடுபடுவர் என்பது அனுபவ ரீதியான உண்மையாகும். எனவே பிள்ளைப்பருவத்தில் காட்டப்படும் சரியான வழிகாட்டுதலே கட்டிளம் பருவத்து தனித்தியங்கும் ஆற்றலை அறிவு சார் பாதை நோக்கி செப்பனிட உதவும்.

நூலகத்தின் மற்றொரு வாசகர் குழு பாடசாலையின் ஆசிரியர் சமூகமாகும். அடிக்கடி மாறும் சமூகச்சூழலுக்கு ஏற்ப கற்பிப்பதற்கு, கற்றல் என்பது அவரது அன்றாட நடவடிக்கையாக மாறவேண்டியது அவசியம். புதிய பாடத்திட்டமும் கல்வியின் நோக்கங்களும் ஆசிரியர்களை மாணவர்களாகும்படி நிர்ப்பந்திக்கின்றன என்றால் அவர்கள் செல்ல வேண்டிய பள்ளிக்கூடம் நூலகமே. புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளையின் வார்த்தைகளில் சொல்வதானால் ஆசிரியர் என்பவர் நிரம்பிய கல்வி,,ஆழமான அறிவு விசாலமான ஆராய்ச்சி, பரந்த மனப்பான்மை உயர்ந்த கொள்கை, சூழலைப் பயன் செய்தல் தேசிய நோக்கம் முதலிய பலகருத்துக்களை உள்ளடக்கிய ஷசூழ்ந்த பார்வை கொண்டவர்ஷ இத்தகைய சூழ்ந்த பார்வைக்கு அவர் நூலகத்தின நிரந்தர வாசகராக மாறவேண்டியது அவசியமாகும். ஷ21ம் நூற்றாண்டின் ஆசிரியருக்கு தமது மாணவர்களிடையே காணப்படும் அடிப்படை நிபுணத்துவங்கள், படைப்பாற்றல் திறன் மாற்றம் அல்லது புதமை காணல் என்பவற்றின் சிறப்பம்சங்கள் பல்துறைப்புலமை, மாறும் நிலைக்கேற்ப அமைதல் விமர்சனப்பாங்கு, பிரச்சனைகளை இனங்காணல் மற்றும் தீர்ப்புத் திறமை என்பன பற்றிய ஆற்றல் இருக்க வேண்டும்ஷ என்ற யுனெஸ்கோவின் அறிக்கையும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்;கது.




நூல்கள்

நூல்களை உள்ளடக்கம் உருவமைப்பு என்ற இரு பிரதான பிரிவுகளுக்குள் நோக்குதல் பொருத்தமானது.




உள்ளடக்கம்.

• மனிதனின் ஆய்வு முயற்சிகள் அறிவுப் பிரபஞ்சத்தில் புதுப்புதுத் துறைகளை தோற்றுவித்ததுமல்லாமல் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற எத்தனையோ பொருட்துறைகளை ஒன்றிணைத்து எது கலை? எது அறிவியல்? என்று பிரித்தறியாதபடி புதிய பொருட்துறைகளை உருவாக்கியுள்ளது. எமது முதல் தலைமுறையினருக்கு கணினி அறிவியல் என்ற புதிய துறை இருந்ததோ உயிரியலும் தொழினுட்பவியலும் இணைந்து தோற்றம் பெற்ற உயிர்த்தொழினுட்பவியல் துறையோ தெரியாது.

• ஆய்வுத்துறைகளின் வளர்ச்சி நூல்களின் உள்ளடக்கத்திலும் பலதரப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தியதன் காரணமாக இன்று நூல்கள் என்ற பதத்துக்குள் அறிக்கைகள் ஆராய்ச்சி நூல்கள்,நியமங்கள் காப்புரிமைகள்,சிறுநூல்கள் செய்திக்கடிதங்கள் பருவ இதழ்கள் தொடர் வெளியீடுகள் என நூல்களின் வடிவங்களில் ஏற்படும் மாற்றங்களை உள்வாங்கும் அறிவு நூலகரிடம் எதிர்பார்க்கப்படுகிறது.

• மனிதனின் இன்றைய ஆய்வுகள் நேற்று உண்மை என நிறுவியதை பொய்யாக்கிவிடும் சந்தர்ப்பங்கள் அதிகமாக இருப்பதனால் நூலக சாதனங்களுக்குள் உண்மையானவற்றையும் பொய்யானவற்றையும் பிரித்தறிய வேண்டிய அறிவு நூலகருக்கும் வாசகருக்கும் இன்றியமையாததாகிறது.

• அச்சுப் பொறி தொடங்கி இன்றைய கணினித் தொழினுட்பம் வரை மனிதனின் அச்சிடுதல் தொழினுட்ப வளர்ச்சி தொகை ரீதியான அதிகரிப்புக்கு வழிகோலி நூல்களைத் தேடும் பணியை சிக்கலாக்கியுள்ளது.

• நூல்கள் புனிதமானவை. எனவே நல்லதை, தேவையானதை மட்டுமே பதிந்து வைக்க வேண்டும் என்ற மனிதனின் மனப்பாங்கு மாறி இலாபம் தரும் உற்பத்திப் பொருளாக கருதும் மனப்பாங்கு உருவாகியதன் விளைவாக எதனையும் எப்படியும் அச்சிடலாம் என்ற வகையில் அதிகரித்த மலினப்பதிப்புகளின் உற்பத்தியானது சூழல் மாசடைதல் போல் தகவலிலும் மாசடைதலை உருவாக்கியிருப்பதன் காரணமாக தீயவற்றுக்குள் நல்லதைத் தேடிப்பிடிக்க வேண்டிய அறிவை வாசகனிடம் கோரி நிற்கிறது.

• நூல்கள் பலதரப்பட்ட மொழிகளில் வெளியிடப்படும் அதேசமயம் வாசகர் ஒன்றிரண்டு மொழிகளிலேயே பரிச்சயமாக இருத்தல் சாத்தியம் என்பதால் உலக அறிவை அனைவரும் அணுகத் தக்க வகையிலான பொது திட்டம் ஒன்று நூலகம் சார்ந்து உருவாக்கப்பட வேண்டியதாகிறது.




உருவமைப்பு

• பார்த்தல் கேட்டல் படித்தல் சிந்தித்தல் கற்றல் என்ற ஒழுங்குமுறையில் பாடத்திட்டத்துக்கு பொருத்தமான நூல்கள் மட்டுமன்றி மாணவப் பருவத்தின் தேடலூக்கத்துக்கு உதவுக்கூடிய அனைத்து சாதனங்களையும் கட்டியெழுப்பவேண்டிய பணி நூலகத்துக்குண்டு.

• ஏன் எதற்கு எப்படி யார் போன்ற கேள்விகளுக்கு விடை தரக்கூடிய கலைக்களஞ்சியங்கள், ஆண்டு நூல்கள், அகராதிகள், வாழ்க்கை வரலாற்று நூல்கள் போன்றவை பாடசாலை நூலகம் ஒன்றின் பிரதான சாதனங்களாக இருத்தல் இன்றியமையாததாகும்.

• படித்தல் என்பதைவிட பார்த்துச் செய்தல் என்பதே மாணவப்பருவத்தின் இயல்பு என்பதற்கமைய மாணவர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய படத்துணுக்குகள் காட்சி வில்லைகள் ஒலி,ஒளிப் பதிவுகள் போன்ற கட்புல செவிப்புல சாதனங்களும், தேசப்படங்கள் படங்கள் ஒளிப்படங்கள் வரைபுகள் மாதிரி உருவமைப்புகள் சுவரொட்டிகள் போன்ற வரையுருவ சாதனங்களும் நூலக சேர்க்கையில் இருப்பது மிக முக்கியமானதாகும்..

• இன்றைய தகவல் சமூகத்துடன் இணைந்து போகக்கூடிய வகையில் கணினி அறிவு, இணையப் பயன்பாடு பல்லூடக வசதிகள் உள்ளடங்கிய இலத்திரனியல் சாதனங்கள் உள்ளடக்கப்படல் வேண்டும்




நூலகர்

நூலகம் என்பது நூல்கள் நூலகர்,வாசகர் என்பதன மூவுரு என்றால் இங்கு நூல்களையும் வாசகனையும் பொருத்தமான முறையில் இணைத்து விடுதல் என்னும் பணி நூலகரைச் சார்ந்தது. இங்கு இணைத்து விடுதல் என்பது ஷபொருத்தமான நூலை அதற்கு பொருத்தமான வாசகனிடம் பொருத்தமான நேரத்தில் பொருத்தமான முறையில் இணைத்துவிடுதல்ஷ என்னும் உட்பொருள் கொண்டது. இதற்கு வாசகனது வயது, அவனது தேவைகள், வாசகனது மனப்பாங்கு என்பனவும் நூல்களின் உருவமைப்பு முதற் கொண்டு உள்ளடக்கம் வரையிலான அறிவும் அவருக்கு அவசியமானது. வாசகனுக்கு தேவைப்படும் நூலை அவனுக்கு தேவைப்படும் நேரத்தில் கொடுப்பதற்கு நூலக சாதனங்கள் அனைத்தும் தொட்டவுடன் எடுக்கக்கூடிய வகையில் ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் அவசியமாகும். மாணவர்களது வயது அறிவுத் தரம் ஆர்வம் என்பவற்றின் அடிப்படையிலும் ஆசிரியர்களது தேவைகளது அடிப்படையிலும் மேற்கொள்ளப்படக்கூடிய பாரபட்சமற்ற நூல் தெரிவு, தன்னலமற்ற சேவை, பலதரப்பட்ட வாசகனது தகவல் தேவைகளையும் நினைவில் இருத்திக் கொள்ளக் கூடிய பல்பரிமாண நினைவாற்றல், வாசகர்களது குணநலன்களின் அடிப்படையில் எல்லோரையும் கருத்தில் கொள்ளக்கூடிய வகையிலான அநுதாப மனப்பாங்கு, பலதரப்பட்ட வாசகர்களது சுபாவங்களையும் எதிர் கொள்வதற்கான சாமர்த்தியம்,, வாசகனது அறிவுத் தேவையை பூர்த்தி செய்வதற்கு உதவக்கூடிய புலமைத்துவம், எல்லாவற்றுக்கும் மேலாக கடும் உமைப்பு ஆகிய ஏழு அம்சங்களும் ஒரு நூலகருக்கு இருக்க வேண்டிய சப்த ஒழுக்க தீபங்கள் என இந்திய நூலகவியல் அறிஞர் மிற்றல் கூறுவது இங்கு கருத்தில் கொள்ளப்பட வேண்டியதொன்றாகும். ஆனால் துரதிருஷ்டவசமாக நூலகப்பணி என்பது வேலை தேடுவோரின் இறுதி வாய்ப்பாகவே இன்றும் கருதப்படுகிறது. நுண்ணறிவு மிக்க வாசகனை திருப்திப்படுத்தும் அறிவாளியாக,எனக்கு ஒன்றுமே தெரியாது என்று நினைக்கும் தாழ்வுணர்ச்சியுள்ள வாசகனிடம் நல்லதோர் உளவியலாளராக, கூச்ச சுபாவமுள்ள வாசகனுக்கு நல்லதோர் வழிகாட்டியாக, ஷஎன்னை விட இவருக்கென்ன தெரியும்ஷ என நினைக்கும் எல்லாம் தெரிந்தவரையும்(?) பொறுத்துப்போகும் தத்துவவியலாளராக நூலகர்கள் புதிய யுகத்தில் மாறவேண்டிய தேவை உண்டு.

நூலகர் தானாக மாறாது விடின் புதிய தகவல் யுகமானது அவர்களை மாறும்படி நிர்ப்பந்திக்கும். அல்லது மாற்றும். ஏனெனில் புதிய யுகம் வேண்டுவது நுவலும் நூலகரையே அன்றித் தூங்கும் நூலகரை அல்ல.




குறிப்புதவு நூல்கள்









MITTAL,R,L. Library Administration:Theory and Pratice.-Delhi:Metrapolitan,1978
ANGRILLI,Albert and HELFAT,Lucile. Child Phychology.-Newyork:Barnes,1981.
RAY,Colin.Library services to school and children.-Paris:Unesco,1979.

நூலக முகாமைத்துவம்: ஓர் அறிமுகம்

நூலக முகாமைத்துவம்: ஓர் அறிமுகம்


0.முன்னுரை

           ஓவ்வொரு நாட்டிலும் உள்ள எந்தவொரு நிறுவனத்தை எடுத்துக் கொண்டாலும் - அரச நிறுவனங்கள், தொழில் வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், சமூக சேவை நிறுவனங்கள் மற்றும் வேறு எவ்வகையான ஒரு நடவடிக்கையினை மேற்கொள்ளும் நிறுவனங்கள் - அங்கு முகாமைத்துவம் என்ற பதம் குறிக்கும் செயற்பாடுகளை நாம் கண்கூடாகக் காண முடியும். நிறுவனத்;தின் பல மட்டங்களிலும் கண்காணிப்பாளர்களையும், மேற்பார்வையாளர்களையும், நிர்வாகிகளையும், இயக்குநர்களையும் நாம் காண்கின்றோம். இவர்களது சிறப்புப் பணி என்பது நிறுவனத்தில் பணி புரியும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை, அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியில் அமர்த்தி, அவர்கள் பணிகளை வரையறுத்து அப்பணிகளை அவர்கள் செவ்வனே முடிக்கும்படி செய்து எல்லோருடைய பணிகளும் நிறுவனத்தின் பொதுக் குறிக்;கோளை நிறைவேற்றப் பயன்படுமாறு செய்வதேயாகும். இத்தகையதொரு பணி தான் முகாமைத்துவம் என்ற பொதுப் பெயரால் அழைக்கப்படுகின்றது.

          பொதுவாக முகாமைத்துவம் என்ற பதம் மேலாட்சி, மேலாண்மை, செயலாட்சி, நிர்வாகம் என்ற பல பெயர்களில் வௌ;வேறு ஆசிரியர்களால் உபயோகிக்கப்பட்டாலும் அதன் உண்மையான, பொரும்பாலோரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பதம் முகாமைத்துவம் ஆகும்.

          இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை முகாமைத்துவம் என்பது ஒரு கலையாகவே கருதப்பட்டது. தனிப்பட்டவர்களின் செயல் திறமாக, சிலருக்கே கைவந்த ஒரு கலையாக எண்ணப்பட்டது. ஆனால் முகாமைத்துவம் ஒரு கலையன்று; அது அறிவியல் துறையின் பாற்பட்டது தான் என்ற நிலை அண்மையில் உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் முகாமைத்துவம் அறிவியல் துறையின் பாற்பட்டது என்பதை ஏற்றுக் கொள்ளாத பலர் இன்றும் உள்ளனர் என்பதும் அதற்கு அவர்கள் கூறும் காரணமும் ஓரளவு பொருத்தமாகவே உள்ளதென்பதும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியதொன்றாகும்.

           முகாமைத்துவம் சிலர் பால் கலைத்திறனாகவே மிளிர்கின்றது எனினும் எண்ணற்ற நிர்வாகிகள் தேவைப்படும் நவீன காலத்தில், பயிற்சியின் மூலம் நிர்வாகிகளை உருவாக்கிக் கொள்ள உதவுவது முகாமைத்துவ அறிவியல் முறையே எனலாம்.

           வீட்டை நிர்வகிக்கும் இல்லத்தரசி முதற்கொண்டு நாட்டை நிர்வகிக்கும் அரசு வரை முகாமைத்துவம் இன்றியமையாததாகின்றது. இந்த வகையில் ஒரு சமூக சேவையை அடிப்படையாகக் கொண்ட நூலகமும் இதற்கு விதி விலக்கல்ல. சுருங்கக் கூறின், எத்துறையாயினும், எத்தொழிலாயினும், பணியாளர்களின் எண்ணிக்கை ஒன்றுக்கு மேற்படும் போது, அங்கெல்லாம் முகாமைத்துவம் என்ற செயல்முறை தோன்ற வேண்டியுள்ளதுடன் அதுவே தவிர்க்க முடியாத ஒரு செயற்கருவியாக உருவெடுப்பதையும் நாம் காணலாம்.

          முகாமைத்துவக் கொள்கைகளை செம்மைப்படுத்தவும், விரிவு படுத்தவும், ஒவ்வொரு நாடும் முயன்றாலும், முகாமைத்துவத் துறையின் இத்துணை வளர்ச்சிக்கு அமெரிக்க நாடு தான் காரணம் என்றால் அது மிகையாகாது. டேலர் Taylor கில்பெர்த் Hilberth மேரி பார்க்கர் ஃபாலட் ஆParker and Ballet போன்ற வல்லுநர் இத்துறையை விரிவு படுத்தவும், செம்மைப்படுத்தவும் பெரிதும் உதவினர் என்பதும் இவ்வளர்ச்சியின் வாயிலாக முகாமைத்துவ கொள்கைகள் உலகெங்கும் பரவி பல்வேறு நிறுவனங்களாலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.


1.முகாமைத்துவம் - வரைவிலக்கணம் 

           'செய்து முடிக்க வேண்டிய எந்தப் பணியையும் அதற்குரிய பணியாளர்களைக் கொண்டு செய்து முடிப்பதே முகாமைத்துவம் ஆகும்.'

            பொதுவாக முகாமைத்துவம் என்ற சொல்லுக்கு சரியான வரைவிலக்கணம் இதுவரை கொடுக்கப்படவில்லை என்றே கூறலாம். அப்படிக் கொடுக்கப்பட்ட வரைவிலக்கணங்கள் கூட எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஏனெனில், முகாமைத்துவம் என்பது தனிப்பட்ட ஒரு முகாமையாளர் (Manager) புரியும் பணிக்கு மேற்பட்டதாகும். முகாமைத்துவம் ஒரு செயற்பாங்கு. அதன் மூலம் ஒரு நிறுவனத்தின் சிறந்த நோக்கங்களை முகாமையாளர் அந்நிறுவனத்தின் பணி புரியும் பணியாளர்களின் பணிகள் மூலம் பெறுகின்றார். எனவே, எந்தவொரு நிறுவனம் தனது பணியாளர்களின் ஒத்துழைப்பின் மூலம் தன்னுடைய முக்கிய நோக்கங்களை சிறிதும் மாற்றமின்றி பெற விரும்புகின்றதோ அந்நிறுவனத்திற்கு முகாமைத்துவம் அவசியமாகின்றது. முகாமைத்துவக் கோட்பாடுகளைத் தொழில் நிறுவனங்கள் மட்டுமன்றி, தொழில் சார்பற்ற சாதாரண நிறுவனங்களும் அரசு துறைகளும் சமூக சேவை கல்வி நிறுவனங்களும் கடைப்பிடிக்க வேண்டும். இதையே முன்னாள் அமெரிக்க குடியரசுத் தலைவர் ரூஸ்வெல்ட் அவர்கள், 'முகாமைத்துவக் கோட்பாடுகளைக் கடைப்பிடியாத ஒரு அரசு மணலால் கட்டப்பட்ட வீடு போன்றது' எனக் குறிப்பிட்டார். முகாமைத்துவத்தின் சிறப்புத் தன்மைகளை விளக்கும் வகையில் அதற்குக் கொடுக்கப்பட்டுள்ள ஓரிரு வரைவிலக்கணங்களை நோக்குவோம்.


(1) ஒரு குறிப்பிட்ட மனிதக் குழுவினுடைய நோக்கங்களை முடிவு செய்து, அலசியாராய்ந்து, அதனைச் செயற்படுத்துவதன் மூலம், அந்நோக்கங்களை அடையும் நுணுக்கமே முகாமைத்துவம் ஆகும்.
- பீட்டர்சனும் பிளாமனும்.

(2) நிறுவனத்தின் பணியாளர்களையும், வளங்களையும் கொண்டு தகுந்த திட்டங்கள் மூலமாகவும், ஒழுங்கமைப்பு மூலமாகவும், உரிய ஊக்குவிப்பு மூலமாகவும், தகுந்த கட்டுப்பாட்டின் படியும் அந்நிறுவனத்தின் நோக்கங்களை அறுதியிட்டு அவற்றை அடையவிழையும் ஒரு தனிப்பட்ட செயல்பாங்கே முகாமைத்துவமாகும்.
        - இராம முத்தையன்.


2.நூலக முகாமைத்துவம். 

          நூலகம் என்பது சேவை ரீதியானதும் சிக்கல் நிறைந்ததுமான ஒரு அமைப்பாகக் கருதப்படுகின்றது. தொழில் நுட்ப முன்னேற்றத்தின் காரணமாக மனிதனுடைய அறிவு விரிவடைந்தால், அந்த அறிவுப் பசியைப் போக்குவதற்கு நூலகம் ஒத்துழைப்பு நல்க வேண்டியது மிகவும் அவசியமாகும். நூலகத்தில் கடமையாற்றுகின்ற ஊழியர்களும் உயர் கல்வித்தரம் உடையவர்களாக Academic Background அல்லது கல்வித் தரம் உடையவர்களாக Educational background இருப்பதால் நூலக அமைப்பின் முகாமைத்துவப் பாங்கு மற்றைய தொழில் ரீதியான அமைப்பில் இருந்தும் வேறுபட்ட தொன்றாக உள்ளது. முகாமைத்துவம் என்ற பதம் குறிக்கும் வரைவிலக்கணங்கள், கொள்கைகள், கோட்பாடுகள் யாவும் எல்லாவகையான நிறுவனங்களுக்கும் பொதுவானவையாக இருப்பதனால் இவை சமூக சேவையை அடிப்படையாகக் கொண்ட ஒரு நிறுவனமாகக் கருதப்படும் நூலகத்துக்கும் பொருத்தமானவையாக இருப்பதில் ஆச்சரியமில்லை. இந்த வகையில், நூலக முகாமைத்துவம் என்ற பதத்திற்கு அளிக்கப்படும் வரைவிலக்கணங்களும், விளக்கங்களும் கூட பொது முகாமைத்துவக் கோட்பாடுகளை General management Principles  அடிப்படையாகக் கொண்டவையே. இதன் அடிப்படையிலேயே கரட்டினுடைய நூலகவியல் கலைச்சொல் அகராதியில் நூலக முகாமைத்துவம் என்ற பதத்திற்குப் பின்வருமாறு வரைவிலக்கணம் கொடுக்கப் பட்டிருக்கின்றது.

          'நூலக சேவையில் இருந்து மிக உயர்ந்த நன்மையையும் பயன்பாட்டையும் பெறுவதற்கு மேற்கொள்ளப்படக் கூடிய முன்னுரிமைகளை ஒழுங்குபடுத்துதல், அலுவலர்களை ஊக்குவித்தல், நூலக வளங்களைப் பாதுகாத்தல், செயற்பாடுகளை மதிப்பிடுதல் முதலிய தொழில் நுட்பங்களின் செயல்திறன் முகாமைத்துவம் எனப்படும்.'

          எனவே நூலகத்தில் பணியாற்றும் சகல அலுவலர்களையும் ஒருங்கிணைத்து, தகுந்த திட்டமிடல், ஒழுங்கமைப்பு, ஊக்குவிப்பு, கட்டுப்பாடு என்பவற்றினூடாக நூலகத்தை பயன்படுத்தும் ஒவ்வொரு வாசகனையும் திருப்திப்படுத்தும் மிக உயர்ந்த நோக்கத்தை அடைய முயற்சி செய்யும் ஒரு செயற்பாடே நூலக முகாமைத்துவம் எனக் கூறலாம்.


3.முகாமைத்துவமும் நிர்வாகமும். 

         நூலக முகாமைத்துவம் பற்றி ஆராய்வதற்கு முன் முகாமைத்துவத்திற்கும் நிர்வாகத்;துக்குமிடையிலுள்ள வேறுபாடுகளை விளங்கிக் கொள்ளுதல் அவசியமானது. ஏனெனில் முகாமைத்துவம், நிர்வாகம் ஆகிய இரு சொற்களும் பெருமளவில் ஆசிரியர்களால் பயன்படுத்தப்பட்டாலும் அதற்குரிய தெளிவான இலக்கணம் இதுவரை கொடுக்கப்படவில்லை என்றே கூறலாம். பெரும்பாலான ஆசிரியர்கள் இவ்விரு சொற்களையும் ஒரே பொருள்பட பயன்படுத்துகின்றார்கள். ஆனால் இரு சொற்களும் மிகவும் வேறு பட்டவை. நிர்வாகம் மனிதர்களுடைய நடவடிக்கைகளை பொதுவாகக் கட்டுப்படுத்துகின்றது. ஆனால் முகாமைத்துவம் தொழிலில் ஈடுபட்டுள்ள அலுவலர்களின் நடவடிக்கைகளை மட்டும் கட்டுப்படுத்துகின்றது. நிர்வாகம் என்பது ஒரு நிறுவனத்தின் நோக்கங்களையும் கோட்பாடுகளையும் முடிவு செய்வதாகும். செயல்முறைப்படி வகுக்கின் நிர்வாகம் என்பது ஒரு நிறுவனத்தி;ன் நோக்கங்களை அடைவதற்கான எல்லா வழிமுறைகளையும் நிர்ணயம் செய்வதாகும். அவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்ட நோக்கங்களை மனிதத் திறமையினை இயக்குவதன் மூலம் அடைய முற்படுவதே முகாமைத்துவமாகும். சுருங்கக்கூறின் நிர்வாகம் என்பது முடிவாக்கலில் ஈடுபடுகிறதென்றும், முகாமைத்துவம் அம்முடிவுகளை செயல் படுத்துகிறதென்றும் குறிப்பிடலாம். ஒரு சில நிறுவனங்களில் இவ்விரு பணிகளும் ஒரே நபரால் செய்யப்படினும் இவ்விரு பணிகளும் தனித்தனித் தன்மை வாய்ந்தவை.


4.நூலக முகாமைத்துவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.    

           பண்டு தொட்டே முகாமைத்துவம் மனித நடவடிக்கைகளை செம்மையாக நடத்திட உறுதுணையாக இருந்திருக்கின்றது. பிறரை வேலைக்கமர்த்தி, தாம் விரும்பிய திட்டங்களை நிறைவேற்றும் போதெல்லாம், சமூகத் தலைவர்களும், குழுத்தலைவர்களும், நிறுவனத் தலைவர்களும், தொழில் முதலாளிகளும் முகாமைத்துவம் என்ற கருவியையே கையாள வேண்டியிருக்கின்றது. பணியில் ஈடுபடுத்தப்படு;ம் ஆட்களின் எண்ணிக்கை அதிகரி;க்க முகாமைத்துவத்தில் சிக்கல்களும் நுண்முறைகளும் வளரத் தொடங்கின. இந்த வகையில் நூலக முகாமைத்துவத்தின் ஆரம்ப காலத்தையும் நோக்குதல் நன்று.

          ஆதி காலத்தில் நூலகம் என்பது வெறுமனே நூல்களைப் பாதுகாத்து வைக்கும் களஞ்சியம் எனப்பட்டது. நூல்கள் பாவனைக்குட்படுத்தப்படுவதைப் பற்றிய உணர்வு நூலகருக்கோ அவரைச் சார்ந்தவர்களுக்கோ இருக்கவில்லை. அது மட்டுமன்றி நூல்கள் யாவும் அலுமாரிகளில் வைத்துப் பூட்டப்பட்டோ அல்லது மேசையுடன் சங்கிலி மூலம் பிணைக்கப்பட்டோ காணப்பட்டன. ஆனால் மனிதனது சிந்தனா சக்தி வளரத் தொடங்கவும் நூல்களைப் பற்றிய அறிவும் அவற்றைப் பாவிப்பதற்குரிய உணர்வும் மனிதனிடத்தில் வளர்ந்த போது தான் அலுமாரிகளில் வைத்துப் பூட்டப்பட்டிருந்த நூல்களைத் திறந்த தட்டுகளில் வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அத்துடன் வாசகர் நூல்களைத் தாமே தெரிவு செய்யவும் அதனை இரவல் எடுத்துச் செல்லவும் முடிந்தது. எனினும் நூலகர் வெறுமனே இரவல் கொடுத்து மீளப் பெறுதலையே கடமையாகக் கொண்டிருந்த நிலையில் நூலக முகாமைத்துவத்தின் அவசியம் அங்கு உணரப்படவில்லை. தற்காலத்தில் நூலகமானது சமுதாய, கலை, கலாச்சார வளர்ச்சியை ஊக்குவிக்கின்ற ஒரு நிறுவனமாக விளங்குவதுடன் வாசகர்களுக்கு வேண்டிய சகலவிதமான சேவை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும் பொறுப்பு வாய்ந்ததாக இருக்கின்றது. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மனிதனின் சிந்திக்கும் ஆற்றல் அதிகரித்ததுடன் நவீன நுண்ணிய ஆய்வுகளையும் பரிசோதனைகளையும் அவன் மேற்கொண்டதன் விளைவாக நூல்களின் எண்ணிக்கையிலும் தரத்திலும் மிகப்பெரியளவிலான மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.

           ஒரு விடயத்தைப் பற்றி பல்வேறு விதமான நூல்கள், அறிக்கைகள், ஆய்வுக்கட்டுரைகள், பரிசோதனை முயற்சிகள் வெளியாகத் தொடங்கியதுடன் நூல்களைத் தட்டுக்களில் பிரித்து வகைப்படுத்தி அடுக்குவதிலும் அதனை வாசகர் எந்த சிரமமுமின்றித் தெரிவு செய்து உபயோகிப்பதிலும் சிக்கல் ஏற்படத் தொடங்கியது. அத்துடன் வாசகரிடமிருந்து வெளிப்படும் பல்வேறு வகையான வினாக்களுக்கு விடையிறுக்கும் பொறுப்பும் நூலகருக்கு ஏற்பட்டது. எனவே தொழில்நுட்ப வளர்ச்சி நூலகத்துறையில் அளப்பரிய மாற்றத்தை ஏற்படுத்தியதுடன் நூலக முகாமைத்துவத்தின் அவசியத்தையும் உணர வைத்தது. நூலகம் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு (பகுப்பாக்க, பட்டியலாக்கப்பகுதி, பருவ இதழ் பகுதி, நூல் கொள்வனவுப்பகுதி, அரசாங்க ஆவணப்பகுதி, வாசகர் சேவைப்பகுதி போன்ற) செயல்படத் தொடங்கவும் நூலக அலுவலர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கவும் நிர்வாகத்தை திறம்பட நடாத்துவதில் நூலகர் சிரமப்பட வேண்டியிருந்தது. இத்தகைய ஒரு சூழ்நிலையில் தான் மற்றைய தொழில்துறைகளைப் போன்று முகாமைத்துவக் கோட்பாடுகளை நூலகத்துறைக்கும் பயன்படுத்த முடியும் என்ற உணர்வு ஏற்பட்டது. இந்த வகையில் நூலக முகாமைத்துவத்தின் வளர்ச்சியை நூலகங்களில் பண்டு கொள்ளக்கூடியதாக இருப்பதுடன் வாசகரின் தேவையைப் பூர்த்தி செய்யவும், நூலகத்தின் நோக்கங்களையும் கொள்கைகளையும் அமுல் படுத்தவும் நூலக முகாமைத்துவம் மிகவும் உறுதுணையாக அமைந்துள்ளமையை நாம் காணலாம்.


5.நூலக முகாமைத்துவத்தின் சிறப்புத் தன்மைகள்.

           ஓவ்வொரு முகாமைத்துவத்துக்கும் ஒரு குறிப்பிட்ட நோக்கம் இருத்தல் வேண்டும். அந்நோக்கம் வெளிப்படையாகக் குறிப்பிடலாம். அல்லது குறிப்பிடப்படாமலும் இருக்கலாம். இந்த வகையில் நூலக முகாமைத்துவத்திற்கும் ஒரு குறிப்பிட்ட நோக்கம் இருத்தல் வேண்டும். நூலக முகாமைத்துவத்தின் வெற்றி, அது தனது நோக்;கங்களை எந்தளவிற்கு அடைந்து கொள்கின்றது என்பதன் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகின்றது. அன்றி நூலகத்தில் பணிபுரியும் அலுவலர்களின் எண்ணிக்கையில் அல்ல. தேவைப்படும் அலுவலர்களின் எண்ணிக்கையைக் கருத்திற் கொள்ளாது, இருக்கின்ற அலுவலர்களைக் கொண்டு சிறந்ததொரு சேவையை ஒரு நூலகமானது அதனுடைய வாசகர்களுக்கு வழங்க முடியுமானால் அது வெற்றி என்றே கூறலாம்.

           மனிதனுடைய முழுத் திறமையையும் பயன் படுத்துவது முகாமைத்துவம் ஆகும். ஒரு நூலகர் சிறந்த முகாமைத்துவத்தின் மூலம் நூலகத்தில் பணி புரியும் அலுவலர்களை அவர்கள் ஆண்களாயினும் சரி பெண்களாயினும் சரி நன்முறையில் ஊக்குவித்து அவர்களது திறமையைப் பெருக்கிச் செயலாற்றும்படி செய்ய முடியும்.

           ஒரு நூலகத்தின் நோக்கங்கள் அந்நூலகத்தில் பணி புரியும் சகலரதும் ஒருங்கிணைந்த பணிகளின் மூலம் தான் அடையப்பட முடியுமே தவிர, தனிப்பட்ட அலுவலர் ஒருவரது பணியால் அல்ல. இவ்விதம் நூலக அலுவலர்களை ஒரு குழுவாக ஒருங்கிணைப்பதன் மூலம் அலுவலர்களின் திறன் மிகுதியடைந்து பணிகள் திறமையாகச் செய்யப்படுகின்றன. எனவே தான் நூலக முகாமைத்துவம் அலுவலரின் ஒருங்கிணைந்த குழுவிற்கு முக்கியத்துவம் அளிக்கின்றது.

           ஒரு நூலகத்தின் பணிகள் எல்லாவற்றையும் அந்த நிறுவனத்தின் தலைவரே செய்வதென்பது இயலாத காரியம். எனவே, நூலகர் தானே நேரடியாகச் செயற்படாது அப்பணிகளை பிற அலுவலர்கள் அல்லது ஊழியர்கள் செம்மையாகச் செய்யும்படி இயக்குவித்தல் வேண்டும். ஒரு நூலகரினது வெற்றி, பிற ஊழியர்களின் மூலம் நூலகத்தின் நோக்கங்களை அவர் எந்த அளவில் அடைகின்றார் என்பதன் அடிப்படையிலேயே அமைந்துள்ளது எனக் கூறலாம்.

          ஒரு பணியை நூலகர் தாமே செய்வதற்கும் பிறரை செய்வதற்குத் தூண்டுவதற்கும் அதிக வேறுபாடு உள்ளது. ஒரு குறிக்கப்பட்ட இலக்கை அடைவதற்கு தொழில்நுட்ப அறிவு தேவை எனினும் அது முகாமையாளர்களுக்கு இன்றியமையாததாகக் கருதப்படுவதில்லை. தங்களின் கீழ் பணியாற்றும் இதர அலுவலர்களின் தொழில்நுட்ப அறிவை செம்மையான முறையில் பயன்படுத்த வேண்டியது இவர்களின் கடமையாகும். எனவே சிறந்த முகாமைத்துவம் என்பதும் பிறருடைய திறமையை உரிய முறையில் பயன்படுத்துவதேயாகும்.

          முகாமைத்துவம் என்பது தொட்டுணர முடியாததொரு நடவடிக்கை. இதனை யாரும் பார்க்கவோ தீண்டவோ முடியாது. முகாமைத்துவத்தின் இருப்பு, அந்நிறுவனத்தின் செம்மையான செயற்பாட்டின் மூலமே அறியப்பட முடியும்.

           முகாமைத்துவத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் நிறுவனத்தின் உரிமையாளர் அல்லர். ஒரு சில நிறுவனங்களில் ஒருவரே முகாமையாளராகவும் உரிமையாளராகவும் இருப்பினும், பெரும்பாலான நிறுவனங்;களில் இவர்கள் வௌ;வேறு ஆட்களாகவே இருக்கின்றனர்.


6.நூலக முகாமைத்துவத்தின் முக்கியத்துவம்.   

          நூலக பாவனைக்காக ஒவ்வொரு வாசகனிடமிருந்தும் அறவிடப்படும் ஒவ்வொரு ரூபாவிற்குமான மிக உயர்ந்த பங்களிப்பை வழங்குவதன் மூலம், ஒரு நூலகமானது வாசகனைத் திருப்திப்படுத்தும் பொறுப்பு வாய்ந்ததாகவுள்ளது. நூலகமானது வளர்ச்சியடைந்து வருகின்ற ஒரு நிறுவனமாகவிருப்பதனால் அதற்கு வருடாந்தம் மேலதிக நிதி தேவைப்படுகின்றது. நூலகத்தின் மேலதிக நிதித் தேவைக்கான காரணத்தை ஒவ்வொரு வாசகனும் அறிந்து கொள்வதில் விருப்பமுடையவனாக இருக்கலாம். அவன் மட்டுமன்றி அனுபவம் வாய்ந்த நூலகத்துடன் தொடர்புள்ள அதிகாரிகள் கூட வெறுமனே புகழ் மாலைகளை விடத் தொகை ரீதியாகவும் உண்மையானதுமான தரவுகளிலேயே கூடிய கவனம் செலுத்துகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் விஞ்ஞான முகாமைத்துவம் என்பது ஒரு நூலகர் மேலதிக நிதியை அவர் விரும்பியவாறு பெறுவதற்குரிய உண்மையானதும், தொகைரீதியானதுமான தரவுகளை வழங்கக் கூடிய அறிவை, அபிவிருத்தி செய்வதற்கு உதவுகின்றது எனலாம்.

          வழமையான வேலை முறைகளைச் சிறப்பாகச் செய்யக் கூடிய திறமையை அதிகரிப்பதற்கு நூலக முகாமைத்துவம் உதவுகின்றது. சாதாரணமாக ஒரு நூலகத்தினுடைய பெரும்பாலான வேலைகள் இயந்திரத் தன்மையுடையதாகவும் செய்வதையே திரும்பச்செய்தல் (ஒப்பித்தல்) என்ற தன்மை உடையதாகவும் இருப்பதுடன் அவை தொகை ரீதியான ஆய்வுக்கு வழிப்படுத்தப்படக் கூடியதாகவும் இருக்கின்றன. உதாரணமாக, கட்டளை அனுப்புதல் Ordering பட்டியலாக்கம், அட்டைகளைக் கோவைப்படுத்தல், நூல் கட்டுதல், சுழற்சி Circulation நூல் இருக்கைகளில் நூல்களை முறையாக வைத்தல் என்பன இதற்குள் அடங்கும். நூலக முகாமைத்துவம் என்பது இவ்வேலைகளை சிறப்பாகச்; செய்யக் கூடிய ஆற்றலை அதிகரிக்க உதவுகின்றது.

          விஞ்ஞான முகாமைத்துவம் என்பது, நவீன வேலைப்பகுப்பாக்கத்தின் திறவுகோலாகக் கருதப்படும் வேலைப்பகுப்பாய்வை Work analysis தருகின்றது. இதன் விளைவாக நூலகர் ஒரு அலுவலரிடமிருந்து எதை எதிர்பார்க்க முடியும். எதை எதிர்பார்க்க வேண்டும் என்பதைப் புத்தி சாதுரியத்துடனும் தெளிவுடனும் அறிந்து கொள்ள உதவுகின்றது.

           விஞ்ஞான முகாமைத்துவம் ஒரு நூலகர் நூலகத்தின் நிதி முறையை சிறப்பாகக் கொண்டு நடாத்த உதவுகிறது. ஓவ்வொரு பிரிவுக்குமுரிய தொழிற்பாடுகளுக்குமான நிதித்தேவையினை அவர் நன்கு அறிந்தவர் என்பதால் அவர் புத்தி சாதுரியத்துடன் வீண் விரயங்களைத் தவிர்க்கக் கூடியவராக இருப்பதுடன் சேவைப் பயன்பாட்டை அதிகரிக்கவும் அதன் மூலம் தன் வாசகருக்கு பூரண திருப்திகரமான சேவையை வழங்குவதற்கும் நூலக முகாமைத்துவம் உறுதுணையாக உள்ளது எனலாம்.

          நூலகருக்கும் அவரின் கீழ் கடமையாற்றும் இதர அலுவலர்களுக்கு மிடையேயான கருத்து வேறுபாடுகளையும் சிக்கல்களையும் களைந்து, உளமார்ந்த உறவினை உருவாக்க முகாமைத்துவம் அவசியமாகின்றது.

          முகாமைத்துவக் கோட்பாடுகள் வளர்ச்சியடைந்ததன் காரணமாக நூலகத்தில் கடமையாற்றும் அலுவலர்களுக்கு உரியமுறையில் பயிற்சி அளிக்கப்படுவதனால் நூலக சேவையைத் திறம்பட நடத்த நூலக முகாமைத்துவம் உதவியாகவுள்ளது.

          எல்லாவற்றிற்கும் மேலாக நூலகம் என்பது சமுதாய முன்னேற்றத்துக்கு பாடுபடும் ஒரு நிறுவனம் ஆகும். தனிப்பட்ட மனிதர்களின் சேவை என்பது இங்கு மிக முக்கியமானது. தனிப்பட்ட மனிதர்களின் திறமையை சமுதாய முன்னேற்றத்துக்காகப் பயன்படுத்த நூலக முகாமைத்துவம் மிகவும் இன்றியமையாததாகக் கருதப்படுகின்றது.


7.நூலக முகாமைத்துவத்தின் அடிப்படைக் கூறுகள். 

          முகாமைத்துவத்தின் அடிப்படைக் கூறுகள் பற்றிப் பல்வேறு ஆசிரியர்களாலும் பல்வேறு கருத்துக்களும் விளக்கங்களும் முன்வைக்கப்பட்டிருப்பினும், லூதர் கூலிக் டுருவுர்நுசு புருடுஐஊமு என்பவரது முகாமைத்துவ அடிப்படைக் கூறுகள் பற்றிய விளக்கம் நூலக முகாமைத்துவத்திற்கு பொருத்தமாகவுள்ளது. இவர் குறிப்பிடும் முகாமைத்துவ அடிப்படைக் கூறுகள் நெகிழ்ச்சித் தன்மை வாய்ந்ததுடன் தேவைக்குத் தகுந்த வகையில் இவற்றை மாற்;றியமைத்து பயன்படுத்திக் கொள்ள முடியும். இவ்வடிப்படைக்கூறுகளை கூலிக் ஆங்கிலத்தில் Pழுளுனுஊழுசுடீ என்ற ஒரு சொல்லி;ல் ஒழுங்கு படுத்தியுள்ளார். அவை பின்வருமாறு:

1. திட்டமிடல்  Planning
2. ஒழுங்கமைத்தல் Organising
3. அலுவலர்களை நியமித்தல் Staffing
4. இயக்குவித்தல் Directing
5. ஒருங்கிணைத்தல் Coordinating
6. அறிக்கை அனுப்புதல் Reporting
7. திட்டப்பட்டியல் தயாரித்தல் Budgeting

         மேற்கூறப்பட்ட முகாமைத்துவ அடிப்படைக் கூறுகள் மட்டுமன்றி, கட்டுப்படுத்தல் Controlling செயலூக்கமளித்தல் Motivatingஎன்பனவும் நூலக முகாமைத்துவத்தின் சிறப்புக் கூறுகளாக அமைய முடியும்.


7.1.திட்டமிடல்

         முகாமைத்துவப் பணிகளில் மிக முக்கியமானது திட்டமிடல் ஆகும். ஒரு குறிப்பிட்ட குறிக்கோளை ஒழுங்கான முறையிலும் திறமையான வகையிலும் அடைய வேண்டுமெனின் அக்குறிக்கோளை எவ்வாறு சிறந்த வகையில் அடைவது என்பது பற்றி மிக ஆராய்ந்து திட்டம் ஒன்று வகுக்கப்படல் வேண்;டும். எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் திட்டமிடல் என்னும் சொல்லுக்கு வரைவிலக்கணம் கொடுத்தல் இயலாது. எனினும் ஜோர்ச் டெரி என்பவரது கீழ்க்காணும் வரைவிலக்கணம் ஓரளவிற்கு சிறந்ததாகவுள்ளது.

          'நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை ஒரு முகப்படுத்தி ஊகத்தின் அடிப்படையில் நிறுவனத்தின் நோக்கங்களை உரிய முறையில் அடைய, செய்ய வேண்டிய நடவடிக்கைகளைத் தீட்டுவது திட்டமாகும். எனவே திட்டமிடல் என்பது முக்கியமாக செயல்முறையை தேர்ந்தெடுத்தலையே குறிக்கின்றது. நோக்கங்களை அடைய பல மாற்று வழிகள் இருக்கும் நிலையில் தான் திட்டம் தீட்டலுக்கு அவசியம் எழுகின்றது. இவ்வகையில், ஒரு நூலகத்திலும், தலைமை நூலகரின் பிரதான கடமைகளில் ஒன்றாக திட்டமிடல் அமைகின்றது. நூலகத்திற்கு வரும் பல்வேறு தரப்பட்ட வாசகர்களையும் திருப்திப்படுத்தக் கூடிய சேவையை வழங்கும் மிகப் பொறுப்புள்ள கடமையைச் செய்யத் திட்டமிடல் உதவுவதால் நூலகத் திட்டமிடலுக்கு பரந்து பட்ட அறிவும் அனுபவமும் தேவைப்படுகின்றது.


திட்டத்தின் கூறுகள்.

திட்டத்தின் கூறுகளைப் பின்வருமாறு குறிப்பிடலாம்.

1. நோக்கங்கள்  ழுடிதநஉவiஎநள
2. கொள்கை முறைகள்    Pழடiஉநைள
3. வரையளவு  ளுவயனெயசன
4. செயல்முறை  Pசழஉநனரசந
5. நிகழ்ச்சிமுறை  Pசழபசயஅஅந
6. திட்டப்பட்டியல்  டீரனபநவ
7. முறை  ஆநவாழன
8. நடைமுறைத் திறம்  ளுவசயவநபல

திட்டமிடலில் அடங்கியுள்ள படிகள்.

1. என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானித்தல்.
2. நோக்கங்கள் ஏன் செய்யப்பட வேண்டும்.
3. அதை எப்படி, எங்கே, எப்போது, யார் செய்தல் என்பதைத் தீர்மானித்தல்.
4. திட்டத்தின் காலம், திட்டத்திற்குத் தேவையான பணியாளர், எதன் மூலம் திட்டத்தினை செயற்படுத்த வேண்டும், திட்டத்தின் சாதனங்கள் ஆகியவற்றை நிர்ணயம் செய்தல்.
5. செயலின் விளைவை எவ்வாறு மதிப்பீடு செய்தல் என்பதை நிர்ணயித்தல்.

7.2.ஒழுங்கு அமைத்தல்.

          ஒரு நிறுவனத்தின் நோக்கங்களை உரிய முறையில் அடையும் வகையில் அந்நிறுவனத்தின் உள்துறைகளை உரிய முறையில் அமையச் செய்வதே ஒழுங்கு அமைப்பு ஆகும். திட்டம் தீட்டியபின், அதைச் செயற்படுத்தும் வகையில் தேவையான நூல், உபகரணங்கள் வாங்குவதும், பணியாளர்களை வேலையில் அமர்த்துவதும் நிறுவனத்தைப் பல துறைகளாகப் பிரிப்பதும் இன்றியமையாதவையாகும். உதாரணமாக, ஒரு நூலகத்தில் பல்வேறு வகையான பிரிவுகள் உண்டு. அவ்வாறே ஊழியர், நூலகக் கவனிப்பாளர், நூலக உதவியாளர், உதவி நூலகர், சிரேஷ்ட உதவி நூலகர் எனப் பலதரப்பட்ட அலுவலர்களும் உள்ளனர். எனவே நூலகத்தைப் பல பிரிவுகளாகப் பிரித்தல் ஒவ்வொரு பிரிவுகளுக்கும் ஏற்ற வகையில் அலுவலர்களை நியமித்தல் என்ற பல்வேறு பணிகளையெல்லாம் ஒன்று திரட்டிச் சுருக்கமாகக் கூறுதலே ஒழுங்கு அமைப்பாகும்.

7.3.அலுவலர்களை நியமித்தல்.
          இது அலுவலர்களை நூலகத்திற்குச் சேர்த்துக் கொள்வதனையும் அவர்களை நூலகத்தின் பல்வேறு பிரிவுகளிலும் சேவைக்கு அமர்த்துவதனையும் குறிக்கும். உதாரணமாக, நூலகத்தின் ஒரு பிரிவான பட்டியலாக்கம் பகுப்பாக்கப் பிரிவை எடுத்துக் கொண்டால் அங்கு துறைக்குப் பொறுப்பான உதவி நூலகர் அவரின் கீழ் கடமையாற்றும் நூலக உதவியாளர், நூலகக் கவனிப்பாளர், தொழிலாளர் எனப் பல தரப்பட்ட பிரிவினர் உள்ளனர். இவ் ஒவ்வொரு பிரிவுக்கும் தேவையான பணிகளை வரையறுப்பதும் அவர்;களுக்குரிய பயிற்சியளிப்பதும் அவர்களின் அடிப்படைக் கல்வித்தகைமைகளுக்கு ஏற்ப அவர்களது உத்தியோகத்தை வரையறுப்பதும் நூலக நிர்வாகத்தின் கடமையாக இருப்பதனால் அலுவலர்களை நியமித்தல் என்ற முகாமைத்துவ அடிப்படை கூறு நூலக முகாமைத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது எனலாம்.

7.4.இயக்குவித்தல்.

           இயக்குவித்தல் என்னும் செயல்முறை நூலகருக்குக் கீழ் கடமையாற்றும் அலுவலர்களுக்கு வழிகாட்டுதலையும் அவர்களின் பணிகளை மேற்பார்வை செய்தலையும் குறிக்கின்றது. இதனை மேல் நோக்காகப் பார்க்கும் போது எளிமை வாய்ந்ததாகத் தோன்றினாலும் நடைமுறையில் சிக்கல் வாய்ந்ததாகும். ஓவ்வொரு நிறுவனத்தின் முகாமையாளரும், தன் கீழ் கடமையாற்றும் அலுவலர்கள் ஒவ்வொருவரும் நிறுவனத்தின் சட்டம், ஒழுங்குமுறை ஆகியவற்றைக் கடைப்பிடிக்கும் வகையில் வழிகாட்டல் வேண்டும். அலுவலர் ஒவ்வொருவரும், தாம் பணி புரியும் நிறுவனத்தின் அமைப்பு முறையையும், துறைகளுக்கு இடையே உள்ள உறவு முறையையும், ஒவ்வொரு துறையினதும் பணிகளையும், தமது பணிகளையும், ஆணை உரிமைகளையும் நன்கு அறிந்து கொள்வார்களேயானால் முகாமையாளரின் இயக்குவிக்கும் பணி என்பது இலகுவானதாகின்றது.

7.5.ஒருங்கிணைத்தல்.

           ஒரு செயலுக்கான திட்டத்தை வகுத்து விட்டால் மட்டும் குறிக்கோளை நிச்சயமாக அடைந்து விட முடியும் என்ற உறுதி ஏற்பட்டு விடாது. ஒரு நிறுவனத்தில் உள்ள அலுவலர்களின் கூட்டான ஒருமித்த முயற்சியின் மூலமே குறிக்கோளை அடைய முடியும். தனிப்பட்ட ஒவ்வொருவரினதும் முயற்சிகள் ஒருங்கிணைக்கப்படும் போது தான் இவர்கள் ஒவ்வொருவரின் முயற்சியும் மற்றவரின் முயற்சிக்கு ஆதரவாக அமைவதாக இருக்கும். தனி நபர்களின் தனி முயற்சிகள் ஒருங்கிணைக்கப்படாவிடில் இவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தனிப்பட்ட பணிகளை மட்டுமே கருத்தில் கொண்டு செயலாற்றும் போது தங்களது சக அலுவலர்களின் முயற்சிகளை இழக்கவோ தடுக்கவோ கூடும். ஆகவே ஒவ்வொரு அலுவலரும் ஒரு குழுவாகக் கூட்டார்வத்துடன் செயலாற்றுமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது நிர்வாகத்தின் பொறுப்பாகும்.

7.6.அறிக்கை அனுப்புதல். (சுநிழசவiபெ)

           அறிக்கை அனுப்புதல் என்ற செயல்முறையின் கீழ் நிறுவனத்தின் உரிமையாளருக்கு அவ்வப்போது நிறுவனத்தில் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பது பற்றி அறிவித்தல், நிறுவனத்தின் நடவடிக்கைகளை பதிவேடுகள் மூலமும், ஆய்வுகள் மூலமும், தெரியப்படுத்துதல் என்பன அடங்கும். பதிவேடுகளின் மூலம் தலைமை நூலகர் நூலகத்தின் சிறந்த செயல்பாடுகளைத் தனது பொறுப்பதிகாரிக்குத் தெரியப்படுத்த முடியும். அது மட்டுமன்றி  இத்தகவல்களைக் கொண்டு நூலக சேவையின் பயன்பாட்டையும் அவரால் மதிப்பிட முடியும்.

7.7.திட்டப்பட்டியல் தயாரித்தல்.

            திட்டப்பட்டியல் தயாரித்தல் என்பது மிகவும் பயன்பாடுடைய முகாமைத்துவக் கருவியாகும். கவனமாகத் திட்டமிடல், கணக்கியல், கட்டுப்படுத்தல் என்பன திட்டப்பட்டியலில் மிகவும் அவசியமானது. தலைமை நூலகர் என்பவர் நூலகத்தின் தேவைகளைத் தொடர்ச்சியான அடிப்படையில் பரீட்சிக்க வேண்டியிருப்பதுடன் அதற்கேற்ற நிதியையும் பெறுவதற்கு முயற்சி செய்தல் அவசியம்.

7.8.கட்டுப்படுத்தல்.

            கட்டுப்பாடு செய்தல், திட்டப்படி நடைபெற வழிவகுக்கின்றது. ஒரு முகாமையாளர் இதர பணிகளை உரிய முறையில் செவ்வனே செய்வாரானால், அவரைப் பொறுத்த வரை இப்பணி தேவையற்றது. ஆனால் தவறு செய்வது மனித இயல்பு என்பதற்கேற்ப பணியாட்கள் ஒரு சில தவறுகள் புரியலாம். புணியாளர்களுக்கிடையே உள்ள மன வேற்றுமை காரணமாகத் திட்டம் சரியாகச் செயற்படுத்தப் படாமல் போகலாம். திட்டம் பழைய தன்மை வாய்ந்தாக மாறலாம். இவை யாவும் தடுக்கப்பட்டு ஆரம்ப நிலையிலேயே சரி செய்யப்படாவிடில் நிறுவனம் மிக அதிமாகப் பாதிக்கப்படலாம். எனவே தான் கட்டுப்பாடு ஒவ்வொரு நிறுவனத்தின் ஆரம்பப் பகுதியிலும் மிக அவசியமாகின்றது. கட்டுப்பாட்டின் மூலம் திட்டத்தின் எந்த இடத்தில் தவறு நிகழ்ந்தது என்பதையும் அத்தவறுக்குப் பொறுப்பானவர் யார் என்பதையும் அறிந்து, தவறுகள் திருத்தப்படுகின்றன. இன்றைய நிலையில் கட்டுப்பாடு என்பது இன்றியமையாதது ஆகின்றது.


7.9.செயல் ஊக்கம் அளித்தல்.
           மற்றவர்களின் பணியை மேற்பார்வை செய்வதென்பது அதிகாரம் செலுத்துவது என்பதன்று. அவர்களுக்கு உரிய ஒத்தாசை வழங்கி, ஊக்கமளித்து அவர்களின் பிரச்சினைகளில் அக்கறை காட்டி அவற்றை தீர்ப்பதற்கு தக்க ஆலோசனை கூறி வழிகாட்டியாயிருந்து, அவர்களுக்குத் தலைமை ஏற்கும் பணியே நிர்வாகத்தினர் செய்ய வேண்டிய பணிகளிலெல்லாம் தலையாயது. தொழிலாளர் உயிருள்ள இயந்திரங்களல்லர். அவர்களும் மனிதர்கள் தான். அவர்களுக்கும் மனித உணர்ச்சிகளும், ஆசாபாசங்களும் உண்டு என்பதை உணர்ந்து அவற்றுக்கு மதிப்பளித்து, தனக்குக் கீழப் பணிபுரிவோரின் மனதில் அமைதியையும் மகிழ்ச்சியையும் வளர்த்துக் கொண்டு அவர்கள் தங்கள் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுமாறு ஊக்குவித்தால் தான் உயர்ந்த பட்சமான உற்பத்தியைப் பெற இயலும். தொழிலாளர்களின் மிகச் சிறந்த ஆற்றலையும் உழைப்பையும் பெறுவதற்கு ஊக்கம் நிறைந்த குழுக்களாக அவர்களை மாற்றுவது அவசியம். இந்த வகையிலேயே ஊக்குவித்தல் என்பது நூலக முகாமைத்துவத்தின் முக்கியமான மூலகமாக இருப்பதுடன் சிறந்த ஒரு சேவையை வாசகருக்கு வழங்குவதற்கு மிக உதவியான காரணியாகவும் கருதப்படுகின்றது.

8.நூலக முகாமைத்துவத்தின் படி நிலைகள். (டுநஎநடள ழக டுiடிசயசல அயயெபநஅநவெ)

           ஏனைய நிறுவனங்களைப் போன்றே நூலகத்திலும் மூன்று விதமான முகாமைத்துவப் படிநிலைகளை நாம் காண முடியும். அவை பின்வருமாறு:

1. மேல்நிலை முகாமைத்துவம்  Top level management
2. இடைநிலை முகாமைத்துவம்  Middle level management
3. கடைநிலை முகாமைத்தவம்  Low level management
                  மேல்நிலை முகாமைத்துவத்துக்குள் தலைமை நூலகர், நூலகத்தின் தலைவர், இயக்குநர், முதுநிலை அலுவலர்கள் என்போர் தரம் ஒன்றிலும், உதவித் தலைமை நூலகர், முதுநிலை உதவிநூலகர்கள் தரம் இரண்டிலும் அடங்குவர். இவர்களது பணி நிறுவனத்தின் நோக்கங்களை தனக்குக் கீழ் கடமையாற்றும் ஒவ்வொரு துறைக்கும் பொறுப்பான உதவி நூலகர்களை இயக்குவித்தல் ஆகும். இடைநிலை முகாமைத்துவத்துக்குள் நூலகத்தில் காணப்படும் ஒவ்வொரு துறைகளுக்கும் பொறுப்பான உதவி நூலகர்கள் அடங்குவர். இவர்களது பணி துறைகளுக்குரிய பணிகளை தமக்குள் கடமையாற்றும் அலுவலர்களை நேரடியாக மேற்பார்வை செய்வதன் மூலம் பெற்றுக் கொள்வதாகும். கடைநிலை முகாமைத்துவத்திற்குள் முதுநிலை நூலக உதவியாளர்கள், நூலக உதவியாளர்கள் என்போர் அடங்குவர்.

9.நூலகமும் அதன் நிர்வாகியும்

           நூலகம் என்பது குறிக்கப்பட்ட சில எதிர்பார்ப்புகளுடன் கட்டி எழுப்பப்படுகின்ற, குறிக்கப்பட்ட சில தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வாய்ப்பை வழங்குகின்ற, குறிக்கப்பட்ட உண்மையான உள்ளுறவுள்ள (ஊநசவயin யஉவரயட யனெ pழவநவெயைட) நடவடிக்கைகளை கட்டுப்படுத்துகின்ற ஒரு நிறுவனமாகக் கருதப்படுகின்றது. நூலகங்கள் செயல்படு பிரிவுகளாக அமைக்கப்படும் போது அங்கே நூலகர் என்பவர் இச்செயல்படு பிரிவுகளின் தொழிற்பாடுகளுக்கும் அங்கு கடமையாற்றும் அலுவலர்களுக்குமிடையில் ஒரு பாலம் போல் செயல்படுகின்றார். அது மட்டுமன்றி நூலகர் நூலக அமைப்பின் மிக உயர்ந்த அளவிலான குறிக்கோளை அடைவதற்காகத் தங்களுக்குக் கீழ்க் கடமையாற்றும் அலுவலர்களுக்கு ஊக்கமும் செயல்திறனும் அளிப்பவர்களாக இருப்பதுடன் அதற்கான உந்து சக்தியை வழங்குபவர்களாகவும் உள்ளனர். எனவே நூலகர் நூலகத்திற்கும் அதன் அலுவலர்களுக்கும் இடையில் ஒரு இணைப்பை உருவாக்குவதன் மூலம் அமைப்பு ரீதியான கடமையில் அவர்கள் தமது சக்தியை செலவு செய்வதற்கு விருப்பப்படும் படி செய்ய முடியும்.

10.நூலகமும் அதன் அலுவலரும்.

            நூலகத்தினை ஒரு கட்டுமான அமைப்பாகவும் அதே நேரம் தனிப்பட்ட ஒவ்வொரு அலுவலரையும் இன்னொரு கட்டுமான அமைப்பாகவும் நாம் கருதுவோமாயின் இந்த இரு வேறுபட்ட அமைப்புக்களையும் ஐக்கியப்படுத்துகின்ற அல்லது ஒருங்கிணைக்கின்ற வேலையை செய்யும் நூலகர் மிகப் பிரதானமான ஒரு இடத்தை வகிக்கின்றார் எனலாம். நூலக அமைப்பானது சில குறிக்கப்பட்ட நோக்கங்களையும் கொள்கைகளையும் குறிக்கோளையும் இலக்காகக் கொண்டது. அது போல் அந்த நூலகத்தில் கடமையாற்றும் ஒவ்வொரு தனிப்பட்ட அலுவலரும் தமக்கென்று சில குறிக்கப்பட்ட தேவைகளைக் கொண்டிருக்கின்றார். இந்த வேறுபட்ட இருவகையான கட்டுமான அமைப்புகளும் தங்களது தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும் பட்சத்தில் தான் இணைந்த, கூட்டுறவு முறையிலான துழiவெ ஊழழிநசயவழைளொip  ஒரு அமைப்பாகத் தோற்றம் பெறுகின்றன. இவ்வாறு இல்லாவிடில் ஒரு நிறுவனமானது அதன் குறிக்கோள், நோக்கம், இலக்குகளை அடைவதற்கு தனிப்பட்ட ஒருவனது சேவை அவசியம் என்பதற்காக அவனைச் சம்பளத்துக்கு வேலைக்கு அமர்த்துகின்றது என்றோ அதே போல ஒவ்வொரு தனிப்பட்ட அலுவலரும் அவரது சொந்தத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதற்கு நிறுவனம் உதவும் பட்சத்தில் தனது சேவையை வழங்கத் தயாராக இருக்கின்றான் என்றோ நாம் கொள்ள முடியும். எனவே, இங்கு ஒரு நிறுவனத்திற்கும் அதன் ஒவ்வொரு தனிப்பட்ட அலுவலர்களுக்குமிடையில் ஒரு பரஸ்பர உறவுமுறை சுநஉipசழஉயட சநடயவழைளொip   நிலைபெற்று இருப்பதை நாம் காணலாம். ஒரு நூலகத்துக்கும் அதன் ஒவ்வொரு அலுவலர்களுக்குமிடையிலான இந்த பரஸ்பர உறவுமுறை உளவியல் சார்ந்ததொன்றாகும். ஏனெனில் இது எழுத்தில் வடிக்கப்பட்டதோ அல்லது பேச்சில் சொல்லப்படுவதோ அல்ல. நூலகமும் அதன் அலுவலரும் இந்த பரஸ்பர உறவு முறைக்குள் உட்பரவேசிக்கும் போது, இரு அமைப்புகளும் ஒவ்வொருவரும் எதை வழங்குவார்கள், எதைப் பெற்றுக் கொள்வார்கள் என்ற சில எதிர்பார்ப்புகளை முன்வைத்துக் கொண்டு இந்த உறவுமுறையை அணுகுகின்றனர். இந்த எதிர்பார்ப்புகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

(அ) ஒரு நிறுவனத்தினால் வழங்கப்படக் கூடியதாக இருப்பதும் ஒரு தனிப்பட்ட அலுவலரினால் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருப்பதுமான எதிர்பார்ப்புகள்.
1. ஊதியம்.
2. சொந்த அபிவிருத்திக்கான வாய்ப்புக்கள்.
3. சிறந்த சேவையை இனங்காணலும் அதற்கான அங்கீகாரத்தை வெளிப்படுத்தலும்.
4. அத்தியாவசியமான பாதுகாப்பு.
5. சினேகபூர்வமானதும் ஒருவருக்கொருவர் உதவி அளிக்கக் கூடியதுமான சூழல்.
6. நல்ல முறையில் நடாத்தும் தன்மை.
7. கருத்தாழம் மிக்கதும் குறிக்கோளை உடையதுமான சேவை.

(ஆ) ஒரு  தனிப்பட்ட அலுவலரினால் வழங்கப்படக் கூடியதும் ஒரு நிறுவனத்தினால் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருப்பதுமான எதிர்பார்ப்புக்கள்.
1. நேர்மையான நாளாந்த உழைப்பு.
2. அமைப்புக்கு விசுவாசமாக இருத்தல்.
3. தன்முயற்சித்திறன் ஐnவையைவiஎந  
4. நிர்வாகத்தின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்படல்.
5. வேலைப்பயன்பாடு துழடி நககநஉவiஎநநௌள
6. அலுவலர் புதிதாக ஒன்றைப் பயில்வதற்கும், அதனை அபிவிருத்;தி செய்வதற்குமான விருப்பமும் இணக்கமும்.

முடிவுரை.
           அரச நிறுவனங்களாயினும், தனியார் நிறுவனங்களாயினும் சமூக சேவை, கல்வி நிறுவனங்களாயினும் அங்கு முகாமைத்துவம் என்பது மிகவும் முக்கியமான ஒரு கருவியாக கையாளப்படுகின்றது. முனித சமூகத்தின் இயற்கையான தொழிற்பாடுகளுடன் இது தொடர்புடையதாக இருப்பதன் காரணமாகவே இதன் முக்கியத்துவம் அளவிறந்து காணப்படுகின்றது எனலாம். இந்த வகையில் சேவையை மட்டும் முக்கிய குறிக்கோளாகக் கொண்ட ஒரு சமூக நிறுவனமாக நூலகமும் கூட. அது பொதுசன நூலகமாயினும், பாடசாலை, பல்கலைக்கழக நூலகமாயினும் முகாமைத்துவக் கொள்கைகளை பின்பற்றுவதன் மூலம் அதனது அளப்பரிய நோக்கமான நூலக சேவையை திறம்பட நடாத்த முடியும். சுpக்கலானதும் நுண்முறைகளுடன் கூடியதுமான நூல்களின் தொகை ரீதியானதும், அடிப்படையிலானதுமான வளர்ச்சி நூலக முகாமைத்துவக் கோட்பாடுகளிலும் மிகப் பெரிய அளவு மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதுடன் விஞ்ஞான முறை சார்ந்த நூலக முகாமைத்துவத்தின் தோற்றத்திற்கு அடி கோலியிருப்பதை வளர்ந்து வரும் எமது நூலக சேவையில் இருந்து நாம் கண்கூடாகக் காண முடியும்.

உசாத்துணை நூல்கள்.

  1. முத்தையன், இராம. மேலாண்மைத் தத்துவங்கள், சென்னை: தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம், 1976.
  2. GARLISLE, Howard  M. Management: Concept and situations. Chicage: Science Research Associates, 1976.
  3. HARROLD’s Librarian’s Glossary and Reference Book. Comp. by. R. Prythereh. England: Gower Publishing, 1987.
  4. Herald of Library Science. Vol. 24, No. 3, 1985,July.
  5. KUMAR, Krishan. Library Manual. NowDelhi: Vikas, 1982.
  6. MITTAL, R.L. Library Administration: Theory and Practice. New Delhi : Metropolitan, 1964.
  7. SHARMA, J.S. Library Organization. New Delhi: Vikas, 1978.

முரண்களுக்குள் தொலையும் முழுமை - 2


முரண்களுக்குள் தொலையும் முழுமை -2
 ஈழத் தமிழ்ச் சமூகத்தின் கல்விச் செயற்பாடுகள் எதிர்கொள்ளும் சவால்கள்;
நுழைவாயில்
ஒரு சமுதாயம் மதித்துப் போற்றும் வாழ்க்கை நோக்கங்கள், குறிக்கோள்கள் ஆகியவற்றையும் வழிவழியாக அதனுள் பரவிக் காணப்படும் திறன்களையும் இன்றைய தலைமுறைக் குழந்தைகளுக்கு அளிக்க ஒரு சமுதாயம் மேற்கொள்ளும் பல்வேறு செயல்முறைகளின் தொகுப்பாகவோ அல்லது அறிவு, விழுமியங்கள், திறன்கள், மனப்பாங்குகள் என்பவற்றைப் பெற்றுக்கொள்ளும் செய்முறையாகவோ அதுவுமன்றி அறிவைத் தருவதற்கும் திறன்களை விருத்தி செய்வதற்குமென பயிற்சியும் அறிவுறுத்தலும் வழங்கும் செய்முறையாகவோ கல்வி என்ற கருத்துநிலை பல்வேறு வகையில் பொருள் கொள்ளப்படுகிறது. கல்வி என்ற எண்ணக்கரு தொடர்பாக தமிழர்களிடம் உள்ள தகவல்கள் எண்ணற்றவை. கல்விக்கு தமிழ்ச் சமூகம் வழங்கியிருக்கும் இடம் மிகவும் உன்னதமானது. கல்விக்கென இலங்கை அரசு செலவழிக்கும் தொகையோ மிகவும் அளப்பரியது. கல்விக்கு அரசு வழங்கும் முன்னுரிமை, உலகின் கல்விக்கொள்கைளின் சிறப்பம்சங்களை பிழிந்தெடுத்து உருவாக்கப்பட்ட கல்வித்திட்டங்கள், திறமைகளை வடித்தெடுத்து பொருத்தமான இடங்களில் பொருத்தக் கூடிய வகையில் தரம்பிரிக்கப்பட்ட பாடசாலைகள், சர்வதேச உதவு நிறுவனங்களின் அளப்பரிய கவனம் என கல்வியின் புறவயப்பட்ட விரிவாக்கமானது ஆச்சரியமும் பிரேமையும் தரத்தக்கதாக அமையும் அதே சமயம் கற்றல், கற்பித்தல் உட்பட  சமூகப் பிரஜை ஒன்றை உருவாக்குவதற்கான கல்வியின் அகவயப்பட்ட விரிவாக்கமானது அவலமும் பிரமையும் தரத்தக்கதாக அமைந்திருக்கிறது. உலகமயமாக்கம், அறிவியல் கண்டுபிடிப்புகள், தகவல் சுனாமி, பொருளாதார வளர்ச்சி போன்றவை கல்வியை அறிவுநுட்பத்திற்கான அடித்தளம் என்ற நிலையிலிருந்து மாற்றி பொருளீட்டுவதற்கான முதலீடாக தரமிறக்கியுள்ளன. அதுமட்டுமன்றி கல்வி பொருளாக மாற்றப்பட்டு எழுத்தறிவிக்கும் இறைவர்களான ஆசிரிய சமூகமே அதன் விற்பனையாளராக மாறியிருக்கும் பரிதாபம், விற்பனையை மேம்படுத்துவதற்கான விளம்பரதாரர்கள், இடைத்தரகர்கள் என கல்வி வியாபாரம் களைகட்டி பறக்கின்ற ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்கின்றோம். இதனால் ஏற்படும் விசனமும் 'தௌ;ளிய அறிவும் நன்நடத்தையும் கொண்ட பண்பட்ட மக்களை உருவாக்குவதே கல்வி' என்ற மாட்டின் லுதர், 'மனிதனை மனிதனாக வாழ வைப்பதே உண்மைக் கல்வி' என்ற சுவாமி விவேகானந்தர், 'அன்பை உணருதல், அன்பு காட்டுதல் என்றால் என்ன என்று கண்டுபிடித்தல், அன்பு காட்டுதல் என்பவையே கல்வி' என்ற இந்திய கல்விச் சிந்தனையாளர் ஜே.கிருஸ்ணமூர்த்தி, போன்றோரின் சிந்தனைகள்; வழி சென்று மனிதத்தை மனிதர்களிடம் உருவாக்குவதே உண்மைக் கல்வியின் நோக்கம் என்பதை அறிவுறுத்தி உண்மைக்கல்வியை எமது மக்களுக்கு நாம் வழங்குவதில் தடையாக இருக்கின்ற எண்ணற்ற பல காரணிகளில் ஒன்றிரண்டை ஆவணப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கற்றல் என்ற கருத்துநிலை 
கற்றல் என்பது ஒரு அறிவை புதிதாகப் பெறுதல் அல்லது ஏற்கனவே உள்ள அறிவை இற்றைப்படுத்தல் அல்லது மெருகூட்டுதல் அல்லது வலுவூட்டுதல் எனப் பொருள் கொள்ளப்படுகிறது. செய்முறை சார்ந்து நோக்கும்போது படிப்பு, அனுபவம் அல்லது கற்பித்தல் போன்றவற்றால் அறிவும் திறனும் பெறும் செய்முறை கற்றல் எனப்படுகின்றது.  பிறப்புமுதல் நம்மிடம் இயற்கையாக அமைந்து காணப்படாமல் நாம் பின்னர் பெறும் அனுபவங்களும் அவற்றின் விளைவுகளும் கற்றல் என்பதில் அடங்குவதாக இந்திய கல்வியியலாளர் சந்தானம் குறிப்பிடுகிறார்.  இவ்வனுபவங்கள் அறிவு சார்ந்தவையாகவோ, மனவெழுச்சிகள் சார்ந்தவையாகவோ, உடலியக்கங்கள் சார்ந்தவையாகவோ அல்லது இவை யாவற்றுடனும் ஒருங்கே தொடர்புடையதாகவோ இருக்கலாம். கற்றல் பாங்கு என்பது மெய், வாய், கண், மூக்கு செவி ஆகிய ஐம்பொறிகளினூடாக நடைபெறும் பார்த்தல், கதைத்தல், கேட்டல், தொட்டுணர்தல், முகர்தல் ஆகிய செய்முறைகளில் நடைபெறுகின்றது. இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளக்கூடியது கற்றல் என்பது வாழ்நாள் முழுமைக்கு தொடர்ந்து செல்லும் ஒரு செய்முறையாகும். கற்பதற்குரிய இடம் கல்வி நிறுவனங்களான முன்பள்ளிகள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் என்ற  தவறான பார்வை எம்மிடையே உண்டு. இக்கல்வி நிறுவனங்கள் வாழ்க்கைக்கான கற்றலின் ஒரு பத்து வீதத்தையாவது தருமா என்பது கேள்விக்குரியது. அவ்வாறாயின் கற்றலின் களங்கள் வேறு எவை?
கற்றலின் ஆரம்பம் கருவறையாகும். வாழ்வின் பெரும்பாலான கற்றல் குடும்பம் என்ற ஆதார நிறுவனத்திலிருந்து தான் நடைபெறுகின்றது. குடும்பமும் சுற்றுப்புறச் சூழலும் தான் கற்றலின் பிரதான களங்கள்.

கருவறை என்னும் கற்றலறை
மனிதனின் வாழ்க்கைக் காலம் குழந்தைப்பருவம், இளமைப்பருவம், நடுத்தரப்பருவம், முதுமைப்பருவம் என்ற நான்கு பிரதான பருவங்களைக் கொண்டது. இந்த வாழ்க்கைக் காலத்தில் முதல் 18 வருடங்கள் குழந்தைப்பருவம் என வரையறுக்கப்பட்டிருக்கிறது. தனிமனித நோக்கிலும் சரி, சமூக நோக்கிலும் சரி ஒரு சமூகம் எதிர்கொள்ளும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கான ஆணிவேருக்கும் இந்தக் குழந்தைப்பருவத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இதனடிப்படையில் தான் குழந்தை வளர்ப்பு, குழந்தை உளவியல் தொடர்பான ஆய்வுகள் இன்று தீவிர கவனம் பெற்று வருகின்றன. இத்தகைய ஆய்வில் இறங்கும் போது குழந்தைப் பருவத்திற்கு முந்திய 10 மாதங்கள் தாயின் கருப்பையில் வளரும் ஒரு உயிரின் வாழ்நிலை தொடர்பான கேள்விகளும் ஆய்வுகளும் மனித சமூகத்தின் கவனத்தை திசைதிருப்பியாக வேண்டுமென்பது தவிர்க்க முடியாதது.
குழந்தை உளவியல் தொடர்பான ஆய்வுகள் முனைப்புப் பெற்ற காலத்திலேயே மானுட வளர்ச்சியைத் தீர்மானிப்பது பரம்பரைக் காரணிகளா? சூழல் காரணிகளா? என்ற விவாதமும் தொடங்கிவிட்டது. 'சூழலுக்கும் பரம்பரை அலகுகளுக்கு மிடையிலான தொடர்பு போட்டித்தன்மை அதாவது ஒன்றை ஒன்று அழித்தல் வாய்ந்ததல்ல. இது நடனம் போன்ற நேர்த்தியான அசைவுத் தன்மை வாய்ந்தது. இந்த அசைவானது கரு உருவாகி மூன்றாவது வாரத்திலிருந்தே தோன்றிவிடுகின்றதெனவும் சூழல் காரணமாக கருப்பையில் ஏற்படும் மாற்றங்கள் ஆளுமை மிக்க பரம்பரை அலகுகளின் வழி உருவாகிக் கொண்டு வரும் கருவின் போக்கையே திசை திருப்பிவிடும்' என்ற ஜோர்ஜ் வோஷிங்டன் பல்கலைக்கழக உளநோயியல் ஆய்வாளரான ஸ்ரான்லி கிரீன்ஸ்பான் (ளுவயடெநல புசநநnளியn) அவர்களது கூற்று சூழலா, பரம்பரையா என்ற தனிக்கட்சி விவாதங்களுக்கான கருத்துநிலையை தகர்த்;து இரு காரணிகளதும் பரஸ்பர செல்வாக்குத் தொடர்பான கருத்தொற்றுமை நிலையை ஆய்வாளர்களிடையே ஏற்படுத்திவிட்டது. எடுத்துக் காட்டாக மூளைத்திறன் அதிகம் வாய்த்த பெற்றோரின் மரபணுக்களின் வழி உருவான குழந்தையை தாய் எதிர்கொள்ளும் சூழல் பாதிப்புகள் மூளை வளர்ச்சி குறைந்த குழந்தையாக மாற்றும் வல்லமை வாய்ந்தவையாகும். இதனால் தான் இன்றைய தந்தைவழி சமூக அமைப்பிலும் சரி இதற்கு முன்னர் நிலைகொண்டிருந்த தாய் வழி சமூக அமைப்பிலும் சரி தாய்மை நிலை என்பது கொண்டாடப்; படுவதற்குரியதாகவே இருந்து வருகிறது. தம்மிடம் இருக்கும் பொருளாதார வசதிகளுக்கமைய கருவுற்றிருக்கும் பெண்ணின் விருப்பங்கள் பூர்த்தி செய்யப்படுவதும், உடல், உள ஆரோக்கியத்தில் குடும்பத்தவர் அதிக கவனம் எடுப்பதும், சடங்குகள் மூலம் தாய்மை நிலை கொண்டாடப்படுவதும் இயல்பாகவே இருந்து வருகிறது.

கருவறைக் கவலையீனங்கள்
கருவறையிலேயே கற்றல் செயற்பாடு நடைபெறுவதை ஆய்வுகள் மெய்ப்படுத்தியிருக்கின்றன.  பெற்றோர் மற்றும் சூழலால் குழந்தை வடிவமைக்கப்படுகிறது. தாயின் குரலிலிருந்து அது ஒலியைக் கற்கிறது. ஏனைய ஒலிகள்; கருவறையைக் கடந்து தெளிவான முறையில் கருவை வந்தடைதல் சாத்தியமற்றது. பிறக்கும் குழந்தைகள் தாய் பேசும் மொழியின் சாடையிலேயே அழுகின்றன என்றும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. ஒலியை மட்டுமன்றி சுவையையும் மணத்தையும் கூட கருவறையில் சிசு கற்கின்றது. இது உண்மையெனில் கருவறையில் கேட்டல் அல்லது செவிமடுத்தலூடாக சிசு கற்கின்றது. தாயின் எண்ணங்கள், உணர்வுகள் அனைத்தும் குழந்தையிடம் போய்ச் சேருகின்றது. குறிப்பாக கரு உருவாகிய நாளிலிருந்து 2-6 வார காலங்களில் தான் குழந்தையின் உறுப்புக்கள் தோன்ற ஆரம்பிக்கின்றன. குழந்தையின் இருதயம் துடிப்பதும் கைகள், கால்கள், விரல்கள் என்பன தோன்றுவதும் உள்ளுறுப்புகள், நரம்பமைப்புகள் உருவாவதும் இக்காலப்பகுதியிலேயேதான். இக்காலத்தில் தாயின் உடலில், மனநிலையில், உணர்வுநிலையில் ஏற்படும் மாற்றமானது கருவை நேரடியாகவே தாக்குகின்றது என ஆய்வுகள் கூறுகின்றன.
வறுமையை அடிப்படை பண்பாகக் கொண்ட சமூகங்களில் பசியால் வரும் அனைத்து எதிர்க்கணிய மன எழுச்சிகளையும் செல்வச் செழிப்பைப் பிரதான பண்பாகக் கொண்ட சமூகங்களில் உடலுழைப்பின்மையால் ஏற்படும் நோய்கள் சார்ந்து பெண்ணுக்கு ஏற்படும் மன எழுச்சிகளையும் குழந்தை கற்கின்றது. இன ஒடுக்குமுறையை எதிர்கொள்ளும் தமிழ்ப் பெண்ணுக்கு உடல் பாதிப்பு மட்டுமன்றி உளப்பாதிப்பும் அதிகமாகும். அகதி வாழ்வு, சொத்துக்களின் இழப்பு, பொருளாதார கஷ்டங்கள், அன்புக்குரியவர்களின் இழப்பு, திடீர் மரணங்களால் ஏற்படும் அதிர்ச்சி, எறிகணைத் தாக்கங்கள் போன்றவற்றை கருவறையில் குழந்தையும் எதிர்கொள்கின்றது. இன்றைய சமூகத்தில் பரக்கப்பரக்க பஸ் எடுத்து வேலைக்குப் போகும் கர்ப்பிணிப் பெண்ணின் பரபரப்பு, பதட்டம், இயலாமை, வேதனை, விரக்தி அனைத்தையுமே குழந்தை அனுபவிக்கின்றது.

சமூக நிறுவனங்களின் ஆதிக்கம்
சமூகம் தனிமனிதர்கள் சேர்ந்து உருவாக்கப்பட்டது எனினும் அது பலதரப்பட்ட நிறுவனங்களின் கட்டமைப்பாலானது. சமூகத்தின் தோற்றப்பாடுகள், மரபுகள், முறைசார்ந்த கட்டமைப்புகள் என்பவற்றின் தொகுப்பே சமூக நிறுவனங்கள் ஆகும். தனிமனிதர் ஒவ்வொருவரும் பெற்றோராக, ஆசிரியராக, தொழிலாளியாக, தொழில் முயற்சியாளராக, சமூக சேவையாளராக என பலதரப்பட்ட வகையில் இந் நிறுவனங்களில் தமது பங்கை ஆற்றுகின்றனர். சமூக  நிறுவனங்களின்  ஆதார (pசiஅயசல) நிறுவனங்களாகக் கருதப்படுபவை குடும்பம், கூட்டாளிக்குழு, சுற்றுப்புறச் சமுதாயம் என்ற மூன்றுமே. இவை சமூக உறுப்பினரிடையே நேரடித் தொடர்பைப் பேணுபவை. மனித குலத்தின் ஆரம்ப கட்டங்களிலேயே இந்த ஆதார நிறுவனங்கள் தோற்றம் பெறத் தொடங்கிவிட்டன. பிறப்பால் விலங்காக இருக்கும் மனிதன் மனிதனாக வார்க்கப்படுவது குடும்பம் என்ற அச்சில் தான.; மனிதன் சந்திக்கின்ற முதலாவது உறவான தாய் சேய் உறவு மனிதனுக்கு தன்னுணர்வையும், தன்னைச் சுற்றியுள்ள கூட்டாளிகளின் உறவு சமூக உணர்வையும் தோற்றுவிக்கிறது. பாடசாலைகள், மத நிறுவனங்கள் போன்றவை நேரடித் தொடர்பையும், மறைமுகத் தொடர்பையும் பேணுகின்ற இடைநிலை (ஐவெநசஅநனயைவந) நிலையங்களாகக் கருதப்படுகின்றன. முற்றிலும் மறைமுகத் தொடர்பைப் பேணுகின்ற அரசு, தொடர்பு சாதனங்கள் போன்றவை வழிநிலை (ளுநஉழனெயசல) நிலையங்கள் எனக் கூறப்படுகின்றன. கற்றல் செயற்பாட்டின் ஒவ்வொரு வளர்ச்சிப்படியிலும் இச் சமூக நிறுவனங்களின் செல்வாக்கு அளப்பரியதாகும். கருவறை தொடங்கி கல்லறைவரை ஒவ்வொரு வளர்ச்சிப்படியிலும் செல்வாக்குச் செலுத்தும் வலிமைமிக்க இச் சமூக நிறுவனங்களின் அளவு, தன்மை, ஆதிக்கம் என்பவற்றினூடாக ஒரு சமூகத்தின் தன்மையையும், அதன் சிக்கல் வாய்ந்த அமைப்பையும் இனங்கண்டுகொள்ள முடியும். இதிலிருந்து தனிமனித வளர்ச்சிக்கும், சமூக வளர்ச்சிக்கும் அடிப்படை இச் சமூக நிறுவனங்களே என்பது தெளிவு.

குடும்பம் என்னும் முதல் நிறுவனம்
உழைப்பு, தாராள மனப்பாங்கு ஒத்துணர்வு, அழகுணர்ச்சி, கட்டுப்பாடு, கீழ்ப்படிவு போன்ற நற்பண்புகளின் பிறப்பிடமாக அமைவது குடும்பம். கருவறையை விட்டு குழந்தை வெளியே வந்ததும் பார்த்தல் அல்லது அவதானிப்பு மூலமான கற்றல் செயற்பாடு இங்கிருந்துதான் தொடங்குகின்றது. பிறக்கும் எந்தக் குழந்தையும் தாயிடமிருந்தே பெரும்பாலானதைக் கற்கிறது.
பார்த்துக் கற்றலில் கூர் நோக்கு அல்லது அவதானிப்பு என்ற அம்சம் முக்கியம் பெறுகின்றது. தான் வாழும் சூழலின் ஒவ்வொரு அம்சமும் அதில் காணப்படும் முரண்களும் குழந்தையின் கற்றல் செயற்பாட்டில் மிகுந்த செல்வாக்குச் செலுத்துகின்றன. சமூகத்திலுள்ள ஏனைய மனிதர்களைப் பற்றி ஒருவன் கொண்டுள்ள மனப்பான்மை, தான் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழவேண்டும் என்பது தொடர்பாக ஒருவனது குறிக்கோள்கள், ஒருவனது வாழ்க்கை நடை என்பவை குடும்பத்திலிருந்தே வருகின்றது. 'நான்' என்னும் உணர்வையும் 'நாம்' என்னும் உணர்வையும் குழந்தைகளில் விதைப்பதில் குடும்பத்திற்குப் பெரும் பங்குண்டு. ஒத்துழைப்பு, பரந்த மனப்பான்மை, உதவும் பாங்கு கொண்ட குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்தில் வளரும் பெற்றோரின் குழந்தைகள் முழு ஆளுமை வளர்ச்சியுடன் இருப்பதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன. கருவறை விட்டு வெளியே பிரவேசிக்கும் குழந்தையின் முதல் மூன்று வருடங்கள் முழுமையாக வீட்டுச் சூழலால் வடிவமைக்கப்படுகினறது.
குழந்தையின் ஆளுமை வளர்ச்சிப் போக்கைத் தீர்மானிக்கும் பிரதான சக்தி அக்குழந்தை வாழும் குடும்பச் சூழலே. குடும்பத்தில் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்குமிடையில் ஏற்படக்கூடிய புறக்கணித்தல்-ஏற்றுக்கொள்ளல், அசட்டை செய்தல்-அதிக கவனமெடுத்தல், கட்டுப்படுத்தல்-முழுச்சுதந்திரமளித்தல், பணிந்து போதல்-அதிகாரம் செய்தல், ஒதுங்குதல்-ஒன்றிப்போதல் ஆகிய தொடர்புகள் குழந்தைகளது ஆளுமை வளர்ச்சிப்போக்கையும் சமூக மனப்பான்மைகளையும் நிர்ணயிக்கின்றன என்பதைக் கல்விசார் ஆய்வுகள் மெய்ப்படுத்துகின்றன. 'குழந்தையின் முதல் ஆறு ஆண்டுகளின் வாழ்க்கையை என்னிடம் ஒப்படையுங்கள். அதற்குப்பிறகு அதன் வாழ்க்கை அமைப்பை எப்படிப்பட்டவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைப்பற்றி எனக்கு கவலையில்லை' எனக் கூறும் பெஸ்டலோசி என்ற தலைசிறந்த கல்வியாளரின் கூற்று மனித வாழ்க்கையில் குடும்பமும் சுற்றுப்புறச் சமூகமும் வகிக்கும் பங்கைத் தெளிவாகக் காட்டப் போதுமானது. பார்த்துச் செய்தல் குழந்தையின் பிரதான பண்பு என்பதனால் தேடல் உணர்வுக்கான களம் இங்கிருந்தே ஆரம்பிக்கிறது. நகர்ப்புறக்குடும்பங்களில் நெருக்கமான வசிப்பிடங்களில் வாழ்க்கை, பணம் சேர்ப்பதில் நாட்டம், பெற்றோர் இருவரும் வேலை பார்த்தல், விவாகரத்து போன்ற அம்சங்கள் அதிகமாக இருக்க கிராமப்புறக்குடும்பங்களில் அறியாமை, வறுமை, போன்ற அம்சங்கள் அதிகமாக உள்ளன.

குழப்பமுறும் குடும்பச் சூழல்
 'முதல் மூன்று ஆண்டுகளில் ஒருவன் கற்கும் அளவு அவனது வாழ்க்கையில் வேறு எந்த மூன்று ஆண்டுகளிலும் கற்பதில்லை' எனக் கூறும் யோன் டூவி என்ற கல்வியியலாளரின் கூற்றை அடிப்படையாகக் கொண்டு எமது வீடுகளில் நடப்பதை ஒருமுறை நினைவில் கொண்டு வருவோமெனில் 'பிறந்த இரண்டு வயது குழந்தை எழுப்பும் வினவல்களுக்கு பேராசிரியர்களே விடையைத் தேடிடும் காலம் இது. முந்திய தலைமுறைக் குழந்தைகளைப் போலன்றி இன்றைய குழந்தைகள் மிக்க அறிவுடன் பிறக்கிறது அல்லது வளர்கிறது என்று பெருமிதம் கொள்ளும் பெற்றோருக்கும், இதனை ஆய்வின்றியே அறுதியாகக் ஏற்றுக்கொள்ளும் இன்றைய உயர் தகவல் தொழி;ல்நுட்பச் சூழலுக்கும் மட்டும் இது பொருத்தமானது என்ற தவறான பார்வை எம்மிடையே உண்டு. இன்று நேற்றல்ல! குழந்தையின் வினவல்கள் என்றுமே பதிலளிக்க மிகவும் கடினமானவை. சில பெற்றோர் முடிந்தளவிற்கு பதிலளிக்க முற்படுகின்றனர். பலரோ அடக்கிவிடுகின்றனர்.  பெற்றோர் இருவரும் வேலை பார்க்கும் குடும்பங்களில் ஆயாவின் பராமரிப்பில் வாழும் குழந்தையின் வினவல்களுக்கு பதிலளிக்க யாருமே இருப்பதில்லை. பல குழந்தைகளின் வினவல்கள் பதிலளிக்கப்படமுடியாத சந்தர்ப்பங்களில் கிழட்டுக் கதையாக உருவகப்படுத்தப்பட்டு பெற்றோரால் அல்லது வீட்டிலுள்ள பெரியோரால் முடக்கப்பட்டுவிடுகின்றது.
இன்றைய பெரும்பாலான குடும்பங்கள் பூசல்நிறைந்த குடும்பங்களாகவே காணப்படுகின்றன. பெற்றோர் இருவருமே வேலை பார்க்கும் குடும்பங்களில் உள்ள காலை நேரப் பதட்டம், பரபரப்பு, சண்டை, அதனால் வெளிப்படுத்தப்படும் விரக்திநிலை அனைத்தையுமே குழந்தை ஆழ்ந்து அவதானிக்கின்றது என்பதை பெற்றோர் மறந்துவிடுகின்றனர். குடும்பங்களில் நாம் காணும் இன்னோர் பண்பு தொடர்ச்சியான நச்சரிப்பு. நச்சரிப்புக்கு பேர் போனவர்கள் பெண்கள் என்பதை பெண்களே ஏற்றுக்கொள்வர். மனைவி என்ற வகிபங்கில் அதைக் கொண்டா, இதைக் கொண்டா என கணவனை நச்சரிப்பதும், தாய் என்ற வகிபங்கில் சிறிது நேரம் கூட விளையாட விடாது படி, படி என பிள்ளைகளை நச்சரிப்பதும் குடும்பத்திலிருந்து சற்றேனும் ஓடி ஒளிந்து கொண்டால் என்ன என்ற எண்ணத்தை குடும்ப உறுப்பினர்களிடம் இந்த நச்சரிப்பு ஏற்படுத்துகின்றது. உலகத்தின் புகழின் உச்சியில் ஏறியிருந்தபோதும் மனைவியின் நச்சரிப்பால் மணவாழ்க்கையின் மகிழ்ச்சியைத் தொலைத்தவர்களில் உலகப் புகழ் பெற்ற பிரான்சின் மன்னன் நெப்போலியன் ரஷ்யாவின் இலக்கிய மேதை லியோ ரோல்ஸ்ரோய், அமெரிக்க  அதிபர் ஆபிரகாம் லிங்கன் போன்றோர் உள்ளடங்குவர்.

மாறும் உறவு மனப்பாங்குகள்
மனப்பொருத்தமுள்ள குடும்ப வாழ்க்கையே நல்ல குடும்ப வாழ்க்கைக்கு அடிப்படையாகவும் தொடக்கமாகவும் அமையும் என்ற உளவியலறிஞர்களின் கூற்றுக்கு அமைய தமிழ்ச்சமூகங்களின் வாழ்க்கை இல்லை என்பதை அனைவருமே ஏற்றுக்கொள்வர். 'அப்பா லீவில் வந்தால் நாம் வீட்டின் முன்புற வாயிலால் நுழைய முடியாது. ஏனெனில் அப்பாவும் அம்மாவும் தனிமையில் இருந்து பேசும் இடமாக அது மாறிவிடும். அப்பாவின் பெட்டியில் கணிசமான இடம் அம்மாவிற்குரிய பொருட்களாகவே இருக்கும். யாரும் அதற்கு உரிமை கோர முடியாது. எங்களுக்கென்றும் அப்பா கொண்டு வருவார் ஆனாலும் அம்மாவிற்குரியதைவிட ஒருபடி குறைவாகவே அவை இருக்கும்' என மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் தாய் தந்தையர் ஒன்றாக அமர்ந்து பேசுவதைக் காண்பதே மிக அரிதாக இருந்த ஒரு காலகட்டத்தில் ஐந்து குழந்தைகளைக் கொண்ட ஒரு குடும்பத்தில் தொலைதூரத்தில் வேலை பார்த்து இடையிடையே வீட்டுக்கு வரும் தகப்பனின் நடவடிக்கைகளையும் தாய் தந்தையரின் அந்நியோன்னியத்தையும்  பெருமையுடனும் நகைச்சுவையுடனும் விவரிக்கும் மனப்பாங்கு கொண்ட ஒரு பல்கலைக்கழக மாணவனை தற்போது எம்மால் தரிசிக்க முடியுமா?. வீடு பெரிதாக, பல அறைகளைக் கொண்டமைந்தாலும் சிறு குழந்தைகளுக்கெதிரிலேயே ஒன்றாக படுத்துறங்குவது இன்றைய தலைமுறைப் பெற்றோருக்கு மேற்கத்தைய பாணியாக இருக்கக்கூடும். ஆனால் குழந்தை தூங்கியிருக்கும் என்று கற்பனை பண்ணிக்கொண்டு அசண்டையீனமாக குழந்தை எதிரிலேயே குடும்பம் நடத்தும் சில பெற்றோரையும் அதனை இரகசியமாக அவதானிக்கும் குழந்தைகளையும் மேற்கத்தைய சமூகம் நிச்சயம் கொண்டருக்கவில்லை என்ற கசப்பான யதார்த்தம் எத்தனை பேருக்கு தெரியும்?.
குழந்தை பேசக் கற்றுக்கொள்ளும் ஆரம்பக்கட்டங்களிலேயே 'நீ அம்மா பிள்ளையா அப்பா பிள்ளையா' என்ற தாய் அல்லது தகப்பனின் அதுவுமன்றி உறவினரின் 'செல்லங்கொஞ்சும்' வினவல்கள் குழந்தையை ஒன்றில் ஏதாவது ஒரு கட்சியில் சேரும் மனப்பாங்கைக் கற்றுக்கொடுக்கின்றது அல்லது இருவரையும் தனித்தனி திருப்திப்படுத்தும் கெட்டித்தனத்தைக் கற்றுக் கொள்;கின்றது. கணவன் மனைவி உறவு தங்கியிருத்தல் உறவாக இருக்கும் பண்பு அதிகமாக இருக்கும் குடும்பங்களில் கட்சிகட்டிப் பிரிக்கும் பண்பையே குழந்தைகள் அதிகம் கற்றுக் கொள்கின்றனர்.

வலுவற்ற 'வளர்ப்புப் பண்ணைகள்'
கற்றல் செயற்பாடுகளை ஒருங்கிணைக்கும் வலுமிக்க நிறுவனங்களாக இருப்பவை கல்வி நிறுவனங்கள். மனிதன் சந்திக்கும் முதலாவது நிறுவனமாக முன்பள்ளிக்கல்வி நிறுவனங்கள் கருதப்படுகின்றன. உடல், உள, சமூக, மனவெழுச்சி விருத்தி, பாடசாலைக்கான தயார்படுத்தல் உள்ளடங்கிய ஒட்டுமொத்த விருத்திக்குப் பொருத்தமான வாய்ப்புகளையும் அனுபவங்களையும் வழங்குவது கிட்டத்தட்ட 3-5 வயது வரையான காலப்பகுதியை உள்ளடக்கும் முன்பள்ளிக் கல்வியின் நோக்கமாகும். முன்பள்ளிப்பருவக் கல்வி ஏற்பாடுகள் பிள்ளைகளின் உள்ளார்ந்த ஆற்றலின் முழுமையான வளர்ச்சிக்கும் வாழ்நாள் முழுவதற்குமான கல்விக்குமான அத்திவாரத்தை இடுகின்றன. பிற்காலத்தில் உருவாகும் சிறந்த உளப்பாங்குகள், கற்றலை விரும்பும் மனநிலை என்பன உருவாக இப்பருவத்தின் வளர்ச்சி மிக முக்கியமானது.
மனிதப்பண்புகளின் 'வளர்ப்புப் பண்ணை'களாகக் கருதப்படும் இந்த நிறுவனங்களின் தற்போதைய நிலை பரிதாபத்திற்குரியது. இந்நிறுவனங்களின் கற்பித்தற்பணி எமது சமூகத்தில் பெரும்பாலும் அடிப்படைக்கல்வித் தகுதியற்றவர்களிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. தனது பிள்ளை ஆங்கிலத்தில் தான் கற்க வேண்டுமென்ற பெற்றோரின் அவாவானது வருவாய் நோக்குடன் இயங்கும் பல முன்பள்ளிகளின் உருவாக்கத்திற்குக் களமமைத்திருக்கிறது. கிராமப்புறங்களில் முன்பள்ளியே தெரியாது வீட்டின் அருகிலுள்ள பாடசாலையில் தாய்மொழியில் கல்வி கற்று பொறியியலாளராகவும் மருத்துவராகவும் உயர்ந்து நடமாடும் எடுத்துக்காட்டுகளாக இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் எம்மவரிடம் இன்றைய பெற்றோர் கற்றுக்கொள்வது என்ன?. பெரும்பாலான முன்பள்ளிகள் பிள்ளை பராமரிப்பு நிலையங்களாக இயங்குகின்றன. குழந்தையின் தொல்லையிலிருந்து பெற்றோர் சற்றுநேரமாவது ஒளிந்திருக்கக்கூடிய புகலிடங்களாகவும் இவை மாறுகின்றன. முன்பள்ளியின் நேரத்தைச் சற்றுக்கூட்டினால் என்ன என்று அங்கலாய்க்கும் தொழில்பார்க்கும் பெற்றோரும் இருக்கத்தான் செய்கின்றனர். இதற்கு மாற்றுவழியாக முன்பள்ளிப் பிள்ளைகளுக்கும் தனியார் கல்வி நிலையங்களை உருவாக்கினால் என்ன என்ற கருத்துநிலையும் தோற்றம் பெற்றிருக்கின்றது.

ஆட்டங்காணும் அத்திவாரம்
மனித வளர்ச்சிக் கட்டங்களில் இளமை, ஆர்வம், துடிப்பு, தேடல் அதிகம் உள்ள குழந்தைப்பருவம் முழுவதையும் தமதாக்கி அவர்களை நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைப்பதற்கான வழிப்படுத்தல் என்ற  மாபெரும் பொறுப்பை ஏற்று நிற்பவை பாடசாலைகள் என்ற கல்வி நிறுவனங்கள். குழந்தைகளின் உள்ளத்தை கிட்டத்தட்ட 12 வருடங்கள் பண்படுத்தும் பாரிய கடமைப்பாட்டில் இருப்பவை. மொழித்திறன் விருத்தி, ஆக்கவேலை, சூழலுக்கேற்ற தொழில், பாடசாலையையும் சமூகத்தையும் இணைத்தல் போன்றன 6-10 வயது வரை கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளை உள்ளடக்கும் ஆரம்பக் கல்வியின் நோக்கமாக இருக்கிறது. 'குழந்தைகளினுடைய மனதின் இரகசியத்தையும், ஆசிரியர் பயிற்சி என்னும் கலையையும், ஆசிரியரின் திறமைகளையும் அறிய முற்படுகையில் ஒவ்வொரு குழந்தையிடமும் நான் எனது ஆசிரியனை, ஆசானைக் காண்பேன்' என்கிறார் ஆறுவயதுக் குழந்தைக்கு படிப்பு சொல்லிக் கொடுப்பதை தனது மிக விருப்புக்குரிய தொழிலாக ஏற்ற ருஷ்ய விண்வெளிக்கழகத்தின் தலைவரும் இயற்பியல் விஞ்ஞானியுமான அமனஷ்வீலி. குழந்தைகளின் நடவடிக்கைகளின் உட்பொருளினுள் ஆழப் புகுவதன் மூலம், குழந்தையின் உள்ளாற்றல்களைப் பயன்படுத்தி, அன்பு பரந்த மனப்பாங்கு, நகைச்சுவை உணர்வு, துடியார்வம், யதார்த்தத்தை அறியும் ஆக்கபூர்வமான அணுகுமுறை ஆகியவற்றைத் தட்டியெழுப்பி இவர்களுக்கு அவசியமான சமூக அம்சங்களை அளிக்க முடியும் என்ற இவரது  கூற்று ஆரம்பக்கல்விப்; பருவத்தின் அத்தியாவசியத்தையும் வீட்டுச் சூழல் ஒன்றிலிருந்து முதன்முதலான பாடசாலை என்ற நிறுவனத்திற்குள் நுழைகின்ற ஆறு வயது குழந்தையின் முக்கியத்துவத்தையும் தெளிவாகக் காட்டப் போதுமானது.
ஆரம்பக் கல்வியின் முதல் மூன்று ஆண்டுகளோ அல்லது ஐந்து ஆண்டுகளோ ஒரே ஆசிரியரின் கீழ் விடப்படுவதும் ஆசிரியர்கள் குழந்தை விரும்பும் பாடத்தை அதனது போக்கில் விளங்கப்படுத்துவதற்கேற்ற சூழலும் எமது கல்விமுறையில இல்லை. புத்தகச் சுமையால் கேள்விக்குறி போல் வளைந்து நிற்கும் குழந்தைகள் உலகில் மகிழ்ச்சிகரமான கற்றலுக்கும் கற்பித்தலுக்கும் இடமின்றி ஆண்டு ஒன்றிலிருந்தே புலமைப்பரிசில் பரீட்சைக்கு ஏற்ற வகையில் பிள்ளைகளைத் தயார்படுத்துவதும் ஐந்து ஆண்டுகள் வரை குழந்தையின் கற்றல் மகிழ்ச்சிகரமானதாகவன்றி அவலம் நிறைந்ததாக மாறியிருப்பதும் பரிதாபத்திற்குரியதொன்று. பரீட்சையில் சித்தியடைவதைவிட முதற்தரத்தில் தேறுவதற்கான தயார்படுத்தல்களே முனைப்புப் பெற்றிருக்கின்றன.

தொழிற்கல்வியின் ஆக்கிரமிப்பு
குடியாட்சிப்பண்பு நிறைந்த எதிர்கால மக்களை உருவாக்குதலும், உயர்கல்விக்கோ அல்லது ஏதாவது ஒரு தொழிலுக்கோ செல்லக்கூடிய தகுதியை உண்டாக்குவதுமே 10-16 வரையான காலப்பகுதியை உள்ளடக்கும் இரண்டாம் நிலைக்கல்வியின் நோக்கமாகும். இடைநிலைக் கல்வியின் கிட்டத்தட்ட 20 வீதமாவது தொழிற்கல்வி வாய்ப்பு அளிக்கப்படவேண்டிய கட்டமாக இது உணரப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாணவரும் சமூக வளர்ச்சித் திட்டங்களில் தொடர்ச்சியாக ஒரு மாதமாவது பங்குபெற வைக்கப்படல் வேண்டும். மரவேலை, உலோக வேலை, அச்சடித்தல், கணினித் தொழினுட்பம்  போன்றவற்றுக்கான தொழிற்கூடங்களை ஒவ்வொரு பாடசாலையும் கொண்டிருத்தலின் அவசியத்தை இது உணர்த்துகிறது. 17-18 வயது வரையான இரண்டு வருடங்களை உள்ளடக்கும்  உயர்கல்வியானது பல்கலைக்கழகக் கல்விக்கான தயார்படுத்தலில் முழுக்கமுழுக்க ஈடுபடவைக்கும் அதேசமயம் தொழிற்கல்வியையும் வளர்த்தெடுக்கும் நோக்கத்தைக் கொண்டது. கிட்டதட்ட 80 வீதம் தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பருவமாக இது உணரப்பட்டிருக்கிறது. உயர்கல்விக்குள் நுழையும் வாய்ப்பற்ற மாணவர்கள் தொழிற்கல்வியில் பயிற்சியைப் பெறுவதற்கு ஏற்றவகையில் பல்தொழினுட்பக் கல்லூரிகளின் உருவாக்கத்தை இது வேண்டிநிற்கிறது.

ந்தஸ்து நோக்கிலான அழுத்தங்கள்
தமிழ்ச் சமூகத்தின் கல்வி நோக்கம் வெறும் தொழில் நோக்கமாக இருந்திருப்பின் மகாத்மா காந்தியின் ஆதாரக் கல்விக் கொள்கையை சிரமேற்கொண்டு பாடசாலைக்கொரு கைப்பணி நிலையங்களால் எமது பாடசாலைகள் நிரம்பியிருக்கும். அந்தஸ்து மிக்க தொழில் நோக்கி பிள்ளைகளை வலிந்து செலுத்தும் ஆதிக்க சக்தியாகவே இன்றைய தமிழ்க் குடும்பங்களை இனங்காண முடிகிறது. தமது ஆறேழு பிள்ளைகளில் ஒன்றை பொறியிலாளராகவோ அன்றி மருத்துவராகவோ ஆக்குவதற்கு எமது முந்தைய தலைமுறை அவ்வளவு சிரமப்படவில்லை என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வர். தனது தேவைகளை மட்டுமன்றி குடும்பத்தின் தேவைகளை அதுவும் கூட்டுக் குடும்பத்திலுள்ள பேரன் பேத்திகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு தமது பிள்ளைகளைப் பழக்கிய பெற்றோரிடமிருந்து தான் மிகச் சிறந்த கல்வியாளர்களை மருத்துவர்களை, பொறியிலாளர்களளை இச்சமூகம் உருவாக்கியிருக்க இன்றைய தலைமுறையோ ஒன்றிரண்டு பிள்ளைகளுடன் தம்மை மட்டுப்படுத்தியிருப்பது மட்டுமன்றி தனது தேவைகளைக்கூட தனித்து நிறைவேற்றமுடியாதளவிற்கு குழந்தைகளை அனைத்திலும் தங்கியிருப்போராக மாற்றியிருக்கிறது.  தமது கரங்களால் தமது வயிற்றை நிரப்புவதற்குக்கூட நேரமின்றியோ அல்லது விருப்பமின்றியோ அதுவுமன்றி பெற்றோரின் அதீத கவனிப்பின் தன்மையாலோ  பெற்றோரில் தங்கியிருக்குமளவிற்கு ஆக்கப்பட்டிருக்கின்றது. வீட்டில் அம்மாவின் கரங்களினால் செலுத்தப்படும் உணவை இயந்திரத்தனமாக உள்வாங்கும் அதே பிள்ளை கொத்து ரொட்டிக் கடையில் தட்டு நிரம்ப கொத்தும் பெப்சி சோடாவுமாக எத்துணை மகிழ்ச்சியாக தனது கரங்களினால் அத்தனை உணவையும் சாப்பிட்டு முடிக்கின்றது என்பது எத்தனை அன்னையருக்குத் தெரியும்?. உண்ணும் உணவின் சத்துக்களை கூடுமானவரையில் உணவுக் கலங்கள் உறுஞ்சுவதற்கு உமிழ்நீரின் உதவி தேவையென்பதையும் சொந்தக்கரங்களால் உண்ணுவதன் மூலமே உமிழ்நீர் சுரப்பிகள் இயங்கும் என்பது படித்த அம்மாக்களுக்கே தெரியவில்லை.

வெறுவாய் மெல்லும் மூன்றாம் நிலைக்கல்வி
மூன்றாம்நிலைக் கல்வியின் நோக்கம் மாணவரிடையே உண்மை அறிவை வளர்ப்பதும் அதைப் பரப்புவதுமாகும். சமூகத்தை தாங்கக்கூடிய தலைவர்களையும் சமூகத்தை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லும் துறைசார் வல்லுனர்களை உருவாக்குவதில் பல்கலைக்கழகத்தின் பங்கு அளவிடற்கரியது. பல்கலைக்கழகக் கல்வியின் உண்மையான நோக்கம் ஆய்வும் அந்த ஆய்வின் பெறுபேறை சமூகத்தில் பிரயோகிப்பதுமாகும். பல பேராசரியர்களைச் சுடச்சுட உருவாக்கியிருக்கும் பல்கலைக்கழகம் இதுவரை சமூகத்திற்கு தேவையான எத்தனை கண்டுபிடிப்புகளைச் செய்திருக்கிறது?  பல்கலைக்கழக சமூகமே தமது பணியிடத்தை அரிவரிப் பள்ளிக்கூடம் என ஏளனம் செய்யுமளவிற்கு இது தரமிறங்கியுள்ளது. மாணவர்களை பாலியல் இம்சை செய்தல், மாணவர்களின் ஆக்கங்களை தமது ஆக்கமாக வெளியிடுதல், தமது வசதியை கருத்திற்கொண்டு பாடவேளைகளை வடிவமைத்தல், போன்ற ஊடகங்களின் எண்ணற்ற குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுக்கவேண்டிய நிலையில் உள்ள கற்பித்தற் சமூகமும், பணம், பதவி, சமூகச் செல்வாக்கு போன்றவற்றுக்கு உறுதுணையாக அமையும் தராதரமற்ற நியமனங்களை ஊக்குவிக்கும் நிர்வாகக் கட்டமைப்பும் மாணவ சமூகத்தின் பிரதான கற்றல் களங்களாக மாறியிருக்கின்றன.  

உளத்தூண்டல் அற்ற உடற்கல்வி 
தலைமைத்துவப் பண்பு, விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு, தோல்வியை சமமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு, குழுப்புரிந்துணர்வு மற்றும் சமூக மென்திறன்களைத் சமூக உறுப்பினர்களுக்கு வழங்குவதில் உடற்கல்விக்கு பாரிய பண்புண்டு. வீட்டுக்குள் விளையாடும் பாண்டிக்குண்டு, தாயம், முற்றத்தில் விளையாடும் கிட்டிப்புல், தாச்சி, போளை அடித்தல்  போன்றவை முதற்கொண்டு நிறுவனமயப்பட்ட விளையாட்டுப் போட்டிகள் வரை உள்ளடங்கும். இது மட்டுமன்றி மன ஒருமைப்பாடு, புலனடக்கம், போன்றவற்றைத் தரவல்ல உளப்பயிற்சிகளையும் உள்ளடக்கும். ஆனால் நடைமுறையில் இந்த உடல் உள பயிற்சிகள் வெறும் சம்பிரதாய விளையாட்டுப் போட்டிகளாகவும், அரசியல், சமூக குழு முரண்பாடுகளை ஊக்குவிக்கும் களமாகவுமே எமது சமூகத்தில் முளைவிடத் தொடங்கியிருக்கிறது. தைரியம், பற்றுறுதி, பரந்த மனப்பாங்கு, பொதுநலப் பண்பு போன்றவற்றை வளர்ப்பதற்கு உதவும் விளையாட்டுக் குழுக்களுடன் குழந்தைகள் செலவிட்ட காலம் மாறி, தனியார் கல்வி நிலையங்களில் கூடுதலான நேரம் முடக்கப்பட எஞ்சியுள்ள நேரத்தில் கணனி விளையாட்டுக்களும், வியாபார ரீதியான வர்த்தக மையங்களும் முக்கியப்படுத்தப்படுவதனால் குழந்தைகளை பிரதான அங்கத்தவராக கொண்ட விளையாட்டுக்குழு என்ற வலுமிக்க ஆதார நிறுவனம் நகர்ப்புற சமூகங்களில் மெல்ல மெல்ல மறைந்துகொண்டு போகிறது. சமூக உறுப்பினர்கள் அனைவருமே பங்குகொள்ளக்கூடிய விளையாட்டுகளை கைவிட்டு பதின்மூன்று பேர் கொண்ட கிரிக்கெற் உலகிற்குள் மாய்ந்து போய்க்கிடக்கின்றது இன்றைய பெரும்பான்மை இளைய சமூகம்.

சிறுவர் உரிமை மீறல்கள்
குழந்தையின் தன்மையும் முதிர்ச்சியடைந்த ஒரு மனிதனின் இயல்பும் வேறு பட்டவை என்ற சிந்தனை அறவே எழாத 16ம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து விடுபட்டு குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் கவனமாகவும் கட்டுப்பாட்டுடனும் வளர்க்கப்படவேண்டியவர்கள் என்ற சிந்தனைத் துடிப்பு தோற்றம் பெற்ற மத, இலக்கிய மலர்ச்சிக் காலத்தை மெல்லக் கடந்து, குழந்தையின் மூளை வளர்ச்சி, உளவியல் தாக்கம், குழந்தைக்கும் பெற்றோருக்குமிடையிலான தொடர்பு, குழந்தைக்கும் சகல குழந்தைகளுக்குமிடையிலான தொடர்பு, குழந்தையின் நடத்தை மாற்றம், அதற்கான சமூக சூழல் பற்றிய அதிகளவிலான கேள்விகளும் ஆய்வுகளும் அக்கறைகளுமாக ஒரு நூற்றாண்டைச் செலவழித்து சிறுவர் உரிமைகளும் நலன் பேணும் திட்டங்களும் வெறும் உபதேசமாகப் போய்விடுமோ என்ற வினா எழுப்பும் நிலையில் 21ம் நூற்றாண்டில் காலடி வைத்திருக்கிறது மனித சமூகம். 15 வயதிலேயே குழந்தைக்கு தாயாகும் சிறுமியரையும் குடும்பப் பாரத்தைச் சுமக்கும் பொறுப்புள்ள சிறுவர்களையும் தம்முன்னே காணும் சிறுவர் நலனில் அக்கறை கொண்டவர்களுக்கு 18 வயதுக்குட்பட்டவர்கள் அனைவருமே 'குழந்தைகள்' என கணிக்கப்படவேண்டியவர்கள் என்ற ஐக்கிய நாடுகள் சாசனத்தின் பிரகடனம் அதிர்ச்சியூட்டும் செய்தியாகவே கருதப்படுகிறது.

சமூக நெறிபிறழ் நடத்தைகள் 
'ஒருவருடன் ஒருவர் கலந்து, இணைந்து எல்லோருக்கும் பொதுவான சில நோக்கங்களை அடைவதற்காக கூடிச் செயற்படும் பல மனிதர்களின் கூட்டே சமூகம்' என்கிறார் கிட்டிங்ஸ் என்ற அறிஞர்.  ஷபாதுகாப்பு, புதிய அனுபவங்களைப் பெறல், பிறரது தூண்டல்களுக்கு ஏற்ப நடத்தல், பிறர் தம்மைப்போல் ஒருவராக எம்மை ஏற்றுக்கொள்ளல்  ஆகிய நான்கு ஊக்கிகளே சமூகத் தொடர்புகளுக்கு அடிப்படைஷ என்கிறார் தோமஸ் என்ற அறிஞர். ஒரு மனிதனின் முழு வளர்ச்சிக்கு சமூகம் இன்றியமையாதது. உணவு, உடை, உறையுள் போன்ற உடல் தேவைகளும், அன்பு போன்ற உளத்தேவைகளும், பாதுகாப்பு, பொழுதுபோக்கு போன்ற சமூகத் தேவைகளும் நிறைவு பெறுவதற்கு சமூக வாழக்கை மனிதனுக்கு அவசியமானது. தனிமனிதனையும் அவன் வாழும் சமூகத்தையும் பிரித்துப் பார்ப்பது சாத்தியமற்றது. கற்றல் செயற்பாடானது ஒரு சமூகத்தின் சூழலால் வடிவமைக்கப்படுகின்றது. மனிதனும் சமூகமும் ஒன்றுடனொன்று பின்னிப் பிணைந்திருப்பது போன்றே தனிமனித வளர்ச்சியும் சமூக வளர்ச்சியும் ஒன்றுடனொன்;று பின்னிப்பிணைந்தது. மனித வளர்ச்சியானது சமூகத்தின் வளம், சமூகத்தின் மரபு, சமூகத்தின் தேவைகள், சமூகத்தின் சூழல் என்பவற்றின் அடிப்படையிலேயே தங்கியுள்ளது போன்று மரபு, வயது, பயிற்சி, சூழல் என்பன மனித உருவாக்கத்துக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஒரு மனிதனின் ஆளுமை பண்புகள் அவன் வாழுகின்ற சமூகத்தின் தன்மையினால் நிர்ணயிக்ககப்படுகின்றது என்பது உண்மையெனில் தற்போதைய எமது சமூகம் பற்றிய தௌ;ளிய அறிவு எமக்கு அவசியமானதாகும்.  ஒன்றுக்கொன்று முரண்பட்ட நடத்தைகளைக் கொண்டமைந்த மிகமிகச் சிக்கல் வாய்ந்த ஒரு சமூகமாக, எங்கும்; எதிலும் போட்டி மனப்பான்மையை ஊக்குவிக்கும் அதேசமயம் தனிமனிதர்களிடமிருந்து அதிகளவு கீழ்ப்படிதலை எதிர்பார்க்கும் சமூகமாக, இன ஒடுக்குமுறையை பூரணமாக அனுபவிக்கும் சமூகமாக,. தமது தனித்தன்மைகளை, பாண்பாட்டுக்கோலங்களை மெல்லமெல்ல கைவிட்டு கண்டதே காட்சி கொண்டதே கோலம் என அலையும் சமூகமாக, நெறிபிறழ் நடத்தைகள் மெல்ல மெல்ல தலையெடுத்தாடுகின்ற சமூகமாக, சமூகச்சிந்தையற்ற கல்வியாளர்களை மிக அதிமாகக் கொண்டிருக்கும் சமூகமாக இனங்காணப்பாட்டிருக்கும் இன்றைய எமது சமூகத்தில் மாணவர்களை சமூக இயல்பினராக்குவது எவ்வாறு என்பது ஒரு கசப்பான யதார்த்தமாகவே உள்ளது.

மறைந்து கொண்டு வரும் அனுபவக்கல்வி
கற்றலின் பிரதான களங்களில் முக்கியமானது பிறரது பட்டறிவு எமக்கு படிப்பறிவாவது ஆகும். முந்தைய தலைமுறை சேர்த்து வைத்திருக்கும் அனுபவங்கள் கல்வி நிறுவனங்கள் தரும் கற்றலின் பிரயோகங்கள் என்பதை பலர் மறந்துவிடுகின்றனர். கூட்டுக் குடும்ப வாழ்விலிருந்து கருக்குடும்ப வாழ்விற்கு எமது சமூகம் மாறியகையுடன் மூத்தவர்களது அனுபவங்களைப் பகிரும் அரிய வாய்ப்பும் மறைந்து விட்டது. நிலைகொண்டிருக்கும் ஓரிரு குடும்பங்களில் அது தலைமுறை இடைவெளி என்ற  பார்வையில் புறக்கணிக்கப்படுகின்றது. ஏழைக்குடும்பத்தில் பிறந்து சுயமாக உழைத்து முன்னேறிய ஒரு கணவனுக்கு வாழ்க்கைப்பட்ட பின்னர் ஊதாரித்தனமாக மாறிய மனைவியை 'ஆபத்துக்குதவாப்பிள்ளை, அரும்பசிக்கு உதவா அன்னம், தாகத்தைத் தீராத்தண்ணீர், தரித்திரமறியாப் பெண்டிர்'; என்ற விவேகசிந்தாமணியின் பாடல்களில் பொருத்தமான ஒன்றை மேற்கோள் காட்டும் அன்றைய அப்பாக்கள் பள்ளிக்கூட வாசல் மிதிக்காது வெறும் திண்ணைப் பள்ளியில் கற்றவர்கள் மட்டுமே. திருக்குறள் போன்ற நீதி நூல்களை அதன் பொருளுடன் சொல்லும் வல்லமையை இன்று எத்தனை அப்பாக்கள் கொண்டிருக்கின்றார்கள். குளிக்கும் இடம், கூட்டும் இடம், ஏன் கழிக்கும் இடம் கூட திருவெம்பாவையின் இருபது பாடல்களையும் மனப்பாடம் செய்வதற்கு அன்றைய தலைமுறை பயன்படுத்தியதால் தான் இன்றும் புத்தகம் இன்றியே அவற்றை நினைவில் இருத்திப் பாடும் வல்லமையை அது கொண்டிருக்கின்றது. இன்றைய எமது நிலை...?. மனனப் போட்டியில் மதிப்பெண் வாங்குவதுடன்  அது மறந்துவிடுகின்றது. வள்ளுவர் சொல்லும் கசடு அறக்கற்றலும் கற்றபின் அதற்கு அமைய நடத்தலும் ஏட்டுப்படிப்பாகவே நின்றுவிடுகின்றது.

முன்னணி வகிக்கும் முகஸ்துதிகள்
சமூகத்தின கலை, இலக்கிய மற்றும் பண்பாட்டு நிகழ்வுகள் மனிதனின் மற்றுமோர் முக்கிய கற்றல் களங்களில் ஒன்றாகும். பரந்த கல்வி, ஆழமான அறிவு,  அனுபவ முதிர்ச்சி, ஒழுக்கமான வாழ்க்கை போன்றவற்றால் உயர்ந்து நிற்கும் பெரியவர்களை சமூகத்தின் நிகழ்வுகளுக்கு அழைத்து அவரது வகையால் பெருமையும் பெருமிதமும்; அடைந்த தமிழ்ச்சமூகத்தின் விழாக்கள் உண்மையான பாராட்டுக்களால் அன்று நிரம்பி வழிந்தன. மேடையில் இருப்பர் தொடர்பான மரியாதை அவையில் இருக்கும் அனைவருக்கும் இருந்தது. அவர் முன்னால் விழுந்து வணங்கி ஆசி பெறுவதும் கூட பெரிய விடயமாகப் போற்றப்பட்டது. ஆனால் இன்றைய சமூகத்தின் நிகழ்வுகள் எமக்குக் கற்றுக்கொடுப்பது உண்மையான பாராட்டுக்களை அல்ல. முகத்துக்குப் புன்னகைத்து முதுகுக்கும் புறங்கூறுவது எப்படி என்பதையே. இன்றைய அழைப்பிதழ்களில் வெறும் பிரதம விருந்தினரை உள்ளடக்கிய எம்மவரின் அழைப்பிதழ்கள் இந்த முதுகு சொறியும் போக்க்pனால் சிறப்பு விருந்தினர், பின்னர் கௌரவ விருந்தினர் என தமக்கு படிப்பிலோ, பதவியிலோ அல்லது பொருளுதவியோ செய்வார் என நம்புபவர்களையெல்லாம் அழைப்பிதழில் உள்ளடக்கும் பரிதாபம் கடந்த இருதசாப்த வளர்ச்சி மட்டுமே. இது அண்மையில் ஒரு நிகழ்வு இரு பிரதம விருந்தினர்களை உள்ளடக்குமளவிற்கு இன்னொரு படி மேற்சென்றுள்ளதை செய்தி ஊடகங்கள் ஆவணப்படுத்தியிருக்கிறன.

தொலையும் பண்பாட்டு அடையாளங்கள்
செழிப்பும், பொருளாதார வளர்ச்சியும், குழந்தை வளர்ப்பு தொடர்பான அதீத கவனமும் ஏற்படுத்தும் அதிக வாய்ப்பு வசதிகளின் காரணமாக போதைப் பொருட் பாவனை, குடி, கொலை, கொள்ளை, சிறுவர் விபச்சாரம் போன்ற வன்முறைக்குற்றங்களில் சிறுவர்கள் அகப்பட்டு சீரழிந்து கொண்டிருக்கும் போக்கு ஒரு புறமிருக்க இதற்கு நேர் மாறாக வசதி வாய்ப்புக்கள் எதுவுமி;ன்றி வறுமை, பசி, பட்டினி, போசாக்கின்மை, கல்வி அறிவின்மை என்பவற்றின் காரணமாக குழந்தையிலேயே குடும்பப் பாரத்தை சுமக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு ஏழைக்குடும்ப சிறுவர்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர். தொலைக்காட்சிப் படங்கள் விளையாட்டுக்கள், கேலிச்சித்திரங்கள் போன்றவற்றில் இடம்பெறும் வன்முறைக் காட்சிகளை பார்த்ததும் 'உலகமே இப்படித்தான், இதையே தான் ஒவ்வொருவரும் செய்கின்றனர் எனவே நாமும் செய்யலாம்' என்ற தோற்றப்பாட்டை சிறுவர்கள் பெறுவதும் வன்முறை இங்கு அதிகரிக்க காரணம் எனப்படுகிறது.
ஏனைய பல சமூகங்களுக்கு இல்லாத அளவு போட்டி மனப்பான்மையை தமிழ்ச்சமூகம் கொண்டிருக்கிறது. தமிழ்ச்சமூகத்தின் வியாபார சந்தையில் அதிக கேள்வியுள்ள பொருளாக காணப்படுவது கல்வி என்ற வியாபாரப் பண்டம். கல்வியின் விற்பனையாளர்கள் ஆசிரியர்கள். விளம்பரமின்றியே மிக அதிகளவில் விற்பனையாகும் பொருளும் கல்வியே. தனக்கென தனித்துவப் பண்புகளை தக்க வைத்துக்கொண்ட தமிழ்ச்சமூகத்தின் இன்றைய பண்பு மயப்படுதல். ஏனைய சமூகங்கள் தம்மை அடுத்தவரிலிருந்து வித்தியாசப்படுத்த ஏதாவது ஒரு அடையாளத்தை, ஆகக் குறைந்தது தமது ஆடையணிகளிலாவது (அது சீக்கியர்களின் தலைப்பாகையாகவோ, முஸ்லிம்களின் தொப்பியாகவோ) பேணுவதாக இருக்க எமக்கென தனித்த அடையாளம் இன்றி உலகில் எதுவெல்லாம் புழக்கத்திற்கு வருகின்றதோ அவற்றை காட்சிப்படுத்தும் பொம்மைகளாகவே எமது சமூகம் இனங்காணப்படுகின்றது. கல்விச் சமூகத்தை எடுத்துக்கொண்டால் ஆரம்ப காலங்களில் நாம் வாத்தியார் என அழைக்pன்ற அன்றைய உபாத்தியாயர்களை பாடசாலைக்குள் மட்டுமன்றி பாடசாலைக்கு வெளியிலேயே சமூகத்தின் எந்தவொரு நிகழ்விலும் அதே கோலத்தில் இனங்காணக்கூடிய ஒரு வாய்ப்பும் தமிழ்ப்பண்பாட்டின் தனித்தன்மையையும் காணக்கூடியதாக இருந்தது. ஆனால் இன்று சீருடைகள், ஒழுக்க அம்சங்கள், கட்டுப்பாடுகள் அனைத்தும் மாணவர்களிடம் மட்டும் திணிக்கப்படும் தன்மையே பெரும்பாலும் உண்டு. இதிலிருந்து தெரிவது என்ன ?.  மாணவ சமூகத்திற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளோ ஒழுங்கு நடவடிக்கைகளோ பாடசாலையுடன் மட்டும் தான் என்ற ஆழமான உணர்வும் அதனை கழற்றி எறிந்து சுமையிலிருந்து விடுபடும்; தருணத்தை மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்ற உணர்வும்  மிக அதிகளவில் உண்டு. சமூகத்தின் நேர்க்கணிய மாற்றத்தை கற்பதன் மூலமே சமூக அபிவிருத்தியைப் பற்றி சிந்திக்கலாமேயன்றி எதிர்க்கணிய மாற்றங்களினால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும் சமூகத்தில் ஒரு மனிதனை சமூக இயல்பினராக்குதல் சாத்தியமற்றது.

அதிகரிக்கும் விலகல்களும் இடைவெளிகளும்;
பிள்ளைகளை தேடல் உணர்வு அதிகமாக இருக்கும் ஆரம்பப் பள்ளி மாணவர்களின் பெற்றோர் ஆசிரியர்களிடம் போடும் கட்டளைகளில் பிரதானமானது மேலதிக பாடத்திட்ட செயற்பாடுகளில் பிள்ளைகளை சேர்க்கவேண்டாம் என ஆசிரியர்களுடன் சண்டை பிடிக்கும் பெற்றோர்கள், தனியார் கல்வி நிலையங்களில் மட்டுமன்றி அதற்கும் மேலாக தனிப்பட்ட வீட்டு ரியூசனில் அதிகம் செலவழிக்கும் பெற்றோர்கள் பள்ளி நிகழ்வுகளில் அன்பு, பாதுகாப்பு, பரஸ்பர உறவு என்பவற்றின் அடிப்படையில் உருவான குடும்பம் என்ற ஆதார நிறுவனம் இன்று அவற்றை புறந்தள்ளி பணத்துக்கும் அந்தஸ்து மிக்க தொழிலிற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நிறுவனமாக மாறிக்கொண்டு வருகிறது. வாழ்க்கைப் படிப்பை புறந்தள்ளி ஏட்டுப்படிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பாடசாலை என்ற நிறுவனம், விரும்பத்தகாத மனவெழுச்சிகளை மனிதரிடம் குறிப்பாக குழந்தைகளிடம் தூண்டிவிடும் திரைப்பட ஊடகங்கள், நின்று நிதானித்து சிந்தித்துப் பார்த்து செயற்பட நேரமற்ற பம்பர உலகில் தொகை ரீதியாகவும் தரரீதியாகவும் பெருத்துக்கொண்டு போகும் தகவல் வெள்ளத்துக்குள் நல்லதை, பொருத்தமானதை தெரிவு செய்வதற்கான நேரமோ, பொறுமையோ, அறிவோ அற்ற மனித சமூகம் இப்படி இன்றைய சமூகத்தின் எதிர்க்கணியப் போக்கை விவரித்துக்கொண்டே போகலாம்.
வீட்டுக்கும் வீட்டுக்கு வெளியேயான வாழ்க்கைக்குமிடையிலான விலகல்களும் இடைவெளிகளும் அதிகரித்துச் செல்லும் ஒரு சமூகமாக எமது சமூகம் இனங்காணப்படுகின்றது. பாடசாலையில் அறஞ்செய விரும்பு எனப் படிக்கும் குழந்தை வீட்டில் பிச்சைக்காரன் வந்ததும் படலையைச் சாத்தும் அப்பாவையோ அல்லது அம்மாவையோ பார்க்க நேரும் சந்தர்ப்பங்களில் குழப்பமடைகின்றது. பாடசாலைக் கல்வியை ஊக்குவிப்பதைவிடுத்து தனியார் கல்வி நிலையங்களுக்கு வரத் தூண்டும் ஆசிரியர்கள், போதைவஸ்து பாவனைக்கு தண்டனை கொடுத்துவிட்டு வீட்டிலோ களியாட்ட நிகழ்விலோ அவற்றை நுகரும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள், வீட்டின் பொருளாதார ஏற்றத்தாழ்வைக் காரணங்காட்டி ஒருசிலரை ஒதுக்கும் கூட்டாளிக் குழுக்கள் அனைத்துமே இந்த இடைவெளிகளை மேலும் ஆழமாக்குகின்றன. இத்தகைய குழப்பங்கள் நடைமுறைமுறை வாழ்க்கைக்கும் பாடசாலைக் கல்விக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை என்ற ஆழமான உணர்வை சிறுவயதிலிருந்தே குழந்தையிடம் விதைத்துவிடுகின்றது.

முடிவுரை
சவால்;களைப் பட்டியலிட்டுவிட்டு தீர்வை தராமல் விடுதல் எந்தவொரு பயனுமற்றது. தனக்கென தனித்தன்மையைக் கொண்ட சமூகங்களாக ஒவ்வொரு கிராமமும் வளர்ச்சியடையுமெனில் முரண்கள் குறைவதற்கு பெருமளவு வாய்ப்புண்டு. வெறும் அரசியல் பிரகடனமோ அல்லது நனவாக்க முடியாத கனவோ எதுவாக இருப்பினும் 'அயல் பாடசாலையை சிறந்த பாடசாலையாக்குதல் எண்ற கல்வியமைச்சரின் பிரகடனம் சமூக சிந்தையுள்ள மனிதனை உருவாக்க நினைக்கும் அனைத்து உள்ளங்களிற்கும் தெம்பு தரும் ஒரு செய்தியாகும். தாய்மைநிலையுடன் மிக தொலை தூர பணியிடத்திற்குச் செல்தலின் சிரமம், சக விளையாட்டுத் தோழரை விட்டு சமூக பொருளாதார கலாசார அம்சங்களில் வேறுபட்ட குழுக்களுடன் தன்னை இசைவாக்கம் செய்வதில் ஒரு மாணவனுக்கு இருக்கும் சிரமம். ஓய்வு நோக்கத்திற்கு இடையூறாக இருக்கும் தனியார் கல்வி நிலையங்களிற்கு செல்வதன் சிரமம் போன்றவை சொந்தப் பாடசாலையில் கற்பதன் மூலமோ வேலை பார்ப்பதன் மூலமோ குறையுமெனில் சமூக இயல்பினராக்குவதிலுள்ள சவால்களும் குறைவதற்கு இடமுண்டு. எமக்கு முந்திய தலைமுறையின் ஐக்கியப்பட்ட ஒழுக்க, பண்பாட்டு அம்சங்களும் இன்றை தொழில்நுட்ப வசதி வாய்ப்புகளும் இணையுமெனில் தனித்தன்மையும் சமூக சிந்தையுமுள்ள மேதைகளை இச்சமூகம் அதிகளவில் கொண்டு சிரஞ்சீவியாய் நிலைத்திருக்கும் எண்பது திண்ணம்.

உசாத்துணைகள்
1.  Eshleman, Adam(2009).  Probing Question: Can babies learn in utero?. http://news.psu.edu/ story/ 141254/2009/02/23/research/probing-question-can-babies-learn-utero
2. சந்தானம்,எஸ். (1987). கல்வியின் சமூக தத்துவ அடிப்படைகள். சென்னை: பழனியப்பா பிரதர்ஸ்.-
3. அமனஷ்வீலி,ச. (1987) குழந்தைகள் வாழ்க. மொழிபெயர்ப்பு. இரா.பாஸ்கரன். மொஸ்கோ: முன்னேற்றப்பதிப்பகம்.
4. சந்திரசேகரம்,சோ. (2006). முன்பள்ளிக் கல்வியின் முக்கியத்துவம். அகவிழி. 2(22). யூன் 2006. ப13-15.
5. நவாஸ்தீன்,ப.மு.(2006). இடைநிலைக் கல்வியில் அறிமுகப்படுத்தப்படும் புதிய கலைத்திட்டச் சீர்திருத்தங்கள். அகவிழி. 2(23). யூலை. 2006. ப12-17.