'அறிவாயறி'
1. மனிதன் மனம்
2. குடும்பம் வாழ்க்கை
3. பெற்றோர் குழந்தைகள்
4. இலட்சியம் வெற்றி
5. உழைப்பு மதிப்பு
6. எண்ணங்கள் செயல்கள்
7. உரையாடல் அனுபவங்கள்
8. அறிவு அறியாமை
9. விவேகம் திறமை
10. நூல்கள் வாசிப்பு
11. நூலகம் சிந்தனைகள்
12. ஆசிரியர் கற்பித்தல்
13. கல்வி கற்றல்
14. குழந்தைக்கல்வி சமூகமேம்பாடு
மனிதன்
தனக்குத் தெரிந்தவற்றைப் பற்றி மட்டுமே மனிதன் பேசுவானாகில் என்றும் உலகில் முழு அமைதி நிலவும்.
-பேர்னாட் ஷா-
உதவிகளாலும் வசதிகளாலும் ஒருவன் மனிதனாகி விடுவதில்லை. இடையூறுகளும் துன்பங்களுமே அவனை மனிதனாக்குகின்றன.
-மாத்தியூஸ்-
மனிதன் செய்யும் கெட்ட காரியங்கள் அவனுடன் இறக்கின்றன. அவன் செய்யும் நல்ல காரியங்கள் அவன் இறந்தபின்னரும் வாழ்கின்றன.
-சேக்ஸ்பியர்-
முதலில் உண்மையாக நடந்த நிகழ்ச்சிகளை திரட்டுங்கள். பின்னர் உங்கள் விருப்பப்படி அதைத் திரித்துக் கூறுங்கள.
-மார்க் ட்வெயின்-
எவ்வளவு பெருமை வாய்ந்ததாயினும் சரி, வீரச் செயலானாலும் சரி, துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளும் திறனே மனிதனின் உயர் குணத்திற்குச் சிறந்த சோதனை.
-சேர் ஜோன் லப்பார்க்-
மிகச் சிக்கலான உண்மைகளைத் தெரிந்து கொள்ளாமையும் எளிய உண்மைகளை மறந்து விடுவதுமே ஒரு மனிதனிடமுள்ள இரண்டு குறைகள்
-ரெபேக்கா பெஸ்ட்-
உங்களைச் சுற்றிப் பாருங்கள். உலகம் தான் உங்களை உருவாக்குகிறது, உடைக்கிறது, ஒட்டி வைக்கிறது, தள்ளிவிடுகிறது, தட்டிக் கொடுக்கிறது.
-ருத்ரன்-
மனம்
மனித மனமே எமது ஆதார வளம.;
-ஜோன் எவ். கென்னடி(1917-63) 35வது அமெரிக்க -அதிபர்-
மனிதனும் பிரபஞ்சமும் தனித்தும் இணைந்தும் இயங்க வேண்டும். ஒரு பெரிய கச்சேரி போல. இதில் தனித்துவமும் தனிமனித சுதந்திரமும் மேலோங்கி நிற்குமானால் நாம் சூழ்நிலையிலிருந்து அந்நியப்படுத்துவோம்.
-உளவியலாளர் எஸ். உதயமூர்த்தி-
உடலுக்கு உறுதி தருவது உடலுழைப்பு. மனதிற்கு உறுதி தருவது துன்பங்களும் இடையூறுகளும்.
-செனேக்கா-
வலுவான உடலில்தான் திடமான மனம் இருக்க முடியும்.
-ரூசோ-
சீரிய உள்ளம் கருத்துக்களை விவாதிக்கிறது. சாதாரண உள்ளம் நிகழ்ச்சிகளை விவாதிக்கிறது. வெறும் உள்ளம் மற்றவர்களைப் பற்றி விவாதிக்கிறது.
-யாரோ-
சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் ஒரு மனிதனை உருவாக்குவதில்லை. உள்ளுக்குள்ளேயே இப்படிப்பட்ட மனிதன்தான் இருக்கின்றான் என்பதை அவனுக்கே காட்டிக் கொடுக்கிறது.
-ஜேம்ஸ் அலன்-
எமது மனமே எமது வாழ்வு.
-புத்தர்-
மனம் ஒருங்கிணைந்து செயற்படவேண்டுமென்பதே வாழ்க்கை சொல்லுவது. மனம் ஒருங்கிணைந்து செயற்பட்டால் எதன்மீதும் கவனத்தைச் செலுத்தலாம்.
-வில்லியம் ஜேம்ஸ்-
குடும்பம்
மனங்கள் ஒருவருடன் மற்றொருவர் உறவாடும் இடம் குடும்பம்.
-புத்தர்-
தந்தைமார் பார்க்கப்படுவதாகவோ கேள்விப்படுவதாகவோ இருக்கக் கூடாது என்பதே குடும்ப வாழ்வின் சரியான அடிப்படை.
-ஒஸ்கார் வைல்ட்-
இயற்கையின் மிகப் பெரும் உருவாக்கம் குடும்பம்.
-அமெரிக்க தத்துவவியலாளர் ஜோர்ஜ் சந்தாயனா-
எண்ணத்தினால், பேச்சால், செயலால் இறக்கும்வரை ஒருவர் பாதையில் ஒருவர் குறுக்கிடாமையும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமையுமே கணவன் மனைவியின்; முழுமுதற் கடமையாகும்.
-மனுதர்ம சாத்திரம்
மகிழ்ச்சியான குடும்பம் சொர்க்கத்தின் தொடக்கம்.
-ஜோன் பௌரிங்-
மதம், குடும்பம், சொத்து ஆகிய மூன்றுமே மனிதனின் மூன்று வலிமையான இயல்புணர்ச்சிகள்.
-டீன் இஸ்கே-
மகிழ்ச்சியான குடும்பங்களின் ஒன்றில் ஒன்று ஒத்ததன்மையுடையதாக இருக்கின்றன. மகிழ்ச்சியற்ற குடும்பங்களிள் மகிழ்ச்சியற்றதன்மையோ அதனதன் வழியில் வௌ;வேறுபட்டதாக உள்ளன.
-லியோ ரோல்ஸ்ரோய்-
ஒரு குடும்பத்தை நிர்வகிப்பதைவிட ஒரு சாம்ராஜ்யத்தை நிர்வகிப்பது எளிது
-யப்பானியப் பழமொழி-
வாழ்க்கை
வாழ்க்கை மிகக் குறுகியது. நமது பொறுப்பற்ற தன்மையால் அதை இன்னும் மிக மிகக் குறுகியதாக ஆக்கிக் கொள்கின்றோம்.
-விக்டர் ஹியூகோ-
அன்பின் தூண்டலும் அறிவின் வழிகாட்டலும் உள்ளதே நல்ல வாழ்க்கை.
-பெர்ட்ரன்ட்; ரசல்ஸ்-
நமது வாழ்க்கை வெற்றி பெறுவதும் தோல்வி காண்பதும் நம்முடைய எண்ணங்களிலும் செயல்களிலும் தான் இருக்கின்றன.
-ஜேம்ஸ்அலன்-
உங்கள் பேச்சு உங்கள் அன்பை வெளிப்படுத்தும். உங்கள் அன்பு உங்கள் நடத்தையை வெளிப்படுத்தும். உங்கள் நடத்தையே உங்கள் வாழ்க்கையை வெளிப்படுத்தும்.
-சோக்கிரட்டீஸ்-
வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம். அதை நழுவ விடாதீர்கள்! வாழ்க்கை ஒரு பயணம். அதைச் சென்று முடியுங்கள்! வாழ்க்கை ஒரு விடுகதை. அதை விடுவியுங்கள்!
வாழ்க்கை ஒரு விளையாட்டு. அதில் ஈடுபடுங்கள்!
வாழ்க்கை ஒரு போராட்டம். அதை வென்று காட்டுங்கள்! வாழ்க்கை ஒரு வெகுமதி. அதை ஏற்றுக் கொள்ளுங்கள்! வாழ்க்கை ஒரு போட்டி. அதில் வெற்றி பெறுங்கள்!
வாழ்க்கை ஒரு கலை. அதை அழகுபடுத்துங்கள்!
வாழ்க்கை ஒரு வேதனை. அதைத் தாங்குங்கள்!
வாழ்க்கை ஒரு சவால். அதை எதிர் கொள்ளுங்கள்! வாழ்க்கை ஒரு சோகம். அதற்கு மனந் தளராதீர்கள்! வாழ்க்கை ஒரு பிரச்சனை. அதற்குத் தீர்வு காணுங்கள்!
-யாரோ-
பெற்றோர்
பெற்றோர் குழந்தைகளுக்குத் தமது அனுபவங்களையும் நல்ல நினைவாற்றல்களையும் கடனாக வழங்குகின்றனர். பிள்ளைகளோ பெற்றோருக்கு அழிக்கமுடியாத சிரஞ்சீவித்தனத்தை விட்டுச் செல்கின்றனர்.
-ஜோர்ஜ் சந்தாயனா-
நாம் பெற்றோராக மாறும் வரைக்கும் எமது பெற்றோரின் அன்பை நாம் உணருவதில்லை
-ஹென்றி வாட் பீச்சர்-
உங்கள் குழந்தைகள் உங்களைப் போலவே வருவார்கள். எனவே அவர்கள் எப்படி வரவேண்டுமென்று விரும்புகின்றீர்களோ அப்படியே நீங்கள் இருங்கள்.
-பி. டேவிற்-
பெற்றோரின் அன்பளிப்புகளை விட பெற்றோரின் அருகாமையே குழந்தைகளுக்கு அவசியம்
-ஜெசி ஜக்ஸன்-
எனது பெற்றோர்கள் வறியவர்களுமல்ல நேர்மையாளரும் அல்ல.
-மார்க் டுவெயின்-
குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதால் மட்டும் ஒருவர் தாயாகிவிட முடியாது.
-ஜோன் ஏ. செட்-
தமது குழந்தைகளை மன்னிக்காத பெற்றோர் மனித இயல்பற்றவர் போன்று தமது குழந்தைகளை தொடர்ந்து மன்னிக்கும் பெற்றோரின் குழந்தைகளும் மனித இயல்பற்றவரே.
-மக் லூக்லின்-
குழந்தைகள்
குழந்தை மனிதனின் தந்தை.
-வில்லியம் வேர்ட்ஸ்வேத்-
பெற்றோர்களின் ஒவ்வொரு வார்த்தையும் செயலுமே குழந்தையின் குணநலன்களை உருவாக்குகிறது. அவையே அந்தக் குழந்தை பின்னாளில் சமுதாயத்தில் எப்படி இணைந்து செயற்படும் என்பதை நிர்ணயிக்கிறது.
-டேவிற் வில்கர்சன்-
விடியல் பொழுது நாளைக் காண்பிப்பது போல் குழந்தைப்பருவம் மனிதனைக் காண்பிக்கிறது.
-ஜோன் மில்ரன்-
குழந்தைகள் பெரியோர்கள் சொல்வதை சரியாகக் கவனிக்கமாட்டார்கள். ஆனால் அவர்கள் செய்வதை அப்படியே செய்து காட்டுவதில் தவற மாட்டார்கள்
-ஜேம்ஸ் போல்ட்வின்-
'குழந்தையின் முதல் ஆறு ஆண்டுகளின் வாழ்க்கையை என்னிடம் ஒப்படையுங்கள் அதற்குப்பிறகு அதன் வாழ்க்கை அமைப்பை எப்படிப்பட்டவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைப்பற்றி எனக்கு கவலையில்லை'
-தலைசிறந்த கல்வியாளர் பெஸ்டலோசி-
குழந்தைகள் பெற்றோரில் அன்பு செலுத்துவதில் ஆரம்பிக்கின்றனர்;. வயது வளர அவர்களை மதிப்பிடுகின்றார்கள். சிலசமயம் மன்னிக்கின்றார்கள்.
-ஒஸ்கார் வைல்ட்-
ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோனெனக் கேட்ட தாய்.
-திருவள்ளுவர்-
இலட்சியம்
ஒரு மனிதனின் இலட்சியம் என்னவென்று தெரிந்து கொண்டால்போதும் அதைக் கொண்டே அவனைத் தெரிந்து கொள்ளலாம்.
-ஹோம்ஸ்-
இலட்சியமில்லாத வாழ்க்கை எண்ணெய் இல்லாத விளக்கு.
-யோகி வேமனா-
நிமிடத்துக்கு நிமிடம் தோன்றி மறைவது ஆசை. சிரமத்தைக் கண்டவுடன் காணாமல்போவது விருப்பம். உடல் பொருள் ஆவியால் காத்து வளர்க்கப்படுவது இலட்சியம்.
-ராக்ஃபெல்லர்-
வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் கடவுள் உங்களுக்களித்த உடல் வலிமை மனவலிமையுடன் கடுமையாக உழையுங்கள்.
-தோமஸ் கார்லைல்-
உயர்ந்த இலட்சியங்கள் உயர்ந்த பண்புடையவர்களை உருவாக்குகின்றன. சிறந்த குறிக்கோள்கள் சிறந்த உள்ளங்களை வெளிக்கொண்டுவருகின்றன.
-ட்ரைடன் எட்வேர்ட்ஸ்-
உங்கள் குறிக்கோளில் வெற்றி பெறவேண்டுமெனில் உங்கள் இலக்கில் இம்மியும் பிசகாமல் குறி வைத்து அதே சிந்தனையுடன் செயற்பட வேண்டும்.
-அப்துல்கலாம்-
வெற்றி
ஒரு கருத்தை எடுத்துக் கொள்க! அந்த ஒரு கருத்தையே உனது வாழ்க்கை மயமாக்குக! அதையே கனவு காண்க! அந்த ஒரு கருத்தை ஒட்டியே வாழ்ந்து வருக! மூளை, தசைகள், நரம்புகள், நாடிகள் முதலிய ஒவ்வொரு பகுதியிலும் அந்த ஒரு கருத்தே நிறைந்து நிலவட்டும். இந்த நிலையில் மற்றக் கருத்துகளை தவிர்த்து விடுக! வெற்றிக்கு வழி இதுதான்.
-விவேகானந்தர்;;-
வெற்றியின் திறவுகோல் ஒருமுக சிந்தனை.
-யாரோ-
வெற்றியின் முதல் இரகசியம் தன்னம்பிக்கை.
-எமர்சன்-
வெற்றிக்குப் பல தந்தையர். தோல்வியோ ஒரு அநாதை.
-ஜோன் எவ் கென்னடி-
எல்லையற்ற பொறுமை, தூய்மை, விடாமுயற்சி வெற்றியின் ரகசியம்.
-விவேகானந்தர்-
தோல்விச் சந்திக்கும் துணிச்சல் வெற்றிக்கு உண்டு.
-ரூசோ-
வெற்றியைப் போல் வெற்றி பெறுவது எதுவுமே இல்லை
-அலெக்சாண்டர் டுமாஸ்-
வெற்றிகளால் மட்டுமே நாம் உயர்ந்துவிட முடியாது. தோல்விகளாலும் நாம் முன்னேறுவோம் என்பதை எப்போதும் மறந்துவிடக் கூடாது.
-அப்துல்கலாம்-
உழைப்பு
கடின உழைப்பு ஒன்றுதான் ஒரு மனிதன் செய்யும் வேலைக்குச் சிறந்த மூலதனமாகும்.
சீ.எம். ஸ்வாப் (ளுஉhறயடி)
உழைப்பின் பின்னரான ஓய்வைவிட வேறெந்த ஓய்வும் இனிமையானதல்ல. -அன்ரன் செக்கோவ்-
சிலர் உழைப்பதற்கு விரும்புகின்றார்கள். மற்றவர்கள் அவர்கள் உழைப்பதை விரும்புகின்றார்கள்
-ரொபேர்ட் பாஸ்ட்
வழிபடும் கரங்களைவிட உழைக்கும் கரங்கள் உயர்வானவை.
-ஸராதுஸ்ட்ரா-
கற்றறிந்தவர்களாக இருக்க வேண்டுமென அனைவரும் ஆசைப்படுகின்றனர். ஆனால் அதற்குரிய உழைப்பைக் கொடுக்க மட்டும் எவரும் விரும்புவதில்லை.
-ஜூவெனல்-
உலகம் தோன்றியதிலிருந்து உண்மையான உழைப்பு எதுவும் விரயமானதில்லை. அதேபோல் உலகம் தோன்றியதிலிருந்து உண்மையான வாழ்க்கை தோல்வியடைந்ததுமில்லை. -எமர்ஸன்-
எந்த உழைப்புக்கும் எதிர்காலம் இல்லை. அந்த உழைப்பை மேற்கொள்பவனுக்கே எதிர்காலம்
-ஜி.டபிள்யூ கிரேன்-
தங்களுடைய தொழிலில் சிகரத்தை எட்ட விரும்புகின்றவர்களுக்குத் தேவையான அடிப்படைத் தகுதி முழுமையான பொறுப்பணர்வு.
-அப்துல்கலாம்-
மதிப்பு
பெருமையின் மூன்று அறிகுறிகள். தோற்றத்தில் எளிமை, செயலில் மனிதத்தன்மை, வெற்றியில் வெற்றியின்மை.
-பிஸ்மார்க்-
எவ்வளவு அதிகமான விடயங்களுக்கு ஒருவன் வெட்கப்படுகின்றானோ அவ்வளவிற்குப் பெருமதிப்புப் பெறுகின்றான்.
-பெர்னாட் ஷா-
நீ மதிக்கும் மனிதனைக் காண்பி. நீ எப்படிப்பட்டவன் என்று தெரிந்து கொள்வேன்.
-தோமஸ் கார்லைல்-
நல்ல தன்மை, உண்மை, நல்லறிவு, நற்பிறப்பு என்பனவே மதிப்பையும் பாராட்டையும் பெறுவதற்குத் தகுதியான தன்மைகளின் முதன்மையான ஆக்கக்கூறுகள்.
-ஜோசப் எடிசன்-
நட்பு அன்பை விட நன்மதிப்பிற்குப் பெருமை அதிகம்.
-ரோச் ஃபோகால்ட்-
யாரோ ஒருவன் எச்சில் துப்பியதால் நயாகராவின் கம்பீரம் குறைந்துவிடப் போவதில்லை. யாரோ ஒருவன் அவமரியாதை செய்ததனால் உங்கள் மதிப்பு குறைந்துவிடப் போவதில்லை.
-சுவாமி சின்மயானந்தா-
அடிமையாகட்டும் ஆண்டவனாகட்டும். உழைப்பும் உள்ள உரமும் உள்ளவன்தான் உயர்விடம் வந்து சேர்வான்
-மௌலானா ரூமி-
எண்ணங்கள்
பொதுமக்கள் கருத்தைக் கண்டு பலவீனர்கள் பயப்படுகின்றார்கள். முட்டாள்கள் அதனுடன் மோதுகின்றார்கள். அறிவாளிகள் அதனை எடைபோடுகின்றார்கள். சாமர்த்தியசாலிகளோ அதை உருவாக்குகின்றார்கள்.
-ரோலண்ட் பெண்மணி-
மனிதன் எண்ணங்களின் உருவகம். எதை எண்ணுகின்றானோ அதுவாகவே ஆகின்றான்.
-மகாத்மாகாந்தி-
சிந்திக்காமல் கற்பது வெட்டிவேலை. கற்காமல் சிந்திப்பது மிக ஆபத்தான வேலை
-கன்பூசியஸ்-
சிந்தனைகள் மூச்சுவிட, வார்த்தைகள் எரிகின்றன.
-தோமஸ் கிரே-
உலகத்து மக்கள் எத்தனையோ எண்ணுகிறார்கள், சொல்கிறார்கள், செய்கிறார்கள். அதில் பெரும்பகுதி கவனிக்கப்படாமல் போகின்றது. கவனித்தவைகளில் ஒருபகுதி நினைவில் நிற்கின்றது. நினைவில் நிற்பவைகளில் ஒரு பகுதி பதிந்து வைக்கப்படுகிறது. பதிந்து வைத்தவைகளில் ஒரு பகுதி எஞ்சியிருக்கிறது. எஞ்சியுள்ளவற்றில் ஒரு பகுதியே ஆராய்ச்சியாளருக்குத் தெரிகின்றது. தெரிந்தவைகளில் ஒரு பகுதியே முறையாக எடுத்துச் செல்லப்படுகின்றது. அதாவது நமக்குக் கிடைத்துள்ள தகவல்கள்; மிகமிகச் சுருக்கமானவை
-லூயி கோட்சாக்-
உயர்ந்த எண்ணங்களைப் பேணி வளருங்கள். நீங்கள் உங்கள் எண்ணத்தைவிட உயர்நிலைக்கு செல்லமாட்டிPர்கள்
-பெஞ்சமின் டிஸ்ரேலி-
உரையாடல்
மௌனமும் தன்னடக்கமும் உரையாடற் கலையின் மிகச் சிறந்த தன்மைகள்.
-மாண்டெயின்-
கல்வி நற்பண்பாளர்களை உருவாக்கிறது. உரையாடல் முழுமையாக்குகிறது.
-தோமஸ் புல்லர-;
என்னுடைய சிறந்த மொழியாற்றலின் காரணமாக நான் ஒன்றுமே பேசவில்லை.
-சார்ள்ஸ் பெஞ்லே-
ஒரு மேதையுடன் நேருக்கு நேர் உரையாடுவது ஒரு மாதம் முழுவதும் படிக்கும் நூல்களுக்குச் சமம்.
-சீனப் பழமொழி-
பேச்சு உடல். சிந்தனை ஆன்மா. உகந்த செயலே சொற்பொழிவின் உயிர்.
-சார்ள்ஸ் சிம்மன்ஸ்-
குறைவாகச் சிந்திக்கின்றவனே அதிகமாகப் பேசுகின்றான்.
-மான்டெங்யூ-
விவாதம் அறிவுப் பரிமாற்றம். வாதம் அறியாமைப் பரிமாற்றம்.
- யாரோ-
மற்றவர்களைப் பற்றி உங்களிடம் பேசுபவன் வம்பளப்பவன்;. தன்னைப் பற்றி உங்களிடம் பேசுபவன் அலட்டல்காரன். உங்களைப் பற்றி உங்களிடம் பேசுபவன் கலைஞன்.
-ஜோன் மார்லி-
ஒருவர் பேசும் போது குறுக்கிடுவதைப் போல் முரட்டுத்தனம் வேறெதுவும் கிடையாது.
-ஜோன் லாக்-
செயல்கள்
சரியாகச் செய்வதைவிடச் சரியானதைச் செய்வதே முக்கியம்.
-பீற்றர் டக்கர்-
நாம் நமது செயல்களைத் தீர்மானிப்பது போன்று நமது செயல்களே நம்மைத் தீர்மானிக்கின்றன.
-ஜோர்ஜ் எலியட்-
நான் என்ன செய்யவேண்டும் என்பதுதான் எனது கவலை. என்னைப் பற்றி பிறர் என்ன நினைக்கின்றார்கள் என்பது என் கவலையல்ல.
-ரோல்ஸ்ரோய்-
செயல்கள் எப்போதும் மகிழ்ச்சியைக் கொடுக்காது. ஆனால் செயல் இல்லாவிடின் மகிழ்ச்சியே கிடையாது.
-பிரித்தானிப் பிரதமர் பெஞ்சமின் டிஸ்ரேலி-
பொறுப்புக்களை ஏற்கும் தயார் நிலையிலிருந்து செயல் பிறக்கிறதேயன்றி வெறும் சிந்தனையால் மட்டும் செயல் பிறப்பதில்லை.
-யாரோ-
சரியென்று கண்டுகொண்டதன் பின்னர் அதனைச் செய்யாததன் காரணம் துணிவோ அல்லது செயல்முறைக் கொள்கையோ இல்லாதது தான்.
-கன்பூசியஸ்-
மனிதர்களின் செயல்கள் ஒரு நூலின் பொருளடக்கம் போன்றது. அவை மிகச்சிறந்தவைதானா என்பதைக் காட்டிவிடும்.
-யாரோ-
நன்றாகச் சிந்திப்பது புத்திசாலித்தனம். நன்றாகத் திட்டமிடுவது அதைவிடப் புத்திசாலித்தனம். நன்றாகச் செய்வது அதிபுத்திசாலித்தனம்
-பெர்சியப் பழமொழி-
அனுபவங்கள்
அறிவின் ஒரேயொரு மூலம் அனுபவமே.
-அல்பேர்ட் ஐன்ஸ்ரீன்-
ஞானம் அனுபவங்களிலிருந்து கிடைக்கிறது. அனுபவங்களோ நாம் செய்யும் தவறுகளிலிருந்து கிடைக்கிறது.
-எழுத்தாளர் பார்த்தசாரதி-
ஒவ்வொரு மனிதனும் தான் செய்துவிட்ட தவறுக்குத் தரும் பெயர்தான் அனுபவம்.
-ஆஸ்கார் வைல்ட்-
அனுபவத்தைக் கொண்டு மட்டுமல்ல அனுபவத்திற்கான திறமையைக் கொண்டே மனிதர்கள் அறிவாளியாகின்றார்கள்.
-ஜோர்ஜ் பேர்னார்ட் ஷா-
அனுபவம் என்னும் சிறந்த ஆசிரியன் எனக்குப் பலவற்றைக் கற்றுக் கொடுத்திருக்க்pறான்.
-பிளினி-
உழைப்பின் மூலதனம் அனுபவம். -ஆங்கிலப் பழமொழி-
அறிவு பெறுவதற்குப் படிப்பு அவசியம். ஞானம் பெறுவதற்கு அவதானிப்பு அவசியம்.
-மரிலின் வொஸ் சவன்ற்-
ஒருவனுக்கு என்ன நேர்கின்றது என்பது அனுபவமல்ல. ஏதாவது நேரிடும்போது என்ன செய்கிறான் என்பதே அனுபவம்.
-ஆல்டஸ் ஹக்ஸ்லி-
அறிவு
அறிவே இன்பம். அறிவே அணிகலன். அறிவே ஆற்றல்
-பிரான்சிஸ் பேகன்-
அறிவைத் தேடுங்கள். அது நம்மை ஆற்றலுடையவனாக ஆக்குகிறது. அறிவு தனிமையில் நமது தோழன். இன்பத்திற்கு வழிகாட்டி. துன்பத்திலோ ஆதரவாளன். நண்பர்களுக்கிடையில் அது நமது நல்லாபரணம். பகைவர்களிடமிருந்து நம்மைக் காக்கும் கேடயம்.
-விநோபா-
அறம் இன்றிப் பெறும் அறிவு அழிவுக்கு வழி கோலும். பண்பின்றிப் பெறும் அறிவு பலனற்றுப் போகும்.
-குழுடுயு-
அறிவு என்பது இருவகை. எமக்கு தெரிந்த அறிவு ஒருவகை. எமக்கு தெரியாததை எங்கே பெறலாம் என்ற அறிவு இன்னொருவகை.
-சாமுவேல் ஜோன்சன்-
தன்னை அறிதல் என்பதே அனைத்து அறிவினதும் தாய்;. எனவே என்னை அறிதலையும், அதனை முழுமையாக அறிதலையும், நுணுக்கமாக அறிதலையும், அதன் பண்புகளை அறிதலையும், அதனை அணுவணுவாக அறிதலையும் அது நெருக்கிறது.
-கலீல் ஜிப்ரான்-
அறிவு என்பது உங்களுக்குத் தெரிந்த ஒன்றை உங்களுக்கு தெரியும் என்றும் உங்களுக்குத் தெரியாத ஒன்றை தெரியாது என்றும் சொல்வது தான்.
-கன்பூசியஸ்-
அறிவுக்கு ஆதாரம் அவதானிப்பு, ஆழ்ந்த தேடல், அடுத்தவருடன் பகிர்தல.;
-குழுடுயு-
அறியாமை
அறியாமையைக் காட்டிலும் இழிவான அடிமைத்தனம் வேறு கிடையாது.
-தத்துவவியலாளர் இங்கர்சால்-
அறியாமை மனதின் இரவு. அந்த இரவில் நிலவும் இல்லை. நட்சத்திரமும் இல்லை.
-கன்பூசியஸ்-
நமது அறிவு அனைத்தும் நம்மை நம்முடைய அறியாமைக்கு அருகில் கொண்டு செல்கிறது.
-ரி.எஸ். எலியட்-
நமது அறிவு பெருகப் பெருக நமது அறியாமையின் அளவும் அதிகரித்துக்கொண்டே போகின்றது.
-யோன். எவ். கென்னடி-
ஞானக் கோவிலுக்கான நுழைவாயில் எமது அறியாமை பற்றிய எமது அறிவு. -பெஞ்சமின் பிராங்ளின்-
அறியாமையின் மகள் வியந்து பாராட்டுதல்.
-பெஞ்சமின் பிராங்ளின்-
மனித ஜீவன் என்ற முறையில் நாம் எப்போதுமே அறியாமையுடன் தான் வாழ்ந்து வருகின்றோம். வாழ்ந்துகொண்டு இருப்போம். அதை அறிந்து கொள்ளும் விழிப்புணர்வு பெற்றவனாக இருந்தது எனக்குப் புது அனுபவம்
-அப்துல்கலாம்-
அறியாமை இழிவு அன்று. அறிய மனமில்லாமையே இழிவு.
-நா. பார்த்தசாரதி-
விவேகம்
மற்றவர்கள் குற்றம் கண்டுபிடிக்க சிரமப்படுவது போல் காரியங்கள் செய்வது நமது சாமர்த்தியம். சாமர்த்தியமாகச் செய்யமுடியாத காரியங்களைச் செய்வதே விவேகம்.
-ஹென்றி பிரடரிக் அமியல்
விவேகம் பெரிய வேலைகளை ஆரம்பித்து வைக்கிறது. உழைப்பு அதனை முடித்து வைக்கிறது.
-கோபர்ட்-
அதிர்ஷ்டத்திற்கு விவேகம் தேவையில்லை. ஆனால் விவேகத்திற்கு அதிர்ஷ்டம் வேண்டும்.
-யூதப் பழமொழி
அறிவைக் கற்பிக்கலாம். விவேகத்தைக் கற்பிக்க முடியாது. -ஹெர்மன் ஹெஸ்லி-
கெட்டித்தனம் விவேகம் அல்ல. -யூரிப்பிடிஸ்-
ஞானம் பெறுவதற்கு மூன்றுமுறைகள் உண்டு. முதலாவது பிரதிபலிப்பு. மிக உயர்ந்தது. இரண்டாவது வரையறை. மிகச் சுலபமானது. மூன்றாவது அனுபவம். மிகக் கசப்பானது. -கன்பூசியஸ்-
ஒரு விவேகமுள்ள கேள்வி ஞானத்தின் அரைவாசி.
-பிரான்சிஸ் பேகன்-
நாம் எம்மைப்பற்றி எமது வாழ்க்கையைப் பற்றி எம்மைச் சுற்றியுள்ள இவ்வுலகைப் பற்றி எவ்வளவு குறைவாக விளங்கிக்கொண்டிருக்கின்றோம் என்பதை உணரும் போது எங்கள் ஒவ்வொரவருக்கும் உண்மையான ஞானம் பிறக்கிறது. -சோக்கிரட்டீஸ்-
பேரறிவு மிகச் சில வார்த்தைகளையே பயன்படுத்தும்.
-சோபக்கிள்ஸ்-
திறமை
என்ன செய்கின்றாய் என்பதல்ல எப்படிச் செய்கின்றாய் என்பதே உன் திறமைக்கு அளவுகோல்.
-ஹென்றி வார்ட் பீச்சர்-
இயற்கையான திறமைகள் இயற்கையான தாவரங்கள் போன்றவை. அவற்றைக் கல்வியின்மூலம் வளப்படுத்த வேண்டும்.
-பிரான்சிஸ் பேகன்-
வாய்ப்பில்லாத திறமையினால் பயனேதுமில்லை.
-நெப்போலியன்-
உண்மையான தகுதி ஆறு போன்றது. ஆழம்அதிகமாக இருந்தால் அமைதியாக ஓடும். -யாரோ-
கூரறிவும் திறனும் ஊக்கமும் இருக்குமானால் எந்தவொரு முயற்சியிலும் சிறு வெற்றியாவது கிடைத்தே தீரும்.
-ஜே.சி றொபேர்ட்-
எனக்கு எதுவுமே தெரியாது என்பது தான் எனக்குத் தெரிந்த ஒரேயோரு விடயம்.
-சோக்கிரட்டீஸ்-
ஒன்றை என்னால் செய்யமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தால்; அதைச் செய்து முடிப்பதற்கான திறமையை ஆரம்பத்தில் நான் கொண்டிருக்காவிட்டாலும் கூட நிச்சியமாக அந்தத் திறனை நான் அடைவேன்.
-மகாத்மாகாந்தி-
வாழ்க்கை மீது உங்கள் சொந்த விதிமுறைகளை செலுத்தும் வலு உங்களிடம் இல்லையெனில் வாழ்க்கை உங்களுக்குத் தரும் விதிமுறைகளை நீங்கள் ஏற்கவேண்டும்.
-ரி.எஸ். எலியட்ஸ்-
நூல்கள்
ஒரு புத்தகத்தை அழிப்பவன் ஒரு மனிதனைக் கொலை செய்வதற்குச் சமம். ஒரு மனிதனைக் கொல்பவன் ஒரு பகுத்தறிவுள்ள உயிரை, கடவுளின் மறு உருவைக் கொல்கின்றான். ஆனால் ஒரு நல்ல புத்தகத்தை அழிப்பவன் பகுத்தறிவை, கடவுளின் மறுஉருவை நம் கண்முன்னாலேயே கொல்கின்றான். -மில்ரன்-
சில புத்தகங்கள் சுவைக்கப்படவேண்டியவை. சில புத்தகங்கள் வெறுமனே விழுங்கப்படவேண்டியவை. சில புத்தகங்கள் சுவைத்துச் செரிமானம் செய்யப்பட வேண்டியவை. -பிரான்சிஸ் பேகன்-
நூல்கள் தனிமையில் இருப்பவர்களுக்கு உற்ற நண்பர்கள். துக்கத்தைப் போக்கி மகிழ்வையும் சாந்தியையும் தருகின்றன. தடுமாற்றத்தைத் தெளிய வைத்து மன உறுதியைத் தருகின்றன. ஒருவர் தமது எதிர்காலத்தைத் தீர்மானிக்க வழிகாட்டியாகின்றன. ஒருவருடைய வாழ்வில் தன்னம்பிக்கையை விதைத்து மேம்பாடுகளை வளர்க்க உதவுகின்றன. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அறிஞர்கள், நல்ல மனிதர்கள் ஆகியோருடன் ஆத்மார்த்த நிலையில் சில மணிநேரம் வாழவைக்கின்றன.
-பேராசிரியர் நந்தி-
நூல் என்பது கல்வியறிவு தந்து, நடைமுறை நிலை தெரிவித்து கடமைகளைக் காட்டி, உரிமைகளைச் சேர்த்து பொருளாதாரத்தை வளர்த்து கலாசாரத்தைக் காக்கும் செயற்பண்பு கொண்டது.
-இந்திய நூலகவியல் அறிஞர் வே. தில்லை நாயகம்-
ஒவ்வொரு புத்தகமும் எம்முன்னே மக்களைப் பற்றியும், அவர்கள் ஆசாபாசங்கள் பற்றியும், அவர்கள் இதயம் பற்றியும், கருத்தோட்டங்கள் பற்றியும் அறிந்து கொள்ளத் திறந்து விடப்படும் சாளரங்கள்.
-மக்சிம்கோர்க்கி-
வாசிப்பு
வாசிப்பு மனிதனை முழுமையாக்குகிறது. கலந்துரையாடல் எதற்கும் ஆயத்தமானவனாக்குகிறது. எழுத்து துல்லியமான மனிதனாக்குகிறது.
-பிரான்சிஸ் பேக்கன்-
எழுத்தாளனின் நேரங்களில் மிகக்கணிசமானளவு பகுதி வாசிப்பிலேயே கழிகின்றது. நல்லதொரு நூலை எழுதுவதற்கு நூலகத்தின்; அரைப்பங்கு நூல்களின் பக்கங்கள் புரட்டப்படுகின்றன.
-சாமுவேல் ஜோன்சன்-
வாசிப்பவர்களை நினைவில் வைத்துக் கொள்வதற்காக வாசிப்பவர்கள் மறப்பதற்காக வாசிப்பவர்கள் என இரு பிரிவுகளாக பிரிக்கிறேன்.
-வில்லியம் லயான்பெல்ப்-
நூல்களை வாசிக்கும் போது ஏற்படும் நன்மையைப் போன்று நூல்களைப் பயன்படுத்திச் செய்யப்படும் விரிவுரைகள் நன்மையைத் தருவதில்லை.
-சாமுவேல் ஜோன்சன்-
வாசித்தல் ஒரு கலை, சிந்தித்தல் ஒரு கலை, எழுதுதலும் ஒரு கலையே.
-சாள்ஸ்லாம்ப்-
கல்வியினாலே பெருந்தொகையான மக்கள் வாசிக்கக் கூடியவர்களாக விளங்கினாலும், தாம் வாசிப்பனவற்றிலே எவை வாசிக்க வேண்டியவை என்பதைப் பிரித்தறிய முடியாதுள்ளனர.;
-ஜி.எம்.றெவெலியன்-
நூலகம்
கடலைப் போன்றது நூலகம்.
மணலை விரும்புவோர் மணலை எடுக்கலாம்;;;.
சிப்பி, சங்கு, சோகிகளைப் பொறுக்குவோர் அவற்றைப் பொறுக்கலாம்;.
குளிப்போர் குளிக்கலாம்;.
காற்று வாங்க விரும்புவோர் காற்று வாங்கலாம்;.
மீனினங்களைப் பிடிக்க விரும்புவோர் அவற்றைப் பிடிக்கலாம்;.
வெறுமனே கரையில் இருந்து கடல் அலையைப் பார்த்து மகிழ விரும்புவோர் அவ்வாறு செய்யலாம்;.
முத்தெடுக்க விரும்புவோர் முத்தெடுக்கலாம்.
செல்கின்றவரது நோக்கம் எதுவோ அதனை அவர் நிறைவேற்றிக் கொள்ளலாம்.
-குழந்தை ம. சண்முகலிங்கம்-
நூலகம் இல்லாத வீடு உயிரில்லாத உடல் போன்றது.
-தோமஸ் அல்வா எடிசன்-
எந்த வீட்டில் நூலகம் இருக்கிறதோ அந்த வீட்டில் ஆன்மா இருக்கிறது.
-பிளேட்டோ-
நூலகங்கள் புத்தக வழிபாடு செய்யும் தொழுகைக்கூடங்கள் அல்ல. இலக்கிய ஊதுவத்தி கொளுத்தும் அல்லது புத்தகக் கட்டுக்களுக்கு பக்திச் சடங்குகள் செய்யும் செய்யும் திருக்கோயிலோ அல்ல. நூலகம் என்பது கருத்துக்கள் பிறக்கும் பிரசவ அறை. வரலாறு உயிர்த்தெழும் இடம்.
-நோர்மன் கஸின்ஸ்-
'காற்றும் ஒளியும் நீரும் எங்ஙனம் மக்களில் வேறுபாடு காட்டாமல் எவ்வாறு பயன் தருகின்றனவோ அது போலவே அறிவும் மக்கள் அனைவருக்கும் தரப்பட வேண்டும். இதற்கான நல்ல சாதனம் நூலகமே'
-நூலக அறிஞர் வே. தில்லைநாயகம்-
சிந்தனைகள்
எதனையும் உற்றுணர்ந்து, சீர்தூக்கிப் பார்த்து, நிதானித்து, எதிர் விளைவுகள் பக்க விளைவுகளை அடையாளங் கண்டு, பயன்விளைவு ஆராய்ந்து, அனுகூலங்கள் பிரதிகூலங்களைக் கருத்தில் கொண்டு, ஒன்றைக் கூறும்- நம்பும் - தீர்மானிக்கும்- தீர்வு காணும்- செயற்படுத்தும்- அறிவும் மனப்பாங்கும் உடைய உள்ளம் அறிவு சார் உள்ளம் என்றும் அத்தகைய சிந்தனை அறிவு சார் சிந்தனை என்றும் கூறலாம்.
-படிப்பு என்னும் நூலில் படியாதவன்-
உன்னைக் கண்டுகொள்ள வேண்டின் உனக்காக சிந்தி.
-சோக்கிரட்டீஸ்-
உனது சிந்தனைகள் உன்னைக் கொண்டுவந்திருக்கின்ற இடத்தில் நீ இன்று நிற்கின்றாய். உனது சிந்தனைகள் உன்னைக் கொண்டுசெல்லப்போகின்ற இடத்தில் நீ நாளை நிற்கப் போகின்றாய்.
-ஜேம்ஸ் அலன் (1864-1912)-
ஒருவருடன் வாதிடுவதற்கு என்னைத் தயார்படுத்தும் போது எனது நேரத்தில் மூன்றிலொரு பகுதியை என்னைப் பற்றியும் நான் என்ன சொல்லப்போகின்றேன் என்பது பற்றியும் மிகுதி மூன்றில் இரண்டு பகுதியை அவரைப் பற்றியும் அவர் என்ன சொல்லப் போகின்றார் என்பது பற்றியும் சிந்திப்பதற்குச் செலவிடுகிறேன்.
-ஆபிரகாம்லிங்கன் (1809-1865) அமெரிக்க அதிபர்-
நீ விழித்திருக்கும் முன்னிரவில் உனது தவறுகளைப் பற்றிச் சிந்தி. நீ தூங்கும் பின்னிரவில் அடுத்தவர்களின் தவறுகளைச் சிந்தி.
-சீனப் பழமொழி-
ஆசிரியர்
கெட்டிக்கார ஆசிரியர்; பாராட்டப்படுவார். மனித உணர்வுகளைத் தொட்ட ஆசிரியரோ எப்போதும் மனத்தில் வைத்துப் போற்றப்படுவார்.
-கார்ல் கஸ்ரோ ஜங் (1875-1961) உளவியலாளர்.-
ஆசிரியர் என்பவர் சூழ்ந்த பார்வையுடையவர் என்கிறார் சூழ்ந்த பார்வை என்பது- நிரம்பிய கல்வி, ஆழமான அறிவு, விசாலமான ஆராய்ச்சி, பரந்த மனப்பான்மை உயர்ந்த கொள்கை, சூழலைப் பயன் செய்தல், தேசிய நோக்கம் முதலிய பல கருத்துக்களை உள்ளடக்கியது. முறை சார்ந்த கல்வியை வழங்குதல் ஆசிரியரின் பணியாக இருக்கும்.
-புலவர் மணி ஏ.பெரியதம்பிப் பிள்ளை-
ஆசிரியர்கள் ஒரு மாணவனது வாழ்க்கையை எப்படி மாற்றிவிடுகிறார்கள். ஒரு சொல், ஒரு உற்சாகம், ஒரு சிறு பாராட்டு.அவர்கள் செய்த சாதனையின் ஒரு விளக்கம்- அதுதான் ஒரு இளம் உள்ளத்தில் எத்தகைய பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
-எஸ். உதயமூர்த்தி-
21ம் நூற்றாண்டின் ஆசிரியருக்குத் தமது மாணவர்களிடையே காணப்படும் அடிப்படை நிபுணத்துவங்கள், படைப்பாற்றல் திறன் மாற்றம் அல்லது புதுமை காணல் என்பவற்றின் சிறப்பம்சங்கள் பல்துறைப்புலமை, மாறும் நிலைக்கேற்ப அமைதல், விமர்சனப்பாங்கு, பிரச்சினைகளை இனங்காணல், மற்றும் தீர்ப்புத் திறமை என்பன பற்றிய ஆற்றல் இருக்க வேண்டும். -யுனெஸ்கோ-
சராசரியிலும் குறைவெனக் கணிக்கப்பட்ட மாணவர்களில் எத்தனை வீதத்தை கல்வியிலும் அதன்மூலம் வாழ்வாங்கு வாழக்கூடிய வாழ்க்கையிலும் வெற்றியடையச் செய்ய முடியும் என்பதே ஒரு ஆசிரியரின் வெற்றியை அளக்கும் அளவுகோல் ஆகும்.
-படியாதவன்-
கற்பித்தல்
கற்பிப்பவருக்கு அந்தஸ்தை வழங்காமல் கல்வியை வளர்க்கவோ வழங்கவோ முடியாது.
-பேராசிரியர் சிவத்தம்பி-
எனது தந்தை உழைப்பதற்குக் கற்றுத் தந்தார். ஆனால் உழைப்பை நேசிப்பதற்குக் கற்றுத் தரவில்லை
-வில்லியம்அடம்ஸ்-
கற்றல் என்பது எமக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்றைக் கண்டுபிடிப்பது செய்தல் என்பது எமக்குத் தெரியும் என்பதை செய்து காட்டுவது. கற்பித்தல் என்பது உனக்குத் தெரிந்தமாதிரி அவர்களுக்கும் தெரியும் என்பதை மீள நினைவுறுத்துவது. நீங்கள் அனைவருமே கற்பவர்கள்.
-றிச்சார்ட் பக்-
சிந்தனை கதைகளின் வழி பாய்கிறது. நிகழ்வுகள் பற்றிய கதைகள், மக்கள் பற்றிய கதைகள், நோக்கங்கள் மற்றும் சாதனைகள் பற்றிய கதைகள். சிறந்த ஆசிரியர்கள் சிறந்த கதை சொல்பவர்கள். கதைகளின் வழி நாம் கற்கின்றோம்
-பிராங் சிமித்-
சிறந்த கற்பித்தல் என்பது சரியான விடைகளைத் தருவதைவிட சரியான கேள்விகளைத் தருவதே
-ஜோசப் அல்பேர்ஸ்-
நான் எதையும் யாருக்கும் கற்றுத்தர முடியாது. நான் செய்யக்கூடியது அவர்களைச் சிந்திக்க செய்வதே என்னால் முடியக் கூடியது.
-சோக்கிரட்டீஸ்-
வருட அடிப்படையில் நீங்கள் சிந்தித்தால் ஒரு விதையை விதையுங்கள். பத்து வருடத்திட்டமாயின் ஒரு மரத்தை நடுங்கள். நூறு வருட திட்டமாயின் மக்களக்குக் கற்பியுங்கள்
-கன்பூசியஸ்-
கல்வி
கல்வியின் மிகப் பெரும் இலக்கு செயல். அறிவு அல்ல
-ஹேபேர்ட் ஸ்பென்சர் (1820-1903)
'நான் உயிர் வாழ்வதற்காகக் கற்க மாட்டேன். ஆனால் கற்பதற்காகவே உயிர்வாழ விரும்புகிறேன்'
-பிரான்சிஸ் பேக்கன்-
கல்வியின் நோக்கம் என்பது மிகச் சிறந்தவைகளைப் பார்த்துப் அச்சப்படுவதல்ல. நாளாந்த வாழ்க்கையின் ஒரு அம்சமாகக் கொள்வதே கல்வியின் இலக்காகும்.
-ஜோன் மேசன் பிறெளவுண் (1900-1969)-
'மக்களுடைய சிந்தனையில், மனப்பாங்கில், செயலில் ஆரோக்கியமான, ஆக்கபூர்வமான, முன்னேற்றகரமான மாற்றங்களை விளைவிக்கின்ற. செயற்பாடே கல்வி
-சிற்பி
தௌ;ளிய அறிவும் நன்நடத்தையும் கொண்ட பண்பட்ட மக்களை உருவாக்குவதே கல்வி
-மாட்டின் லுதர்
மனிதனை மனிதனாக வாழ வைப்பதே உண்மைக் கல்வி
-சுவாமி விவேகானந்தர்
அன்பை உணருதல், அன்பு காட்டுதல் அன்பு என்றால் என்ன என்று கண்டுபிடித்தல், அன்பு காட்டுதல் என்பவையே கல்வி
-ஜே.கிருஸ்ணமூர்த்தி
உன்னத மரபுகளையும் அன்பையும், இரக்கத்தையும் ஒருவரிடம் பேணி வளர்க்கவும் முழுமையான வாழ்க்கையை வாழ உதவுவதுமே கல்வி
-கல்வியியலாளர் ராதாகிருஷ்ணன்-
கற்றல்
சிந்திக்காமல் படிப்பது ஜீரணிக்காமல் உண்பதற்குச் சமம்.
-பேர்க்-
ஒரு நாளில் ஒரு மாணவனுக்கு ஒரு பாடத்தைக் கற்பிக்கலாம். ஆனால் ஆர்வத்தை உருவாக்குவதற்கு கற்பித்தால் வாழ்க்கை முழுவதற்குமான கற்றலை அவன் தொடர்வான்
-கிளே பெட்வோட்-
ஆராயும் மனத்திற்கு அகிலமே ஆய்வுகூடம்.
-மார்ட்டின் ஃபிசர்-
ஒரு மனிதன் கற்பது எவ்வாறு எனக் கற்றுக் கொள்வதே கல்வியின் இலக்காகும். கற்றுக் கொள்வதற்கான ஆற்றலானது அறிவை விட முக்கியமானதாகும். அறிவு, காலத்திற்கொவ்வாததாகப் போனாலும் கற்கும் திறனானது அனைத்து அறிவுகளுக்குமான திறவு கோலாக விளங்குகிறது.
-ளுநபெந 1990-
நான் எப்போதுமே கற்பதற்குத் தயாராக இருப்பது போன்று கற்பிக்கப்படுவதற்கு தயாராக இல்லை.
-வின்சன் சேர்ச்சில்-
பத்து வருடம் தொடர்ந்து கற்பதை விட ஒரு விவேகியுடன் ஒரு தரம் உரையாடுதல் கூடுதல் பலனைத் தரும்.
-சீனப் பழமொழி-
சிந்தனையற்ற கற்றல் உழைப்பின் விரயம். கற்றல் இல்லாத சிந்தனை ஆபத்தானது.
-கன்பூசியஸ்-
குழந்தைக் கல்வி
'குழந்தைகளுக்குக் கற்றுத் தரவேண்டுமானால் அவர்களை நேசிக்க வேண்டும். ஆசிரியர் ஒவ்வொரு குழந்தையின் இதயத்துக்கும் வழி கண்டு பிடிக்க வேண்டும். குழந்தையின் நெருக்கத்தை ஆசிரியர் உணரவேண்டும். குழந்தையின் குதூகலத்தையும் வருத்தத்தையும் அனுபவிக்கவேண்டும். குழந்தையின் இடத்தில் தன்னை வைத்துப் பார்க்க வேண்டும். தானும் ஒரு குழந்தையாக இருந்திருக்கிறோம் என்பதை ஆசிரியர் மறக்கக்கூடாது'
-ரஷ்ய எழுத்தாளர் வசீலி சுகம்வீனஸ்கி-
கற்றல் எனப்படுவது படிப்படியாக நடத்தையில் பொருத்தப்பாட்டை அடைவதாகும்
-ஸ்கின்னர்-
எமது ஆற்றல்களை விருத்தி செய்வதற்கான வழிமுறைகளை கல்வி என எண்ணுவோம். ஏனெனில் எங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் நிலை கொண்டிருக்கின்ற தனிப்பட்ட நம்பிக்கைகளும் கனவுகளும் ஏனைய ஒவ்வொருவருக்குமான நன்மையாக மாற்றப்பட முடியும் என்பதுடன் அது எமது தேசத்திற்கும் மிகப் பெரும் பலமாகும்.
-ஜோன் எவ். கென்னடி
நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் உங்கள் பிள்ளையை கற்றலுக்குப் பயிற்றப்படுத்துவதை விட்டு அவர்களது மனத்தை ஆகர்சிக்கின்ற அம்சங்களுக்கு வழிப்படுத்துவீர்களாயின் பேரறிஞன் ஒவ்வொருவரதும் அதிசயிக்கத்தக்க திருப்புமுனையை துல்லியமாகக் கண்டுபிடிக்கக்கூடியவராக இருப்பீர்கள்.
-பிளேட்டோ கி;மு 427- 347-
சமூக மேம்பாடு
பொதுமக்களுடன் இணைய வேண்டுமெனில் பொது மக்களின் தேவைகள், விருப்பங்களுக்கமையச் செயற்பட வேண்டும். பொதுமக்களுக்காகச் செய்யும் வேலைகள் எல்லாம் அவர்களது தேவையிலிருந்தே தொடங்கப்பட வேண்டும். ஆனால் எவ்வளவு நல்லெண்ணம் உடைய எந்தவொரு தனிநபரின் ஆசையிலிருந்தும் தொடங்கப்படக் கூடாது. பல சந்தர்ப்பங்களில் புறநிலையில் பொதுமக்களுக்கு ஒரு மாற்றம் தேவைப்படுகிறது. ஆனால் அகநிலையில் அவர்கள் அத்தேவையை இன்னும் உணராத, அம்மாற்றத்தை இன்னமும் செய்ய விரும்பாத அல்லது தீர்மானிக்காத நிலையே இன்னமும் இருக்கிறது. இத்தகைய நிலைமைகளில் நாம் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். நமது பணி மூலம் பொதுமக்களில் பெரும்பாலானோர் இம்மாற்றத்தின் தேவையை உணர்ந்து அதைச் செய்ய விரும்பி ஒரு தீர்மானத்திற்கு வரும்வரையில் நாம் அம்மாற்றத்தைச் செய்யக் கூடாது. பொதுமக்கள் பங்குபற்ற வேண்டிய எந்த வேலையும்; அவர்கள் தாமாக உணர்ந்து செய்ய விரும்;;பாவிடில் அது வெறும் சம்பிரதாயமாக மாறித் தோல்வியில் முடிந்து விடும்;.
-மாவோ-
சமுதாய மேம்பாடு என்பது மனிதனது உணர்வு பூர்வமான பங்கு பற்றுதலின்றி முற்றிலும் தானாக நிகழும் ஒன்றல்ல. அதே சமயம் மனித சமுகச் சூழலின் இயல்பை மீறி யாராலும் வலிந்து ஏற்படுத்தப்படுவதுமல்ல. மனிதனது தேவைகளும் சமுதாய உறவுகளும் இணையும் போது மட்டுமே மேம்பாடு கருக்கொள்கிறது.
-மாவோ-
No comments:
Post a Comment