Showing posts with label ஆவணவாக்கம். Show all posts
Showing posts with label ஆவணவாக்கம். Show all posts

Friday, August 24, 2018

நூல்விபர ஆவணவாக்கத்தில் ஈழத்தமிழர் பங்களிப்பு 
:சில சான்றுகள்


0. அறிமுகம்

ஆவணவாக்கம் என்ற பதம் பரந்து விரிந்த பொருள் தருவது. நூலகவியல் நோக்கில் இது நூல்விபர ஆவணவாக்கம் எனப்படுகின்றது. தகவல் வளங்களை  முறைப்படி சேகரித்தல், ஒழுங்கமைத்தல், சேமித்தல், மீள்பெறுகை செய்தல் மற்றும் பரவலாக்கம் செய்தல் ஆகிய செய்முறைகளை இது உள்ளடக்குகின்றது. ஆவணவாக்கச் செயற்பாட்டின் தொகுப்புப் பணியுடன் தொடர்புடைய இச்செயற்பாட்டை கருவிவகை ஆவணவாக்கம் எனவும் குறிப்பிடுவர்.  கருவிவகை ஆவணவாக்கமானது ஆய்வாளர்களின் இலகுவான பயன்பாட்டைக் கருத்திற் கொண்டு குறிப்பிட்ட படைப்பாளர் சார்ந்த அல்லது துறை சார்ந்த இலக்கியங்களை முறைப்படி பட்டியலிடுதலைக் குறிக்கின்றது. இது ஒரு நூலகம் அல்லது தகவல் நிலையத்திலுள்ள அனைத்து ஆவணங்களின் விபரங்களைப் பட்டியலிடுகின்ற நூலகப் பட்டியலாகவோ அல்லது குறிப்பிட்ட துறை சார்ந்து அல்லது படைப்பாளர் சார்ந்து உருவாக்கப்படும் நூல்விவரப்பட்டியல் மற்றும் சொல்லடைவு மற்றும் சாராம்சச் செயற்பாடாகவோ இருக்கும். நூல்களையும் ஏனைய வளங்களையும் முறைப்படுத்தப்பட்ட வகையில் விவரித்து, பகுப்பாக்கம் செய்து, பதிவுகளைப் படிப்பதற்கு ஏற்ற வகையிலும், குறிப்பு எடுப்பதற்கு உதவும் வகையிலும், தர்க்க ரீதியாகவும் பயனுள்ள வகையிலும் ஒழுங்குபடுத்தி உருவாக்கப்படும்  ஆய்வடங்கல் நூலகவியல் துறைசார்ந்து நூல்விவரப்பட்டியல் என அழைக்கப்படுகின்றது. இது குறித்த பொருள் சார்ந்ததாகவோ, படைப்பாளருடையதாகவோ, மொழி சார்ந்ததாகவோ, குறித்த காலப்பகுதி சார்ந்ததாகவோ, குறித்த வடிவம் சார்ந்ததாகவோ, குறிப்பிட்ட வெளியீட்டாளர் சார்ந்ததாகவோ இருக்கலாம். படைப்பாளர், தலைப்பு, வெளியீடு, வெளியீட்டு இடம், பதிப்பு, தொடர் குறிப்பு, தொகுதிகளின் எண்ணிக்கை, மேலதிக இணைப்புகள், விலை ஆகிய நூல்விவரத் தகவல்களை இவை உள்ளடக்குகின்றன. சில வெளியீடுகளுக்கு பதிப்பாசிரியர், மொழிபெயர்ப்பாளர் விவரங்களும் தேவைப்படும். இவற்றை வர்த்தகத் தகவல் எனவும் குறிப்படுவர்.
வெளியீடுகளின் தலைப்புகளையும் ஏனைய விவரங்களையும் சரிபார்க்க உதவுதல், ஒரு குறிப்பிட்ட பொருளில் அல்லது மொழியில், குறிப்பிட்ட படைப்பாளர் அல்லது வெளியீட்டாளரின்  நூல்கள் தொடர்பான தகவல்களைக் கண்டறிவதற்கு உதவுதல், ஒரு வெளியீட்டின் மதிப்பையும் அதன் பெறுமதியையும் மதிப்பிட உதவுதல், ஒரு வெளியீடு எந்தெந்தப் பதிப்புகளில் வெளியானது போன்ற ஒரு வெளியீட்டின் வரலாற்று ரீதியான, நூல்விவரம் சார்ந்த  பின்னணித் தகவல்களை பெறுவதற்கு உதவுதல், படைப்பாளர் தொடர்பான நூல்விவரத் தரவுகளைப் பெற உதவுதல், ஒரு குறிப்பிட்ட பொருளில் உள்ள சிறந்த நூல்களை அறிய உதவுதல், ஒரு குறிப்பிட்ட காலப்பகுதி சார்ந்து அல்லது குறித்த ஒரு வடிவம் சார்ந்து வெளியான வெளியீடுகள் தொடர்பான தகவலைப் பெற உதவுதல் போன்ற பயன்களை நூல்விவரப்பட்டியல்கள் தருகின்றன.

1. வகைப்பாடு

நூல்விவரப்பட்டியல்களை முறைப்படுத்தப்பட்ட முறை,  பகுத்தாய்வு முறை, வரலாற்று முறை என   மூன்று பிரதான பிரிவுகளாக வகைப்படுத்த முடியும். நூல்விவர ஆவணவாக்கமானது நூலின் அடிப்படைத் தகவல்களை மட்டும் தரும் அடிப்படை நூல்விவரப்பட்டியலாகவோ அல்லது நூலின் விவரங்களுடன் நூல் பற்றிய சிறு குறிப்புகளை உள்ளடக்கும் குறிப்புரை நூல்விவரப்பட்டியலாகவோ அதுவுமன்றி குறிப்பிட்ட நூல் தொடர்பான அதிகளவு விவரங்களைத் தரக்கூடிய விளக்க நூல்விவரப்பட்டியலாகவோ அமையலாம்.
நூல் ஒன்றின் ஆத்மாவுடன் பேசும் நோக்கத்தைக்கொண்ட ஒரு செயற்பாட்டை ஆவணவாக்க நூல்விபர பணி என பெயரிடுகின்றார் கீழைத்தேச நூலகவியலின் தந்தையான எஸ்.ஆர். இரங்கநாதன்;. நூல்களின் உயிருடன் அதாவது கருத்துசார் உள்ளடக்கத்துடன் இணைந்து செய்யப்படும் பணியை - குறிப்பாக  விசேட பொருட்துறை ஒன்றில் வெளியிடப்பட்ட நூல்கள் மற்றும் பருவ இதழ்க்கட்டுரைகளின் பேரின மற்றும் நுண்ணினக் கருப்பொருளின் பட்டியை ஆவண நூல்விவரப்பட்டியல் எனப் பெயரிடுவதுடன் அத்தகைய பட்டியானது விசேட பொருட்துறை வல்லுனர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யுமுகமாக தயாரிக்கப்படும்போது அது ஆவணவாக்கப்பட்டி என்றும் அத்தகைய பட்டியை உருவாக்கும் கலை ஆவணவாக்கம் எனவும் குறிப்பிடுகின்றார் (Ranganathan 1974). 

நூல்கள் பகுப்பாக்கம் செய்யப்பட்டு, வகுப்பெண் இடப்பட்ட பின்னர் நூல் விவரத் தரவுகள் தருக்க முறை ஒழுங்கிலோ அல்லது ஏனைய பயனுள்ள ஒழுங்கமைப்பிலோ ஒழுங்குபடுத்தப்படும் நூல்விவரப்பட்டியல்கள் முறைப்படுத்தப்பட்ட வகையிலானவை. இம்முறையில் குறிப்பு எடுப்பதற்கும்  படிப்பதற்கும் பொருட்டு, நூலை ஆராய்ந்து ஒவ்வொரு நூலுக்கும் சாதாரண அல்லது விரிவான பதிவுகளை தர்க்க ரீதியாகவும் பயனுள்ள வகையிலும் ஒழுங்குபடுத்துவர்.  ஒரு ஆக்கத்தின் பொருள் பல தலைப்புகளாகவும் உப தலைப்புகளாகவும் பிரிக்கப்பட்டு அவை ஒவ்வொன்றின் கீழும் பதிவுகள் அகரவரிசையில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும் நூல்விவரப்பட்டியல்கள் பகுத்தாய்வு முறையிலமைந்தவை. இதில்  ஒவ்வொரு கட்டுரைகளிலுமுள்ள தகவல்களுக்குப் பரந்த ரீதியில் அகரவரிசைப் பொருட்; சொல்லடைவும் தயாரிக்கப்படும். ஒரு நூலை உருவாக்குவதற்குத் தேவையான தாள்களின் உருவாக்கம், அச்சுக்கலை, வெளியீடு, விளக்கப்படங்கள், வரைபட உருவாக்கம், நூல்கட்டு, நூல் பாதுகாப்பு  உட்பட நூலின் உற்பத்தி முறைகளையும் அதன் வரலாற்றையும் உள்ளடக்கித் தயாரிக்கப்படுபவை வரலாற்று முறையிலமைந்த நூல்விவரப்பட்டியல்கள் ஆகும்.
முறையான வகையில் நூல்களின் விவரங்களைத் தரும் பண்பானது பொதுவானதும் அதிகம் வழக்கிலுள்ளதுமான நடைமுறையாக உள்ளது. எம்மிடையே பெரும்பாலும் புழக்கத்தில் இருப்பது முறைப்படுத்தப்பட்ட முறையிலமைந்த நூல்விவரப்பட்டியல்களே.  ஒவ்வொரு தனி ஆக்கத்தினதும் அதனுடன் தொடர்பான ஆக்கங்களினதும் தகவல்களை ஒப்பிட்டுப்பார்த்து தர்க்கரீதியாக அல்லது பயனுள்ள ஒழுங்கில் பட்டியல்படுத்தும் செய்முறையாக இது உள்ளது. ஆவணத்தின் வகை சார்ந்து அரிய நூல்களுக்கான நூல்விவரப்பட்டியல்கள்;, பருவஇதழ்களின் பட்டியல்கள், ஆய்வுக் கட்டுரைகளுக்கான பட்டியல்கள் என வகைப்படுத்தப்படுகிறது. உருவாக்க முயற்சி சார்ந்து இது படைப்பாளருக்கான நூல்விபரப்பட்டியல், பெயர் அறியப்படாத, புனைபெயர் ஆக்கங்களுக்கானவை, நிறுவன நூல்விவரப்பட்டியல் என வகைப்படுத்தப்படுகிறது. உள்ளடக்கம் சார்ந்து  இது பொதுப் பொருட்துறை, சிறப்புப் பொருட்துறை சார்ந்தவை என வகைப்படுத்தப்படுகிறது. பொருள்சார் நூல்விவரப்பட்டியல்கள், தனிநபர் நூல்விவரப்பட்டியல்கள், நூல்விவரப் பட்டியல்களுக்கான  நூல்விவரப்பட்டியல்கள் ஆகியன பொதுப் பொருட்துறை வகையைச் சார்ந்தவையாகும். ஒழுங்கமைப்பு சார்ந்து அகரவரிசையில் அமைந்தவை, கால அடிப்படையிலானவை, பொருட்துறை சார்ந்தவை என இவை வகைப்படுத்தப்படுகின்றன.

ஈழம் சார்ந்து முறைப்படுத்தப்பட்ட நூல்விவர ஆவணவாக்கத்தின் முன்னோடி என்ற பெருமையை சைமன் காசிச்செட்டி பெறுகின்றார். 1848 ம் ஆண்டு யூன் 3, 1849 பெப்ரவரி 24, மற்றும் டிசம்பர் 1 ஆகிய திகதிகளில் இலங்கை றோயல் ஏசியாற்றிக் சங்கத்தில் இவரால் வாசிக்கப்பட்ட தமிழ் நூற்பட்டியலானது ஈழத்து நூல்விபரப்பட்டியல் வரலாற்றின் முன்னோடி முயற்சி எனக் கருதத்தக்கது. மூன்று பிரதான பொருட்தலைப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இப்பட்டியலின் முதலாவது பிரிவான மொழியியலில் 74 நூல்களின் விபரங்களும் இரண்டாவது பிரிவான புராண இலக்கியம் மற்றும் வரலாறு வாழ்க்கைச் சரிதம் என்ற பகுதியில் இந்துக்கள், கிறிஸ்தவர், இஸ்லாமியர் ஆகிய மூன்று மதம் சார்ந்தும் உள்ள படைப்பாளரின் 83 ஆக்கங்கள் பற்றிய தகவல்களும் மூன்றாவது பிரிவான சமயம், தத்துவம் பற்றிய பகுதியில் 154 நூல்களும் ஆக மொத்தம் 311 நூல்களின் விபரங்கள் இடம்பெறுகின்றன.(.(Muthukumaraswamy 1992). 

1.1 பொதுவான நூல்விவரப்பட்டியல்கள்

பொது நூல்விவரப்பட்டியல்கள் நாடு, மொழி, இனம், என மேலும் வகைப்படுத்தப்படுகிறது. இது வியாபகத்தன்மையின் அடிப்படையில் சர்வதேசியப் பண்பு கொண்டது, தேசிய ரீதியானது, பிராந்திய ரீதியானது, பிரதேசரீதியானது, உள்ளுர் சார்ந்தது எனவும் வகைப்படுத்தப்படக் கூடியது.

1.11 சர்வதேசியப் பண்பிலமைந்தவை
தனிநாயகம் அடிகளின் ''Reference guide to Tamil Studies'  (1966), தமிழ் தவிர்ந்த ஏனைய மொழிகளில் வெளியிடப்பட்ட தமிழியல் சார்ந்த 1322 நூல்களை மானுடவியல், தொல்லியல், கலைகள், கிறிஸ்தவ பணி, அகராதிக்கலை, சமூக வரலாறு, இலக்கிய வரலாறு, மொழி, மொழியியல், சமயம், தத்துவம், பிரயாணம், நூல்விபரப்பட்டியல், பட்டியல்கள் ஆகிய பதினான்கு உப பொருட்தலைப்புகளின் கீழ்  அட்டவணைப்படுத்துகின்றது.  (Thaninayakam 1966) 
இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட குமரேசன் அவர்களின் தனிப்பட்ட முயற்சியால் உருவான தமிழ்ப்புத்தகங்கள் தொடர்பான தகவல்களைத் திரட்டித் தரும் விருபா: தமிழ்புத்தகத்திரட்டு என்னும் வலைத்தளம் நூல்களின் நூல்விவரத் தகவல்களை கொண்டுள்ள இலத்திரனியல் ஆவணவாக்க முயற்சியாகும். இது இதுவரை 3473 நூல்களின் விவரங்களைத் தொகுத்திருக்கிறது.(எசைரடிய.உழஅ)  ஒவ்வொரு பதிவும் தலைப்பு, பதிப்பு ஆண்டு, ஆசிரியர் பதிப்பு, பதிப்பகம், விலை, புத்தகப் பிரிவு, பக்கங்கள், ISBN இலக்கம் ஆகிய தகவல்களை உள்ளடக்குகின்றது. இதுதவிர மதிப்புரைகள் (207), மொழிபெயர்ப்புகள் (113) போன்றவற்றின் விவரங்களையும் இது கொண்டுள்ளது.  சிந்தாமணி நிகண்டு, நூலக தகவல் அறிவியல் கலைக்களஞ்சிய அகராதி போன்றவை முழுமையான எண்ணிமப்படுத்தப்பட்டிருப்பதை நோக்கும் போது மூல ஆவணவாக்கப் பணியிலும் இது தற்போது நுழைந்திருப்பதை காட்டுகின்றது. 

உலகிலுள்ள பலதரப்பட்ட நூலகங்களிலும் வளநிலையங்களிலும் இருக்கின்ற இலங்கைத் தமிழர்களின் வரலாறும் பண்பாடும் சார்ந்த முதல்நிலைத் தகவல் வளங்களை ஆவணப்படுத்தும் முயற்சியானது 'pசiஅயசல ளழரசஉநள கழச hளைவழசல ழக வாந ளுசi டுயமெயn வுயஅடைள: ய றழசடன றனைந ளநயசஉh' என்ற தலைப்பில் நூலுருப்பெற்றிருக்கின்றது. இந்த ஆவணப்படுத்தலானது இருமொழி உருவாக்கமாகும். (குணசிங்கம் 2005).
இலண்டனிலிருந்து 2002ம் ஆண்டு முதல் செல்வராஜா அவர்களால் வெளியிடப்படும் 'நூல்தேட்டம்' வெளியிடப்பட்ட இடம் சார்ந்து சர்வதேசியப் பண்பைக் கொண்டதொன்று. இது இலங்கை எழுத்தாளர்களினால் இலங்கையிலும், புலம்பெயர் நாடுகளிலும் அச்சுருவில் வெளியிடப்பட்ட நூல்கள் பற்றிய விபரங்களை ஆவணமாக்குகின்றது.  இலங்கை எழுத்தாளர்களால்,  தமிழில் வெளியிட்ட அனைத்து நூல்களும் குறிப்புரையுடன் கூடியதாக இத்தொகுப்பில் இடம்பெறுகின்றது. ஒவ்வொரு தொகுதியிலும் 1000 நூல்கள் என்ற ரீதியில் இதுவரை பத்து தொகுதிகளில் 10000 ஈழத்துத் தமிழ் நூல்கள் பற்றிய தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. துண்டுப்பிரசுரங்கள், வரைபடங்கள், அச்சிடப்படாத கையெழுத்துப் பிரதிகள், ஒலி, ஒளிப்பதிவு நாடாக்கள், இறுவெட்டுகள் போன்றனவும் பெரும்பான்மையான கல்வெட்டுகள், ஞாபகார்த்த மலர்கள், சஞ்சிகைகள் என்பனவும் இத்தொகுதியில் சேர்க்கப்படவில்லை. எனினும், தனி ஆவணமாகக் கருதும் வகையில் வெளியிடப்பட்டிருக்கும் சஞ்சிகைகளின் சிறப்பு மலர்கள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. மேலும், சில கல்வெட்டுக்களும், ஞாபகார்த்த மலர்களும் தனிநூலின் வகைக்குள் அடங்கக்கூடியதான கனதியான அம்சங்களுடன் வெளிவந்திருப்பதால் அவையும் இத்தொகுதியில் சேர்த்துக் கொண்டுள்ளன. (செல்வராஜா 2002). மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வெளிவந்துள்ள தமிழ் நூல்களின் விபரத் தொகுப்பாக மலேசிய சிங்கப்பூர் நூல்தேட்டம் அமைந்துள்ளது. இந்நூலினையும் லண்டன் அயோத்தி நூலக சேவைகள் வெளியிட்டுள்ளது. மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் வெளிவந்த 756 நூல்களின் விபரங்கள் இதில் உண்டு.

1.12 தேசியப் பண்பு கொண்டவை

1970 இல் உருவான எவ்.எக்ஸ்.சி நடராசாவின் 'ஈழத்துத் தமிழ் நூல் வரலாறு' பகுத்தாய்வு முறை நூல்விவரப்பட்டியல் பண்பைக் கொண்டிருக்கிறது. (நடராசா 1970). நூலின் முதலாவது அத்தியாயம் இலங்கையின் அரசியல் வரலாற்றுக் காலத்தை அடிப்படையாகக்  கொண்டு ஐந்து உப தலைப்புகளில் தமிழரது ஆக்கங்களை பகுப்பாய்வு செய்கிறது. இரண்டாவது அத்தியாயம் இலக்கியம் என்ற தலைப்பில் ஆறு வெளியீடுகளை ஆவணப்படுத்துகின்றது. மூன்றாவது அத்தியாயம் புராணங்கள் என்ற தலைப்பில் 21 வெளியீடுகளை பகுத்தாய்வு செய்கிறது.

1955-70 காலப்பகுதியில் ஈழத்தில் எழுந்த தமிழ் நூல்களின் விவரங்களை சிறுகதைகள்(55), நாவல்கள், நாடகங்கள், பெரியோர் வரலாறு, கவிதைகள், சமயப் பாடல்கள்(30), சிறுவர் நூல்கள்(16), இலக்கியக் கட்டுரைகள், சமயக் கட்டுரைகள், பிற நூல்கள்(34), நாவலர் சம்பந்தமான நூல்கள்(11) ஆகிய பதினொரு தலைப்புகளில் ஒழுங்குபடுத்தித்தரும் கனகசெந்திநாதனின் 'ஈழத்துத் தமிழ்நூல் வழிகாட்டி' மொழிசார்ந்து தேசிய நூல்விவரப்பட்டியல் பண்பைக் கொண்டதொன்று. வரதரின் பலகுறிப்பு என்ற நூலில் தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருந்த இந்த நூல்விவரப்பட்டியலானது பலரது வேண்டு கோளுக்கமைய மூல நூலிலிருந்து பிரித்தெடுத்து தனியாக உருவாக்கப்பட்ட ஆவணமாக, வெளியிடப்பட்டது. நூலின் தலைப்பு, ஆசிரியர், வெளியீட்டிடம், வெளியீட்டாளர், வெளியிடப்பட்ட ஆண்டு, பக்கம், விலை ஆகிய நூல்விவரத்தரவுகளை உள்ளடக்கி வரதர் வெளியீடாக இது உருவாக்கப்பட்டது. (செந்திநாதன் 1971)
கலாநிதிப்பட்ட கற்கைநெறியைப் பூர்த்திசெய்யுமுகமாக 1984இல் வே.இ.பாக்கியநாதனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட 'தமிழ் ஆய்வுக்கு ஈழத்தின் பங்களிப்பு' என்ற நூற்றொகை ஆய்வின் திருத்தங்களுடன் கூடிய தட்டச்சுப் பிரதியொன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தின் ஆவணக்காப்பகப்பகுதியில் உண்டு. இது 1800-1948 வரையான காலப்பகுதியில் எழுந்த  ஆக்கங்களை ஆவணப்படுத்துகின்றது. பெயரறியாத ஆக்கங்கள், நிறுவன வெளியீடுகள், சிறுபிரசுரங்கள், கட்டுரைகள், நூல்கள் உட்பட 2249 பதிவுகள் திருத்தங்களுடன் கூடிய தட்டச்சுப் பிரதியில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. பதிவுகள் அனைத்தும் தூயி தசமப் பகுப்புத்திட்டத்தின் பரந்த பொருட்தலைப்புகளின்; அடிப்படையில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றன. 1987இல் இவ் ஆய்விற்குரிய கலாநிதிப்பட்டம் நூலாசிரியருக்கு வழங்கப்பட்டிருப்பினும் அதனது பிரதியைப் பெறமுடியவில்லை (பாக்கியநாதன் 1984).
இலங்கை தமிழ், முஸ்லிம் எழுத்தாளர்களினால் எழுதப்பட்ட ஆங்கில நூல்களின் விபரப்பட்டியலாக 'ழேழடவாநவவயஅ'  விளங்குகின்றது. இதுவரை ஒரு தொகுதி மாத்திரமே வெளிவந்துள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 414 நூல்கள் பதிவாக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் முஸ்லிம் எழுத்தாளர்கள் ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பினை 1977 நூல்களில் கால அடிப்படையில் எடுத்துக்கூறும் 'சுவடி ஆற்றுப்படை' (4 தொகுதிகள் 1850-2000) முறைப்படுத்தப்பட்ட நூல்விவரப்பட்டியற் பண்பைக் கொண்டது. (ஜமீல் 1994).
பேராசிரியர் எம்.எம். உவைஸ் அவர்களின் பிரத்தியேக நூலகத்திலுள்ள நூல்களின் விபரங்கள் அடங்கிய நூல்விபரப் பட்டியலை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஆவணப்படுத்தியிருக்கிறது. பேராசிரியர் மர்ஹூம், எம்.எம். உவைஸ் அவர்களின் பிரத்தியேக நூலகத்தைக் கையேற்கும் வைபவத்தை முகன்னிட்டு வெளியிடப்படும் சிறப்பு இதழ் என்ற தலைப்பிலான ஆக்கமானது அவரால் கையளிக்கப்பட்ட 383 தமிழ் ஆங்கில நூல்களின் விபரங்களை மட்டும் பட்டியல்படுத்துகின்றது. இஸ்லாமிய தமிழ் இலக்கியம், இஸ்லாமும் முஸ்லிம்களும், தமிழ் ஆய்வு ஆகிய மூன்று பிரதான பொருட்துறைகளின் கீழ் பல உப பொருட்துறைகள் பருவஇதழ்கள், கடிதங்கள், கையெழுத்துப் பிரதிகள,; பத்திரிகைக்கட்டுரைகள் என்பவற்றை உள்ளடக்கி தமிழ், ஆங்கிலம், சிங்களம் உட்பட் அரபு மொழியில் வெளிடப்பட்ட நானுறுக்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளடக்குகின்றன. (தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ?)
கணபதிப்பிள்ளை அவர்களால்  இலங்கையில் தமிழ் வெளியீடுகள் என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரையானது  வரலாற்று நூல்விபரப் பட்டியற் பண்பைக் கொண்டதொன்று கி. 13ம் நூற்றாண்டிலிருந்து ஈழத்தில் எழுந்த நூல்களையும் நூலாசிரியர்கள் பற்றிய வரலாற்றையும் இது வெளிக்கொணருக்pன்றது. (முயnயியவாippடையi  1958)

1.13 பிரதேசரீதியானவை
1983ம் ஆண்டு வன்னிப் பிராந்திய தமிழாராச்சி மகாநாட்டு மலர் வன்னி தொடர்பாக எழுந்த நூல்கள், கட்டுரைகள் மற்றும் ஆய்வேடுகள் தொடர்பான விபரங்களை ஆணப்படுத்துகின்றது. நா. சுப்பிரமணியனின் தொகுப்பில் உருவான இந்த நூல்விவரப்பட்டியலானது யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்குப் பகுதிகள், முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை மாவட்டங்கள், புத்தளம், சிலாபம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளை உள்ளடக்கிய வன்னிப்பிரதேசத்தின் ஆக்கங்கள், பிரபந்தங்கள், நாட்டார் பாடல்கள், நாவல்கள், சிறுகதைத் தொகுதிகள், கவிதைத் தொகுதிகள், நாடக நூல்கள், நாட்டுக்கூத்து நூல்கள், ஆய்வு நூல்கள், மலர்கள், இதழ்கள், கட்டுரைகள், ஆய்வேடுகள், முதுகலைப்பட்ட ஆய்வேடுகள் ஆகிய பதின்மூன்று பொருட்தலைப்புகளில் (பின்னிணைப்பு உட்பட) 188 ஆக்கங்களின் விவரங்களை உள்ளடக்குகின்றது. (சுப்பிரமணியன் 1983)
சி. அப்புத்துரை (1985) அவர்களால் 'காங்கேயன் கல்வி வட்டாரத்தில் எழுந்த நூல்கள்' என்ற தலைப்பில் தொகுக்கப்பட்ட நூல்விபரப்பட்டியலும், பிரதேசம் சார்ந்த நூல்களின் விவரங்களை முறைப்படுத்திய ரீதியில் தரும் பண்பைக் கொண்டிருக்கிறது.

''Batticalonia'' என்ற பெயரில் மட்டக்களப்பு பொது நூலகத்தின் நூலகராக இருந்த ஜோண் செல்வராஜா அவர்களால் உருவாக்கப்பட்ட மட்டக்களப்புப் பிரதேசம் சார்ந்த ஆக்கங்களின் தொகுப்பான நூல்விவரப்பட்டியலானது 29 முக்கிய பொருட்துறைகளில் 873 பதிவுகளை ஆவணப்படுத்தியிருக்கிறது. ஒவ்வொரு பதிவும் ஆசிரியர், தலைப்பு, வெளியீட்டிடம், வெளியீட்டாளர் போன்ற பதிவுகளை உள்ளடக்குவதுடன் நூல்கள் மட்டுமன்றி பருவஇதழ்க் கட்டுரைகள், பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள், சிறப்புமலர்க் கட்டுரைகள் பொன்ற அனைத்தையும் உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ளது. ஆங்கில ஆக்கங்களின் விபரங்கள் முதலாவதாகவும் தமிழ் ஆக்கங்கள் அதற்கு அடுத்த நிலையிலும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. (Selvarajah 1988)

நல்லூர்ப் பிரதேசம் பற்றிய ஆக்கங்கள் அனைத்தையும் படைப்பாளர், பொருட்துறை, மொழி, காலம், வடிவம் போன்ற அம்சங்களை உள்ளடக்கி ஆவணப்படுத்தும் ஒரு முயற்சியே யாழ்ப்பாணத் தமிழியல் ஆய்வடங்கல்-1 என்ற தலைப்பில் நூலக விழிப்புணர்வு நிறுவகத்தினால் 2014இல் உருவாக்கப்பட்டிருக்கும்  நூல்விவரத் தரவுகளின் தொகுப்பாகும். நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்கள் சார்ந்த ஆக்கங்களே இந்த ஆய்வடங்கலில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. பிரதேசத்தில் உருவாக்கம் பெற்ற பதிவுகள் தவிர்க்கப்பட்டு பிரதேசத்தைப் பற்றிய ஆக்கங்களே தெரிவு செய்யப்பட்டுள்ளன. பொதுவாக நல்லூர்ப் பிரதேச வரலாறானது யாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாற்றுடனும், இலங்கைத் தமிழர் வரலாற்றுடனும் பின்னி பிணைந்து இருப்பதன் காரணமாக நல்லூர் பிரதேசம் சார்ந்த நூல்கள், கட்டுரைகள் மட்டுமன்றி நல்லூர் பிரதேசம் பற்றிய தகவல்களை உள்ளடக்கிய எந்தவொரு ஆக்கமும் இந்த ஆய்வடங்கலில் கருத்தில் கொள்ளப்பட்டிருப்பது ஆய்வடங்கல் தொகுப்பு முயற்சியில் இதுவரை கவனத்தில் கொள்ளப்படாத ஒரு புதிய அம்சமாக கொள்ள முடியும். அறிஞர்களின் வாழ்க்கை வரலாறானது தனி நூல் வடிவிலோ அல்லது கட்டுரை வடிவிலோ இல்லாதபோது பொதுவாக எழுந்த வாழ்க்கை வரலாற்றுத் தொகுப்புகளிலிருந்து அவை எடுக்கப்பட்டு அவற்றுக்குரிய பக்க எண்களுடன் இங்கு உள்ளடக்கப்பட்டிருப்பதன் காரணமான மேற்கோள் ஆய்வடங்கலுக்கான அம்சங்களையும் இந்த ஆய்வடங்கல் கொண்டிருக்கின்றது. நல்லூர்ப் பிரதேசம் சார்ந்த ஆக்கங்கள் முதன்மை அறிவியல்கள், சமூக அறிவியல்கள், பிரயோக அறிவியல்கள், மானுட அறிவியல்கள் என நான்கு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டிருப்பதுடன் ஒவ்வொரு பிரிவும் ஆக்கங்களின் விரிவுக்கேற்ப சுயமாக உருவாக்கப்பட்ட பல பொருட்தலைப்புகளின் கீழ் பதிவுகளை உள்ளடக்குகின்றன. ஒவ்வொரு பதிவும் ஆசிரியர், தலைப்பு, கட்டுரையாயின் கட்டுரை வெளிவந்த சஞ்சிகைகள் மற்றும் சிறப்பு மலர்களின் பெயர், தொகுதி மற்றும் பகுதி எண்கள், ஆண்டு, பக்கங்கள் ஆகியவற்றை உள்ளடக்குகின்றன. (நூலக விழிப்புணர்வு நிறுவகம்  2016)

1.2 பொருள்சார் நூல்விவரப்பட்டியல்கள்
1885-1976 காலப்பகுதியை உள்ளடக்கி 1978இல் வெளிவந்த ஈழத்துத் தமிழ் நாவல்கள் ஒரு தேர்ந்த நூல்விவரப்பட்டியலாகும் (சுப்பிரமணியன் 1978). 439 பதிவுகளை உள்ளடக்கிய இது மூன்று பிரிவுகளைக் கொண்டது. முதலாவது பிரிவில் 210 நூல்களும், இரண்டாவது பிரிவில் செய்தித்தாள்கள் மற்றும் சஞ்சிகைகளில் வெளிவந்த 94 ஆக்கங்களும் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றன. மூன்றாவது பிரிவானது நூல்விவரத் தரவுகளைக் கொண்டிராத 135 நாவல்களை பட்டியல்படுத்துகின்றது. இது படைப்பாளர் சார்ந்த அகரவரிசை ஒழுங்கமைப்பைக் கொண்டது

நூலகவியலில் இலண்டன் டிப்புளோமா கற்கைநெறியின் பகுதித்தேவையை நிறைவு செய்யும்பொருட்டு திரு முருகவேள் அவர்களால் உருவாக்கப்பட்ட சைவம் தொடர்பான நூல்விவரப்பட்டியலானது 1960 வரை ஐரோப்பிய மொழிகளில் வெளிவந்த சைவம் தொடர்பான ஆக்கங்களைப் பட்டியற்படுத்துகின்றது. நூல்கள், நூலின் பகுதிகள், பருவஇதழ்க்கட்டுரைகள், சிறப்புமலர்களில் வெளிவந்த கட்டுரைகள், மாநாட்டு மலர்களில் வெளிவந்த கட்டுரைகள் உள்ளடக்கப்பட்ட அதேசமயம் பத்திரிகை சஞ்சிகைகளில் வெளிவந்த கட்டுரைகளும் ஆய்வேடுகளும் இதில் தவிர்க்கப்பட்டுள்ளன. ஆடிப்படை நூல்விவரத் தரவுகளை மட்டும் இது உள்ளடக்குகின்றது. (Murugaverl 1965).  1984 காலப்பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகராக இருந்த திரு.சி.முருகவேள் அவர்களினால் தொகுத்து உருவாக்கப்பட்ட சித்த ஆயுர்வேத நூல்களுக்கான நூல்விவரப்பட்டியலானது மொழிசார் பண்பைக் கொண்டது. 1960களின் ஆரம்பத்தில் பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தில் பணிபுரிந்த காலத்தில் அந்த நூலகத்தில் உள்ள சமஸ்கிருத நூல்கள் பற்றிய விவரங்களைத் திரட்டுவதில் ஆரம்பித்த இப்பணியானது பின்னர் கண்டியைச் சுற்றியுள்ள தனியார் சேகரிப்புகளையும் உள்ளடக்கி சட்டம், கணிதம், வானவியல், மருத்துவம் ஆகிய பொருட்துறை சார்ந்து 3454 பதிவுகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டது. புத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள், மருந்து உற்பத்தியாளரால் வெளியிடப்பட்ட பட்டியல்கள், கையெழுத்துப் பிரதிகள் போன்றன இப்பட்டியலில் உள்ளடக்கப்படவில்லை. ((Murugaverl 1984)


பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தகவல் சேகரிப்பின் விளைவாக உருவாக்கப்பட்ட ஆங்கில ஆக்கங்களுக்கான குறிப்புரை நூல்விவரப்பட்டியலானது 2006இல் உருவாக்கம் பெற்றது. பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலைதீவுகள், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில் பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பாக உருவாக்கம் பெற்ற பத்திரிகை நறுக்குகள், பருவ இதழ்கள், அறிக்கைகள், பயிற்சிக் கையேடுகள், தனிப்பொருள் நூல்கள், சிறுநூல்கள், வலைத்தளங்கள், திரைப்படங்கள் போன்றவற்றிலிருந்து சேகரிக்கப்பட்ட ஆக்கங்களின் விபரங்களை இது உள்ளடக்குகின்றது. 1022 பதிவுகள் நாடுவாரியாக தொகுக்கப்பட்டிருக்கின்றன. (டுழபயயெவாயn 2006). இதே ஆசிரியரால் 2008இல் வறுமை மற்றும் முரண்பாடுகள் தொடர்பான ஆவணத் தொகுப்பு இருமொழியில்  உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஆங்கல மொழியில் 302 ஆக்கங்களும், தமிழில் 50 பதிவுகளும் இதில் உள்ளன. புநனெநசiபெ hரஅயnவையசயைn – என்ற தலைப்பில் தொகுக்கப்பட்ட குறிப்புரை நூல்விவரப்பட்டியலானது 355 பதிவுகளை உள்ளடக்கியது. பெண்களுக்கெதிரான வன்முறை, பெண்களின் உடல்நலம், வருமான உருவாக்கம், சமூக பங்கேற்பு போன்ற பெருந்துறைகளின்கீழ் பொது, இலங்கை என்ற உபபிரிவுகளில் பதிவுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. (டுழபயயெவாயn 2008)

1993இல் சிவசண்முகராஜாவினால் எழுதப்பட்ட 'ஈழத்துச் சித்த மருத்துவ நூல்கள்: ஓர் அறிமுகம்' என்ற நூலும் விளக்க நூல்விவரப்பட்டியல் என்ற வகைக்குள் அடங்குகின்றது. (சிவசண்முகராஜா 1993) 1980களுக்குப் பின்னர் குறிப்பிட்ட படைப்பாளரின் ஆக்கங்களைப் பட்டியற்படுத்தும் பண்பு இனங்காணப்படுவதுடன் நாவலர், கைலாசபதி, சிவத்தம்பி, கமால்தீன், எவ்.எக்ஸ். சி நடசாசா ஆகியோரின் ஆக்கங்களின் விவரங்கள் பட்டியல்படுத்தப்பட்டு நூலுருவம் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
ஈழத்தமிழ் இலக்கியத்தில் அறிவியல் நூல்கள் என்ற தலைப்பில் வெளிவந்த ஆக்கம் அறிவியல் துறைசார்ந்த நூல்களை ஆவணப்படுத்தும் முயற்சியாகும் (அனந்தராஜ் 2004)
வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், மீளாய்வுகள், ஆசிரியர் தலையங்கங்கள், சிறுகுறிப்புகள், கேள்விபதில்கள், அறிவியல் பருவ இதழ்களில் வரும் தொடர்புகள், சர்வதேச மாநாடுகளில் வெளியிடப்படும் கட்டுரைகள், சாராம்சங்கள், நூல்கள், நூலின் பகுதிகள், கலாநிதிப் பட்ட ஆய்வுகள், ஆய்வு அறிக்கைகள், போன்றவை. பருவ இதழில் வெளிவரும் மீளாய்வுகள், சஞ்சிகைகள் பத்திரிகைகளில் வெளிவரும் ஆக்கங்கள், வெளியிடப்படாத கையெழுத்துப் பிரதிகள் தவிர்க்கப்பட்டுள்ளன. 1440 பதிவுகளில் 226 பதிவுகள் ஆங்கிலமல்லாத மொழிகளில் வெளிவந்தவையாகும். (ளுசiமுயவொய 1991)

1881-2003 வரையான சமஸ்கிருத நூல்களின் விபரங்களை ஆவணப்படுத்துகின்றது. (கிருஷ்ணானந்தசர்மா 2002). இத்தொகுப்பானது பேராசிரியர் கைலாசநாதக்குருக்கள் ஆய்வு மையம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகம், அச்சுவேலி சிவஸ்ரீ குமாரசாமிக்குருக்களின் நூற்தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டது. கால அடிப்படையில் தொகுக்கப்பட்ட ஆக்கங்கள் அட்டவணை வடிவமைப்பில் நூலின் பெயர், ஆசிரியர், அச்சுப்பதிப்ப பதிப்பும் வெளியீடும் ஆகிய விபரங்களை மட்டும் உள்ளடக்குகின்றன.

இலங்கையின் தேசியப் பத்திரிகையான தினகரன் பத்திரிகை ஆசிரியராக இருந்த சிவகுருநாதனால் உருவாக்கப்பட்ட இலங்கைத் தமிழ் ஊடகவியல் தொடர்பான குறிப்புரை நூல்விவரப்பட்டியலானது 1841-1932 வரையான காலப்பகுதியை உள்ளடக்கித் தயாரிக்கப்பட்டதாகும் (சிவகுருநாதன் 1993).
1.3 தனிநபர் நூல்விவரப்பட்டியல்கள்
ஒரு தனிநபரின் ஆக்கங்கள் அல்லது தனிநபரைப் பற்றி மற்றவர்கள் எழுதிய ஆக்கங்களின் தொகுப்பு இவ்வகைக்குள் அடங்கும். இலக்கிய துறையில் இத்தகைய நூல்விவரப்பட்டியல்கள் மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. குறித்த துறையின் பொருள் நிபுணர்களுக்கான முக்கிய தகவல் வளமாக அவை கருதப்படுகின்றன. தனிநபர் நூல்விவரப்பட்டியல்கள் படைப்பாளர் சார்ந்தவை, பொருட்துறை சார்ந்தவை என இரு வகையாகப் பாகுபடுத்தப்படுகின்றன.

1.31 படைப்பாளர் சார்ந்தவை
ஒரு குறிப்பிட்ட படைப்பாளரின் ஆக்கங்கள் அனைத்தையும் தொகுத்து வெளிவரும் நூல்விவரப் பட்டியல்கள் இவ்வகைக்குள் அடங்கும். படைப்பாளரின் வாழ்க்கை வரலாறு, அவரது ஆக்கங்கள் பற்றிய விமர்சனங்கள்; என்பவற்றையும் இது உள்ளடக்கும். அவரால் எழுதப்படும் நூல்கள், பருவஇதழ்க் கட்டுரைகள், நூல்களுக்கு அவர் ஆற்றும் பங்களிப்புகள், அவரால் பதிப்பிக்கப்பட்ட ஆக்கங்கள், மொழிபெயர்ப்புகள், தகவல்கள் அனைத்தையும் இது உள்ளடக்கும். சிலசமயங்களில் படைப்பாளர் நூல்விவரப்பட்டியல்கள் சுய நூல்விவரப்பட்டியல்கள் என அழைக்கப்படுவதும் உண்டு. பெரும்பாலான படைப்பாளர் நூல்விவரப்பட்டியல்கள் சுருக்கமான தகவல்களைக் கொண்டிருப்பினும் கூட விவரமான முறையில் தொகுக்கப்படும் நூல்விவரப்பட்டியலானது பூரணமானதும் சரியானதுமான ஒரு பாடத்துறையை இனங்காணுவதற்கு உதவும். இலங்கை நூலகச் சங்கத்தின் நூலக தகவல் அறிவியல் டிப்புளோமாவின் பகுதித்தேவையை நிறைவு செய்யும் பொருட்டு பல தனிநபர் நூல்விவரப்பட்டியல்கள் தொகுக்கப்பட்டுள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அருட்தந்தை தனிநாயகம் அவர்களால் வெளியிடப்பட்ட ஆக்கங்களை ஆவணப்படுத்தும் முயற்சி தமிழாரம் என்ற நினைவு மலரில் கட்டுரை வடிவம் பெற்றிருக்கின்றது. அறிமுக உரை எதுவுமற்ற இந்தப் பட்டியலிலிருந்து இது கால அடிப்படையில் தொகுக்கப்பட்டிருப்பது தெரிகிறது. ஆங்கில மொழியில் எழுதப்பட்ட 112 ஆக்கங்கள் உட்பட 140 பதிவுகளை இது உள்ளடக்குகின்றது. ஒவ்வொரு பதிவும் தலைப்பு, நூலாயின் வெளியீட்டு விபரம், கட்டுரையாயின் இதழின் பெயர் தொகுதி எண் பகுதி எண், மாதம், ஆண்டு, பக்கம் ஆகிய விபரங்களைக் கொண்டிருக்கின்றது. யாழ்ப்பாண தொழில்நுட்ப நிறுவனத்தின் நூலகராக இருந்த திரு எஸ் தயாநாதன் அவர்களால் இத்தொகுப்புப் பணி உருவாக்கப்பட்டிருக்கிறது (வுhயலயயெவாயn 1983). பத்மம் என்ற பெயரில் வெளியிடப்பட்ட பேராசிரியர் பத்மநாதன் அவர்களின் பணிநயப்பு மலர் அவரின் ஆக்கங்களை ஆவணப்படுத்துகின்றது. நூல்கள், வெளியிடப்பட்ட கட்டுரைகள், கருத்தரங்கக் கட்டுரைகள்  உட்பட அவரது படைப்புகளை மலராக்கக் குழு தொகுத்திருக்கிறது. (பத்மம் 2004).

பேராசிரியர் ம.கருணாநிதி அவர்களின் படைப்புகள்  அவர் சார்ந்து வெளியிடப்பட்ட மலரில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. இதில் நூல்கள்(9), மொழிபெயர்ப்புகள்(13), ஆராய்ச்சிகள்(16), கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள்(7) என மொத்தம் 45 ஆக்கங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. (கருணாநிதி 2014). பேராசிரியர் தில்லைநாதனின் ஆக்கங்கள்  பற்றிய தொகுப்பு இரா வை.கனகரத்தினத்தின் முயற்சியில் மணிவிழா மலரில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது (கனகரத்தினம் 1997). பட்டியல் முறைமை, பகுப்பாய்வு, அகராதி முறைமை ஆகிய முன்று பிரிவுகளில் 132 பதிவுகள் ஒழங்கமைக்கப்பட்டுள்ளன. 1981-2014 காலப்பகுதியில் நூலகவியலாளர் செல்வராஜாவினால் வெளியிடப்பட்ட ஆக்கங்கள் அவரது மணிவிழா மலரில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது. (குமரன் 2014).

1988 இல் என். செல்வராசா அவர்களின் முயற்சியில்  1953-85 காலப்பகுதியை உள்ளடக்கி தொகுக்கப்பட்ட பேராசிரியர் கைலாசபதி அவர்களின் ஆக்கங்கள் தேர்ந்த நூல்விவரப்பட்டியற் பண்பைக் கொண்டது. இது கால வகைப்படுத்தல் சார்ந்த ஒழுங்கமைப்பைக் கொண்டுள்ளது. இதன் ஒழுங்கமைப்பு நான்கு பகுதிகளை கொண்டது. முதலாவது பகுதி தேர்ந்த நூல்விபரப்பட்டியலாக ஆண்டு ரீதியில் ஆக்கங்களை ஒழுங்குபடுத்துகின்றது. இரண்டாம் பகுதி பேராசிரியர் வழங்கிய உரைகளை தொகுத்து வழங்குகின்றது. மூன்றாம் பகுதி கட்டுரைகளின் அகரவரிசைச் சொல்லடைவையும் நான்காம் பகுதி வெளியீட்டாளர்களின் பட்டியலையும் உள்ளடக்குகின்றது. 1953-85 காலப்பகுயில் வெளிவந்த 238 ஆக்கங்களை இது உள்ளடக்குகின்றது. ஒவ்வொரு பதிவும் தலைப்பு, வெளியீட்டிடம், வெளியீட்டாளர், வெளியீட்டுத் திகதி, பக்கம் ஆகிய விவரங்களை உள்ளடக்குகின்றது. ஒருசில ஆங்கில ஆக்கங்கள் தவிர்ந்த ஏனையவை தமிழ் ஆக்கங்களாகும். நூல்கள் சிறப்புமலர்க் கட்டுரைகள், பருவ இதழ்க் கட்டுரைகள், பத்திரிகைக் கட்டுரைகள் வானொலி உரைகள் போன்றனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.(செல்வராசா 1988).

2005இல் கார்த்திகேசு சிவத்தம்பியால் வெளியிடப்பட்ட Pசழகநளளழச மயசவாபைநளார ளுiஎயவாயஅடில: ய pசழகடைந என்ற நூலானது ஆசிரியரின் வாழ்க்கைக்குறிப்பு பணிகள், ஆர்வத்துநைகள், வகித்த பதவிகள் உட்பட அவரது ஆக்கங்களை ஆவணப்படுத்துகின்ற சுய நூல்விவரப்பட்டியலாகும். ஆங்கலத்தில் எழுதப்பட்ட நூல்கள் தனி நூல்கள்(15), ஒழுங்கமைப்பு பேணப்படாத ஆய்வுக் கட்டுரைகள்(44), கால வகைப்பாட்டில் அமைந்த 1959- 2005 வரையில் எழுதப்பட்ட 504 ஆக்கங்களை உள்ளடக்குகின்றது. பத்திரிகை சஞ்சிகைகளில் வெளி வெந்தவை (சிவத்தம்பி 2005)

தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகர் எம்.எம் றிசாஉதீன் அவர்களால் 2007இல் தொகுக்கப்பட்ட 'ஏ.எம் அபூபக்கரின் எழுத்துப் பணிகள் என்ற நூல்விவரப்பட்டியல் தனிநபர் நூல்விவரப்பட்டியல் வகையைச் சார்ந்தது. இதில் நூல்கள்(20), வெளியிடப்படாத கையெழுத்துப்பிரதிகள்(47), பருவஇதழ் கட்டுரைகள்(117) ஆக மொத்தம் 164 பதிவுகள் தூயி தசம பகுப்பாக்கத்தின் பரந்த பொருட்தலைப்புகளின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. கையெழுத்துப்பிரதிகள் சிறு குறிப்புரைகளை உள்ளடக்குகின்றன. ஏனையவை அடிப்படை நூல்விவரத்தரவுகளை மட்டும் உள்ளடக்குகின்றன.     ( சுநகயரனநநn 2007)
பேராசிரியர் சந்திரசேகரம் அவர்களால் எழுதப்பட்ட நூல்கள், சஞ்சிகைக் கட்டுரைகள், பத்திரிகைகள் கட்டுரைகள் உள்ளடங்கலாக தேர்ந்த நூல்விவரப்பட்டியலாக உருவாக்கம் பெற்ற ஆக்கமானது 433 ஆக்கங்களை உள்ளடக்குகின்றது. எஸ்.எல். சியாத் அஹமட் அவர்களின் முயற்சியில் உருவான ஜெமீல் அவர்களின் அறிவாக்கங்கள் என்னும் ஆக்கம் நூல்கள்,மொழிபெயர்ப்புகள், பதிப்புகள், பதிப்புரைகள், கட்டுரைகள், இரங்கல் கட்டுரைகள், சொற்பொழிவுகள், வானொலி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆய்வுகள் போன்றவற்றை ஆவணப்படுத்துகின்றது. (அகமட் 2010). பதிவுகள் தூயி தசமப்பகுப்புத் திட்டத்தின் அடிப்படையில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. வெளியிடப்படாத ஆய்வேடுகள்(2),  நூல்கள்(11), பதிப்புப் பணிகள்(7), கட்டுரைகள்(71), கலைக்களஞ்சியக் கட்டுரைகள்(43), கலைச்சொல் அகராதிகள்(4), மொழிபெயர்ப்பு(1) ஆகியவற்றை உள்ளடக்கி மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வ. இன்பமோகனால்(2011) தொகுக்கப்பட்ட பேராசிரியர் சோ. கிருஸ்ணராசா அவர்களின் ஆக்கங்கள் 139 பதிவுகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டிருக்கின்றது. 

1.32 பொருட்துறை சார்ந்தவை
தனிநபரை ஒரு பொருட்துறையாகக்கருதி அவர் எழுதிய ஆக்கங்களை மட்டுமன்றி படைப்பாளரைப் பற்றிய ஆக்கங்களையும் தொகுக்கும் முயற்சியானது தனிநபர் நூல்விவரப்பட்டியலின் இன்னோர் அம்சமாகக் கருதத்தக்கது. இந்தவகையில் நாவலரது ஆக்கங்களையும் நாவலரைப்பற்றிய ஆக்கங்களையும் ஆவணப்படுத்தும் முயற்சியானது 'நாவலரியல்' என்ற தலைப்பில் இரு நூலகத்துறை சார்ந்தவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்விவரப்பட்டியலாக 1979இல் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையின் வெளியீடாக நூலுருவாக்கம் பெற்றது. படைப்பாளர் அகரவரிசை ஒழுங்கமைப்பில் ஆவணப்படுத்தப்பட்ட இந்த ஆக்கமானது 365 பதிவுகளை உள்ளடக்குகின்றது. (கிருஷ்ணகுமார், சிவனேசச்செல்வன் 1979). அதேசமயம் இதற்குப் பத்து ஆண்டுகளுக்கு முன்பே ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் விழா புத்தகக் கண்காட்சி (1969) என்ற பெயரில் நாவலர் எழுதி வெளியிட்ட நூல்கள்(26), உரை எழுதி வெளியிட்டவை (8), பரிசோதித்துப் பதிப்பித்தவை(39) நாவலரைப்பற்றிய நூல்கள்(14) என 87 நூல்களின் விவரங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமன்றி நாவலரது ஆக்கங்களின் கால அடிப்படையான வகைப்பாட்டையும் இந்நூல் உள்ளடக்குகின்றது.

சுவாமி விபுலானந்தர் அவர்களின் ஆக்கங்கள் பற்றிய தொகுப்பு சற்குணம் என்பரால் தொகுக்கப்பட்டிருக்கிறது. அடிகளார் பற்றி அறிவதற்கு உதவும் நூல்களும் கட்டுரைகளும், அடிகளாரின் கட்டுரைகளும் நூல்களும் என இரு பகுதிகளாக இந்த ஆவணப்படுத்தல் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. (சற்குணம் 1969).
1990ம் ஆண்டு திருமதி வி.பாலசுந்தரம் அவர்களின் ஆலோசனையில் செல்வி சபாபதியால் தொகுக்கப்பட்ட 'சொக்கனின் ஆக்கங்கள்' சமயமும்; தத்துவமும் (கவிதை-11, கட்டுரை-38), கல்வி(7), இலக்கணமும், மொழியியலும், மரபும் (இலக்கணம்-12), கலைகள்(4), இலக்கியம்(கவிதை-46 நாடகம்-88 கதை-39 அறிஞர் விமர்சனம்-86 போன்ற பொருட்தலைப்புகளை உள்ளடக்கி 356 பதிவுகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

1.4 ஆவணவகைசார் நூல்விவரப் பட்டியல்கள்
1.41 பத்திரிகைகள் சஞ்சிகைகளுக்கான நூல்விவரப்பட்டியல்கள்

வலி தெற்குப் பிரதேசத்தின் பத்திரிகைகள், பருவ இதழ்கள், சஞ்சிகைகள், சிற்றிதழ்கள் - ஒரு நோக்கு என்ற தலைப்பில் சுன்னாகம் பொது நூலக பொன்விழா மலரில் வெளிவந்த கட்டுரையானது கால அடிப்படையில் அமைந்த விவரண நூல்விவரப்பட்டியல் வகையைச் சார்ந்தது. (கோப்பாய் சிவம் 2014).

இலங்கையில் வெளிவந்த தமிழ்ப்பத்திரிகைகள் சஞ்சிகைகளை ஆவணப்படுத்தும் கோப்பாய் சிவத்தின் முயற்சியானது 1985இல் நூலுருப்பெற்றிருக்கிறது. 1841ம் ஆண்டில் வெளிவந்த உதயதாரகை என்ற பத்திரிகை முதற்கொண்டு 1984 வரை வெளிவந்த பத்திரிகை சஞ்சிகைகளின் விபரங்கள் இதில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.
யாழ்ப்பாணத்தில் வெளிவந்த பத்திரிகைகள் சஞ்சிகைகளை ஆவணப்படுத்தும் சௌந்தரராஜசர்மாவின் முயற்சியானது ஒரு குறிப்புரையுடன் கூடிய நூல்விவரப்பட்டியலாக கட்டுரை வடிவில் கருத்தூண் சிறப்புமலரில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. எழுபது பதிவுகளை உள்ளடக்கும் இந்தக் கட்டுரையின் பல பதிவுகள் விவரணப்பாங்கைக் கொண்டவை. ஏனையவை குறிப்புரையுடன் கூடியவை. (சௌந்தரராஜசர்மா 2016);
1.42 ஆய்வுக் கட்டுரைகள்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் உள்ள  ஆய்வுக்கட்டுரைகளின் விபரங்கள் ஒரு பகுப்பாக்க ஒழுங்கில் அமையப்பெற்ற ஒரு நூல்விவரப்பட்டியலாக தட்டச்சுப் பிரதி வடிவில் உருவாக்கப்பட்டிருக்கின்றது. 2011ம் ஆண்டு வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்திற்குச் அனுப்பப்பட்ட 507 முதுமாணி, முது தத்துவமாணி மற்றும் கலாநிதிப்பட்ட ஆய்வுகளின் விபரங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. (யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 2011).
1.43 உசாத்துணை சாதனங்கள்
நூலக பட்டப்பின் தகைமைக் கற்கை நெறியின் பகுதித் தேவையைப் பூர்த்தி செய்யுமுகமாக உருவாக்கப்பட்ட நூல்விவரப்பட்டியலானது 1850-1985 காலப்பகுதியில் இலங்கையில் வெளிவந்த உசாத்துணை சாதனங்களைப் பட்டியல்படுத்துகின்றது. முழுமையான நூல்விபரத் தரவுகளுடன் வெளியீட்டின் தன்மை தொடர்பான சுருக்கக் குறிப்புடன் அமைந்த நூல்விவரப்பட்டியலானது ஒரு விளக்க நூல்விவரப்பட்டியலாகும். (முயசரயெயெவாயசயதயா 1986).

1.44 ஏட்டுச்சுவடிகள்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அன்பளிப்புகளாகப் பெறப்பட்ட ஓலைச் சுவடிகளை ஆவணப்படுத்தும் முயற்சி முன்னாள் நூலகர் திரு சி. முருகவேளால் இரு கட்டமாக ஆரம்பிக்கப்பட்டது. முதலாவது கட்டத்தில் 1992இல் 126 ஏட்டுச்சுவடிகள் தொடர்பான பதிவுகள் அரபு எண் ஒழுங்கில் கல்லச்சுப் பிரதியாக வெளியிடப்பட்டது. (முருகவேள் 1992). இதன் இரண்டாவது கட்டத்தில் 207 ஏட்டுச் சுவடிகள் பதியப்பட்டு 1997இல் நூலகத்தால் கல்லச்சுப் பிரதியாக வெளியிடப்பட்டது. (முருகவேள் 1997).இரு பட்டியல்களும் அரபு எண் ஒழுங்கில் அமைந்த பிரதான பட்டியல், தலைப்புச் சுட்டு மற்றும் பொருட் சுட்டை உள்ளடக்குகின்றன. ஒவ்வொரு பதிவும் தலைப்பு, தலைப்பு இல்லாதவிடத்து அடைப்புக்குறிகளுள் தொகுப்பாளரால் உருவாக்கப்பட்ட இடைத்தலைப்பு,  பிரதியின் பாடத் தொடக்கம், பிரதியின் பாட முடிவு, ஓலைகளின் எண்ணிக்கை, அளவும் பிறபகுதிகளும், குறிப்புகள் ஆகியவற்றை உள்ளடக்குகின்றது. 

1.5 சொல்லடைவுகள்
ஒரு ஆவணத்தின் அல்லது கோப்பின் பொருளடக்க விவரங்களை அடையாளம் காண்பதற்கான அல்லது அப்பொருளடக்கங்களின் அமைவிடங்களை அறிவதற்கான குறிப்புகளைக் கொண்டமைந்த ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட குறிப்புதவு பட்டி சொல்லடைவு என அறியப்படுகின்றது. .
1992இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முதுநிலை உதவி நூலகராக இருந்த என். பாக்கியநாதனால் தொகுக்கப்பட்ட ளநடநஉவ  டிiடிடழைபசயிhல ழக றசவைiபௌ ழக வாந யஉயனநஅiஉ ளவயகக கயஉரடவல ழக அநனiஉiநெ அகர வரிசையிலமைந்த சிறப்புப் பொருட்தலைப்புகளின் கீழ் ஆங்கில ஆக்கங்கள் (292), படைப்பாளர் ஒழுங்கிலமைந்த தமிழ் பிரசுரங்கள்(17), மருத்துவ நூலகத்தில் உள்ள ஆய்வேடுகள்(12) ஆக மொத்தம் 321 ஆக்கங்களை உள்ளடக்குகின்றது. 

றோயல் ஏசியாற்றிக் சொசைட்டியின் பருவ இதழில் வெளிவந்த கட்டுரைகளை ஆவணப்படுத்தும் முயற்சியில் 1990இல் 861 பதிவுகள் அகரவரிசை ஒழுங்கமைப்பில் உருவாக்கம் பெற்றிருக்கின்றது. (செல்வராஜா 1989). இது தட்டச்சுப் பிரதியாக உருவாக்கப்பட்ட ஒரு வெளியீடாக அமைகிறது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆய்விதழான 'சிந்தனை'யில் 1976 முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விசார் உத்தியோகத்தர்களினால் பலதரப்பட்ட பொருட்துறைகளிலும் எழுதிவெளிவந்த 126 ஆய்வுக் கட்டுரைகளுக்கான  சொல்லடைவானது ஆசிரிய அகரவரிசையில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. (சத்தியசீலன் 1994)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையால் வெளியிடப்படும் யாழ்ப்பாணப் புவியியலாளனில் 1983-2000 காலப்பகுதியில் வெளிவந்த 141 கட்டுரைகளை உள்ளடக்கி தயாரிக்கப்பட்ட சொல்லடைவானது அகரவரிசை ஒழுங்கமைப்பைக் கொண்டது. (சின்னராசா 2003)
இலங்கையில் வெளியிடப்பட்ட 150 சிறப்புமலர்களில் வெளிவந்த 2202 கட்டுரைகளைத் தொகுத்து வெளியிடப்பட்ட சொல்லடைவானது பரந்த பொருட்தலைப்புகளின் அடிப்படையில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கிறது (செல்வராஜா 2005).
யாழ்ப்பாண விஞ்ஞான சங்கத்தினால் வருடந்தோறும் வெளியிடப்படும் ஆய்வுக்கட்டுரைகளை ஆவணப்படுத்தும் முயற்சியானது 2014இல் சிறுநூல் வடிவம் பெற்றிருக்கிறது. 1991-2012 காலப்பகுதியில் வெளிவந்த 137 ஆய்வுக்கட்டுரைகளின் விபரங்கள் தூயி தசமப்பகுப்புத் திட்டத்தின் பரந்த பொருட்தலைப்புகளின் அடிப்படையில் ஒழுங்குபடுத்தபட்டிருக்கின்றது. (Pசையடிhயமயச 2014)
கனக செந்திநாதன் அவர்களது படைப்புகளை ஆவணப்படுத்தும் முயற்சியில் பிறந்ததே வி. கந்தவனம் அவர்களால் தொகுக்கப்பட்ட பூச்சரம் என்ற தலைப்பிலான ஆக்கமாகும்.  ஆக்கங்கள்  . நூல்கள்(15), பதிப்பு நூல்கள்;(7), பாட நூல்கள்(6), சிறுகதைகள்(15), நாவல்கள்3), நாடகங்கள்(7), கட்டுரைகள்(73) உட்பட இரசிகமணி பற்றி எழுந்த ஆக்கங்களும் இதில் ஆவணப்படுத்தபட்டுள்ளன. (கந்தவனம் 1976).

முடிவுரை
நூல்விவர ஆவணவாக்கப் பணி என்பது பொருட்துறை சார்ந்த புலமை,  ஆவணப்படுத்தலுக்கான நூலகவியல் அறிவு ஆகிய இரண்டையும் வேண்டிநிற்பதொன்று. நூல்விவர ஆவணவாக்கத்தில் ஈழத்தமிழர்களின் பங்களிப்பு சார்ந்து குறிப்பிடத்தக்க விடயம் நூலகத் துறை சார்ந்தவர்களைவிட நூலகத் துறை சாராதவர்களே ஆவணவாக்கப்பணியில் அதிகம் பங்களிப்புச் செய்திருக்கின்றனர். ஈழத்தமிழ்ச்சமூகத்தின் ஆவணவாக்கப்பணியானது தனிநபர்களின் ஆர்வத்தின் அடிப்படையிலேயே கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது என்பதை மேற்குறித்த ஆய்வு வெளிக்காட்டி நிற்பதுடன் ஆவணப்படுத்தலின் பலதரப்பட்ட பண்புகளிலும் ஆக்கபூர்வமான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்பதையும் இந்த ஆய்வு சுட்டி நிற்கிறது. கால அடிப்படையில் நோக்கும் போது 19ம் நூற்றாண்டின் இரண்டாவது காற்பகுதியில் ஆவணவாக்க முயற்சிகள் முதன்மை பெறத் தொடங்கிவிட்டமையை அவதானிக்க முடியும்.


உசாத்துணைகளும் சான்றுகளும்


1.      Gunasingam, Murugar (2005). Primary sources for history of the Sri Lankan Tamils: a worldwide approach. Sydney: The south Asian Studies Center. 368p.
2.      Hettiaratchi,D.P.E(1927).  Some literary undertakings of the late Simon Casie Chitty. The Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society of Great Britain & Ireland. Vol. 30, No. 80, Parts I, II, III and IV. (1927), pp. 455-460.
3.      Kanapathipillai,K.(1958) Tamil publications in Ceylon. University of Ceylon Review. Vol XVI(1&2)1958.pp6-16
4.      Karunantharajah,R.(1986). The Directories, Encyclopedias, Yearbooks published in Sri Lanka during 1850-1985. [unpublished post graduate Thesis] Colombo: University of Keleniya.
5.      Loganathan,Bhavani.(2006) An Annotated bibliography on Violence against Women in South Asia:actions an dresponse.-Colombo: International center for Ethnic Studies 424p.
6.      Loganathan,Bhavani.(2008). Gendering Humanitarianism:An Annotated bibliography on Gender and Capacity building in Armed Conflict.-Colombo: International center for Ethnic Studies 186p.
7.      Murugaverl, S (1984). Bibliography of Siddha Ayurveda: a preliminary Survey. Jaffna: University of Jaffna.(Unpublished manuscripts).
8.      Murugaverl,S (1965). A bibliographical guide to the study of Saivism-a bibliography submitted in part requirement for University of London Diploma in Librarianship. (Manuscript). 97p.
9.      Muthukumaraswamy,V(1992). Some eminent tamils: writers and other leading figures 19th to 20th centuries. Colombo: Department of Hindu religious and cultural affairs. P.1-5.
10.  Prabhahar,V and Chandrasekar,K(2014). Article Index . Proceedings of the Annual Sessions of Jaffna Science Association (1991-2012). Jaffna: Jaffna Science Association, 2014.32p.
11.  Ranganathan,S.R(1974). Physical bibliography for librarians. 2nd ed. Bombay: Asia publishing house. p21.
12.  Refaudeen, M.M.(2007) The Collected writings of Dr.A.M. Aboobucker: a bibliography of the published and unpublished works.- Oluvil, Library: South Eastern University of Sri Lanka,88p.
13.  Selvarajah, N (2010). Noolthettam: an annotated bibliography of 1000 published writings in Tamil language, by Sri Lankan Tamils, home and abroad. Vol. 6. London: Ayothy Library Services.
14.  Selvarajah, N(1989). An index to the journal of the Royal Asiatic Society(Ceylon Branch). Jaffna: Evelyn Rutnam Institute for Intercultural Studies. 138p.
15.  Selvarajah,S.J (1988). Batticaloania: a bibliography of Batticaloa. Batticaloa: Municipal Council.
16.  Sri Kantha, Sachi (1991). Prostitute in medical literature: an annotated bibliography. New York: Greenwood press,1991. 245p
17.  Thani Nayagam, Xavier S. (1966).  A Reference guide to Tamil Studies: books. Kuala Lumpur:University of Malaya Press.122p.
18.  Thayanathan,S (1983). Published work of Xavier  S. Thani Nayakam. Tamilaram: Dedicated to the memory of Father Thani Nayakam. Jaffna: Theepam Institute, p 97-107

Saturday, September 13, 2014

ஈழத்தமிழ்ச் சமூகமும் ஆவணவாக்கமும்



ஈழத்தமிழ்ச் சமூகமும் ஆவணவாக்கமும்

1.அறிமுகம்
இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு. நிகழ்வு வரலாறாகுவதற்கு அது ஏதோ ஒரு வகையில் பதியப்படுவது அவசியமாகிறது. பதியப்படாதவை அனைத்தும் மறைந்து போகின்றது. உரு, வரி, வடிவம், அலை ஆகிய நான்கு வகைப்பட்ட தகவல் வெளிப்பாட்டு வடிவங்களினூடாக இந்த நிகழ்வு பதியப்படுவதும், பாதுகாக்கப்படுவதும் அடுத்த தலைமுறைக்குக் கையளிக்கப்படுவதும் தொடர்ச்சியாக நடைபெறும்போது சமூகம் ஒன்றிற்குரிய அறிவுத் தொகுதி அதன் அறிவிலும் ஆழத்திலும் கனதிமிக்கதாக மாறுகின்றது. சமூகம் ஒன்றின் ஒட்டுமொத்த அடையாளத்தையும் சமூக உறுப்பினர் ஒவ்வொருவரும் அறிந்து கொள்வதற்கு ஒன்றுக்கொன்று தொடர்புடைய நிகழ்வுகள் வௌ;வேறு காலங்களில் வௌ;வேறு வடிவங்களில் பதியப்படுவதும் அவை பொதுப்பயன்பாடு கருதி ஓரிடப்படுத்தப்படுவதும் அவசியமானது.  
ஒரு சமூகத்தை அடையாளத்தை உறுதி செய்வது அந்த சமூகத்தின் எழுத்துருவப் பதிவேடுகள். இது வெளியிடப்பட்டதாகவோ வெளியிடப்படாததாகவோ இருக்கலாம். தனிமனிதனின் அடையாள அட்டை, தகுதிச் சான்றிதழ்கள், அவனது நாட்குறிப்பேடு, காணி உறுதி போன்றவை வெளியிடப்படாத ஆவணம். தனிமனிதனின் சிந்தனையிலிருந்து உருவாக்கம் பெற்று அது அச்சு வடிவம் பெறும்போது அது வெளியிடப்பட்ட ஆவணம். தனிமனிதன் போன்றே இந்த ஆவணங்கள் குடும்பம் சார்ந்தவை, சமூகம் சார்ந்தவை, நாடு சார்ந்தவை எனப் பரந்;துபட்டதாகவும், தொடர் செயற்பாடு கொண்டதாகவும் இருக்கும்.

ஈழத்தமிழ்ச் சமூகமும் ஆவணவாக்கமும்;
இலங்கைத் தமிழர் என்ற சொற்பதம் உள்நாடு சார்ந்து இலங்கைத் தீவின் வட  மற்றும் கிழக்கு மாகாணங்களில்  வாழும்; தமிழர், கண்டிப் பிரதேசத்தில் வாழும்; மலையகத் தமிழர், கொழும்பு மற்றும் கொழும்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும்; கொழும்புத் தமிழர், கிழக்கு மாகாணத்தில் செறிவாகவும் இலங்கையில் பரவலாகவும் வாழும் இஸ்லாமியத் தமிழர் என நான்கு வகையான தமிழரையும் வெளிநாடு சார்ந்து உலகெங்கிலும் பரந்து வாழும் புலம்பெயர் தமிழரையும்  உள்ளடக்குகின்றது.   ஈழத்து இலக்கிய வரலாற்றில் ஈழத்துப் பூதந்தேவனார் என்ற பெயர் 3000 ஆண்டு கால பழமையை கொண்டிருந்தபோதும் கடந்த இரு நூற்றாண்டு கால வரலாறே எமது கைக்கும் கிடைக்கும் வரலாறாக உள்ளது என்பதைக் கருத்தில்கொண்டு ஈழத் தமிழ்ச் சமூகம் ஆவணப்படுத்தல் செயற்பாட்டில் மிகப்பலவீனமான சமூகம் என்றதொரு குற்றச்சாட்டும் உண்டு. ஈழத்தமிழர் வாழ்வியலில் தனிநபரை விட சமூகத்திற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், தகவலைப் பதிந்து வைப்பதற்கு ஏற்ற நிரந்தர மற்றும் நீடித்துழைக்கக்கூடிய சாதனங்களின் இல்லாமை, வாய்மொழிப் பாரம்பரியத்தில் அதிகம் தங்கியிருக்கும் பண்பு போன்றவை ஆவணவாக்கச் செயற்பாடு சார்ந்து பலவீனமான சமூகம் என்ற கருத்துநிலைக்குள் ஈழத்தமிழ்ச்சமூகத்தை சுலபமாக தள்ளியிருப்பதும், கடந்த இரு நூற்றாண்டு கால வரலாற்று ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டே அதன் ஆவணவாக்கச் செயற்பாட்டை அறிவதும் சாத்தியமாகிறது.

ஆவணவாக்கம் என்ற கருத்துநிலை ஈழத்தமிழ்ச்சமூகத்திற்குப் புதியதொன்றல்ல. பதப்படுத்திய பனையோலைகள் மட்டுமே தாள்களின் கண்டுபிடிப்புக்கு முந்திய ஈழத்தமிழ்ச்சமூகத்தின் ஒரேயொரு  பதிவு ஊடகமாக இருந்தவகையில் படியெடுத்தல் மூலமான ஆவணவாக்கச் செயற்பாடு பரவலாக இருந்திருக்கிறது என்பதையே நாவலர் மற்றும் சி.வை.தாவின் பதிப்புரைகளில் ஒரே விடயம் தொடர்பாக பல ஏட்டுப் பிரதிகள் பயன்பாட்டில் இருந்தமை புலப்படுத்துகின்றது. ஆரம்பகாலத்தில்  அரச குடும்பத்துடன் மட்டுமே  மட்டுப்படுத்தப்பட்டிருந்த சிந்தனைப் பதிவேடுகளின் பயன்பாடு, இலவசக் கல்வி, தாள்களின் அறிமுகம் மற்றும் அச்சின் கண்டுபிடிப்பு போன்றவற்றால்  பொதுசனமயப்படுத்தப்பட்ட காலமுதற்கொண்டு இன்றுவரை பல பண்புகளைக் கொண்டிருக்கிறது.

1.1 ஆவணவாக்கம்: வரைவிலக்கணம்
ஆவணவாக்கம் அல்லது ஆவணப்படுத்தல் என்ற பதம் பரந்து விரிந்த பொருள் கொண்டது. பொதுவான நோக்கில் தரவுகள் நிகழ்வுகள் தகவல்கள் மற்றும் அறிவு ஆகியவற்றைப் பதிகின்ற ஒரு செயற்பாடே ஆவணவாக்கம் (னுழஉரஅநவெயவழைn) என்ற பெயர் கொண்டழைக்கப்படுகின்றது. நூலகவியல் நோக்கில் ஆவணங்களை பெறுதல் கையாளுதல், தொடர்புபடுத்தல் போன்ற செயல்முறைகள் உள்ளடங்கிய கற்கையாக இது பொருள் கொள்ளப்படுகின்றது. (ர்யசசழன 1987). நிகழ்நிலை நூலகத் தகவல் அறிவியல் அகராதி ஒன்று ஆவணவாக்கம் சார்ந்து பொதுநோக்கு, நூலகவியல், தகவல் அறிவியல், புலமை சார் வெளியீடுகள், தரவுச் செய்முறை மற்றும் ஆவணக்காப்பகம் என ஆறு வகையான வரைவிலக்கணங்களைத் தருகின்றது. பொதுவான நோக்கில் எந்தவொரு செய்முறை சார்ந்த முறையான எழுத்துவடிவ விளக்கம் ஆவணவாக்கம் என பொருள் கொள்ளப்படுகின்றது. நூலகவியல் நோக்கில் நிறுவன வளங்களை பாதுகாக்குமுகமாகவும் ஆய்வுக்கு உதவும் வகையிலும் விசேட ஆவணங்களை குறிப்பாக அறிவியல், தொழில்நுட்ப மற்றும் சட்டம் சார்ந்த ஆவணங்களை முறைப்படி சேகரித்தல் ஒழுங்கமைத்தல், சேமித்தல், மீள்பெறுகை செய்தல் மற்றும் பரவலாக்கம் செய்தல் ஆகிய செய்முறைகளை உள்ளடக்குகின்றது. தகவல் அறிவியல் சார்ந்து புலமைசார் வெளியீடு என்ற வகையில் ஆய்வு முயற்சிக்கு துணை போகின்ற தகவல்களை மேற்கோள் காட்டும் நடைமுறை ஆவணவாக்கம்; எனப் பொருள் கொள்ளப்படுகின்றது. ஆவணக் காப்பகங்களில் உசாத்துணை நோக்கத்துக்காகவும் பாவனையாளருக்கான தேடுதல் கருவியாக உதவும் வகையிலும் பதிவேடுகளுக்கு விபரங்களைத் தயாரித்து ஒழுங்கமைக்கும் செயற்பாடாக கருதப்படுகின்றது. தரவுச் செய்முறையில் பொறிமுறை வாசிப்பு தரவுக் கோவைகளை உருவாக்குதல், செயற்படுத்தல், பராமரித்தல் போன்றவற்றுக்கு தேவைப்படுகின்ற விரிவான தகவல்களாக இது பொருள் கொள்ளப்படுகின்றது.(சுநவைண  2004).
ஆவணவாக்கம் என்ற பதம்  அது பயன்படுத்தப்படும் தகுதியினடிப்படையில் வௌ;வேறுபட்ட பொருள் கொண்டதென்று கூறும் கீழைத்தேச நூலகவியலின் தந்தையான எஸ்.ஆர் இரங்கநாதன்; நூல்களின் உயிருடன் அதாவது கருத்துசார் உள்ளடக்கத்துடன் இணைந்து செய்யப்படும் பணியை - குறிப்பாக  விசேட பொருட்துறை ஒன்றில் வெளியிடப்பட்ட நூல்கள் மற்றும் பருவ இதழ்க்கட்டுரைகளின் பேரினநுண்ணினக் கருத்துப்பொருளின் பட்டியை ஆவண நூல்விவரப்பட்டியல் எனப்பெயரிடுவதுடன் அத்தகைய பட்டியானது விசேட பொருட்துறை வல்லுனர்களின் தேவைகளை பூர்த்தி செய்யுமுகமாக தயாரிக்கப்படும்போது அது ஆவணவாக்கப்பட்டி என்றும் அத்தகைய பட்டியை உருவாக்கும் கலை ஆவணவாக்கம் எனவும் குறிப்பிடுகின்றார் (சுயபெயயெவாயn 1974). 

ஆய்வும் ஆவணவாக்கமும்
ஈழத்தமிழ் இலக்கிய உருவாக்கங்களில் காணப்படும் அடிப்படைப் பிரச்சினைகளில் முக்கியமானது ஆய்வுக்கும் ஆவணவாக்கத்துக்கும் இடையிலான தனித்தன்மைகள், வேறுபாடு மற்றும் உறவுநிலைகளைத்  தெளிவாகப் புரிந்து கொள்ளாமையாகும். இதனால் ஆவணவாக்கப் பண்புகளை மிகுதியாகக் கொண்ட இலக்கியங்கள் ஆய்வு நூல் எனப் படைப்பாளரால் விதந்துரைக்கப்படுவது பொதுவான போக்காக உள்ளது. ஆய்வு என்பது புதிதாக ஒன்றை உருவாக்குவது. ஏற்கனவே உள்ள அறிவின் இருப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்டு புதிய அறிவை உருவாக்குவதற்கு அடிப்படையாக இருப்பது. ஆவணவாக்கம் என்பது ஏற்கனவே உருவாக்கப்பட்ட அறிவை உள்ளது உள்ளபடியேயோ, சுருக்கியோ, விரித்தோ, குறை களைந்தோ, தொகுத்தோ மீள உருவாக்கப்படுவது. ஆய்வு என்பது புதிய கண்டுபிடிப்பாகவோ, ஏற்கனவே கண்டுபிடித்த ஒன்றின் தொடர்ச்சியாகவோ அன்றி அதன் இற்றைப்படுத்தலாகவோ அமையலாம். ஆவணவாக்கம் இன்றேல் ஆய்வு இல்லை. ஆய்வுக்கு மூலமே ஆவணவாக்கம். இதன்காரணமாகவே ஆவணவாக்கம் அறிவியல் துறையாக (னுழஉரஅநவெயவழைn ளுஉநைnஉந) ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. தனி நிறுவனமாகவோ அல்லது நிறுவனத்தின் ஒரு பகுதியாகவோ இயங்கி தகவல் வளங்களைப் பெற்றுக் கொள்ளுதல், செய்முறைப்படுத்துதல், பாதுகாத்தல், சுருக்கப்படுத்தல், சாராம்சம் தயாரித்தல், சொல்லடைவுபடுத்தல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ளும் நிலையங்கள் ஆவணவாக்க நிலையங்கள் என  அழைக்கப்படுகின்றன. குறிப்பிட்ட துறை சார்பாக வெளியாகின்ற அண்மைக்காலத் தகவல்களைச் சேகரித்து முறைப்படுத்தி ஒழுங்குபடுத்தும் சாதாரண நூல்விவரப்பட்டியல் முதற்கொண்டு  குறிப்பிட்ட துறை சார்பாக வெளியிடப்படுகின்ற அண்மைக்கால வெளியீடுகளை தேடிக் கண்டுபிடித்துச், சேகரித்து, ஒழுங்குபடுத்தி, அத்துறையின் வளர்ச்சிநிலை பற்றிய மதிப்பீட்டை புதிய ஆக்கமாக ஆய்வாளருக்கு வழங்கும் பொருட்படிநிலையறிக்கைகள் (ளுவயவந-ழக-வாந-யசவ-சுநிழசவ)  வரை இவற்றின் ஆவணவாக்கச் செயற்பாடுகள் பரந்து பட்டதாகவும் ஆழமானதாகவும் அமையும். ஆவணவாக்கத்தின் மிகச் சிறந்த பெறுபேறாக உருவாக்கப்படும் பொருட்படிநிலை அறிக்கைகள் ஆய்வுக்கான அத்திவாரமாக அறிவியல் சார்ந்த துறைகளில் முக்கியத்துவப்படுத்தப்படுத்தப்படுவதுடன் இதற்கான உருவாக்கச் செலவு ஆயிரங்களிலிருந்து இலட்சங்கள் வரை கூடிக் குறையும்.  துரதிருஷ்டவசமாக ஈழத்தமிழ்ச்சமூகத்தின் பட்ட மற்றும் பட்டப்பின்படிப்பு சார்ந்த ஆய்வுகளில் பெரும்பாலானவை ஆவணவாக்கச் செயற்பாடுகளுடன் மட்டுப்படுத்தபட்டுவிடுகின்ற, ஆய்வுக்கான ஆரம்ப முயற்சிகளாக இருப்பதே கண்கூடு. 

1.2 ஆவணவாக்கம் - வகைகள்
பரந்த நோக்கில் ஆவணவாக்கத்தை மூலவகை ஆவணவாக்கம் (ளுழரசஉந னுழஉரஅநவெயவழைn) கருவி வகை ஆவணவாக்கம்; (வுழழட வலிந னழஉரஅநவெயவழைn) என இருபெரும் பிரிவாக வகைப்படுத்தலாம். மூல வகை ஆவணவாக்கத்தில் தரவு, நிகழ்வு மற்றும் தகவல்கள் கூடியவரை உள்ளது உள்ளபடியே பதியப்படுகின்றன. இது அன்றைய சுவடிப்படியெடுப்பு முதற்கொண்டு இன்றைய முழுப்பாட ஆவணப்படுத்தல் (குரடட வநஒவ னுழஉரஅநவெயவழைn) செயற்பாடுவரை உள்ளடக்கும். ஏற்கனவே உள்ள மூல ஆவணத்தை பாதுகாப்பு மற்றும் பயன்பாடு கருதி படியெடுத்தல், குறிப்பிட்ட ஒரு ஆவணம் பல பிரதிகளைக் கொண்டிருக்கும் பட்சத்தில் அவற்றைப் பரிசோதித்து, ஒப்பு நோக்கி மூல ஆவணத்தை இனங்கண்டு பதிப்பித்தல், பலதரப்பட்ட வெளியீடுகளிலும் வெளிவந்த குறிப்பிட்ட படைப்பாளரின் ஆக்கங்களை அல்லது குறிப்பிட்ட துறைசார்ந்த ஆவணங்களைத் தேடிச் சேகரித்து தொகுத்து வெளியிடுதல், கள ஆய்வின் மூலம் வாய்மொழி வரலாறுகள் மற்றும் பாடல்களைப் பதிதல், பண்பாட்டு நிகழ்வுகளை ஆவணப்படுத்தல் போன்றவை மூலவகை ஆவணவாக்கத்தில். கருவி வகை ஆவணவாக்கமானது ஆய்வாளர்களின் இலகுவான பயன்பாட்டைக் கருத்திற் கொண்டு குறிப்பிட்ட படைப்பாளர் சார்ந்த அல்லது துறை சார்ந்த இலக்கியங்களை முறைப்படி பட்டியலிடுதல் என்பதாகும். இது ஒரு நூலகம் அல்லது தகவல் நிலையத்திலுள்ள அனைத்து ஆவணங்களின் விபரங்களைப் பட்டியலிடுகின்ற நூலகப் பட்டியலாகவோ அல்லது குறிப்பிட்ட துறை சார்ந்து அல்லது படைப்பாளர் சார்ந்து உருவாக்கப்படும் நூல்விபரப்பட்டியல் மற்றும் சொல்லடைவு, சாராம்சச் செயற்பாடாகவோ இருக்கும்.

ஆவணவாக்கத்தின் பண்புகளின் அடிப்படையில் பதிப்புசார் ஆவணவாக்கம் தொகுப்புசார் ஆவணவாக்கம் என்ற இருபெரும் பண்புகளாக வகைப்படுத்தலாம். பொதுவான நோக்கில் தொகுப்புப் பணி என்பது பரந்த பொருள் கொண்டது. குறிப்பிட்ட பொருள் சார்ந்த தரவுகள், தகவல்கள் நிகழ்வுகள் போன்றவற்றை பலதரப்பட்ட ஆவணம் சார்ந்த மற்றும் ஆவணம் சாராத தகவல் வளங்களிலிருந்து தேடிச் சேகரித்து பதிதலை இது குறிக்கின்றது. நூலகவியல் நோக்கில் தொகுப்புப் பணி என்பது படைப்புகளின் தொகுப்புகளுடன் மட்டுப்படுத்தப்பட்டுவிடுகின்றது. இது தனித்த ஒரு படைப்பாளரின் பல ஆக்கங்களை தொகுத்தலாகவோ அல்லது பல படைப்பாளரின் ஆக்கங்களின் தொகுப்பாகவோ அமையக் கூடியது. மூல ஆவணத்தில் எந்தவொருமாற்றத்தையும் செய்யாது இது மேற்கொள்ளபடுவது. பரந்த நோக்கில் குறிப்பிட்ட கால வரையறையில் குறித்த துறை சார்நத அல்லது குறித்த படைப்பாளர் சார்ந்த ஆக்கங்களின் விபரங்களைப் பட்டியலிடுகின்ற செயற்பாடும் தொகுப்புபணியாகவே பார்க்கப்;படுகின்றது. பதிப்புப் பணி என்பது தமிழ்ச் சூழலில்; பலதரப்பட்ட வகையில் பொருள் கொள்ளப்படுகின்றது. நூல் ஒன்றை புதிதாக உருவாக்கி அதனை வெளியிடும் செயற்பாடு மற்றும் அச்சிடுதல் செயற்பாடு போன்றவையும் பதிப்புப் பணி என்றே பொருள்கொள்ளப்படுகின்றது. இங்கு அச்சிடுதல் (pசiவெiபெ)இ பதிப்பித்தல் (நனவைiபெ)இ வெளியிடுதல் (Pரடிடiளாiபெ)இ மீள்பதிப்பு (சுநிசiவெ) ஆகிய நான்கு பதங்களுக்குமிடையிலுள்ள வேறுபாடு தொடர்பான தெளிவு அவசியமானது.  பதிப்பு வேறு. வெளியீடு வேறு. ஏற்கனவே உள்ள ஒன்றை திருத்தம் செய்தோ அன்றி செய்யாமலோ மீள வெளியிடுவது பதிப்புப் பணி. ஆக்கம் ஒன்றை அந்த ஆக்கத்தின் படைப்பாளரோ அல்லது வேறு தனிநபரோ அல்லது நிறுவனமோ பொறுப்பேற்று வெளியிடுவது வெளியீட்டுப் பணி. வெளியிடுவதற்கான அச்சிடுதல் பணிகளை மேற்கொள்வது அச்சிடுதல் பணி. வெளியிட்ட பிரதிகள் போதாதபோது அதனை இற்றைப்படுத்தாமலோ, மீளாய்வு செய்யாமலோ அப்படியே மீள வெளியிடுவது மீள்பதிப்பு.  சமூகத்தில் குறிப்பிட்ட ஆக்கத்தின் ஆசிரியர் அறியப்படாதவிடத்து பாதுகாப்பு நோக்கங்கருதியும் பயன்பாடு கருதியும் அதனைப் மீளப்படியெடுத்தல், பருவ இதழ்களில் அல்லது மாநாட்டு வெளியீடுகளில் வெளியிடும்பொருட்டு பதிப்புக்குழு ஒன்றினூடாக ஆய்வுக் கட்டுரைகளை அதன் ஆசிரியரைக் கொண்டே திருத்துவித்தல், பலதரப்பட்ட வெளியீடுகளிலும் வெளிவந்த குறிப்பிட்ட துறைசார்ந்த அல்லது குறிப்பிட்ட படைப்பாளர் சார்ந்த ஆக்கங்களை தேடிச் சேகரித்து ஒழுங்குபடுத்தி வெளியிடுதல் போன்றவை பதிப்புப் பணிகளில் உள்ளடங்கும். பதிப்புப் பணியானது பலதரப்பட்ட பண்புகளையும் பல படிநிலைகளையும் கடந்து வந்திருக்கிறது. சுவடிகள் மற்றும் நூல்களிலிருந்து எழுதி எடுத்து பாதுகாத்தல், சுவடிகள் கையெழுத்துப் பிரதிகளாக தாள்களில் அல்லது சுவடிகளில் இருப்பவற்றை அப்படியே அச்சு வடிவத்துக்கு மாற்றுதல், பல சுவடிகளை ஒப்பு நோக்கி பாடவேறுபாடுகளை உள்ளடக்கி மீள வெளியிடுதல்இ ஒரு ஆக்கம் சார்ந்து எழுதப்படுகின்ற பல்வேறு ஆக்கங்களை தொகுத்து வெளியிடுதல், ஒரு ஆக்கத்தை பயன்படுத்துவதற்கான பல்வேடு தேடல் வழிமுறைகளை ஆக்கத்தின் முன்னே அல்லது பின்னே  உருவாக்குதல் போன்ற பல்வேறு அம்சங்கள் பதிப்புப் பணியில் உள்ளடங்குகின்றன.

ஆவணத்தின் உருவமைப்பு சார்ந்து இது சுவடிகள், பத்திரிகைகள், நூல்கள், சஞ்சிகைகள், இலத்திரனியல் வளங்கள் போன்ற நூலுருச் சாதனங்களை ஆவணப்படுத்தலை குறிக்கிறது. தொழிற்பாடு சார்ந்து நிகழ்வுகள் தரவுகளைப் பதிதல், ஏற்கனவே உருவாக்கப்பட்ட இலக்கியங்களை பதிப்பித்தல், தொகுத்தல், சொல்லடைவுபடுத்தல், சாராம்சப்படுத்தல் போன்றன உள்ளடங்குகின்றன. ஆவணப்படுத்தலின் வியாபகத் தன்மை சார்ந்து தனிமனிதன், குடும்பம், சமூகம், நாடு என்ற வகையில் இந்த ஆவணவாக்கச் செயற்பாடு நடைமுறையில் உண்டு.


2. ஆய்வின் நோக்கம், பிரச்சனை மற்றும் ஆய்வுமுறைமை
இந்த ஆய்வின் நோக்கம் ஈழத்தமிழ்ச் சமூகத்தின் ஆவணவாக்கப்பண்புகளை மீள்பார்வை செய்து இனங்காணலும் முறைப்படி வகைப்படுத்தலுமாகும். இவ்வாய்வானது ஈழத்தமிழ்ச் சமூகத்தின் ஆவணவாக்கம் தொடர்பான பேணப்பட்டுவரும் தகவல்களின் அடிப்படையிலான விரிவான இலக்கியமீளாய்வின் வழி பெறப்பட்டு, நேர்காணல்கள் மற்றும் கலந்துரையாடல்கள் மூலம் செவ்வைபார்க்கப்பட்ட  தரவுகளைத் தேவைக்கேற்ப வரலாற்று, விவரண உத்திகளைப் பயன்படுத்திப் பகுப்பாய்வு செய்து ஈழத்தமிழ்ச் சமூகத்தின் ஆவணவாக்கப்பண்புகளை மீள்பார்வை செய்து இனங்காணவும் முறைப்படி வகைப்படுத்தவும் முனைந்து நிற்கிறது.

ஆய்வில் சரியான தகவல்களைச் சேகரித்து அவற்றை பரிசோதித்துப் புதிய நோக்குகளையும் வெளிப்படுத்தல்களையும் ஒப்பீடுகளையும் இனங்காணும் வகையில் ஆய்வு முறைமை அமைவது இன்றியமையாதது.     இந்த ஆய்வினைப் பொறுத்த வரையில் ஆய்வுமுறைமையானது. தரவுகளை அடிப்படையாகக் கொண்டமைந்த வரலாற்று ரீதியான நிரற்படுத்தல்களையும்,  கோட்பாட்டு ரீதியான வகையீடுகளையும், எளிதில் விளக்கிக்கூறும் வகையில் தொடர்புபடுத்தி; விளக்கிக்கூறும் விவரண முறைமையினை அடிப்படையாகக் கொண்டுள்ளது. தனித்து விவரண முறைமையினை மாத்திரம் பின்பற்றின் அது பண்புகளை வகைப்படுத்தத் தவறிவிடும் என்பதாலும், வரலாற்று ரீதியான பார்வை தகவற் சேகரிப்பு என்ற வட்டத்தினுள் ஆய்வை முடிவுறுத்;த முனையும் என்ற காரணத்தினாலும் ஆராய்ந்து பெறப்பட்ட ஒத்திசைவான முறைமைகள் பலவற்றை இணைத்து ஆய்வின் முழுமையான பரிமாணத்தை வெளிக்கொணரும் வகையில் ஆய்வு முறைமையானது நெறிப்படுத்தப்பட்டுள்ளது.

4. இனங்காணப்பட்ட ஆவணவாக்கப்பண்புகள்
கீழே குறிப்பிடப்படுகின்ற ஆவணவாக்கப்பண்புகள் குறித்த ஆவணத்திற்கென்றே பிரத்தியேகமாக உள்ள பண்பு அல்ல. ஏனெனில் குறித்தவொரு ஆக்கம் கீழே குறிப்பிடப்படும் பண்புகளில் ஒன் றையோ அல்லது பலவற்றையோ கொண்டிருப்பது தவிர்க்க முடியாதது எனினும் அந்த ஆக்கத்தில் எந்தப் பண்பு மேலோங்கியிருக்கின்றதோ அந்தப் பண்பினடிப்படையில் வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு சில ஆக்கங்களில் ஆய்வுத்தன்மை அதிகமாக இருக்கக்கூடும் எனினும் பிரதான பண்பு ஆவணவாக்கமெனில் அதுவே இங்கு கருத்திற்கொள்ளப்படுகின்றது. அதுமட்டுமன்றி ஈழத்தமிழ்ச் சமூகத்தில் இதுவரை எழுந்த அத்தனை ஆக்கங்களையும் இங்கு பட்டியல்படுத்துவது இக்கட்டுரையின் நோக்கமன்று. மாதிரிக்கு சில எடுத்துக்காட்டுக்களைத் தருவதும் கூடியவரையில் ஆரம்பகால இலக்கியங்களை எடுத்துக்காட்டுகளாக கையாள்வதும் இதன் நோக்கமாகும். அவை கிடைக்காத போது தற்போதைய ஆக்கங்களின் மாதிரிகள் எடுத்தாளப்பட்டிருக்கின்றன.

வரலாற்றுத் தகவல்களை ஆவணப்படுத்தும் பண்பு
வரலாற்றுத் தகவல்கள் குறிப்பிட்ட இனம், மதம், மொழி பண்பாடு மற்றும் பொருட்துறை சார்ந்தவை என பலதரப்படும். இவை தொகுப்புப் பணியூடான ஆவணவாக்க செயற்பாட்டின் ஊடாக உருவாக்கப்படுபவை. ஈழத்தமிழ்ச் சமூகத்தின் தொகுப்புப் பணியூடான ஆவணவாக்க செயற்பாட்டின் முன்னோடி என்ற பெருமை சைமன் காசிச்செட்டி அவர்களையே சாரும். இவரது 'தமிழ் புளுராக்' என்ற தமிழ்ப் புலவர் சரிதமும் சிலோன் கசற்றியரும் (1834) ஆய்வுடன் இணைந்த மிக முக்கியமான ஆவணவாக்கப் பணிகளாகும். சிலோன் கசற்றியர் நாடு சார்ந்த வகையில் இலங்கை பற்றிய புவியியல் ரீதியான தகவல் அனைத்தையும் அகர ஒழுங்கில் தொகுத்து தருகின்றது. இதற்கான தரவுகளை நொக்ஸ், கோர்டின், பேர்சிவல், டேவி முதலியோர் எழுத்துக்களிலிருந்தும் சுதேசிய நூல்களிலிருந்தும்  பாரம்பரியச் செய்திகளிலிருந்தும் தொகுக்கப்பட்டிருக்கிறது. (பூலோகசிங்கம் 1970). ஊர் சார்ந்த வகையில் ஆத்மஜோதி நா. முத்தையாவின் ஏழாலை(1977), எங்களுர் ஏழாலையூர்(1994) சீர் இணுவைத் திருவூர் (2004), புங்குடுதீவு மான்மியம் (2012) போன்றன புவியியல் அம்சங்களை மட்டுமன்றி ஊர் தொடர்பான தகவல்களை கூடுதலான வரையில் உள்ளடக்கி தொகுக்கப்பட்டுள்ளது. கலாநிதி பாலசுந்தரத்தின் இடப்பெயராய்வு: காங்கேயன் வட்டாரம்(1988) வடமராட்சி தென்மராட்சி (1989) போன்றவை மற்றும் ஊர்ப் பெயர் தோன்றிய வரலாற்றை ஆவணப்படுத்துகிறது.

யாழ்ப்பாணத்து மானிப்பாய் முத்துத்தம்பிப் பிள்ளை அவர்களால் தொகுக்கப்பட்டு நாவலர் அச்சகத்தினால் 1902இல் வெளியிடப்பட்ட அபிதானகோசம் ஈழத்தின் முதலாவது கலைக்களஞ்சியம்  என்ற பெருமையைப் பெறுவது. வேதாகம புராண இதிகாசங்களில் கூறப்பட்ட தெய்வங்கள், தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள், அசுரர், அவதார புருஷர் போன்ற வாழ்க்கை வரலாற்றுத் தகவல்களையும், நதிகள், புண்ணிய தீர்த்தங்கள் போன்ற இடங்களின் வரலாறுகள், தமிழ்நாட்டின் பண்டைய அரசர், புலவர், வள்ளல்களின் வரலாறுகள் போன்றவை இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்நூலில் உள்ளவை பெரும்பாலும் பல நூல்களிலிருந்தும் எடுக்கப்பட்டவை. பல பதிவுகள் உள்ளதை உள்ளபடியே கூறுபவை, இன்னும் சில சுருக்கமாக்கப்பட்டவை, சில விரிவாக்கப்பட்டவை. பல பதிவுகள் கலைக்களஞ்சியம் போன்று விரிவான தகவலை உள்ளடக்கியவை.

வாழ்க்கை வரலாற்றுத் தகவல்களை ஆவணப்படுத்தும் பண்பு
வாழ்க்கை வரலாற்றுத் தகவல்கள் தனிநபர் சார்ந்ததாகவோ அன்றி குடும்ப வரலாறாகவோ அமையலாம். இதுதவிர தனிநபர் ஒருவரை மையப்படுத்திய விரிவான ஆவணவாக்கமாகவோ அல்லது பல நபர்களை உள்ளடக்கிய தொகுப்பாக்கமாகவோ இருக்கலாம். தமிழ் இலக்கியத் துறையில் தமிழ்ப்புலவர் பலருடைய வாழ்க்கை வரலாறுகளை ஒரே நூலில் உள்ளடக்கி வெளியிடப்பட்ட முதல் நூல் என்ற பெருமையைப் பெறும் சைமன் காசிச்செட்டி அவர்களின் 'தமிழ் புளுட்டாக்'(1859) என்னும் தமிழ்ப்புலவர் சரிதம் தமிழ் இலக்கிய நூல்களைப் பற்றியும் அவர்களின் ஆசிரியர்களைப் பற்றியும் ஆங்கிலத்தில் எழுதப்பெற்ற ஒரு தொகுப்பு நூலாகும். 197 தமிழ்ப்புலவர்களின் வரலாறுகள் இதில் இடம்பெற்றுள்ளன. மேற்படி நூல் உருவாக்கத்திற்கான தகவல் சேகரிப்பானது ஒரு தசாப்பதங்களுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்டது என்பதை 1840ம் ஆண்டு தொடக்கம் வெளிவந்த சிலோன் மகசின் என்ற சஞ்சிகையில் சைமன் காசிச் செட்டி அவர்களால் எழுதப்பட்ட முப்பத்தியிரண்டு அறிஞர்களின் செய்திகள் சான்றாக உள்ளன. இதனை அடிப்படையாகக் கொண்டு எழுந்த சதாசிவம்பிள்ளையின் பாவலர் சரித்திர தீபகம்(1886) முதலாவது தமிழ் நூல் என்ற பெருமையைப் பெறுகின்றது. இதனைத் தொடர்ந்து வெளிவந்த குமாரசுவாமிப் புலவரின் தமிழ்ப் புலவர் சரிதம்(1916), கணேசையரின் ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம்(1933) போன்றவை இவ்வகையைச் சார்ந்தவை.

முத்துக் குமாரசுவாமிப்பிள்ளையால் எழுதப்பட்ட குமாரசுவாமிப்புலவர் வரலாறு (1970), வைத்திலிங்கத்தின் சேர். பொன் இராமனாதனின் வரலாறு(1971), கனக செந்திநாதனின் கவின் கலைக்கு ஒரு கலாகேசரி (1974) போன்றவை மிக விரிவான வகையில்  தனிநபர் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படுத்திய பண்பு கொண்டது. இதற்குப் பின்னரான காலங்களில் தனிநபர்கள் சார்ந்து உருவாக்கப்படும் மணி விழா மற்றும் வைர விழா சார்ந்தோ அன்றி அவர்கள் நினைவாக கொண்டாடப்படும் நூற்றாண்டு விழா சார்ந்தோ வெளியிடப்படும் சிறப்பு மலர்களினூடாகவோ தனிநபர் வரலாறுகள்  எண்ணிறந்த அளவில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன.

1901இல் வெளியிடப்பட்ட விநாசித்தம்பி அவர்களின் 'அயnயைஅpயவாயைச ளுயவொயவாiஅரசயi' என்ற ஆங்கில நூலானது குடும்ப வரலாறை ஆவணப்படுத்திய பண்பு கொண்டது. இதே போன்று தமிழில் எழுதப்பட்ட குடும்ப வரலாற்று நூலாக காசிநாதனின் 'எமது உற்றார், உறவினர் முறை' (1963) அமைகிறது. சில்லாலை இன்னாசித்தம்பி வைத்திய நிலையத்தால் 1983இல் வெளியிடப்பட்ட காக்கும் கரங்கள் என்ற நூலானது இன்னாசித்தம்பி வைத்திய மரபின் பத்துப் பரம்பரையை இரத்தினச்சுருக்கமாக எடுத்துக்கூறுகிறது.

அனுபவங்களை ஆவணப்படுத்தும் பண்பு
தனிநபர் அனுபவங்கள் பெரும்பாலும் நேர்காணல்கள், சொற்பொழிவுகள், மற்றும் கடிதங்கள் வாயிலாகவோ அன்றி பயண இலக்கியங்களாகவோ ஆவணப்படுத்தப்படும் பண்பு பொதுவானதாகும்.  சுதந்திரன் பத்திரிகையில் தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட சுவாமி சச்சிதானந்தாவின் கைலாசம் கண்டேன் என்ற தலைப்பிலான  பயண அனுபவங்கள்; பின்  1960இல் கண்டி திவ்விய ஜீவன சங்கத்தால் நூல் வடிவில் வெளியிடப்பட்டது. ஈழத் தமிழர் போராட்டவரலாற்றில் தனது நூறு நாள் சிறையனுபவங்களை 'தடுப்புக்காவலில் நாம்'(1961) என்ற தலைப்பில் புதுமைலோலனால் தனது மகள் அன்பரசிக்கு மடல்களாக வரையப்பட்டிருக்கிறது. 

மொழிசார் சொற்களை வரிசைப்படுத்தித் தரும் பண்பு
சொற்களின் தொகுப்பு சார்ந்த ஆவணவாக்கப் பணியில் நூல்களின் சொல்லடைவாக நூலில் கையாளப்படும் முக்கிய சொற்களையும் அதன் அமைவிட பக்கத்தையும் நூலின் இறுதியில் உள்ளடக்குதல், அருஞ்சொல் அகராதியாக துறை சார்ந்த அருஞ்சொற்களையும் அதற்கான விளக்கத்தையும் தருகின்ற வகையில் குறித்த நூலின் ஆரம்ப அல்லது இறுதிப்பகுதியிலோ அன்றி தனிநூலாகவோ உருவாக்கப்படல், மொழியின் சொல்வளத்தை அகர ஒழுங்கில் தரும் ஒரு மொழி, இரு மொழி மற்றும் பலமொழி அகராதி வடிவத்தில் தொகுக்கப்படல், குறிப்பிட்ட பொருட்துறை சார்ந்த அருஞ் சொற்களுக்கான விளக்கங்களைப் பட்டியலிடுகின்ற பொருள் அகராதியாக உருவாக்கப்படல் போன்ற பண்புகளை இனங்காண முடியும்.  

ஜி.யூ போப் அவர்களால் 1900 ம் ஆண்டு திருவாசகத்துக்குச் செய்யப்பட்ட ஆங்கில தமிழ்ச் சொல்லடைவு நூலின் பகுதியாக உருவாக்கப்படும் சொல்லடைவுப் பண்பைக் கொண்டது. தமிழ்மொழியின் சொல்வளத்தை அகர வரிசையில் முழுமையாகத் தரும் முதல்முயற்சியாக 58,500 சொற்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண அகராதியானது (1842),  ஒரு மொழி அகராதிக்கான பண்பைக் கொண்டது.  சங்க இலக்கியங்களிலும், சங்க மருவிய இலக்கியங்களிலும் பிற்றைச் சான்றோர் இலக்கியங்களிலும் வருகின்ற அருஞ்சொற்களாகிய இலக்கியச் சொற்களை தொகுத்து உருவாக்கப்பட்ட குமாரசுவாமிப்புலவரின் இலக்கியச் சொல்லகராதி, சொற்பொருளுக்கு அடிப்படை ஆதாரமாக நூற்சான்றுகளைப் பயன்படுத்தும் புதிய பண்பை உள்ளடக்கி  வல்வெட்டித்துறையைச் சேர்ந்த கு.கதிரவேற்பிள்ளையின் அரும்பணியில் உருவான தமிழ்ச்சொல் அகராதி, ந.சி கந்தையாபிள்ளையின் செந்தமிழ் அகராதி(1950) தமிழ்ப்புலவர் அகராதி, தமிழ் இலக்கிய அகராதி (1953) காலக்குறிப்பு அகராதி 1960, திருக்குறள் அகராதி (1961) போன்றன ஒரு மொழி அகராதிப்பண்பு கொண்டவை.

நூல்விபரத்தரவுகளைத் திரட்டித்தரும் பண்பு
நூல்விவர ஆவணவாக்கமானது நூலின் அடிப்படைத் தகவல்களை மட்டும் தரும் முறைப்படுத்தப்பட்ட நூல்விவரப்பட்டியலாகவோ அல்லது நூலின் விவரங்களுடன் நூல் பற்றிய சிறு குறிப்புகளை உள்ளடக்கும் குறிப்புரை நூல்விவரப்பட்டியலாகவோ அதுவுமன்றி குறிப்பிட்ட நூல் தொடர்பான அதிகளவு விவரங்களைத் தரக்கூடிய விளக்க நூல்விவரப்பட்டியலாகவோ அமையலாம்.

முறைப்படுத்தப்பட்ட வகையில் நூல்களின் விவரங்களைத் தரும் பண்பானது பொதுவானதும் அதிகம் வழக்கிலுள்ளதுமான நடைமுறையாக உள்ளது. இது படைப்பாளர் நூல்விவரப்பட்டியலாகவோ அல்லது பொருள் சார் நூல்விவரப்பட்டியலாகவோ அமையலாம். பொருள் சார் நூல்விவரப்பட்டியலானது நாடு, மொழி, இனம், பொருட்துறை என மேலும் வகைப்படுத்தப்படுகிறது. முறைப்படுத்தப்பட்ட நூல்விவர ஆவணவாக்கத்தின் முன்னோடி என்ற பெருமையையும் சைமன் காசிச்செட்டியே பெறுகின்றார். 1848 ம் ஆண்டு யூன் 3, 1849 பெப்ரவரி 24, மற்றும் டிசம்பர் 1 ஆகிய திகதிகளில் திகதி இலங்கை றோயல் ஏசியாற்றிக் சங்கத்தில் இவரால் வாசிக்கப்பட்ட தமிழ் நூற்பட்டியலானது ஈழத்து நூல்விபரப்பட்டியல் வரலாற்றின் முன்னோடி முயற்சி எனக் கருதத்தக்கது. மூன்று பிரதான பொருட்தலைப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இப்பட்டியலின் முதலாவது பிரிவான மொழியியலில் 74 நூல்களின் விபரங்களும் இரண்டாவது பிரிவான புராண இலக்கியம் மற்றும் வரலாறு வாழ்க்கைச் சரிதம் என்ற பகுதியில் இந்துக்கள், கிறிஸ்தவர், இஸ்லாமியர் ஆகிய மூன்று மதம் சார்ந்தும் உள்ள படைப்பாளரின் 82 ஆக்கங்கள் பற்றிய தகவல்களும் மூன்றாவது பிரிவான சமயம் தத்துவம் பற்றிய பகுதியில் 153 நூல்களும் ஆக மொத்தம் 309 நூல்களின் விபரங்கள் இடம்பெறுகின்றன. தமிழ் தவிர்ந்த ஏனைய மொழிகளில் வெளியிடப்பட்ட தமிழியல் சார்ந்த 1322 நூல்களை பதினான்கு பொருட்தலைப்புகளின் கீழ்  பட்டியல்படுத்துகின்ற தனிநாயகம் அடிகளின் 'சுநகநசநnஉந பரனைந வழ வுயஅடை ளுவரனநைள'(1966)இ 1955-70 காலப்பகுதியில் ஈழத்தில் எழுந்த நூல்களின் விவரங்களை பதினொரு தலைப்புகளில் ஒழுங்குபடுத்தித்தரும் கனகசெந்திநாதனின் 'ஈழத்துத் தமிழ்நூல் வழிகாட்டி'(1971)இ இலங்கையில் முஸ்லிம் எழுத்தாளர்கள் ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பினை 1977 நூல்களில் கால அடிப்படையில் எடுத்துக்கூறும் 'சுவடி ஆற்றுப்படை' (4 தொகுதிகள் 1850-2000) என்பன முறைப்படுத்தப்பட்ட நூல்விவரப்பட்டியற் பண்பைக் கொண்டவை. 

அப்புத்துரையின் 'காங்கேயன் கல்விவட்டாரத்தில் எழுந்த நூல்கள்' என்ற நூல்விபரப்பட்டியலும், 'டியவவiஉயடழnயை' என்ற பெயரில் மட்டக்களப்புப் பிரதேசம் சார்ந்த ஆக்கங்களின் தொகுப்பான செல்வராஜாவின் நூல்விவரப்பட்டியலும் பிரதேசம் சார்ந்த நூல்களின் விவரங்களை முறைப்படுத்திய ரீதியில் தரும் பண்பைக் கொண்டிருக்கிறது.

இலண்டனிலிருந்து 2000ம் ஆண்டு முதல் செல்வராஜா அவர்களால் வெளியிடப்படும் 'நூல்தேட்டம்' குறிப்புரைப் பண்பையும் உள்ளடக்கிய தொன்று.  இலங்கை எழுத்தாளர்களால்,  தமிழில் வெளியிட்ட அனைத்து நூல்களும் குறிப்புரையுடன் கூடியதாக இத்தொகுப்பில் இடம்பெறுகின்றது. ஒவ்வொரு தொகுதியிலும் 1000 நூல்கள் என்ற ரீதியில் இதுவரை ஆறு தொகுதிகளில் 6000 ஈழத்துத் தமிழ் நூல்கள் பற்றிய தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. 1970 இல் உருவான எவ்.எக்ஸ்.சி நடராசாவின் 'ஈழத்துத் தமிழ் நூல் வரலாறு' விளக்க நூல்விவரப்பட்டியல் பண்பைக் கொண்டிருக்கிறது. 1993இல் சிவசண்முகராஜாவினால் எழுதப்பட்ட 'ஈழத்துச் சித்த மருத்துவ நூல்கள்: ஓர் அறிமுகம்' என்ற நூலும் விளக்க நூல்விவரப்பட்டியல் என்ற வகைக்குள் அடங்குகின்றது. 1980களுக்குப் பின்னர் குறிப்பிட்ட படைப்பாளரின் ஆக்கங்களைப் பட்டியற்படுத்தும் பண்பு இனங்காணப்படுவதுடன் நாவலர், கைலாசபதி, சிவத்தம்பி, கமால்தீன், எவ்.எக்ஸ். சி நடசாசா ஆகியோரின் ஆக்கங்களின் விவரங்கள் பட்டியல்படுத்தப்பட்டு நூலுருவம் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பத்திரிகைச் செய்திகளின் பதிவு பேணும் பண்பு
பத்திரிகைச் செய்திகளை வெட்டிப் பொருத்துமான தலைப்புகளில் ஒழுங்குபடுத்தும் பணியானது ஆவணப்படுத்தலின் மிக முக்கிய அம்சமாகக் கருதப்படுகின்றது. இந்த வகையில் ஈழத்தமிழர்களின் 100 வருட வரலாற்றை பத்திரிகைச் செய்திகள் மற்றும் தகவல்கள் இரண்டும் இனைந்த வகையில் ஆவணப்படுத்தி வருங்காலத் தலைமுறையினருக்கு வழங்கும் ஆவணவாக்கப்பணியாக கடந்த 45 ஆண்டுகளாக குரும்பசிட்டி இரா. கனகரத்தினத்தின் பத்திரிகை துணுக்குச் சேகரிப்பைக் கொள்ள முடியும். இலங்கை வாழ் தமிழர்கள் என்றில்லாது, உலகளாவிய தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகளை வாழ்க்கை வரலாறுகள், சமய வரலாறுகள், பெரியார்கள், சமயமும் சமயத் தலங்களும், இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்கள், தமிழக - இலங்கைத் தொல்லியல் ஆய்வுகள், சிங்கள மக்கள் மொழி, பண்பாடு, சிங்களவர் - தமிழர் தொடர்புகள், தமிழர் கலைகள், தமிழர் கலையும் பண்பாடும், உலகளாவிய தமிழர் ஆகிய பொதுத் தலைப்பு மற்றும் தனித்தலைப்புகளில் ஏறத்தாழ 7000 கட்டுரைகளை அவர் சேகரித்து வைத்துள்ளார். ஒவ்வொரு தலைப்பையொட்டி 10 முதல் 300 கட்டுரைகள் வரை அவருடைய ஆவணக் காப்பகத்தில் உண்டு.

இதேபோன்று சுனாமி: பத்திரிகை நறுக்குகள்; என்ற தலைப்பில் சங்கானையைச் சேர்ந்த கணேஷ் அவர்களால் பலதரப்பட்ட பத்திரிகைளிலிருந்தும் வெட்டியெடுக்கப்பட்டு 4500க்கும் மேற்பட்ட பத்திரிகை நறுக்குகளை யு3 அளவுள்ள 338 தாள்களில் ஒட்டி 34 பொருட்தலைப்புகளின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்ட 4500க்கும் மேற்பட்ட பத்திரிகை நறுக்குகளும் குறிப்பிடப்படவேண்டியதொன்று..

இலங்கையில் வெளியிடப்பட்ட பலதரப்பட்ட பத்திரிகைகளையும் மையப்படுத்தி 2005இல் பொது நூலகராக தனது பணியை வரித்துக் கொண்ட அனலைதீவு சௌந்தரராஜனின் தனிப்பட்ட ஆர்வம் காரணமாக தொடங்கப்பட்ட பத்திரிகை நறுக்குகளை உருவாக்கும் பணியானது சுனாமி, வடக்கின் வசந்தம், தேச அபிவிருத்தி, பிரதேச அபிவிருத்தி, கல்வி, விவசாயம், மருத்துவம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட தலைப்புகளின் உடுவில் மற்றும் சுன்னாகம் பொது நூலகங்களில் சேமிக்கப்பட்டிருக்கிறது. இது பத்திரிகையில் வெளியாகின்ற கட்டுரைகளை மட்டும்;  வெட்டிப் பொருத்தமான தலைப்புகளின் கீழு; ஒழுங்குபடுத்திச் சேகரிக்கும் பண்பாக இனங்காணப்படுகின்றது. இந்தவகையில் இசை, நடனம், அரங்கு எனக் கலைத்துறையை மட்டும் முதன்மைப்படுத்தி கணிசமான பத்திரிகைத் தகவல்களை ஆவணப்படுத்தியிருக்கும் ஆசிரியர் குகதாசனின் பணியும்; குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தகவல்களைத் தொகுத்தளிக்கும் பண்பு
ஈழத்தமிழ்ச சமூகத்தின் அண்மைக்காலங்களில் அதிகம் இனங்காணப்படும் பண்பாக இது உள்ளது. சஞ்சிகைகள் மற்றும் பத்திரிகைகளில் வெளியிடப்படும் ஆக்கங்களையோ தகவல்களையோ ஒரு தொகுப்பாக ஆவணப்படுத்தும் பண்பு ஈழத் தமிழ் இலக்கியங்களின் முக்கிய போக்காக இனங்காணப்படுகிறது. இந்த வகையில் த.இராமநாதபிள்ளையின் இலக்கிய இலக்கண ஆய்வுரைகள்(1965), சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்களால் எழுதப்பெற்ற பதிப்புரைகளை தொகுத்து வெளிவந்த 'தாமோதரம்' (1971), ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தின் தொகுப்பான  ந. சபாரத்தினத்தின் 'ஊரடங்கு வாழ்வு(1985), சற்றடே றிவியூ ஆங்கலப்பத்திரிகைகளின் தலையங்கம் உட்பட பல பதிவுகளை உள்ளடக்கிய சிவநாயகத்தின் ' Pநn யனெ வாந புரn'இ தினக்குரல் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத் தொகுப்பாக தனபாலசிங்கத்தின் நோக்கு மற்றும் ஊருக்கு நல்லது சொல்வேன் போன்றவை, பத்தி எழுத்துகளின் தொகுப்பான யேசுராசாவின் தூவானம் போன்றவை இத்தகைய பண்பைக் கொண்டவை. இதே போன்று சஞ்சிகைகளில் வெளிவந்த கவிதைகள் கட்டுரைகள் மற்றும் சிறுகதைகள் அவ்வப்போது தொகுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டிருப்பது கண்கூடு.

சமூக வழக்காறுகளை ஆவணப்படுத்தும் பண்பு
சமூக வழக்காறுகளை ஆவணப்படுத்தும் பண்பு ஈழத்து இலக்கியங்களில் மிக குறைவாக இனங்காணப்படினும் நாட்டார் பாடல்கள் கணிசமான முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது. முல்லைத்தீவைச் சேர்ந்த த.கைலாயபிள்ளையின் கதிரையப்பபள்ளு(1927), முள்ளியவளையைச்சேர்ந்த சி.ச. அரியகுட்டிப்பிள்ளையின் அருவிச்சிந்து, கதிரையப்பபள்ளு, பண்டிப்பள்ளு, குருவிப்பள்ளு என்ற தலைப்பிலான அருவி வெட்டுப்பாடல்கள் (ஆண்டு இல்லை) கீழ்கரவையம்பதி வ.கணபதிப்பிள்ளையின் வேலப்பணிக்கன் பெண்சாதி அரியாத்தை பேரில் ஒப்பாரி(1934), முல்லைமணியின் கமுகஞ்சண்டை(1979); கல்விவெளியீட்டுத் திணைக்களத்தின் நாட்டார் பாடல்கள்(1976), யாழ்ப்பாணம் மு. இராமலிங்கத்தின் வட இலங்கையர் போற்றும் நாட்டார் பாடல்கள்(1961), தி. சதாசிவ ஜயரின் மட்டக்களப்பு வசந்தன் திரட்டு (1961), சு. வித்தியானந்தனின் மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள்(1960) குறிப்பிடத்தக்கவை.
பேராசிரியர் சு. வித்தியானந்தனின் அலங்காரரூபன் நாடகம்(1962), மூவிராசாக்கள் நாடகம்(1966), ஞானசவுந்தரி நாடகம்(1967) போன்றவை கூத்துச் சாந்த ஆவணப்படுத்தல் முயற்சியாகும்.
பீற்றர் பேர்சிவல் பாதிரியாரின் திருட்டாந்த சங்கிரம் (1843) பழமொழி சார்ந்து 1823 பழமொழிகளை தொகுப்பாகும். சச்சி மாஸ்ரரின் மக்கள் வாழ்வில் பழமொழி என்பது விளக்கக் கட்டுரைப் பாங்கைக் கொண்டது. சி. பத்மநாதனின் இலங்கைத் தமிழர் தேச வழமைகளும் சமூக வழமைகளும் என்ற நூல் சமூகத்தின் சட்டநெறிகளைத் தொகுத்துத் தரும் ஒரு தொகுப்பு ஆவணப் பண்பு கொண்டது.

உருநிலைச் சேகரிப்புகளை ஆவணப்படுத்தும் பண்பு
நூலகமொன்றின் முக்கிய தகவல் வளமாகக் கருதப்படும் உருநிலைச் சேகரிப்புகளில் கலைப்பொருட்கள், கருவிகள், உபகரணங்கள் போன்றவை உள்ளடங்கும். இவை 1. கலை பிரயோக அறிவியல் சார்ந்தவை. (எ-டு விளையாட்டுப் பொருட்கள்) 2. மனிதப்பண்பியல் சார்ந்தவை (எ-டு இசைக்கருவிகள்)  3. அறிவியல் சார்ந்தவை (எ-டு மனித எலும்புத் தொகுதி) 4. சமூக அறிவியல் சார்ந்தவை (நாணயங்கள், தபால் தலைகள்) என நான்கு வகைப்படும். உருநிலைச் சேகரிப்புகளை ஆவணப்படுத்தும் தன்மையில் பொழுதுபோக்கு நோக்கம், பண்பாட்டு அம்சங்களை பாதுகாக்கும் நோக்கம் ஆகிய இரண்டும் முக்கியம் பெறுகின்றன. இந்த வகையில் அருள்சந்திரனின் 'யாழ்ப்பாணப் பெட்டகம்' கணிசமானளவு யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய கட்டிட அமைப்புகள், கலைகள், பண்பாட்டுப் பொருட்கள் உள்ளிட்ட உருநிலைச் சேகரிப்புகளை 32 பொருட்தலைப்புகளில் 3250 புகைப்படங்களினூடாக ஆவணப்படுத்தியிருக்கிறது. தபால்தலைகள் மற்றும் நாணயங்களை அதன் உண்மை வடிவத்தில் ஆவணப்படுத்துவதாக  அனலைதீவு தர்சனின் பணி அமைகிறது. ஆயிரம் மூலிகைத் திட்டத்தினூடாக தமிழர்பிரதேசத்தில் காணப்படும் அரிய மூலிகைகளை ஓரிடத்தில் சேகரித்து பராமரிப்பது மட்டுமன்றி அது தொடர்பான விவரக்குறிப்புகளைப் பட்டியல்படுத்துவதாகவும் மூலிகை பாதுகாப்புச் சபையின் ஸ்தாபகர் வைத்தியர் சந்திரமோகனின் பணி அமைகிறது.

படியெடுத்தல் மூலம் மீட்டுருவாக்கும் பண்பு
மூல ஆவணத்தில் எந்தவித மாற்றமும் செய்யாது அதனை பாதுகாப்பு நோக்கங்கருதி மீள வெளியிடும் இப்பணியானது எழுதிப் படியெடுத்தல், கையெழுத்துப் பிரதியை அச்சுக்கு மாற்றுதல், கையெழுத்துப் பிரதியை பரிசோதித்து அச்சுக்கு மாற்றுதல், அச்சுப்பிரதியை மீள அச்சிடுதல், அச்சிலுள்ளதை அதன் வடிவத்திலேயே ஆவணப்படுத்தல் போன்ற பலதரப்பட்ட பண்புகளைக் கொண்டது. எழுதிப் படியெடுக்கும் பணியானது அச்சின் கண்டுபிடிப்பிற்கு முன்னரான பொது வழக்கிலிருந்த ஆவணவாக்கச் செயற்பாடாகும். நாவலர் மற்றும் பதிப்புப் பணியில் ஈடுபட்ட 19ம் நூற்றாண்டுப் புலமையாளர்களின் பதிப்புப் பணிக்கு மூலமாக இருந்தது எழுத்துமூலத்திலிருந்த மூல ஆவணத்தின் பிரதிகளேயாகும்.  இது சுவடிகளில் எழுதப்பட்ட ஆக்கங்களை பல்வேறு பிரதிகளாக ஆக்கும் செயற்பாட்டைக் குறிக்கிறது. பஞ்சாட்சரசர்மாவின் 'அஷரபோதினி', விவிக்த பதாவலி போன்ற கிரியா பத்ததிகள் படியெடுத்தல் மூலம் மீட்டுருவாக்கும் பண்பு கொண்டவை.(கோப்பாய் சிவம் 1980)

இதுதவிர அச்சிடப்பட்ட ஆவணமொன்றின் பிரதிகள் அனைத்தும் அழிந்தநிலையிலோ எடுக்கமுடியாத நிலையிலோ இருக்கும் அதேசமயம் மீள்பதிப்புச் செய்வதற்கான வாய்ப்பும் இல்லாத போது அச்சுப் பிரதியை மீண்டும் கையெழுத்துப் பிரதியாக ஆவணப்படுத்திய முயற்சியொன்றும் இவ்வாய்வில் இனங்காணப்பட்டிருக்கிறது. குமாரசுவாமிப்புலவரின் இலக்கியச்சொல்லகராதியானது அவரது மகன் முத்துக்குமாரசுவாமிப்பிள்ளையால் 1965இல் நான்கு தொகுதிகளாக எழுதித் தொகுக்கப்பட்டு குமாரசுவாமிப்புலவர் நூலகத்தில் பேணப்படுகிறது.

அச்சுப்பதிப்பின் வழி பாதுகாக்கும் பண்பு
ஈழத்தமிழரின் பெரும்பாலான ஆரம்பகால இலக்கியங்கள் சுவடிகளில் பதியப்பட்டு பின்னர் கையெழுத்துப்பிரதிகளாக தாள்களில் பேணப்பட்டு அதன் பின்னர் அச்சு வடிவம் பெற்றவை. சித்தமருத்துவத்தின் முக்கியத்துவத்தை உய்த்துணர்ந்து அது தொடர்பான சுவடிகளை தேடிச் சேகரித்து அவற்றை அடிப்படையாகக் கொண்டு ஏழாலை க.  பொன்னையா அவர்களின் பதிப்பில் உருவான பரராசசேகரத்தின் ஏழு தொகுதிகள்(1930-36), சொக்கநாதர்தன்வந்திரியம்(1933), செகராசசேகர வைத்தியம், அமிர்தசாகரம்(1927), பதார்த்தசூடாமணி(1927), வைத்தியசிந்தாமணி((1932),, வைத்திய புராணம்((1933), அங்காதிபாதம், வைத்தியதெளிவு(1930) போன்றவை சுவடிநிலையிலிருந்து நேரடியாக அச்சுப்பதிப்பாகவும் முத்துக்குமாரசுவாமிப் பிள்ளையின் கவித்திரட்டு(1964) கையெழுத்துப் பிரதிநிலையிலிருந்து அச்சுப்பதிப்பாகவும் மாற்றம் பெற்றவை.

மீள்பதிப்பினூடாக தகவலைப் பரவலாக்கும் பண்பு
தமிழ்மண் பதிப்பகம், ஆசிய கல்விச் சேவை நிறுவனம் ஈழத்தமிழரின் ஆரம்பகால இலக்கியங்களை அழியவிடாது பாதுகாக்கும் நோக்குடன் மீpள்பதிப்புப் பணிகளை மேற்கொண்டிருக்கின்றன. ஈழத் தமிழ் இலக்கியம் சார்ந்து மீள்பதிப்புப் பணிகள் எண்ணிறந்த அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளமையால் இதற்கான எடுத்துக்காட்டுகளை இங்கு பட்டியலிடுவது தேவையற்றது எனினும் ஒருசில ஆரம்ப கால நூல்களின் மீள்பதிப்பு பணிகளை குறிப்பிடுவது பொருத்தமானது. மீள்பதிப்புப் பணிகளில் சுன்னாகம் குமாராமிப் புலவரால் பதிப்பிக்கப்பட்ட இதோபதேசம்(1886), சகுலமலைக்குறவஞ்சி நாடகம்(1895) இரண்டும்; குறிப்பிடத்தக்கவை (முத்துக்குமாரசுவாமிப் பிள்ளை 1970). கணேசையரின் ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம்(1939), சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமர்சனம்(1928) போன்றவை குறிப்பிடத்தக்கவை.

பாடபேத ஆய்வுடன் கூடிய குறை களையும் பண்பு
சுவடி வடிவில் கவனிப்பாரற்றுக் கிடந்த பழம்பெரும் இலக்கியங்களின் பிரதிகளை தேடிச் சேகரித்து பதிப்பிக்கும் பணியாகவே ஈழத் தமிழ்ச் சமூகத்தின் ஆரம்பகால ஆவணப்படுத்தல் முயற்சிகள் இனங்காணப்படுகின்றது. இத்தகைய பதிப்பு  முன்னோடிகளாக ஆறுமுகநாவலரையும் (நாவலர்) சி.வை.தாமோதரம்பிள்ளையையும் (சி.வை.தா) குறிப்பிடுவது மிகப் பொருத்தமானது. பதிப்புத் துறையில் 19ம்  நூற்றாண்டின் மத்திய பகுதி நாவலர் காலம் எனப்படுகின்றது. 'நல்லைநகர் நாவலர் பிறந்திலரேல் சொல்லுதமிழ் எங்கே சுருதி எங்கே' சி.வை.தாவினால் புகழப்படுமளவிற்கு நாவலரின் பணி மகத்தானது. சிறந்த உரையாசிரியர், நூலாசிரியர், சொற்பொழிவாளர், பிரசங்கி என்பதற்கும் மேலாக அழிவுறும் நிலையிலிருந்த பெரும்பாலான சுவடி நூல்களை மீளத் தமிழ்ச்சமூகத்திற்கு அளித்த ஆவணவியலாளர் என்பது அனைத்திலும் மேலானது. நாவலரின் பதிப்பு முயற்சிகள் 1849இல் சௌந்தியலகரி மூலமும் எல்லப்பநாவலர் உரையும் என்ற நூலுடன் தொடங்குகின்றன. தொடர்ந்து நாவலர் சூடாமணிநிகண்டு (1849), நன்னூல் விருத்தியுரை மூலமும் உரையும்(1851), திருக்கோவையார் மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்(1860), கொலை மறுத்தல் (1860), மறைகையந்தாதி(1860), திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்(1861), உபமான சங்கிரகமும் இரத்தினச் சுருக்கமும் (1866) சேதுபுராணம்(1866), இலக்கணக்கொத்து, இலக்கணச் சூறாவளி, தொல்காப்பியச் சூத்திரவிருத்தி (1866), அருட்பா(1866), சிதம்பரமும்மணிக்கோவை(1867), அருணகிரிநாதர் திருவகுப்பு (1867), பதினொராம்திருமுறை(1869), கோயிற்புராணம், நால்வர் நான்மணிமாலை, பெரிய கோயிற்புராணம், பெரியநாயகி கலித்துறை, முதலான எழுபதுக்கும் மேற்பட்ட நூல்கள் பிழையறப் பதிப்பிக்கப்பட்டது ( கனகரத்தினம் 2007).

பதிப்புப் பணியில் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதி சி.வை.தா காலம் எனப்படுகின்றது. சி.வை.தாவின் பதிப்புகளில் இறையனார் களவியலுரையும் தொல்காப்பியப் பொருளதிகாரமும் தமிழ் அன்னையின் இரு கண்கள் என்றும் இந்த இரண்டையும் பதித்துவியதே சி.வை.தாவுக்கு இம்மைக்கும் மறுமைக்கும் போதுமானது என்கிறார் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை. (கணபதிப்பிள்ளை) இவரின் பதிப்புரைகள் பலதுறைப்பட்ட ஆராய்ச்சிகளைக் கொண்டவை. பதிப்புப் பணியிலே நாவலரை தனது குருவாகக் கொண்ட சி.வை.தா நாவலரின் மறைவுக்குப் பின்னர் பதிப்புப் பணியையே தனது வாழ்நாள் கடமையாகக் கொண்டிருந்தார். இவரது பதிப்பு முயற்சிகள் 1853இல் தொடங்குகின்றன. நீதிநெறி விளக்கம் (1853), தொல்காப்பியம்- சொல்லதிகாரம்- சேனாவரையம் (1868), வீரசோழியம் - பெருந்தேவனாருரை(1881), தணிகைப் புராணம், இறையனாரகப்பொருள்- நக்கீரருரை(1883), தொல்காப்பியப் பொருளதிகாரம்(1885), கலித்தொகை(1887), இலக்கண விளக்கம், சூளாமணி(1889), தொல்காப்பியச் சொல்லதிகாரம்(1892) முதலான நூல்களைப் பதிப்பித்து வழங்கியதன் மூலம் சிறந்ததொரு ஆவணவியலாளராக இனங்காணப்படுகின்றார். குமாரசுவாமிப்புலவரின் யாப்பருங்கலக் காரிகை உரை(1900), ஆசாரக்கோவை(1900), நான்மணிக்கடிகை(1900), ஆத்திசூடி வெண்பா மற்றும் சிசேத்திர விளக்கம்(1901), உரிச்சொனிகண்டு, பழமொழி விளக்கம், திருவாதவூரர் புராணம்(1902) ஆகியனவும் இத்தகைய பண்பைக் கொண்டது. 

தொழினுட்பத் துணையுடன் எண்ணிமப்படுத்தும் பண்பு
ஈழத்தமிழர் இலக்கியங்களை எண்ணிமப்படுத்தும் பணியில் நூலக நிறுவனத்தின் பணி அளப்பரியது. இதனால் உருவாக்கப்பட்ட எண்ணிம நூலகமானது நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், சிறுபிரசுரங்கள் உட்பட்ட 12,000க்கும் மேற்பட்ட ஆக்கங்களை முழுமையாக எண்ணிமப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

முடிவுரை
மூலவகை ஆவணப்படுத்தலானது பொருட்துறைசார்ந்த புலமையில் முழுக்கமுழுக்க தங்கியிருக்கும் அதேசமயம் கருவிசார் ஆவணவாக்கப் பணி என்பது பொருட்துறை சார்ந்த புலமை,  ஆவணப்படுத்தலுக்கான நூலகவியல் அறிவு ஆகிய இரண்டையும் வேண்டிநிற்பதொன்று. ஈழத்தமிழ்ச்சமூகத்தின் ஆவணவாக்கப்பணியானது தனிநபர்களின் ஆர்வத்தின் அடிப்படையிலேயே கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது என்பதை மேற்குறித்த ஆய்வு வெளிக்காட்டி நிற்பதுடன் ஆவணப்படுத்தலின் பலதரப்பட்ட பண்புகளிலும் ஆக்கபூர்வமான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்பதையும் இந்த ஆய்வு சுட்டி நிற்கிறது. 
உசாத்துணைகள்


1. Harrod, Leonard Montague. Harrod’s librarians’ glossary of terms used in librarianship, documentation and the book crafts and reference book. 6th ed. London: Gower.pp254.
2.    Ranganathan,S.R(1974). Physical bibliography for librarians. 2nd ed. Bombay: Asia publishing house.. p21.
3.      Reitz, Joan.M. ( 2006). Online Dictionary for Library and Information Science. http://www.abc-clio.com/ ODLIS/ odlis b.aspx
4.      Selvarajah,S.J (1988). Batticaloania: a bibliography of Batticaloa. Batticaloa: Municipal Council. 81p
5.      Simon Casie Chitty (1949). The Tamil Plutarch. Colombo: General publishers.135p
6. Thani Nayagam, Xavier S.(1966).  A Reference guide to Tamil Studies: books.Kuala Lumpur:University of Malaya Press.122p.
7. Vali North Cultural society (2008). Yarlppanap pettakam kankardchi-01(The Exhibition on Treasure House of Jaffna-01) Yarl Thinakkural. 14th.Oct.2008. p3.

8.    அப்புத்துரை, சி.(1985). காங்கேசன் கல்வி வட்டாரத்தில் எழுந்த நூல்கள். காங்கேசன் கல்விமலர். காங்கேசன்துறை: காங்கேசன்துறை கல்விவலய அதிபர்கள் சங்கம். பக் 209-223.
9.    கணேசையர், சி(1939). ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம். சென்னை தமிழ்மண் பதிப்பகம். 156ப.
10.    கனகரத்தினம், இரா,. கனகரத்தினம்இ பி(1996). உலகத் தமிழர் ஆவணக் காப்பகம். கண்டி: ஆசிரியர். 26ப.
11.    கோப்பாய் சிவம்(1980). கிரியா பத்ததிகள் தொடர்பான கையெழுத்துப் பிரதிகளின் விளக்கப் பட்டியல்.(வெளியிடப்படவில்லை). 
12.    சண்முகதாஸ்,மனோண்மணி (2007). சி.வை.தாமோதரம்பிள்ளை. கொழும்பு: குமரன். ப20.
13.    சதாசிவம்பிள்ளை,அ.(1886) பாவலர் சரித்திர தீபகம்.மானிப்பாய்: ஸ்றோங்அஸ்பரி இயந்திரசாலை.
14.    சந்திரகுமார், எம் (2009). பழைய வரலாறுகள் எதிர்கால ஆவணங்கள்: கணேசுடனான நேர்காணல். யாழ்தீபம்.   றறற.எசையமநளயசi.டம.
15.    நடராசா, எவ்.எக்ஸ்,சி(1970). ஈழத்துத் தமிழ்நூல் வரலாறு. கொழும்பு: அரசு வெளியீடு
16.    பூலோகசிங்கம், பொ (1970). தமிழ் இலக்கியத்தில் ஈழத்தறிஞரின் பெருமுயற்சிகள். யாழ்ப்பாணம்: கலைவாணி புத்தக நிலையம். 276ப.
17.    முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை,கு(1970). குமாரசுவாமிப்புலவர் வரலாறு. சுன்னாகம்: புலவரகம். ப.43
18.    ஜமீல்,எஸ்.எச்.எம் (1994). சுவடி ஆற்றுப்படை. 4 தொகுதிகள். கல்முனை: இஸ்லாமிய நூல் வெளியீட்டுக் கழகம். 



http://www.pubad.gov.lk/web/eservices/circulars/2015/T/31_2001_(x)_(t).pdf