Saturday, September 13, 2014

நூல்களுள் நுழைய-----


நூல்களுள் நுழைய-----


நூல்கள்---
எண்ணங்களைச் சீர்செய்து கொள்வதற்கான கருவி. சிந்தனையைச் சரிபார்த்துக் கொள்வதற்கான களம்.. வாழ்நாள் முழுவதும் கூட வரும் மறக்க முடியாத துணை. கீழே விழுமுன் எச்சரித்துக் காப்பாற்றும் ஊன்றுகோல். விழுந்துவிட்டாலோ தூக்கி நிறுத்தித் துணிவு தந்திடும் நல்ஆசான். வழி தடுமாறும்போது இடித்துரைத்துத் திருத்தும் நல்ல நண்பன்.
'ஒவ்வொரு புத்தகமும் எம்முன்னே மக்களைப் பற்றியும், அவர்கள் ஆசாபாசங்கள் பற்றியும், அவர்கள் இதயம் பற்றியும், கருத்தோட்டங்கள் பற்றியும் அறிந்து கொள்ளத் திறந்து விடப்படும் சாளரங்கள்' என்கிறார் ருஷ்ய மண்ணின் புகழ்பெற்ற இலக்கிய மேதை மக்சிம்கோர்க்கி அவர்கள்.
' ஒரு துளி நஞ்சு ஒருமுறைதான் தீங்கிழைக்கும். ஆனால் தீயநூல் ஒன்று காலம் முழுவதும் மக்கள் மனத்தை நச்சுக் கலமாக்கும் என்கிறார் மேலைத்தேய  அறிஞர் ஒருவர்.
'நல்ல நூலானது படிக்கப்படிக்க இனிமைதரும் என்கிறது தமிழனின் அரும்பெரும் அறிவுப் பொக்கிசமான திருக்குறள்.
மனித சிந்தனைப் பதிவேடுகள் கால மாற்றத்துக்கமைய உடல் உள மாற்றங்களைச் சந்தித்திருக்கின்றமையை வரலாறு எமக்குப் புலப்படுத்துகின்றது. உருவமைப்பின் அடிப்படையில் களிமண் பதிவாகத் தொடங்கி,; ஓலைச் சுவடிகளாக உருப்பெற்று, ஏடு, ஓலை, தூக்கு, பனுவல் என இலக்கியங்களில் பேசப்பட்டு, ஓலைகளில் எழுதியவைகளைத் தொகுத்து  நடுவிலே துளையிட்டு நூலால் பிணைத்துக் கட்டியமையால் அச்சின் கண்டுபிடிப்புக்கு முன்னரேயே நூல் எனக் காரணப் பெயர் பெற்று,  புதிய கருத்துக்களை தன்னகத்தே கொண்ட இடம் என்பதால் புத்தகம் என்றும், கருத்துக்களைப் பொதிந்து வைத்திருப்பதால் பொத்தகம் என்றும் பொது வழக்கில் வழங்கி வந்திருக்கிறது.
நூலகம் என்ற கருத்துநிலையின் தோற்றத்திற்குப் பின்னர் அறிவியல் தொழினுட்ப வளர்ச்சி காரணமாகத் தகவலைச் சேமிக்கும் சாதனங்களின் பௌதிக வடிவமைப்பில் ஏற்பட்ட புதுப்புது மாற்றங்கள் நூலகங்களை வந்தடைந்தபோது, நூல் என்ற எண்ணக்கரு அனைத்துச் சாதனங்களையும் உள்ளடக்குவதற்குப் பொருத்தமானதல்ல என்பது உணரப்பட்டதன் காரணமாக  நூலுக்குப் பதிலாக ஆவணம்(னுழஉரஅநவெ) என்ற சொல் நூலகவியல் துறையில் பரவலான பயன்பாட்டுக்கு வந்தது.  ஆவணம் என்ற சொல்லானது நூல்வடிவில் உள்ள சாதனங்களையும் நூல்வடிவில் இல்லாத சாதனங்களையும் சேர்த்துக் குறிக்கும் பொதுப்பதமாகக் கருதப்பட்டது. இலத்திரனியல் உலகிலிருந்து தகவல் உலகிற்குள் மனித சமூகம் நுழைந்து  தகவல் என்ற கருத்துநிலை தகவல் உலகில் நிரந்தர இடம் பெற்றபோது தகவலைப் பதிந்து வைத்திருக்கும் எழுத்துவடிவ சாதனங்களுடன் எழுத்துவடிவற்ற மனித வளங்கள் நிறுவன வளங்கள் ஆகியனவும் தகவல் சாதனங்கள் எனப் பெயர் மாற்றம் பெற்றுப் பயன்பாட்டுக்குரிய வளம் என்ற வகையில் தகவல் வளங்கள்; என்ற பெயருடன் இன்றைய தகவல் உலகில் இப் பதிவேடுகள் உலா வருகின்றன. இக்கட்டுரை முழுவதும் தகவல் சாதனங்கள் அனைத்தும் நூல் என்ற பெயரிலேயே பயன்படுத்தப்படுகின்றது.
'20ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலேயே தகவல் தொழினுட்ப உலகுக்குள் மனித சமூகம் நுழைந்துவிட்டபோதும் வடிவம், எழுத்து இரண்டிலும் நெகிழ்வுத் தன்மை கொண்டதாக, சிறியதாக, பாரமற்றதாக, விரும்பிய இடத்துக்கு எடுத்துச் செல்லக் கூடியதாக, முக்கிய அம்சங்களை வெட்டிச் சேகரிக்கக் கூடியதாக, பல பிரதிகள் எடுக்கக்கூடியதாக, தேவை முடிந்ததும் தூக்கி வீசக் கூடியதாக இருக்கக் கூடிய ஒரேயொரு சாதனம் நூலாகத் தான் இருக்க முடியும் என்ற கூற்று தாளை அடிப்படையாகக் கொண்ட சாதனங்களின் பயன்பாடு தகவல் யுகம் ஒன்றில் சுலபமாக மறைந்துவிடக் கூடிய அல்லது மறக்கப்பட்டு விடக்கூடிய வாய்ப்பு இல்லை என்பதையே சுட்டிக்காட்டுகின்றது..


கருத்துநிலை

நூல்களுக்குள் நுழையும் செயற்பாடு இரண்டு அம்சங்களில் தங்கியுள்ளது. முதலாவதும் முக்கியமானதுமாகக் கருதப்படுவது நூல் பற்றிய கருத்துநிலை. மற்றையது நூலுக்குள் நுழைவதற்கான  அகப் புறச் சூழல்கள். நூல் பற்றிய கருத்துநிலைக்குள் செல்வதற்கு நூல் பற்றிய சரியான வரைவிலக்கணத்தைத் தெரிந்து கொள்வது மிக முக்கியமானதாகும்.
அச்சிடப்பட்ட அல்லது எழுதப்பட்ட தாள்களின் பக்கங்களைச் சுலபமாகத் திருப்பிப் பார்க்கக்கூடிய வகையில்  நூலால் கோத்துக் கட்டி, அதற்கு மட்டையும் இடப்பட்டு உருவாக்கப்படுவதே நூல் என்கிறது ஒக்ஸ்போட் ஆங்கில அகராதி. இது பௌதிக வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு நூலை வரையறை செய்கிறது.
குறைந்தது 49 பக்கங்களைக் கொண்ட பருவ வெளியீடு அல்லாத அச்சிடப்பட்ட வெளியீடுகள் அனைத்தும் நூல் என்ற பெயர் பெறும் என்கிறது யுனெஸ்கோ. பக்கங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இது நூலை வரையறுக்கிறது.
 'சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல், படிப்போர்க்கின்மை, நல்ல சொற்களை அமைத்தல், இனிய ஓசையுடைமை, ஆழமுடைத்தாதல், பொருளை முறையும் அமைத்தல், உயர்ந்தோர் வழக்கத்துடன் மாறுபடாமை, சிறந்த பொருளுடைத்தாதல், விளக்கமாய் உதாரணங்கள் கையாளுதல் என நூல் அழகுகள் பத்து' என கூறுகின்றது எமது பழம் பெரும் இலக்கண நூலாகிய தொல்காப்பியம். (தொல்காப்பியம் பொருள் 665)
நூல் என்பது கல்வியறிவு தந்து, நடைமுறை நிலை தெரிவித்து கடமைகளைக் காட்டி, உரிமைகளைச் சேர்த்து பொருளாதமாரத்தை வளர்த்து கலாசாரத்தைக் காக்கும் செயற்பண்பு கொண்டது. என்கிறார் இந்திய நூலகவியல் அறிஞர் வே. தில்லை நாயகம் அவர்கள். நூலகவியல் துறை சார்ந்து இது நூலை அணுகுகின்றது.


வகை
எந்தவொரு நூலும் அது கொண்டுள்ள கருத்தின் அடிப்படையில் புத்துயிர் தருவது, தகவலைத் தருவது, உயிர்ப்பூட்டுவது என மூவகைப்படுகிறது என்கிறார் இந்திய நூலகவியல் அறிஞர். வே. தில்லைநாயகம் அவர்கள்.  உண்மையோ பொய்யோ நல்லதோ தீயதோ படிப்பவருக்கு ஒரு புதிய உணர்வை, புதுவித எழுச்சியை, புதுவித கிளர்ச்சியை, பொழுதுபோக்கு உணர்வைத் தருபவை புத்துயிர் தரும் நூல்கள் (சுநஉசநயவiஎந டிழழமள) எனப்படும். புத்துயிர்ப்பு உடல் ரீதியாகவோ உள ரீதியாகவோ இருக்கலாம். அப்பட்டமான உண்மையிலிருந்து வடித்தெடுக்கப்பட்ட ரோல்ஸ்ரோயின் புத்துயிர்ப்பு, மக்சிம்கோர்க்கியின் தாய், லியோன்யூரிஸின் எக்ஸ்சோடஸ் இவ்வகையைச் சார்ந்தது. சமூகத்தின் வாழ்நிலையைப் பிரதிபலிப்பவை தான் இலக்கியங்கள் என்ற உயரிய கருத்துநிலையிலிருந்து இம்மியும் வழுவாமல் படைக்கப்படும் எந்தவொரு இலக்கியமும் புத்துயிர்தரும் என்றவகையில் கவிதை நூல்கள், நாடக நூல்கள், நாவல்கள், சிறுகதைகள் போன்ற இலக்கியங்களும், ஓவியம், சிற்பம், போன்ற கலைத்துவ ஆக்கங்களும் புத்துயிர் தரும் நூல்களின் வகைக்குள் உள்ளடக்கப்படுபவை. இவை தவிர ஆன்மீக ரீதியல் வாசிப்பவருக்கு அமைதியையும் நிறைவையும் தருகின்ற ஆன்மீக நூல்களையும் புத்துயிர் தரும் நூல்களுக்குள்ளே உள்ளடக்கலாம்.  பழம்பெரும் இலக்கியங்களான புராண இதிகாசங்கள், திருமுறைகள் போன்றவை இவ்வகைக்குள் உள்ளடங்கும்.
வரலாறு, அரசியல், புவியியல் போன்று எடுத்துக் கொண்ட பொருட்துறை தொடர்பாக பொதுவான தகவலை உள்ளடக்குபவை தகவலைத் தரும் நூல்கள் (ஐகெழசஅயவiஎந டிழழமள) எனப்படும். இவை குறிப்பிட்ட பொருட்துறையில் எழுதப்படும் தனிப்பொருள் நூல்களாகவோ, கல்வித்தேவையைப் பூர்த்தி செய்யும் பாடநூல்களாகவோ, ஆய்வுக்கு உதவும் அறிக்கைகள், ஆய்வுக்கட்டுரைகள், பருவ இதழ்கள் போன்ற அடிப்படை நூல்களாகவோ, அதுவுமன்றி தேவைப்பட்ட உடனேயே குறிப்புகளை வழங்கும் உசாத்துணை நூல்களாகவோ இருக்கலாம்.
 இவை இரண்டையும் தவிர பொருளாதார தத்துவத்தை புகுத்திய அடம்ஸ்மித்தின் 'தேசங்களின் செல்வம்', பொதுவுடமைத் தத்துவத்தை தந்த கார்ல்மாக்ஸின் 'மூலதனம்', உயிரின உருவாக்கத்தை விளக்கிய டார்வினின் 'பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு', மக்கள் தொகைப் பிரச்சனையை விளக்கிய மால்தசின் 'மக்கள் தொகைக் கோட்பாடு', மனித மனத்தை அப்படியே படம்பிடித்துக் காட்டிய சிக்மண்ட் பிராய்டின் 'மனித மன சிந்தனை', போன்ற மனிதனின் அறிவைத் தூண்டுகின்ற, சிந்திக்க செய்கின்ற, மனிதனையும் சமூகத்தையும் முன்னேற்றுகின்ற உயிர்ப்பூட்டும் நூல்கள் (ஐnளிசையவiஎந டிழழமள) எம்மிடம் மிகவும் குறைவே. சத்திய வாழ்க்கையை எடுத்தியம்பிய அரிச்சந்திரன் கதை, அதர்மத்துக்கும் தர்மத்துக்குமிடையிலான யுத்தத்தில் தர்மமே வெல்லும் என்பதை உணர்த்தும் பாரத இராமாயணக் கதைகள் இவ்வகைக்குள் உள்ளடக்கப்படக்கூடியவை. அதிலும் இந்த மூன்று அம்சங்களும் ஒருங்கு சேர அமைந்திருக்கும் அற்புத வாய்ப்பு ஒரு சில நூல்களுக்கே அமைந்து விடுகின்றது. ராகுல சாங்கிருத்தியாயனின் 'வால்காவிலிருந்து கங்கை வரை' என்ற நூலை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
நூலகவியல் துறை சார்ந்து நூல்களை ஆவணம் சார்ந்த வளங்கள், ஆவணம் சாராத வளங்கள் என இருவகையாக வகைப்படுத்த முடியும். ஆவணம் சார்ந்த வளங்கள் ஜனுழஉரஅநவெயசல சநளழரசஉநளஸ  அவற்றின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் முதல்நிலைத் தகவல் வளங்கள் இரண்டாம்நிலைத் தகவல் வளங்கள் மூன்றாம்நிலைத் தகவல் வளங்கள் என மூன்று வகையாகவும் உருவமைப்பின் அடிப்படையில் நூலுருச் சாதனங்கள் நூலுருவற்ற சாதனங்கள் என இருவகையாகவும் வகைப்படுத்தப்படுகின்றன. ஆவணம் சாராத வளங்கள் (ழேn னழஉரஅநவெயசல ளழரசஉநள)  மனித வளங்கள், நிறுவன வளங்கள் என இருவகையாகப் பாகுபடுத்தப்படுகின்றன.
உண்மையான ஆய்வு அபிவிருத்திகளை, அவற்றின் புதிய பிரயோகங்களின் விளக்கங்களை, அல்லது பழைய கருத்துக்களுக்கான புதிய விளக்கங்களை உடனுக்குடன் தாங்கி வரும் வெளியீடுகள் அனைத்தும் முதல்நிலைத் தகவல் வளங்கள் எனப்படுகிறது. ஆய்வாளர் ஒருவரால் உருவாக்கப்படுகின்ற புதிய தகவல்கள் அனைத்துமே இந்த முதல்நிலைத் தகவல் வளங்களின் ஊடாகக் குறிப்பிட்ட சமூகத்தைச் சென்றடைகிறது. ஒழுங்குபடுத்தப்படாத வளங்களாக இவை இருப்பதனால் இதனைப் பயன்படுத்துவது எளிதல்ல. மிக முக்கியமான தகவல் மூலாதாரங்களாகக் கருதப்படும் இவ் வளங்கள் புதிய அபிவிருத்திகள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிவிப்பதன் மூலம் அத்துறை தொடர்பாக அதிக அறிவு நிலையில் இருக்க உதவுதல், ஒரே மாதிரியான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதைத் தடுத்தல், புதிய தகவல்களை உருவாக்குவதற்கு ஏனையோர்களுக்கு உதவுதல் போன்ற வழிகளில் ஆய்வாளர்களுக்கு உதவுகின்றன. ஒரு குறிப்பிட்ட துறையின் வளர்ச்சி வீதமானது அத்துறை சார்ந்து வெளிவரும் முதல்நிலைத் தகவல் வளங்களின் தொகையிலேயே பெருமளவு தங்கியுள்ளது. அறிக்கைகள், ஆய்வுக் கட்டுரைகள், சிறுநூல்கள், அரச ஆவணங்கள், ஆய்வுப் பருவ இதழ்கள் போன்றவற்றை இத்தகைய வளங்களுக்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
இரண்டாம்நிலைத் தகவல் வளங்கள் என்பவை முதல் நிலைத் தகவல் வளங்களிலிருந்து தொகுக்கப்படுவதாக அல்லது முதல்நிலைத் தகவல் வளங்களுக்கு வழி காட்டுவதாக இருக்கும். குறிப்பிட்ட தகவல் பாவனையாளரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு முதல் நிலைத் தகவல்களில் உள்ள அடிப்படைத் தகவல்கள் புதுப்பிக்கப்பட்டு, தெரிவு செய்யப்பட்டு, ஏதாவது ஒரு திட்டமிடப்பட்ட ஒழுங்கமைப்பில் மீள ஒழுங்கமைக்கப்பட்டு  பொதி செய்யப்படுகின்றன. முதல் நிலைத் தகவல் வளங்களிலும் பார்க்க இலகுவாகக் கிடைக்கக்கூடியதாக இவை உள்ளன. சுருக்கமான தகவல்களை வழங்குவது மட்டுமன்றி முதல் நிலைத் தகவல் வளங்களுக்கான நூல்விபரத் திறவு கோலாகவும் இவை தொழிற்படுகின்றன. பாநூல்கள், குறிப்பிட்ட துறை சார்ந்து எழுதப்படும் தனிநூல்கள், அகராதிகள், கலைக்களஞ்சியங்கள் போன்ற குறிப்பெடுக்க உதவும் உசாத்துணை நூல்கள் போன்றவை இவ்வகைக்குள் அடங்கும்.
வாசகனது தேடுகையின் அடிப்படையில் நூல்களை ஏன், என்ன, எப்படி, யார், என்ற வினாக்களுக்கு விடை தரக்கூடியவகையில் வகைப்படுத்தலாம். அறிவியல் தொழினுட்ப நூல்கள் ஏன் என்ற வினாவுக்கு விடையளிக்கக்கூடியவை. கைந்நூல்கள், கையேடுகள், வழிகாட்டிகள் போன்ற செய்முறை நூல்கள் எப்படிச் செய்வது என்ற வினாவுக்கு விடை தருபவை. சொல்லைப் பற்றிய வரைவிலக்கணத்தையோ பொருளைப்பற்றிய விளக்கத்தையோ அல்லது குறிப்பிட்ட வினாக்களுக்கு விடையளிக்கின்ற நூல்கள் என்ன என்ற வினாவுக்கு விடையளிப்பவை. வாழ்க்கை வரலாற்று நூல்கள் யார் என்ற வினாவுக்கு விடையளிப்பவை.
நூலகங்களில் நூல்களின் ஒழுங்கமைப்பை அடிப்படையாகக் கொண்டும் நூல்கள் வகைப்படுத்தப்படுகின்றன. கீழைத்தேய நூல்களை ஒழுங்கமைப்பதற்கான சிறந்த அடிப்படையாகக் கொள்ளும் கோலன் பகுப்புத் திட்டம் நூல்களை இயற்கை அறிவியல், மனிதப்பண்பியல், சமூக அறிவியல் ஆகிய மூன்று பிரதான பொருட்துறைகளின் கீழ் ஒழுங்குபடுத்தியிருக்கிறது. உலகம் முழுவதிலுமுள்ள பெரும்பாலான நூலகங்களால் பின்பற்றப்படும் தூயி தசமப்பகுப்புத் திட்டம் நூல்களை பொது, சமயம், சமூக அறிவியல், மொழி, அறிவியல், தொழினுட்பம், கலை, இலக்கியம், புவியியலும் வரலாறும் என்ற பத்துப் பிரதான பிரிவுகளின் கீழ் அறிவுப்பிரபஞ்சத்தின் பொருட்துறைகளை ஒழுங்குபடுத்தியிருப்பதன் மூலம் அனைத்து நூல்களையும் ஒழுங்குபடுத்துவதற்கான அடிப்படையை வழங்குகின்றது.


நுழையும் வழி

சரியான தகவலை சரியான வடிவத்தில், சரியான நேரத்தில் பெறக்கூடியதாக இருக்கும் நிலையிலேயே எந்தவொரு சமூகத்தினதும் மேம்பாடு சாத்தியமாகும். நூல்கள், வாசகர், நூலகர் ஆகிய  மூன்றும் ஒன்றுடன் ஒன்று சரிவரப் பொருந்தும்போது தான் சரியான தகவல் சரியான நேரத்தில் சரியான நபரைச் சென்றடைதல் சாத்தியமாகிறது.  உருவத்திலும் உள்ளடக்கத்திலும் எல்லையற்றுப் பரந்து விரிந்திருக்கும் தகவல் பிரபஞ்சத்தை அணுகும் வழிகளை அறிந்து கொள்வதன் மூலமே சமூக மேம்பாட்டுக்கான நுழைவாயிலைக் கண்டறிதல் சாத்தியமாகும். பின்வரும் கருத்துநிலைகள் தொடர்பான அறிவு நழையும் வழிகளை இலகுவானதாக்கக்கூடும். நூலுக்குள் நுழையும் இரண்டாவது வழி நூலுக்கள் நுழைவதற்கான  அகப்புறச் சூழல்கள். இச்சூழல்களை  வாசகன் சார்ந்தவை நூல்சார்ந்தவை என இருவிதமாக அணுகலாம்.

வாசகன் சார்ந்தவை
•    மனிதன் வாசிப்புக்கு அறிவுத்திறம், மொழித்திறம், பார்வை நலம், கேள்விநலம், உடல்நலம், உள நலம், சூழல் நலம் ஆகியவை மிக இன்றியமையாதவை. ஆழலடந.னு.ஜ1976ஸ வாசகனின் மனப்பாங்கு, எதிர்பார்ப்புகள், அறியாமை, அச்சம், ஒத்துழையாமை, தகவல் தேடும் பண்பு, மொழியாற்றல், பொருட்துறை சார்ந்த அறிவு, நவீன சாதனங்களின் பாவனை போன்றன நூலை அணுகுவதற்கான ஆற்றலைத் தீர்மானிக்கின்றன. நூலின் பொருளடக்கம், சொல்லடைவு, கலைச்சொல் அகராதி போன்றவற்றினூடாக நூலில் உள்ளடக்கப்பட்டுள்ள தகவலைக் கண்டுபிடிக்கும் ஆற்றல், தேசப்படங்கள், வரைபுகள், விளக்கப்படங்கள், அட்டவணைகள் போன்றவற்றை விளங்கிக்கொள்ளும் ஆற்றல், நூலிலுள்ள ஒரு பந்தியின் பிரதான உட்பொருளை இனங்காணும் ஆற்றல், அபிப்பிராயம் ஒன்றுக்கும் உண்மையான நிகழ்வுக்குமிடையிலான வேறுபாட்டைப் புரிந்து கொள்ளும் ஆற்றல், நூல் உள்ளடக்கும் தகவலானது உண்மையா பொய்யா என இனங்காணும் ஆற்றல், நூல் கொண்டுள்ள கருத்து தனது தகவல் தேவைக்கு பொருத்தமானதா என்பதை புரிந்து கொள்ளும் ஆற்றல், இன்ரநெற், சீடி போன்ற நூலுருவற்ற சாதனங்களைப் பயன்படுத்துவதற்கும் அதற்கான உபகரணங்களை இயக்குவதற்குமான ஆற்றல் போன்ற  பலதரப்பட்ட ஆற்றல்கள் நூலைப் பயன்படுத்துபவருக்கு இன்றியமையாததாகக் கருதப்படுகின்றது.

•    குடும்பம் மனிதனுக்குக் கிடைக்கும் நல்லதொரு வாசிப்புச்சூழல் நூல்களுக்குள் நுழையும் மனோநிலையை உருவாக்குவதற்கு மிக முக்கியமானது. மனித வாழ்வின் பெரும்பகுதி குடும்பம், சுற்றுப்புறச் சமூகம் என்ற வட்டத்துக்குள்ளேயே கழிவதனால் வீடு, சுற்றம், நண்பர்கள் ஆகிய மூன்றும் நூல்களுக்குள் நுழையும் மனோநிலையைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தம்மைச் சுற்றி எப்போதும் நூல்கள் உள்ள வீட்டில் வாழக் கிடைத்தாலும் கூட நூல்களுக்குள் நுழையும் வல்லமை யாருக்கும் வந்துவிடுவதில்லை. அந்த நூல்களை எடுத்து வாசிக்கும் பெற்றோர் அல்லது ஏனைய அங்கத்தவர் தான் நூல்களுள் நுழையும் மனோநிலையைத் தெரிந்தோ தெரியாமலோ ஏற்படுத்திவிடுகின்றனர். வீடு சரியாக அமையாத சந்தர்ப்பம் உள்ளவர்களுக்கு ஆசிரியர்கள்  இத்தகைய சூழலை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.  எல்லாவற்றுக்கும் மேலாக வாசிக்கும் பழக்கம் உள்ள நண்பர்களின் உறவு தன்னிச்சையாகவே அவர்களிடம் அளப்பரிய மாறுதல்களை ஏற்படுத்திவிடுகின்றது.

•    சமூகம் ஒருபுறம் வளர்ச்சியடைந்த சமூகங்கள் நூல்களின் தொகை ரீதியான பெருக்கத்தால் திணறிக் கொண்டிருக்கும் அதேசமயம் பின்தங்கிய சமூகங்கள் தகவல் பிரபஞ்சத்துக்குள் நுழையும் வாய்ப்பற்று இருக்க மறுபுறம் தகவல் தொழிற்துறையின் உருவாக்கம் காரணமாக ஏனைய பண்டங்களை விடவும் தகவல் சாதனங்களின்; விலை ஒப்பீட்டளவில் குறைந்து கொண்டு போவதும், ஓரே நூலை தரங்குறைந்த தாளில் அச்சிட்டு பெருந்தொகையில் மலிவுப்பதிப்புகளாக விற்கக்கூடிய வசதியும், படித்து முடிந்ததும் குப்பைக்கூடைக்குள் போடக்கூடியளவுக்கு உடனடித்தேவையை பூர்த்தி செய்யக்கூடிய நூல்களின் உற்பத்தியும் நூல்கள் மீது வைத்திருந்த மரியாதையைக் கணிசமானளவு குறைத்திருக்கிறது. வீட்டுக்கொரு நூலகம் என்ற அண்ணாவின் தாகம், வீதிக்கொரு நூலகம் என்ற புரட்சிக்;கவியின் கோசம் செயலுறுப்பெறும்போது நூலுக்குள் நுழைவதற்கான புறச்சூழல் எந்தச் சமூகத்தக்கும் வாய்த்துவிடும். வாசகனுக்குப் பொருத்தமற்ற நூல்களும், பொழுதுபோக்குக்குகந்த மலிவுப்பதிப்புகளுமாக சிறிய மண்டபத்தில் குறைந்த தொகை நூல்களுடன் சேவையாற்றுகின்ற எமது பிரதேசத்தின் பெரும்பாலான பொது நூலகங்கள் போன்று இல்லாமல் நூலகவியல் பேரறிஞர் எஸ். ஆர் இரங்கநாதன் அவர்களின் நூல்கள் பாவனைக்கே, நூலுக்கேற்ற ஆள், ஆளுக்கேற்ற நூல், வாசகர் நேரம் பேணுக, நூலகம் ஒரு வளரும் உயிரி ஆகிய பஞ்ஙசீலக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட நூலக சேவை நூலுக்குள் நுழைவதற்கான சூழலை ஏற்படுத்தும்.

நூல்கள் சார்ந்தவை
ழ    உருவம் அன்றைய களிமண் பதிவுகள் முதற்கொண்டு இன்றைய கணினிப் பதிவுகள் வரை நூல்கள் அவற்றின் உருவமைப்பில் கணிசமான மாற்றஙகளைச் சந்தித்திருக்கிறது. ஓலைச்சுவடிகள், படங்கள், ஓவியங்கள் போன்ற மரபு ரீதியான  சாதனங்கள் , படத்துணுக்குகள் காட்சி வில்லைகள், ஒலி,ஒளிப் பதிவுகள், நுண்வடிவங்கள் போன்ற கட்புல செவிப்புல சாதனங்கள்;, ஒளிப்படங்கள், வரைபுகள், மாதிரி உருவமைப்புகள், சுவரொட்டிகள் போன்ற வரையுருவ சாதனங்களைக் கடந்து இன்று எங்கும் சீடீ எதிலும் சீடி என்ற வகையில் தகவல் உலகத்துக்குள் சீடி உலகம் ஒன்று உருப் பெற்றுள்ளமையும் வாசகன் அறிந்து கொள்வது இன்றியமையாதது..

ழ    உள்ளடக்கம் ஆய்வுத்துறைகளின் வளர்ச்சி நூல்களின் உள்ளடக்கத்திலும் பலதரப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தியதன் காரணமாக அறிக்கைகள், ஆராய்ச்சி நூல்கள், நியமங்கள், காப்புரிமைகள், சிறுநூல்கள், செய்திக்கடிதங்கள், பருவ இதழ்கள், தொடர் வெளியீடுகள் போன்ற முதல் நிலைத் தகவல் வளங்களையும் இத் தகவல் வளங்களிலிருந்து தொகுக்கப்படுகின்ற பாட நூல்கள், உசாத்துணை நூல்கள் போன்ற இரண்டாம் நிலைத் தகவல் வளங்களையும், இவற்றைத் தொகுத்து தருகின்ற மூன்றாம் நிலைத் தகவல் வளங்களையும் தோற்றுவித்திருக்கிறது.

ழ    எண்ணிக்கை  உருவம் உள்ளடக்கம் எண்ணிக்கை, தரம் போன்ற பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் நூல்களின் தொகை ரீதியான அதிகரிப்பை தகவல் கட்டுமீறல் ஜஐகெழசஅயவழைn நுஒpடழளழைஸெ என்ற பதம் குறித்துநிற்கிறது. இன்று உலகில் 12 மில்லியன் ஆய்வாளர்களால் வருடாவருடம் 2 மில்லியன் கட்டுரைகள் உருவாக்கப்படுவதாக மதிப்பிடப்படுகிறது. 50-60 ஆயிரம் அறிவியல் தொழினுட்ப பருவ இதழ்கள் வெளியிடப்படுகின்றன. நாளாந்தம் மூன்று பருவ இதழ்கள் புதிதாகத் தோன்றும் அதே சமயம் ஒரு பருவ இதழின் வெளியீடு நிறுத்தப்படுகிறது. வெளியீடு செய்யப்படும் இலக்கியங்களில் 50மூமானவை தேவைக்கும் மேற்பட்டதாக உள்ளது.  நூல்களின் தொகை ரீதியான அதிகரிப்பு நூல்களைத் தேடும் பணியைச் சிக்கலாக்குகிறது.

ழ    புதிய துறைகளின் தோற்றம் மனிதனின் ஆய்வு முயற்சிகள் அறிவுப் பிரபஞ்சத்தில் புதுப்புதுத் துறைகளை தோற்றுவித்ததுமல்லாமல் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற எத்தனையோ பொருட்துறைகளை ஒன்றிணைத்து எது கலை? எது அறிவியல்? என்று பிரித்தறியாதபடி புதிய பொருட்துறைகளை உருவாக்கியுள்ளது. எமது முதல் தலைமுறையினருக்கு கணினி அறிவியல் என்ற புதிய துறை இருந்ததோ உயிரியலும் தொழினுட்பவியலும் இணைந்து தோற்றம் பெற்ற உயிர்த்தொழினுட்பவியல் துறையோ தெரியாது.

ழ    சுமை  ஒரே பொருட்துறை சார்ந்து எண்ணற்ற தகவல் சாதனங்களின் உற்பத்தியினால் தகவல் தேடுகையில் வாசகனுக்கு ஏற்படும் சிரமத்தை தகவல் சுமை (ஐகெழசஅயவழைn ழுஎநசடழயன) என்ற பதம் குறிக்கிறது. சாதாரண நூல்களை எடுத்துக் கொண்டால் ஒரே பொருட்துறை சார்ந்து ஒரே மாதிரியான பல நூல்கள் இருக்கும்போது அதில் பொருத்தமானதையும் சரியானதையும் தேர்ந்தெடுக்கும் வல்லமை எல்லா வாசகருக்கும் இல்லை. ஒரே பொருட்துறையில் எண்ணற்ற நூல்கள்  வெளியிடப்படுவதன் காரணமாக தகவல் சுமையின்; தாக்கத்துக்கு வாசகன் உட்படுவது தவிர்க்க முடியாததாகிறது. இது சரியான தகவலைச் சரியான நேரத்தில் பெறுவதைத் தடை செய்கிறது.

•    நூல்களின் செயற்கைத் தன்மை சாதாரண நூல்களை எடுத்துக் கொண்டால் ஒரே பொருட்துறை சார்ந்து ஒரே மாதிரியான பல நூல்கள் இருக்கும்போது அதில் பொருத்தமானதையும் சரியானதையும் தேர்ந்தெடுக்கும் வல்லமை எல்லா வாசகருக்கும் இல்லை. அதே போன்று அகராதிகள், கலைக்களஞ்சியங்கள், ஆண்டு நூல்கள் போன்ற உசாத்துணை சாதனங்களோ அல்லது  நுண்வடிவங்கள், படத்துணுக்குகள் சீடிரோம்கள் போன்ற உபகரணப் பாவனையுள்ள சாதனங்களோ செயற்கைத் தன்மை வாய்ந்தவை. இவற்றிலிருந்து வாசகனுக்குத் தேவைப்படும் தகவலைத் தேடிப் பொறுக்கியெடுத்தல் கடினமான அறிவுசார் பணியாகும். ஒருவரின் தனிப்பட்ட உதவியின்றி இவற்றைப் பயன்படுத்தல் மிகவும் சிரமமானது.

•    நூல்களின் ஒழுங்கமைப்பு உசாத்துணை நூல்கள் அகரவரிசை ஒழுங்கமைப்பு, பகுப்பாக்க ஒழுங்கமைப்பு, கால ஒழுங்கமைப்பு போன்றவற்றைப் பின்பற்றுகின்றன. அகராதிகள் பெரும்பாலும் அகர ஒழுங்கமைப்பையே பின்பற்றுகின்றன. அறிவியல் நூல்களில் பெரும்பாலானவை சில கோட்பாடுகள், சட்டங்களின் அடிப்படையில் ஒழுங்குபடுத்தப்படுகின்றன. வரலாற்று நூல்கள் கால ரீதியல் ஒழுங்கமைக்கப்படுகின்றன. பகுப்பாக்க ஒழுங்கமைப்பைப் பின்பற்றும் நூல்களுக்குள் இலகுவாக நுழையக்கூடிய தன்மையை நூலின் இறுதிப்பகுதியில் தரப்பட்டுள்ள சொல்லடைவு ஏற்படுத்தவல்லது. பெரும்பாலான அறிவியல் தொழினுட்ப நூல்களைப் படிப்பதற்கு நூலின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ள கலைச்சொல்லகராதி உதவக்கூடியது.

•    தகவல் மாசடைதல் நூல்கள் புனிதமானவை. எனவே நல்லதை, தேவையானதை மட்டுமே பதிவு செய்தல் வேண்டும் என்ற மனிதனின் மனப்பாங்கு மாறி இலாபம் தரும் உற்பத்திப் பொருளாக கருதும் மனப்பாங்கு  உருவாகியதன் விளைவாக எதனையும் எப்படியும் அச்சிடலாம் என்ற வகையில் அதிகரித்த மலினப்பதிப்புகளின் உற்பத்தியானது சூழல் மாசடைதல் போல் தகவலிலும் மாசடைதலை ஜஐகெழசஅயவழைn pழடடரவழைஸெ  உருவாக்கியிருப்பதன் காரணமாக தீயவற்றுக்குள் நல்லதைத் தேடிப்பிடிக்க வேண்டிய அறிவை வாசகனிடம் கோரி நிற்கிறது.

•    மொழி  ஆங்கில மொழி இன்றும் மேலாதிக்கம் செலுத்துவதும் பெரும்பாலான தரவுத் தளங்கள் ஆங்கில மொழியை மையமாகக் கொண்டிருப்பதும் தாய்மொழிக் கல்வியில் தங்கியுள்ள வாசகனது தகவல் அணுகுகையை மட்டுப்படுத்துகின்றன. வேற்று மொழியில் பரிச்சியமின்மை தகவல் தேடும் ஆர்வத்தில் விரக்தி நிலையைத் தோற்றுவிப்பது மட்டுமன்றி தெளிவற்ற தன்மையையும் உருவாக்கும். கணினி யுகத்தில் மொழித் தடையானது மனிதனுக்கும் இயந்திரத்துக்குமிடையில், இயந்திரத்துக்கும் இயந்திரத்துக்குமிடையில், மனிதனுக்கும் மனிதனுக்குமிடையில், இயந்திரத்துக்கும் மனிதனுக்குமிடையில,; பொருத்தப்பாடின்மையையும் முரண்பாட்டையும், உருவாக்கும். இலக்கியங்களில் பயன்படுத்தப்படும் சொல்லலங்காரங்கள், கலைச்சொற்கள் போன்றன  தகவலை விளங்கிக் கொள்வதில் இடர்ப்பாடுகளை ஏற்படுத்துகின்றன.

முடிவுரை
நூல்களுக்குள் நுழைவதற்கான சூழல் முழுக்க முழுக்க சமூகத்தின் மனப்பாங்கிலேயே தங்கியிருக்கிறது. பொதுவாகவே வாசிப்புப் பழக்கம் குறைந்த சமூகமாக இனங்காணப்பட்டிருக்கும் தமிழ்ச்சமூகத்தில் நூலுக்குள் நுழையும் செயற்பாடு ஒன்றில் கல்வித்தேவையின் பொருட்டு கட்டாயமாக்கப்பட்டதொன்றாக அல்லது நிர்ப்பந்திக்கப்பட்டதொன்றாக இருக்கின்றதேயன்றி  இயல்பானதாக,  சமூக மேம்பாட்டை மையப்படுத்தியதொன்றாக இன்னமும் வளரவில்லையென்றே கூறவேண்டும்.

குறிப்புதவு நூல்கள்


1.       Harrod,L.M. Harrod`s librarians` glossary of terms used in librarianship documentation and the book craft and reference book. Compiled by Ray Prytherch,6th ed..- London: Gower,1987.
2.   Licklider,J.C.R. (1965),J E} Libraries of the future.Mass,MIT,Cambridge.
3.   Moyle.D.[1976] The Teaching of Reading. 4th ed. London: Ward Lock Educational, 1976.
4.   Oxford English Dictionary
5.    தில்லைநாயகம்இவே. இந்திய நூலக இயக்கம்.

ஸ்ரீகாந்தலட்சுமி,அ
கல்விசார் நூலகர்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
20-06-2006

No comments: