நூல்விபர ஆவணவாக்கத்தில் ஈழத்தமிழர் பங்களிப்பு
:சில சான்றுகள்
0. அறிமுகம்
ஆவணவாக்கம் என்ற பதம் பரந்து விரிந்த பொருள் தருவது. நூலகவியல் நோக்கில் இது நூல்விபர ஆவணவாக்கம் எனப்படுகின்றது. தகவல் வளங்களை முறைப்படி சேகரித்தல், ஒழுங்கமைத்தல், சேமித்தல், மீள்பெறுகை செய்தல் மற்றும் பரவலாக்கம் செய்தல் ஆகிய செய்முறைகளை இது உள்ளடக்குகின்றது. ஆவணவாக்கச் செயற்பாட்டின் தொகுப்புப் பணியுடன் தொடர்புடைய இச்செயற்பாட்டை கருவிவகை ஆவணவாக்கம் எனவும் குறிப்பிடுவர். கருவிவகை ஆவணவாக்கமானது ஆய்வாளர்களின் இலகுவான பயன்பாட்டைக் கருத்திற் கொண்டு குறிப்பிட்ட படைப்பாளர் சார்ந்த அல்லது துறை சார்ந்த இலக்கியங்களை முறைப்படி பட்டியலிடுதலைக் குறிக்கின்றது. இது ஒரு நூலகம் அல்லது தகவல் நிலையத்திலுள்ள அனைத்து ஆவணங்களின் விபரங்களைப் பட்டியலிடுகின்ற நூலகப் பட்டியலாகவோ அல்லது குறிப்பிட்ட துறை சார்ந்து அல்லது படைப்பாளர் சார்ந்து உருவாக்கப்படும் நூல்விவரப்பட்டியல் மற்றும் சொல்லடைவு மற்றும் சாராம்சச் செயற்பாடாகவோ இருக்கும். நூல்களையும் ஏனைய வளங்களையும் முறைப்படுத்தப்பட்ட வகையில் விவரித்து, பகுப்பாக்கம் செய்து, பதிவுகளைப் படிப்பதற்கு ஏற்ற வகையிலும், குறிப்பு எடுப்பதற்கு உதவும் வகையிலும், தர்க்க ரீதியாகவும் பயனுள்ள வகையிலும் ஒழுங்குபடுத்தி உருவாக்கப்படும் ஆய்வடங்கல் நூலகவியல் துறைசார்ந்து நூல்விவரப்பட்டியல் என அழைக்கப்படுகின்றது. இது குறித்த பொருள் சார்ந்ததாகவோ, படைப்பாளருடையதாகவோ, மொழி சார்ந்ததாகவோ, குறித்த காலப்பகுதி சார்ந்ததாகவோ, குறித்த வடிவம் சார்ந்ததாகவோ, குறிப்பிட்ட வெளியீட்டாளர் சார்ந்ததாகவோ இருக்கலாம். படைப்பாளர், தலைப்பு, வெளியீடு, வெளியீட்டு இடம், பதிப்பு, தொடர் குறிப்பு, தொகுதிகளின் எண்ணிக்கை, மேலதிக இணைப்புகள், விலை ஆகிய நூல்விவரத் தகவல்களை இவை உள்ளடக்குகின்றன. சில வெளியீடுகளுக்கு பதிப்பாசிரியர், மொழிபெயர்ப்பாளர் விவரங்களும் தேவைப்படும். இவற்றை வர்த்தகத் தகவல் எனவும் குறிப்படுவர்.
வெளியீடுகளின் தலைப்புகளையும் ஏனைய விவரங்களையும் சரிபார்க்க உதவுதல், ஒரு குறிப்பிட்ட பொருளில் அல்லது மொழியில், குறிப்பிட்ட படைப்பாளர் அல்லது வெளியீட்டாளரின் நூல்கள் தொடர்பான தகவல்களைக் கண்டறிவதற்கு உதவுதல், ஒரு வெளியீட்டின் மதிப்பையும் அதன் பெறுமதியையும் மதிப்பிட உதவுதல், ஒரு வெளியீடு எந்தெந்தப் பதிப்புகளில் வெளியானது போன்ற ஒரு வெளியீட்டின் வரலாற்று ரீதியான, நூல்விவரம் சார்ந்த பின்னணித் தகவல்களை பெறுவதற்கு உதவுதல், படைப்பாளர் தொடர்பான நூல்விவரத் தரவுகளைப் பெற உதவுதல், ஒரு குறிப்பிட்ட பொருளில் உள்ள சிறந்த நூல்களை அறிய உதவுதல், ஒரு குறிப்பிட்ட காலப்பகுதி சார்ந்து அல்லது குறித்த ஒரு வடிவம் சார்ந்து வெளியான வெளியீடுகள் தொடர்பான தகவலைப் பெற உதவுதல் போன்ற பயன்களை நூல்விவரப்பட்டியல்கள் தருகின்றன.
1. வகைப்பாடு
நூல்விவரப்பட்டியல்களை முறைப்படுத்தப்பட்ட முறை, பகுத்தாய்வு முறை, வரலாற்று முறை என மூன்று பிரதான பிரிவுகளாக வகைப்படுத்த முடியும். நூல்விவர ஆவணவாக்கமானது நூலின் அடிப்படைத் தகவல்களை மட்டும் தரும் அடிப்படை நூல்விவரப்பட்டியலாகவோ அல்லது நூலின் விவரங்களுடன் நூல் பற்றிய சிறு குறிப்புகளை உள்ளடக்கும் குறிப்புரை நூல்விவரப்பட்டியலாகவோ அதுவுமன்றி குறிப்பிட்ட நூல் தொடர்பான அதிகளவு விவரங்களைத் தரக்கூடிய விளக்க நூல்விவரப்பட்டியலாகவோ அமையலாம்.
நூல் ஒன்றின் ஆத்மாவுடன் பேசும் நோக்கத்தைக்கொண்ட ஒரு செயற்பாட்டை ஆவணவாக்க நூல்விபர பணி என பெயரிடுகின்றார் கீழைத்தேச நூலகவியலின் தந்தையான எஸ்.ஆர். இரங்கநாதன்;. நூல்களின் உயிருடன் அதாவது கருத்துசார் உள்ளடக்கத்துடன் இணைந்து செய்யப்படும் பணியை - குறிப்பாக விசேட பொருட்துறை ஒன்றில் வெளியிடப்பட்ட நூல்கள் மற்றும் பருவ இதழ்க்கட்டுரைகளின் பேரின மற்றும் நுண்ணினக் கருப்பொருளின் பட்டியை ஆவண நூல்விவரப்பட்டியல் எனப் பெயரிடுவதுடன் அத்தகைய பட்டியானது விசேட பொருட்துறை வல்லுனர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யுமுகமாக தயாரிக்கப்படும்போது அது ஆவணவாக்கப்பட்டி என்றும் அத்தகைய பட்டியை உருவாக்கும் கலை ஆவணவாக்கம் எனவும் குறிப்பிடுகின்றார் (Ranganathan 1974).
நூல்கள் பகுப்பாக்கம் செய்யப்பட்டு, வகுப்பெண் இடப்பட்ட பின்னர் நூல் விவரத் தரவுகள் தருக்க முறை ஒழுங்கிலோ அல்லது ஏனைய பயனுள்ள ஒழுங்கமைப்பிலோ ஒழுங்குபடுத்தப்படும் நூல்விவரப்பட்டியல்கள் முறைப்படுத்தப்பட்ட வகையிலானவை. இம்முறையில் குறிப்பு எடுப்பதற்கும் படிப்பதற்கும் பொருட்டு, நூலை ஆராய்ந்து ஒவ்வொரு நூலுக்கும் சாதாரண அல்லது விரிவான பதிவுகளை தர்க்க ரீதியாகவும் பயனுள்ள வகையிலும் ஒழுங்குபடுத்துவர். ஒரு ஆக்கத்தின் பொருள் பல தலைப்புகளாகவும் உப தலைப்புகளாகவும் பிரிக்கப்பட்டு அவை ஒவ்வொன்றின் கீழும் பதிவுகள் அகரவரிசையில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும் நூல்விவரப்பட்டியல்கள் பகுத்தாய்வு முறையிலமைந்தவை. இதில் ஒவ்வொரு கட்டுரைகளிலுமுள்ள தகவல்களுக்குப் பரந்த ரீதியில் அகரவரிசைப் பொருட்; சொல்லடைவும் தயாரிக்கப்படும். ஒரு நூலை உருவாக்குவதற்குத் தேவையான தாள்களின் உருவாக்கம், அச்சுக்கலை, வெளியீடு, விளக்கப்படங்கள், வரைபட உருவாக்கம், நூல்கட்டு, நூல் பாதுகாப்பு உட்பட நூலின் உற்பத்தி முறைகளையும் அதன் வரலாற்றையும் உள்ளடக்கித் தயாரிக்கப்படுபவை வரலாற்று முறையிலமைந்த நூல்விவரப்பட்டியல்கள் ஆகும்.
முறையான வகையில் நூல்களின் விவரங்களைத் தரும் பண்பானது பொதுவானதும் அதிகம் வழக்கிலுள்ளதுமான நடைமுறையாக உள்ளது. எம்மிடையே பெரும்பாலும் புழக்கத்தில் இருப்பது முறைப்படுத்தப்பட்ட முறையிலமைந்த நூல்விவரப்பட்டியல்களே. ஒவ்வொரு தனி ஆக்கத்தினதும் அதனுடன் தொடர்பான ஆக்கங்களினதும் தகவல்களை ஒப்பிட்டுப்பார்த்து தர்க்கரீதியாக அல்லது பயனுள்ள ஒழுங்கில் பட்டியல்படுத்தும் செய்முறையாக இது உள்ளது. ஆவணத்தின் வகை சார்ந்து அரிய நூல்களுக்கான நூல்விவரப்பட்டியல்கள்;, பருவஇதழ்களின் பட்டியல்கள், ஆய்வுக் கட்டுரைகளுக்கான பட்டியல்கள் என வகைப்படுத்தப்படுகிறது. உருவாக்க முயற்சி சார்ந்து இது படைப்பாளருக்கான நூல்விபரப்பட்டியல், பெயர் அறியப்படாத, புனைபெயர் ஆக்கங்களுக்கானவை, நிறுவன நூல்விவரப்பட்டியல் என வகைப்படுத்தப்படுகிறது. உள்ளடக்கம் சார்ந்து இது பொதுப் பொருட்துறை, சிறப்புப் பொருட்துறை சார்ந்தவை என வகைப்படுத்தப்படுகிறது. பொருள்சார் நூல்விவரப்பட்டியல்கள், தனிநபர் நூல்விவரப்பட்டியல்கள், நூல்விவரப் பட்டியல்களுக்கான நூல்விவரப்பட்டியல்கள் ஆகியன பொதுப் பொருட்துறை வகையைச் சார்ந்தவையாகும். ஒழுங்கமைப்பு சார்ந்து அகரவரிசையில் அமைந்தவை, கால அடிப்படையிலானவை, பொருட்துறை சார்ந்தவை என இவை வகைப்படுத்தப்படுகின்றன.
ஈழம் சார்ந்து முறைப்படுத்தப்பட்ட நூல்விவர ஆவணவாக்கத்தின் முன்னோடி என்ற பெருமையை சைமன் காசிச்செட்டி பெறுகின்றார். 1848 ம் ஆண்டு யூன் 3, 1849 பெப்ரவரி 24, மற்றும் டிசம்பர் 1 ஆகிய திகதிகளில் இலங்கை றோயல் ஏசியாற்றிக் சங்கத்தில் இவரால் வாசிக்கப்பட்ட தமிழ் நூற்பட்டியலானது ஈழத்து நூல்விபரப்பட்டியல் வரலாற்றின் முன்னோடி முயற்சி எனக் கருதத்தக்கது. மூன்று பிரதான பொருட்தலைப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இப்பட்டியலின் முதலாவது பிரிவான மொழியியலில் 74 நூல்களின் விபரங்களும் இரண்டாவது பிரிவான புராண இலக்கியம் மற்றும் வரலாறு வாழ்க்கைச் சரிதம் என்ற பகுதியில் இந்துக்கள், கிறிஸ்தவர், இஸ்லாமியர் ஆகிய மூன்று மதம் சார்ந்தும் உள்ள படைப்பாளரின் 83 ஆக்கங்கள் பற்றிய தகவல்களும் மூன்றாவது பிரிவான சமயம், தத்துவம் பற்றிய பகுதியில் 154 நூல்களும் ஆக மொத்தம் 311 நூல்களின் விபரங்கள் இடம்பெறுகின்றன.(.(Muthukumaraswamy 1992).
1.1 பொதுவான நூல்விவரப்பட்டியல்கள்
பொது நூல்விவரப்பட்டியல்கள் நாடு, மொழி, இனம், என மேலும் வகைப்படுத்தப்படுகிறது. இது வியாபகத்தன்மையின் அடிப்படையில் சர்வதேசியப் பண்பு கொண்டது, தேசிய ரீதியானது, பிராந்திய ரீதியானது, பிரதேசரீதியானது, உள்ளுர் சார்ந்தது எனவும் வகைப்படுத்தப்படக் கூடியது.
1.11 சர்வதேசியப் பண்பிலமைந்தவை
தனிநாயகம் அடிகளின் ''Reference guide to Tamil Studies' (1966), தமிழ் தவிர்ந்த ஏனைய மொழிகளில் வெளியிடப்பட்ட தமிழியல் சார்ந்த 1322 நூல்களை மானுடவியல், தொல்லியல், கலைகள், கிறிஸ்தவ பணி, அகராதிக்கலை, சமூக வரலாறு, இலக்கிய வரலாறு, மொழி, மொழியியல், சமயம், தத்துவம், பிரயாணம், நூல்விபரப்பட்டியல், பட்டியல்கள் ஆகிய பதினான்கு உப பொருட்தலைப்புகளின் கீழ் அட்டவணைப்படுத்துகின்றது. (Thaninayakam 1966)
இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட குமரேசன் அவர்களின் தனிப்பட்ட முயற்சியால் உருவான தமிழ்ப்புத்தகங்கள் தொடர்பான தகவல்களைத் திரட்டித் தரும் விருபா: தமிழ்புத்தகத்திரட்டு என்னும் வலைத்தளம் நூல்களின் நூல்விவரத் தகவல்களை கொண்டுள்ள இலத்திரனியல் ஆவணவாக்க முயற்சியாகும். இது இதுவரை 3473 நூல்களின் விவரங்களைத் தொகுத்திருக்கிறது.(எசைரடிய.உழஅ) ஒவ்வொரு பதிவும் தலைப்பு, பதிப்பு ஆண்டு, ஆசிரியர் பதிப்பு, பதிப்பகம், விலை, புத்தகப் பிரிவு, பக்கங்கள், ISBN இலக்கம் ஆகிய தகவல்களை உள்ளடக்குகின்றது. இதுதவிர மதிப்புரைகள் (207), மொழிபெயர்ப்புகள் (113) போன்றவற்றின் விவரங்களையும் இது கொண்டுள்ளது. சிந்தாமணி நிகண்டு, நூலக தகவல் அறிவியல் கலைக்களஞ்சிய அகராதி போன்றவை முழுமையான எண்ணிமப்படுத்தப்பட்டிருப்பதை நோக்கும் போது மூல ஆவணவாக்கப் பணியிலும் இது தற்போது நுழைந்திருப்பதை காட்டுகின்றது.
உலகிலுள்ள பலதரப்பட்ட நூலகங்களிலும் வளநிலையங்களிலும் இருக்கின்ற இலங்கைத் தமிழர்களின் வரலாறும் பண்பாடும் சார்ந்த முதல்நிலைத் தகவல் வளங்களை ஆவணப்படுத்தும் முயற்சியானது 'pசiஅயசல ளழரசஉநள கழச hளைவழசல ழக வாந ளுசi டுயமெயn வுயஅடைள: ய றழசடன றனைந ளநயசஉh' என்ற தலைப்பில் நூலுருப்பெற்றிருக்கின்றது. இந்த ஆவணப்படுத்தலானது இருமொழி உருவாக்கமாகும். (குணசிங்கம் 2005).
இலண்டனிலிருந்து 2002ம் ஆண்டு முதல் செல்வராஜா அவர்களால் வெளியிடப்படும் 'நூல்தேட்டம்' வெளியிடப்பட்ட இடம் சார்ந்து சர்வதேசியப் பண்பைக் கொண்டதொன்று. இது இலங்கை எழுத்தாளர்களினால் இலங்கையிலும், புலம்பெயர் நாடுகளிலும் அச்சுருவில் வெளியிடப்பட்ட நூல்கள் பற்றிய விபரங்களை ஆவணமாக்குகின்றது. இலங்கை எழுத்தாளர்களால், தமிழில் வெளியிட்ட அனைத்து நூல்களும் குறிப்புரையுடன் கூடியதாக இத்தொகுப்பில் இடம்பெறுகின்றது. ஒவ்வொரு தொகுதியிலும் 1000 நூல்கள் என்ற ரீதியில் இதுவரை பத்து தொகுதிகளில் 10000 ஈழத்துத் தமிழ் நூல்கள் பற்றிய தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. துண்டுப்பிரசுரங்கள், வரைபடங்கள், அச்சிடப்படாத கையெழுத்துப் பிரதிகள், ஒலி, ஒளிப்பதிவு நாடாக்கள், இறுவெட்டுகள் போன்றனவும் பெரும்பான்மையான கல்வெட்டுகள், ஞாபகார்த்த மலர்கள், சஞ்சிகைகள் என்பனவும் இத்தொகுதியில் சேர்க்கப்படவில்லை. எனினும், தனி ஆவணமாகக் கருதும் வகையில் வெளியிடப்பட்டிருக்கும் சஞ்சிகைகளின் சிறப்பு மலர்கள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. மேலும், சில கல்வெட்டுக்களும், ஞாபகார்த்த மலர்களும் தனிநூலின் வகைக்குள் அடங்கக்கூடியதான கனதியான அம்சங்களுடன் வெளிவந்திருப்பதால் அவையும் இத்தொகுதியில் சேர்த்துக் கொண்டுள்ளன. (செல்வராஜா 2002). மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வெளிவந்துள்ள தமிழ் நூல்களின் விபரத் தொகுப்பாக மலேசிய சிங்கப்பூர் நூல்தேட்டம் அமைந்துள்ளது. இந்நூலினையும் லண்டன் அயோத்தி நூலக சேவைகள் வெளியிட்டுள்ளது. மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் வெளிவந்த 756 நூல்களின் விபரங்கள் இதில் உண்டு.
1.12 தேசியப் பண்பு கொண்டவை
1970 இல் உருவான எவ்.எக்ஸ்.சி நடராசாவின் 'ஈழத்துத் தமிழ் நூல் வரலாறு' பகுத்தாய்வு முறை நூல்விவரப்பட்டியல் பண்பைக் கொண்டிருக்கிறது. (நடராசா 1970). நூலின் முதலாவது அத்தியாயம் இலங்கையின் அரசியல் வரலாற்றுக் காலத்தை அடிப்படையாகக் கொண்டு ஐந்து உப தலைப்புகளில் தமிழரது ஆக்கங்களை பகுப்பாய்வு செய்கிறது. இரண்டாவது அத்தியாயம் இலக்கியம் என்ற தலைப்பில் ஆறு வெளியீடுகளை ஆவணப்படுத்துகின்றது. மூன்றாவது அத்தியாயம் புராணங்கள் என்ற தலைப்பில் 21 வெளியீடுகளை பகுத்தாய்வு செய்கிறது.
1955-70 காலப்பகுதியில் ஈழத்தில் எழுந்த தமிழ் நூல்களின் விவரங்களை சிறுகதைகள்(55), நாவல்கள், நாடகங்கள், பெரியோர் வரலாறு, கவிதைகள், சமயப் பாடல்கள்(30), சிறுவர் நூல்கள்(16), இலக்கியக் கட்டுரைகள், சமயக் கட்டுரைகள், பிற நூல்கள்(34), நாவலர் சம்பந்தமான நூல்கள்(11) ஆகிய பதினொரு தலைப்புகளில் ஒழுங்குபடுத்தித்தரும் கனகசெந்திநாதனின் 'ஈழத்துத் தமிழ்நூல் வழிகாட்டி' மொழிசார்ந்து தேசிய நூல்விவரப்பட்டியல் பண்பைக் கொண்டதொன்று. வரதரின் பலகுறிப்பு என்ற நூலில் தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருந்த இந்த நூல்விவரப்பட்டியலானது பலரது வேண்டு கோளுக்கமைய மூல நூலிலிருந்து பிரித்தெடுத்து தனியாக உருவாக்கப்பட்ட ஆவணமாக, வெளியிடப்பட்டது. நூலின் தலைப்பு, ஆசிரியர், வெளியீட்டிடம், வெளியீட்டாளர், வெளியிடப்பட்ட ஆண்டு, பக்கம், விலை ஆகிய நூல்விவரத்தரவுகளை உள்ளடக்கி வரதர் வெளியீடாக இது உருவாக்கப்பட்டது. (செந்திநாதன் 1971)
கலாநிதிப்பட்ட கற்கைநெறியைப் பூர்த்திசெய்யுமுகமாக 1984இல் வே.இ.பாக்கியநாதனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட 'தமிழ் ஆய்வுக்கு ஈழத்தின் பங்களிப்பு' என்ற நூற்றொகை ஆய்வின் திருத்தங்களுடன் கூடிய தட்டச்சுப் பிரதியொன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தின் ஆவணக்காப்பகப்பகுதியில் உண்டு. இது 1800-1948 வரையான காலப்பகுதியில் எழுந்த ஆக்கங்களை ஆவணப்படுத்துகின்றது. பெயரறியாத ஆக்கங்கள், நிறுவன வெளியீடுகள், சிறுபிரசுரங்கள், கட்டுரைகள், நூல்கள் உட்பட 2249 பதிவுகள் திருத்தங்களுடன் கூடிய தட்டச்சுப் பிரதியில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. பதிவுகள் அனைத்தும் தூயி தசமப் பகுப்புத்திட்டத்தின் பரந்த பொருட்தலைப்புகளின்; அடிப்படையில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றன. 1987இல் இவ் ஆய்விற்குரிய கலாநிதிப்பட்டம் நூலாசிரியருக்கு வழங்கப்பட்டிருப்பினும் அதனது பிரதியைப் பெறமுடியவில்லை (பாக்கியநாதன் 1984).
இலங்கை தமிழ், முஸ்லிம் எழுத்தாளர்களினால் எழுதப்பட்ட ஆங்கில நூல்களின் விபரப்பட்டியலாக 'ழேழடவாநவவயஅ' விளங்குகின்றது. இதுவரை ஒரு தொகுதி மாத்திரமே வெளிவந்துள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 414 நூல்கள் பதிவாக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் முஸ்லிம் எழுத்தாளர்கள் ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பினை 1977 நூல்களில் கால அடிப்படையில் எடுத்துக்கூறும் 'சுவடி ஆற்றுப்படை' (4 தொகுதிகள் 1850-2000) முறைப்படுத்தப்பட்ட நூல்விவரப்பட்டியற் பண்பைக் கொண்டது. (ஜமீல் 1994).
பேராசிரியர் எம்.எம். உவைஸ் அவர்களின் பிரத்தியேக நூலகத்திலுள்ள நூல்களின் விபரங்கள் அடங்கிய நூல்விபரப் பட்டியலை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஆவணப்படுத்தியிருக்கிறது. பேராசிரியர் மர்ஹூம், எம்.எம். உவைஸ் அவர்களின் பிரத்தியேக நூலகத்தைக் கையேற்கும் வைபவத்தை முகன்னிட்டு வெளியிடப்படும் சிறப்பு இதழ் என்ற தலைப்பிலான ஆக்கமானது அவரால் கையளிக்கப்பட்ட 383 தமிழ் ஆங்கில நூல்களின் விபரங்களை மட்டும் பட்டியல்படுத்துகின்றது. இஸ்லாமிய தமிழ் இலக்கியம், இஸ்லாமும் முஸ்லிம்களும், தமிழ் ஆய்வு ஆகிய மூன்று பிரதான பொருட்துறைகளின் கீழ் பல உப பொருட்துறைகள் பருவஇதழ்கள், கடிதங்கள், கையெழுத்துப் பிரதிகள,; பத்திரிகைக்கட்டுரைகள் என்பவற்றை உள்ளடக்கி தமிழ், ஆங்கிலம், சிங்களம் உட்பட் அரபு மொழியில் வெளிடப்பட்ட நானுறுக்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளடக்குகின்றன. (தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ?)
கணபதிப்பிள்ளை அவர்களால் இலங்கையில் தமிழ் வெளியீடுகள் என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரையானது வரலாற்று நூல்விபரப் பட்டியற் பண்பைக் கொண்டதொன்று கி. 13ம் நூற்றாண்டிலிருந்து ஈழத்தில் எழுந்த நூல்களையும் நூலாசிரியர்கள் பற்றிய வரலாற்றையும் இது வெளிக்கொணருக்pன்றது. (முயnயியவாippடையi 1958)
1.13 பிரதேசரீதியானவை
1983ம் ஆண்டு வன்னிப் பிராந்திய தமிழாராச்சி மகாநாட்டு மலர் வன்னி தொடர்பாக எழுந்த நூல்கள், கட்டுரைகள் மற்றும் ஆய்வேடுகள் தொடர்பான விபரங்களை ஆணப்படுத்துகின்றது. நா. சுப்பிரமணியனின் தொகுப்பில் உருவான இந்த நூல்விவரப்பட்டியலானது யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்குப் பகுதிகள், முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை மாவட்டங்கள், புத்தளம், சிலாபம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளை உள்ளடக்கிய வன்னிப்பிரதேசத்தின் ஆக்கங்கள், பிரபந்தங்கள், நாட்டார் பாடல்கள், நாவல்கள், சிறுகதைத் தொகுதிகள், கவிதைத் தொகுதிகள், நாடக நூல்கள், நாட்டுக்கூத்து நூல்கள், ஆய்வு நூல்கள், மலர்கள், இதழ்கள், கட்டுரைகள், ஆய்வேடுகள், முதுகலைப்பட்ட ஆய்வேடுகள் ஆகிய பதின்மூன்று பொருட்தலைப்புகளில் (பின்னிணைப்பு உட்பட) 188 ஆக்கங்களின் விவரங்களை உள்ளடக்குகின்றது. (சுப்பிரமணியன் 1983)
சி. அப்புத்துரை (1985) அவர்களால் 'காங்கேயன் கல்வி வட்டாரத்தில் எழுந்த நூல்கள்' என்ற தலைப்பில் தொகுக்கப்பட்ட நூல்விபரப்பட்டியலும், பிரதேசம் சார்ந்த நூல்களின் விவரங்களை முறைப்படுத்திய ரீதியில் தரும் பண்பைக் கொண்டிருக்கிறது.
''Batticalonia'' என்ற பெயரில் மட்டக்களப்பு பொது நூலகத்தின் நூலகராக இருந்த ஜோண் செல்வராஜா அவர்களால் உருவாக்கப்பட்ட மட்டக்களப்புப் பிரதேசம் சார்ந்த ஆக்கங்களின் தொகுப்பான நூல்விவரப்பட்டியலானது 29 முக்கிய பொருட்துறைகளில் 873 பதிவுகளை ஆவணப்படுத்தியிருக்கிறது. ஒவ்வொரு பதிவும் ஆசிரியர், தலைப்பு, வெளியீட்டிடம், வெளியீட்டாளர் போன்ற பதிவுகளை உள்ளடக்குவதுடன் நூல்கள் மட்டுமன்றி பருவஇதழ்க் கட்டுரைகள், பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள், சிறப்புமலர்க் கட்டுரைகள் பொன்ற அனைத்தையும் உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ளது. ஆங்கில ஆக்கங்களின் விபரங்கள் முதலாவதாகவும் தமிழ் ஆக்கங்கள் அதற்கு அடுத்த நிலையிலும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. (Selvarajah 1988)
நல்லூர்ப் பிரதேசம் பற்றிய ஆக்கங்கள் அனைத்தையும் படைப்பாளர், பொருட்துறை, மொழி, காலம், வடிவம் போன்ற அம்சங்களை உள்ளடக்கி ஆவணப்படுத்தும் ஒரு முயற்சியே யாழ்ப்பாணத் தமிழியல் ஆய்வடங்கல்-1 என்ற தலைப்பில் நூலக விழிப்புணர்வு நிறுவகத்தினால் 2014இல் உருவாக்கப்பட்டிருக்கும் நூல்விவரத் தரவுகளின் தொகுப்பாகும். நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்கள் சார்ந்த ஆக்கங்களே இந்த ஆய்வடங்கலில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. பிரதேசத்தில் உருவாக்கம் பெற்ற பதிவுகள் தவிர்க்கப்பட்டு பிரதேசத்தைப் பற்றிய ஆக்கங்களே தெரிவு செய்யப்பட்டுள்ளன. பொதுவாக நல்லூர்ப் பிரதேச வரலாறானது யாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாற்றுடனும், இலங்கைத் தமிழர் வரலாற்றுடனும் பின்னி பிணைந்து இருப்பதன் காரணமாக நல்லூர் பிரதேசம் சார்ந்த நூல்கள், கட்டுரைகள் மட்டுமன்றி நல்லூர் பிரதேசம் பற்றிய தகவல்களை உள்ளடக்கிய எந்தவொரு ஆக்கமும் இந்த ஆய்வடங்கலில் கருத்தில் கொள்ளப்பட்டிருப்பது ஆய்வடங்கல் தொகுப்பு முயற்சியில் இதுவரை கவனத்தில் கொள்ளப்படாத ஒரு புதிய அம்சமாக கொள்ள முடியும். அறிஞர்களின் வாழ்க்கை வரலாறானது தனி நூல் வடிவிலோ அல்லது கட்டுரை வடிவிலோ இல்லாதபோது பொதுவாக எழுந்த வாழ்க்கை வரலாற்றுத் தொகுப்புகளிலிருந்து அவை எடுக்கப்பட்டு அவற்றுக்குரிய பக்க எண்களுடன் இங்கு உள்ளடக்கப்பட்டிருப்பதன் காரணமான மேற்கோள் ஆய்வடங்கலுக்கான அம்சங்களையும் இந்த ஆய்வடங்கல் கொண்டிருக்கின்றது. நல்லூர்ப் பிரதேசம் சார்ந்த ஆக்கங்கள் முதன்மை அறிவியல்கள், சமூக அறிவியல்கள், பிரயோக அறிவியல்கள், மானுட அறிவியல்கள் என நான்கு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டிருப்பதுடன் ஒவ்வொரு பிரிவும் ஆக்கங்களின் விரிவுக்கேற்ப சுயமாக உருவாக்கப்பட்ட பல பொருட்தலைப்புகளின் கீழ் பதிவுகளை உள்ளடக்குகின்றன. ஒவ்வொரு பதிவும் ஆசிரியர், தலைப்பு, கட்டுரையாயின் கட்டுரை வெளிவந்த சஞ்சிகைகள் மற்றும் சிறப்பு மலர்களின் பெயர், தொகுதி மற்றும் பகுதி எண்கள், ஆண்டு, பக்கங்கள் ஆகியவற்றை உள்ளடக்குகின்றன. (நூலக விழிப்புணர்வு நிறுவகம் 2016)
1.2 பொருள்சார் நூல்விவரப்பட்டியல்கள்
1885-1976 காலப்பகுதியை உள்ளடக்கி 1978இல் வெளிவந்த ஈழத்துத் தமிழ் நாவல்கள் ஒரு தேர்ந்த நூல்விவரப்பட்டியலாகும் (சுப்பிரமணியன் 1978). 439 பதிவுகளை உள்ளடக்கிய இது மூன்று பிரிவுகளைக் கொண்டது. முதலாவது பிரிவில் 210 நூல்களும், இரண்டாவது பிரிவில் செய்தித்தாள்கள் மற்றும் சஞ்சிகைகளில் வெளிவந்த 94 ஆக்கங்களும் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றன. மூன்றாவது பிரிவானது நூல்விவரத் தரவுகளைக் கொண்டிராத 135 நாவல்களை பட்டியல்படுத்துகின்றது. இது படைப்பாளர் சார்ந்த அகரவரிசை ஒழுங்கமைப்பைக் கொண்டது
நூலகவியலில் இலண்டன் டிப்புளோமா கற்கைநெறியின் பகுதித்தேவையை நிறைவு செய்யும்பொருட்டு திரு முருகவேள் அவர்களால் உருவாக்கப்பட்ட சைவம் தொடர்பான நூல்விவரப்பட்டியலானது 1960 வரை ஐரோப்பிய மொழிகளில் வெளிவந்த சைவம் தொடர்பான ஆக்கங்களைப் பட்டியற்படுத்துகின்றது. நூல்கள், நூலின் பகுதிகள், பருவஇதழ்க்கட்டுரைகள், சிறப்புமலர்களில் வெளிவந்த கட்டுரைகள், மாநாட்டு மலர்களில் வெளிவந்த கட்டுரைகள் உள்ளடக்கப்பட்ட அதேசமயம் பத்திரிகை சஞ்சிகைகளில் வெளிவந்த கட்டுரைகளும் ஆய்வேடுகளும் இதில் தவிர்க்கப்பட்டுள்ளன. ஆடிப்படை நூல்விவரத் தரவுகளை மட்டும் இது உள்ளடக்குகின்றது. (Murugaverl 1965). 1984 காலப்பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகராக இருந்த திரு.சி.முருகவேள் அவர்களினால் தொகுத்து உருவாக்கப்பட்ட சித்த ஆயுர்வேத நூல்களுக்கான நூல்விவரப்பட்டியலானது மொழிசார் பண்பைக் கொண்டது. 1960களின் ஆரம்பத்தில் பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தில் பணிபுரிந்த காலத்தில் அந்த நூலகத்தில் உள்ள சமஸ்கிருத நூல்கள் பற்றிய விவரங்களைத் திரட்டுவதில் ஆரம்பித்த இப்பணியானது பின்னர் கண்டியைச் சுற்றியுள்ள தனியார் சேகரிப்புகளையும் உள்ளடக்கி சட்டம், கணிதம், வானவியல், மருத்துவம் ஆகிய பொருட்துறை சார்ந்து 3454 பதிவுகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டது. புத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள், மருந்து உற்பத்தியாளரால் வெளியிடப்பட்ட பட்டியல்கள், கையெழுத்துப் பிரதிகள் போன்றன இப்பட்டியலில் உள்ளடக்கப்படவில்லை. ((Murugaverl 1984)
பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தகவல் சேகரிப்பின் விளைவாக உருவாக்கப்பட்ட ஆங்கில ஆக்கங்களுக்கான குறிப்புரை நூல்விவரப்பட்டியலானது 2006இல் உருவாக்கம் பெற்றது. பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலைதீவுகள், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில் பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பாக உருவாக்கம் பெற்ற பத்திரிகை நறுக்குகள், பருவ இதழ்கள், அறிக்கைகள், பயிற்சிக் கையேடுகள், தனிப்பொருள் நூல்கள், சிறுநூல்கள், வலைத்தளங்கள், திரைப்படங்கள் போன்றவற்றிலிருந்து சேகரிக்கப்பட்ட ஆக்கங்களின் விபரங்களை இது உள்ளடக்குகின்றது. 1022 பதிவுகள் நாடுவாரியாக தொகுக்கப்பட்டிருக்கின்றன. (டுழபயயெவாயn 2006). இதே ஆசிரியரால் 2008இல் வறுமை மற்றும் முரண்பாடுகள் தொடர்பான ஆவணத் தொகுப்பு இருமொழியில் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஆங்கல மொழியில் 302 ஆக்கங்களும், தமிழில் 50 பதிவுகளும் இதில் உள்ளன. புநனெநசiபெ hரஅயnவையசயைn – என்ற தலைப்பில் தொகுக்கப்பட்ட குறிப்புரை நூல்விவரப்பட்டியலானது 355 பதிவுகளை உள்ளடக்கியது. பெண்களுக்கெதிரான வன்முறை, பெண்களின் உடல்நலம், வருமான உருவாக்கம், சமூக பங்கேற்பு போன்ற பெருந்துறைகளின்கீழ் பொது, இலங்கை என்ற உபபிரிவுகளில் பதிவுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. (டுழபயயெவாயn 2008)
1993இல் சிவசண்முகராஜாவினால் எழுதப்பட்ட 'ஈழத்துச் சித்த மருத்துவ நூல்கள்: ஓர் அறிமுகம்' என்ற நூலும் விளக்க நூல்விவரப்பட்டியல் என்ற வகைக்குள் அடங்குகின்றது. (சிவசண்முகராஜா 1993) 1980களுக்குப் பின்னர் குறிப்பிட்ட படைப்பாளரின் ஆக்கங்களைப் பட்டியற்படுத்தும் பண்பு இனங்காணப்படுவதுடன் நாவலர், கைலாசபதி, சிவத்தம்பி, கமால்தீன், எவ்.எக்ஸ். சி நடசாசா ஆகியோரின் ஆக்கங்களின் விவரங்கள் பட்டியல்படுத்தப்பட்டு நூலுருவம் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
ஈழத்தமிழ் இலக்கியத்தில் அறிவியல் நூல்கள் என்ற தலைப்பில் வெளிவந்த ஆக்கம் அறிவியல் துறைசார்ந்த நூல்களை ஆவணப்படுத்தும் முயற்சியாகும் (அனந்தராஜ் 2004)
வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், மீளாய்வுகள், ஆசிரியர் தலையங்கங்கள், சிறுகுறிப்புகள், கேள்விபதில்கள், அறிவியல் பருவ இதழ்களில் வரும் தொடர்புகள், சர்வதேச மாநாடுகளில் வெளியிடப்படும் கட்டுரைகள், சாராம்சங்கள், நூல்கள், நூலின் பகுதிகள், கலாநிதிப் பட்ட ஆய்வுகள், ஆய்வு அறிக்கைகள், போன்றவை. பருவ இதழில் வெளிவரும் மீளாய்வுகள், சஞ்சிகைகள் பத்திரிகைகளில் வெளிவரும் ஆக்கங்கள், வெளியிடப்படாத கையெழுத்துப் பிரதிகள் தவிர்க்கப்பட்டுள்ளன. 1440 பதிவுகளில் 226 பதிவுகள் ஆங்கிலமல்லாத மொழிகளில் வெளிவந்தவையாகும். (ளுசiமுயவொய 1991)
1881-2003 வரையான சமஸ்கிருத நூல்களின் விபரங்களை ஆவணப்படுத்துகின்றது. (கிருஷ்ணானந்தசர்மா 2002). இத்தொகுப்பானது பேராசிரியர் கைலாசநாதக்குருக்கள் ஆய்வு மையம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகம், அச்சுவேலி சிவஸ்ரீ குமாரசாமிக்குருக்களின் நூற்தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டது. கால அடிப்படையில் தொகுக்கப்பட்ட ஆக்கங்கள் அட்டவணை வடிவமைப்பில் நூலின் பெயர், ஆசிரியர், அச்சுப்பதிப்ப பதிப்பும் வெளியீடும் ஆகிய விபரங்களை மட்டும் உள்ளடக்குகின்றன.
இலங்கையின் தேசியப் பத்திரிகையான தினகரன் பத்திரிகை ஆசிரியராக இருந்த சிவகுருநாதனால் உருவாக்கப்பட்ட இலங்கைத் தமிழ் ஊடகவியல் தொடர்பான குறிப்புரை நூல்விவரப்பட்டியலானது 1841-1932 வரையான காலப்பகுதியை உள்ளடக்கித் தயாரிக்கப்பட்டதாகும் (சிவகுருநாதன் 1993).
1.3 தனிநபர் நூல்விவரப்பட்டியல்கள்
ஒரு தனிநபரின் ஆக்கங்கள் அல்லது தனிநபரைப் பற்றி மற்றவர்கள் எழுதிய ஆக்கங்களின் தொகுப்பு இவ்வகைக்குள் அடங்கும். இலக்கிய துறையில் இத்தகைய நூல்விவரப்பட்டியல்கள் மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. குறித்த துறையின் பொருள் நிபுணர்களுக்கான முக்கிய தகவல் வளமாக அவை கருதப்படுகின்றன. தனிநபர் நூல்விவரப்பட்டியல்கள் படைப்பாளர் சார்ந்தவை, பொருட்துறை சார்ந்தவை என இரு வகையாகப் பாகுபடுத்தப்படுகின்றன.
1.31 படைப்பாளர் சார்ந்தவை
ஒரு குறிப்பிட்ட படைப்பாளரின் ஆக்கங்கள் அனைத்தையும் தொகுத்து வெளிவரும் நூல்விவரப் பட்டியல்கள் இவ்வகைக்குள் அடங்கும். படைப்பாளரின் வாழ்க்கை வரலாறு, அவரது ஆக்கங்கள் பற்றிய விமர்சனங்கள்; என்பவற்றையும் இது உள்ளடக்கும். அவரால் எழுதப்படும் நூல்கள், பருவஇதழ்க் கட்டுரைகள், நூல்களுக்கு அவர் ஆற்றும் பங்களிப்புகள், அவரால் பதிப்பிக்கப்பட்ட ஆக்கங்கள், மொழிபெயர்ப்புகள், தகவல்கள் அனைத்தையும் இது உள்ளடக்கும். சிலசமயங்களில் படைப்பாளர் நூல்விவரப்பட்டியல்கள் சுய நூல்விவரப்பட்டியல்கள் என அழைக்கப்படுவதும் உண்டு. பெரும்பாலான படைப்பாளர் நூல்விவரப்பட்டியல்கள் சுருக்கமான தகவல்களைக் கொண்டிருப்பினும் கூட விவரமான முறையில் தொகுக்கப்படும் நூல்விவரப்பட்டியலானது பூரணமானதும் சரியானதுமான ஒரு பாடத்துறையை இனங்காணுவதற்கு உதவும். இலங்கை நூலகச் சங்கத்தின் நூலக தகவல் அறிவியல் டிப்புளோமாவின் பகுதித்தேவையை நிறைவு செய்யும் பொருட்டு பல தனிநபர் நூல்விவரப்பட்டியல்கள் தொகுக்கப்பட்டுள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அருட்தந்தை தனிநாயகம் அவர்களால் வெளியிடப்பட்ட ஆக்கங்களை ஆவணப்படுத்தும் முயற்சி தமிழாரம் என்ற நினைவு மலரில் கட்டுரை வடிவம் பெற்றிருக்கின்றது. அறிமுக உரை எதுவுமற்ற இந்தப் பட்டியலிலிருந்து இது கால அடிப்படையில் தொகுக்கப்பட்டிருப்பது தெரிகிறது. ஆங்கில மொழியில் எழுதப்பட்ட 112 ஆக்கங்கள் உட்பட 140 பதிவுகளை இது உள்ளடக்குகின்றது. ஒவ்வொரு பதிவும் தலைப்பு, நூலாயின் வெளியீட்டு விபரம், கட்டுரையாயின் இதழின் பெயர் தொகுதி எண் பகுதி எண், மாதம், ஆண்டு, பக்கம் ஆகிய விபரங்களைக் கொண்டிருக்கின்றது. யாழ்ப்பாண தொழில்நுட்ப நிறுவனத்தின் நூலகராக இருந்த திரு எஸ் தயாநாதன் அவர்களால் இத்தொகுப்புப் பணி உருவாக்கப்பட்டிருக்கிறது (வுhயலயயெவாயn 1983). பத்மம் என்ற பெயரில் வெளியிடப்பட்ட பேராசிரியர் பத்மநாதன் அவர்களின் பணிநயப்பு மலர் அவரின் ஆக்கங்களை ஆவணப்படுத்துகின்றது. நூல்கள், வெளியிடப்பட்ட கட்டுரைகள், கருத்தரங்கக் கட்டுரைகள் உட்பட அவரது படைப்புகளை மலராக்கக் குழு தொகுத்திருக்கிறது. (பத்மம் 2004).
பேராசிரியர் ம.கருணாநிதி அவர்களின் படைப்புகள் அவர் சார்ந்து வெளியிடப்பட்ட மலரில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. இதில் நூல்கள்(9), மொழிபெயர்ப்புகள்(13), ஆராய்ச்சிகள்(16), கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள்(7) என மொத்தம் 45 ஆக்கங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. (கருணாநிதி 2014). பேராசிரியர் தில்லைநாதனின் ஆக்கங்கள் பற்றிய தொகுப்பு இரா வை.கனகரத்தினத்தின் முயற்சியில் மணிவிழா மலரில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது (கனகரத்தினம் 1997). பட்டியல் முறைமை, பகுப்பாய்வு, அகராதி முறைமை ஆகிய முன்று பிரிவுகளில் 132 பதிவுகள் ஒழங்கமைக்கப்பட்டுள்ளன. 1981-2014 காலப்பகுதியில் நூலகவியலாளர் செல்வராஜாவினால் வெளியிடப்பட்ட ஆக்கங்கள் அவரது மணிவிழா மலரில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது. (குமரன் 2014).
1988 இல் என். செல்வராசா அவர்களின் முயற்சியில் 1953-85 காலப்பகுதியை உள்ளடக்கி தொகுக்கப்பட்ட பேராசிரியர் கைலாசபதி அவர்களின் ஆக்கங்கள் தேர்ந்த நூல்விவரப்பட்டியற் பண்பைக் கொண்டது. இது கால வகைப்படுத்தல் சார்ந்த ஒழுங்கமைப்பைக் கொண்டுள்ளது. இதன் ஒழுங்கமைப்பு நான்கு பகுதிகளை கொண்டது. முதலாவது பகுதி தேர்ந்த நூல்விபரப்பட்டியலாக ஆண்டு ரீதியில் ஆக்கங்களை ஒழுங்குபடுத்துகின்றது. இரண்டாம் பகுதி பேராசிரியர் வழங்கிய உரைகளை தொகுத்து வழங்குகின்றது. மூன்றாம் பகுதி கட்டுரைகளின் அகரவரிசைச் சொல்லடைவையும் நான்காம் பகுதி வெளியீட்டாளர்களின் பட்டியலையும் உள்ளடக்குகின்றது. 1953-85 காலப்பகுயில் வெளிவந்த 238 ஆக்கங்களை இது உள்ளடக்குகின்றது. ஒவ்வொரு பதிவும் தலைப்பு, வெளியீட்டிடம், வெளியீட்டாளர், வெளியீட்டுத் திகதி, பக்கம் ஆகிய விவரங்களை உள்ளடக்குகின்றது. ஒருசில ஆங்கில ஆக்கங்கள் தவிர்ந்த ஏனையவை தமிழ் ஆக்கங்களாகும். நூல்கள் சிறப்புமலர்க் கட்டுரைகள், பருவ இதழ்க் கட்டுரைகள், பத்திரிகைக் கட்டுரைகள் வானொலி உரைகள் போன்றனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.(செல்வராசா 1988).
2005இல் கார்த்திகேசு சிவத்தம்பியால் வெளியிடப்பட்ட Pசழகநளளழச மயசவாபைநளார ளுiஎயவாயஅடில: ய pசழகடைந என்ற நூலானது ஆசிரியரின் வாழ்க்கைக்குறிப்பு பணிகள், ஆர்வத்துநைகள், வகித்த பதவிகள் உட்பட அவரது ஆக்கங்களை ஆவணப்படுத்துகின்ற சுய நூல்விவரப்பட்டியலாகும். ஆங்கலத்தில் எழுதப்பட்ட நூல்கள் தனி நூல்கள்(15), ஒழுங்கமைப்பு பேணப்படாத ஆய்வுக் கட்டுரைகள்(44), கால வகைப்பாட்டில் அமைந்த 1959- 2005 வரையில் எழுதப்பட்ட 504 ஆக்கங்களை உள்ளடக்குகின்றது. பத்திரிகை சஞ்சிகைகளில் வெளி வெந்தவை (சிவத்தம்பி 2005)
தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகர் எம்.எம் றிசாஉதீன் அவர்களால் 2007இல் தொகுக்கப்பட்ட 'ஏ.எம் அபூபக்கரின் எழுத்துப் பணிகள் என்ற நூல்விவரப்பட்டியல் தனிநபர் நூல்விவரப்பட்டியல் வகையைச் சார்ந்தது. இதில் நூல்கள்(20), வெளியிடப்படாத கையெழுத்துப்பிரதிகள்(47), பருவஇதழ் கட்டுரைகள்(117) ஆக மொத்தம் 164 பதிவுகள் தூயி தசம பகுப்பாக்கத்தின் பரந்த பொருட்தலைப்புகளின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. கையெழுத்துப்பிரதிகள் சிறு குறிப்புரைகளை உள்ளடக்குகின்றன. ஏனையவை அடிப்படை நூல்விவரத்தரவுகளை மட்டும் உள்ளடக்குகின்றன. ( சுநகயரனநநn 2007)
பேராசிரியர் சந்திரசேகரம் அவர்களால் எழுதப்பட்ட நூல்கள், சஞ்சிகைக் கட்டுரைகள், பத்திரிகைகள் கட்டுரைகள் உள்ளடங்கலாக தேர்ந்த நூல்விவரப்பட்டியலாக உருவாக்கம் பெற்ற ஆக்கமானது 433 ஆக்கங்களை உள்ளடக்குகின்றது. எஸ்.எல். சியாத் அஹமட் அவர்களின் முயற்சியில் உருவான ஜெமீல் அவர்களின் அறிவாக்கங்கள் என்னும் ஆக்கம் நூல்கள்,மொழிபெயர்ப்புகள், பதிப்புகள், பதிப்புரைகள், கட்டுரைகள், இரங்கல் கட்டுரைகள், சொற்பொழிவுகள், வானொலி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆய்வுகள் போன்றவற்றை ஆவணப்படுத்துகின்றது. (அகமட் 2010). பதிவுகள் தூயி தசமப்பகுப்புத் திட்டத்தின் அடிப்படையில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. வெளியிடப்படாத ஆய்வேடுகள்(2), நூல்கள்(11), பதிப்புப் பணிகள்(7), கட்டுரைகள்(71), கலைக்களஞ்சியக் கட்டுரைகள்(43), கலைச்சொல் அகராதிகள்(4), மொழிபெயர்ப்பு(1) ஆகியவற்றை உள்ளடக்கி மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வ. இன்பமோகனால்(2011) தொகுக்கப்பட்ட பேராசிரியர் சோ. கிருஸ்ணராசா அவர்களின் ஆக்கங்கள் 139 பதிவுகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டிருக்கின்றது.
1.32 பொருட்துறை சார்ந்தவை
தனிநபரை ஒரு பொருட்துறையாகக்கருதி அவர் எழுதிய ஆக்கங்களை மட்டுமன்றி படைப்பாளரைப் பற்றிய ஆக்கங்களையும் தொகுக்கும் முயற்சியானது தனிநபர் நூல்விவரப்பட்டியலின் இன்னோர் அம்சமாகக் கருதத்தக்கது. இந்தவகையில் நாவலரது ஆக்கங்களையும் நாவலரைப்பற்றிய ஆக்கங்களையும் ஆவணப்படுத்தும் முயற்சியானது 'நாவலரியல்' என்ற தலைப்பில் இரு நூலகத்துறை சார்ந்தவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்விவரப்பட்டியலாக 1979இல் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையின் வெளியீடாக நூலுருவாக்கம் பெற்றது. படைப்பாளர் அகரவரிசை ஒழுங்கமைப்பில் ஆவணப்படுத்தப்பட்ட இந்த ஆக்கமானது 365 பதிவுகளை உள்ளடக்குகின்றது. (கிருஷ்ணகுமார், சிவனேசச்செல்வன் 1979). அதேசமயம் இதற்குப் பத்து ஆண்டுகளுக்கு முன்பே ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் விழா புத்தகக் கண்காட்சி (1969) என்ற பெயரில் நாவலர் எழுதி வெளியிட்ட நூல்கள்(26), உரை எழுதி வெளியிட்டவை (8), பரிசோதித்துப் பதிப்பித்தவை(39) நாவலரைப்பற்றிய நூல்கள்(14) என 87 நூல்களின் விவரங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமன்றி நாவலரது ஆக்கங்களின் கால அடிப்படையான வகைப்பாட்டையும் இந்நூல் உள்ளடக்குகின்றது.
சுவாமி விபுலானந்தர் அவர்களின் ஆக்கங்கள் பற்றிய தொகுப்பு சற்குணம் என்பரால் தொகுக்கப்பட்டிருக்கிறது. அடிகளார் பற்றி அறிவதற்கு உதவும் நூல்களும் கட்டுரைகளும், அடிகளாரின் கட்டுரைகளும் நூல்களும் என இரு பகுதிகளாக இந்த ஆவணப்படுத்தல் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. (சற்குணம் 1969).
1990ம் ஆண்டு திருமதி வி.பாலசுந்தரம் அவர்களின் ஆலோசனையில் செல்வி சபாபதியால் தொகுக்கப்பட்ட 'சொக்கனின் ஆக்கங்கள்' சமயமும்; தத்துவமும் (கவிதை-11, கட்டுரை-38), கல்வி(7), இலக்கணமும், மொழியியலும், மரபும் (இலக்கணம்-12), கலைகள்(4), இலக்கியம்(கவிதை-46 நாடகம்-88 கதை-39 அறிஞர் விமர்சனம்-86 போன்ற பொருட்தலைப்புகளை உள்ளடக்கி 356 பதிவுகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
1.4 ஆவணவகைசார் நூல்விவரப் பட்டியல்கள்
1.41 பத்திரிகைகள் சஞ்சிகைகளுக்கான நூல்விவரப்பட்டியல்கள்
வலி தெற்குப் பிரதேசத்தின் பத்திரிகைகள், பருவ இதழ்கள், சஞ்சிகைகள், சிற்றிதழ்கள் - ஒரு நோக்கு என்ற தலைப்பில் சுன்னாகம் பொது நூலக பொன்விழா மலரில் வெளிவந்த கட்டுரையானது கால அடிப்படையில் அமைந்த விவரண நூல்விவரப்பட்டியல் வகையைச் சார்ந்தது. (கோப்பாய் சிவம் 2014).
இலங்கையில் வெளிவந்த தமிழ்ப்பத்திரிகைகள் சஞ்சிகைகளை ஆவணப்படுத்தும் கோப்பாய் சிவத்தின் முயற்சியானது 1985இல் நூலுருப்பெற்றிருக்கிறது. 1841ம் ஆண்டில் வெளிவந்த உதயதாரகை என்ற பத்திரிகை முதற்கொண்டு 1984 வரை வெளிவந்த பத்திரிகை சஞ்சிகைகளின் விபரங்கள் இதில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.
யாழ்ப்பாணத்தில் வெளிவந்த பத்திரிகைகள் சஞ்சிகைகளை ஆவணப்படுத்தும் சௌந்தரராஜசர்மாவின் முயற்சியானது ஒரு குறிப்புரையுடன் கூடிய நூல்விவரப்பட்டியலாக கட்டுரை வடிவில் கருத்தூண் சிறப்புமலரில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. எழுபது பதிவுகளை உள்ளடக்கும் இந்தக் கட்டுரையின் பல பதிவுகள் விவரணப்பாங்கைக் கொண்டவை. ஏனையவை குறிப்புரையுடன் கூடியவை. (சௌந்தரராஜசர்மா 2016);
1.42 ஆய்வுக் கட்டுரைகள்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் உள்ள ஆய்வுக்கட்டுரைகளின் விபரங்கள் ஒரு பகுப்பாக்க ஒழுங்கில் அமையப்பெற்ற ஒரு நூல்விவரப்பட்டியலாக தட்டச்சுப் பிரதி வடிவில் உருவாக்கப்பட்டிருக்கின்றது. 2011ம் ஆண்டு வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்திற்குச் அனுப்பப்பட்ட 507 முதுமாணி, முது தத்துவமாணி மற்றும் கலாநிதிப்பட்ட ஆய்வுகளின் விபரங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. (யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 2011).
1.43 உசாத்துணை சாதனங்கள்
நூலக பட்டப்பின் தகைமைக் கற்கை நெறியின் பகுதித் தேவையைப் பூர்த்தி செய்யுமுகமாக உருவாக்கப்பட்ட நூல்விவரப்பட்டியலானது 1850-1985 காலப்பகுதியில் இலங்கையில் வெளிவந்த உசாத்துணை சாதனங்களைப் பட்டியல்படுத்துகின்றது. முழுமையான நூல்விபரத் தரவுகளுடன் வெளியீட்டின் தன்மை தொடர்பான சுருக்கக் குறிப்புடன் அமைந்த நூல்விவரப்பட்டியலானது ஒரு விளக்க நூல்விவரப்பட்டியலாகும். (முயசரயெயெவாயசயதயா 1986).
1.44 ஏட்டுச்சுவடிகள்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அன்பளிப்புகளாகப் பெறப்பட்ட ஓலைச் சுவடிகளை ஆவணப்படுத்தும் முயற்சி முன்னாள் நூலகர் திரு சி. முருகவேளால் இரு கட்டமாக ஆரம்பிக்கப்பட்டது. முதலாவது கட்டத்தில் 1992இல் 126 ஏட்டுச்சுவடிகள் தொடர்பான பதிவுகள் அரபு எண் ஒழுங்கில் கல்லச்சுப் பிரதியாக வெளியிடப்பட்டது. (முருகவேள் 1992). இதன் இரண்டாவது கட்டத்தில் 207 ஏட்டுச் சுவடிகள் பதியப்பட்டு 1997இல் நூலகத்தால் கல்லச்சுப் பிரதியாக வெளியிடப்பட்டது. (முருகவேள் 1997).இரு பட்டியல்களும் அரபு எண் ஒழுங்கில் அமைந்த பிரதான பட்டியல், தலைப்புச் சுட்டு மற்றும் பொருட் சுட்டை உள்ளடக்குகின்றன. ஒவ்வொரு பதிவும் தலைப்பு, தலைப்பு இல்லாதவிடத்து அடைப்புக்குறிகளுள் தொகுப்பாளரால் உருவாக்கப்பட்ட இடைத்தலைப்பு, பிரதியின் பாடத் தொடக்கம், பிரதியின் பாட முடிவு, ஓலைகளின் எண்ணிக்கை, அளவும் பிறபகுதிகளும், குறிப்புகள் ஆகியவற்றை உள்ளடக்குகின்றது.
1.5 சொல்லடைவுகள்
ஒரு ஆவணத்தின் அல்லது கோப்பின் பொருளடக்க விவரங்களை அடையாளம் காண்பதற்கான அல்லது அப்பொருளடக்கங்களின் அமைவிடங்களை அறிவதற்கான குறிப்புகளைக் கொண்டமைந்த ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட குறிப்புதவு பட்டி சொல்லடைவு என அறியப்படுகின்றது. .
1992இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முதுநிலை உதவி நூலகராக இருந்த என். பாக்கியநாதனால் தொகுக்கப்பட்ட ளநடநஉவ டிiடிடழைபசயிhல ழக றசவைiபௌ ழக வாந யஉயனநஅiஉ ளவயகக கயஉரடவல ழக அநனiஉiநெ அகர வரிசையிலமைந்த சிறப்புப் பொருட்தலைப்புகளின் கீழ் ஆங்கில ஆக்கங்கள் (292), படைப்பாளர் ஒழுங்கிலமைந்த தமிழ் பிரசுரங்கள்(17), மருத்துவ நூலகத்தில் உள்ள ஆய்வேடுகள்(12) ஆக மொத்தம் 321 ஆக்கங்களை உள்ளடக்குகின்றது.
றோயல் ஏசியாற்றிக் சொசைட்டியின் பருவ இதழில் வெளிவந்த கட்டுரைகளை ஆவணப்படுத்தும் முயற்சியில் 1990இல் 861 பதிவுகள் அகரவரிசை ஒழுங்கமைப்பில் உருவாக்கம் பெற்றிருக்கின்றது. (செல்வராஜா 1989). இது தட்டச்சுப் பிரதியாக உருவாக்கப்பட்ட ஒரு வெளியீடாக அமைகிறது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆய்விதழான 'சிந்தனை'யில் 1976 முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விசார் உத்தியோகத்தர்களினால் பலதரப்பட்ட பொருட்துறைகளிலும் எழுதிவெளிவந்த 126 ஆய்வுக் கட்டுரைகளுக்கான சொல்லடைவானது ஆசிரிய அகரவரிசையில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. (சத்தியசீலன் 1994)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையால் வெளியிடப்படும் யாழ்ப்பாணப் புவியியலாளனில் 1983-2000 காலப்பகுதியில் வெளிவந்த 141 கட்டுரைகளை உள்ளடக்கி தயாரிக்கப்பட்ட சொல்லடைவானது அகரவரிசை ஒழுங்கமைப்பைக் கொண்டது. (சின்னராசா 2003)
இலங்கையில் வெளியிடப்பட்ட 150 சிறப்புமலர்களில் வெளிவந்த 2202 கட்டுரைகளைத் தொகுத்து வெளியிடப்பட்ட சொல்லடைவானது பரந்த பொருட்தலைப்புகளின் அடிப்படையில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கிறது (செல்வராஜா 2005).
யாழ்ப்பாண விஞ்ஞான சங்கத்தினால் வருடந்தோறும் வெளியிடப்படும் ஆய்வுக்கட்டுரைகளை ஆவணப்படுத்தும் முயற்சியானது 2014இல் சிறுநூல் வடிவம் பெற்றிருக்கிறது. 1991-2012 காலப்பகுதியில் வெளிவந்த 137 ஆய்வுக்கட்டுரைகளின் விபரங்கள் தூயி தசமப்பகுப்புத் திட்டத்தின் பரந்த பொருட்தலைப்புகளின் அடிப்படையில் ஒழுங்குபடுத்தபட்டிருக்கின்றது. (Pசையடிhயமயச 2014)
கனக செந்திநாதன் அவர்களது படைப்புகளை ஆவணப்படுத்தும் முயற்சியில் பிறந்ததே வி. கந்தவனம் அவர்களால் தொகுக்கப்பட்ட பூச்சரம் என்ற தலைப்பிலான ஆக்கமாகும். ஆக்கங்கள் . நூல்கள்(15), பதிப்பு நூல்கள்;(7), பாட நூல்கள்(6), சிறுகதைகள்(15), நாவல்கள்3), நாடகங்கள்(7), கட்டுரைகள்(73) உட்பட இரசிகமணி பற்றி எழுந்த ஆக்கங்களும் இதில் ஆவணப்படுத்தபட்டுள்ளன. (கந்தவனம் 1976).
முடிவுரை
நூல்விவர ஆவணவாக்கப் பணி என்பது பொருட்துறை சார்ந்த புலமை, ஆவணப்படுத்தலுக்கான நூலகவியல் அறிவு ஆகிய இரண்டையும் வேண்டிநிற்பதொன்று. நூல்விவர ஆவணவாக்கத்தில் ஈழத்தமிழர்களின் பங்களிப்பு சார்ந்து குறிப்பிடத்தக்க விடயம் நூலகத் துறை சார்ந்தவர்களைவிட நூலகத் துறை சாராதவர்களே ஆவணவாக்கப்பணியில் அதிகம் பங்களிப்புச் செய்திருக்கின்றனர். ஈழத்தமிழ்ச்சமூகத்தின் ஆவணவாக்கப்பணியானது தனிநபர்களின் ஆர்வத்தின் அடிப்படையிலேயே கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது என்பதை மேற்குறித்த ஆய்வு வெளிக்காட்டி நிற்பதுடன் ஆவணப்படுத்தலின் பலதரப்பட்ட பண்புகளிலும் ஆக்கபூர்வமான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்பதையும் இந்த ஆய்வு சுட்டி நிற்கிறது. கால அடிப்படையில் நோக்கும் போது 19ம் நூற்றாண்டின் இரண்டாவது காற்பகுதியில் ஆவணவாக்க முயற்சிகள் முதன்மை பெறத் தொடங்கிவிட்டமையை அவதானிக்க முடியும்.
உசாத்துணைகளும் சான்றுகளும்
1. Gunasingam, Murugar (2005). Primary sources for history of the Sri
Lankan Tamils: a worldwide approach. Sydney: The south Asian Studies Center.
368p.
2.
Hettiaratchi,D.P.E(1927). Some literary undertakings of the late Simon
Casie Chitty. The Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society of
Great Britain & Ireland. Vol. 30, No. 80, Parts I, II, III and IV. (1927),
pp. 455-460.
3.
Kanapathipillai,K.(1958) Tamil publications in
Ceylon. University of Ceylon Review. Vol XVI(1&2)1958.pp6-16
4.
Karunantharajah,R.(1986). The Directories,
Encyclopedias, Yearbooks published in Sri Lanka during 1850-1985. [unpublished
post graduate Thesis] Colombo: University of Keleniya.
5. Loganathan,Bhavani.(2006) An Annotated
bibliography on Violence against Women in South Asia:actions an
dresponse.-Colombo: International center for Ethnic Studies 424p.
6. Loganathan,Bhavani.(2008). Gendering
Humanitarianism:An Annotated bibliography on Gender and Capacity building in
Armed Conflict.-Colombo: International center for Ethnic Studies 186p.
7.
Murugaverl, S (1984). Bibliography of Siddha
Ayurveda: a preliminary Survey. Jaffna: University of Jaffna.(Unpublished
manuscripts).
8.
Murugaverl,S (1965). A bibliographical guide to
the study of Saivism-a bibliography submitted in part requirement for
University of London Diploma in Librarianship. (Manuscript). 97p.
9.
Muthukumaraswamy,V(1992). Some eminent tamils:
writers and other leading figures 19th to 20th centuries.
Colombo: Department of Hindu religious and cultural affairs. P.1-5.
10. Prabhahar,V and Chandrasekar,K(2014). Article Index .
Proceedings of the Annual Sessions of Jaffna Science Association (1991-2012).
Jaffna: Jaffna Science Association, 2014.32p.
11. Ranganathan,S.R(1974). Physical
bibliography for librarians. 2nd ed. Bombay: Asia publishing house. p21.
12. Refaudeen, M.M.(2007) The Collected
writings of Dr.A.M. Aboobucker: a bibliography of the published and unpublished
works.- Oluvil, Library: South Eastern University of Sri Lanka,88p.
13. Selvarajah, N (2010). Noolthettam: an
annotated bibliography of 1000 published writings in Tamil language, by Sri
Lankan Tamils, home and abroad. Vol. 6. London: Ayothy Library Services.
14.
Selvarajah, N(1989). An index to the journal of
the Royal Asiatic Society(Ceylon Branch). Jaffna: Evelyn Rutnam Institute for
Intercultural Studies. 138p.
15.
Selvarajah,S.J (1988). Batticaloania: a
bibliography of Batticaloa. Batticaloa: Municipal Council.
16.
Sri Kantha, Sachi (1991). Prostitute in medical
literature: an annotated bibliography. New York: Greenwood press,1991. 245p
17.
Thani Nayagam, Xavier S. (1966). A Reference guide to Tamil Studies: books.
Kuala Lumpur:University of Malaya Press.122p.
18.
Thayanathan,S (1983). Published work of
Xavier S. Thani Nayakam. Tamilaram:
Dedicated to the memory of Father Thani Nayakam. Jaffna: Theepam Institute, p
97-107
19.
www.viruba.com