உலகம்
ஒழுங்காய் சுற்றுவதாய்
தெரிந்த
என் சின்ன வயதுப் பொழுதுகளில்
உன்மீது எரிச்சல்படுவேன்
என்போல்
ஏன் நீயில்லையே என்று------
உலகம்
தாறுமாறாய் சுற்றுவதாய்
உணரும்
இன்றைய பொழுதுகளிலும்
உன் மீது எரிச்சல்படுகின்றென்
உன்போல்
ஏன் நான் இல்லையே என்று--------
ஜன 1993
No comments:
Post a Comment