Wednesday, May 10, 2017

வேர்களைத் தேடி

வேர்களைத் தேடி


புதுவழி காட்ட ஆண்டொன்றிங்கு புதிதாய் பிறந்ததென்று நம்பிக்கை கொள்வோர்.....
பட்டாசு கொளுத்த கிடைத்தது வாய்ப்பென்று குதூகலித்து மகிழ்வோர்...
இயற்கைச் சக்திக்குப் இறைமை கற்பித்துப் புனிதம் காப்போர்...
காணிக்கை கொடுக்க கட்டுப்பாடுகள் எதற்கு ? என்று மூடத்தனம் விலக்கி பகுத்தறிவால் கோடிட்டு முழுமை காப்போர்....
உங்களுக்கு மட்டும் இது உரியதல்ல.. உழைப்பவர் அனைவருக்கும் பொதுவானது இது என்று உரிமை எடுத்து கொண்டாடி மகிழ்வோர்....
என இடப்பெயர்வுகள், இல்லாமைகள், மன வேற்றுமைகள், மன விரக்திகள் அனைத்துக்கும் தாக்குப் பிடித்து குச்சு வீட்டிலிருந்து கோபுர வாசல் வரைக்கும் பொலிவு குலையாமல் கொண்டாடப்படும் பொங்கல் விழா... தொன்று தொட்டு தமிழர் வாழ்வோடு பின்னிக்கிடக்கும் புதுமைமிகு விழா...
தைபிறந்தால் வழி பிறக்கும் என்று நம்பிக்கையூட்டி எங்கள் வாழ்வை இயங்கச் செய்யும் தமிழ் இனத்தின் ஆண்டுத் தொடக்க விழாவும் இது தான்

உழைப்பின் மேன்மையை, சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என்ற உழவுத்தொழிலின் மேன்மையை... உழுவார் உலகத்தார்க்கு ஆணி என்ற உழவரின் மேன்மையை... உயரிய வீரத்தின் அடையாளமாக உலகிற்கு உணர்த்தும் ஒப்பற்ற விழா இது... இயற்கைச் சக்திகளின் வலிமைக்கு ஈடு கொடுக்கும் வலுவின்றி  அச்சம் தரும் பிரபஞ்சக்கூறுகளை வழிபட்ட ஆதி மனிதனில் தொடங்கி இயற்கைச் சக்திகளின் இருப்பிடங்களை இயன்றவரையில்  கண்டுபிடித்துக்  கட்டுப்படுத்த முனையும் இன்றைய அறிவியல் மனிதன் வரை முழுமை கெடாமல் தொடரும் சிறப்பு விழா இது... உயிர்களின் இயக்கத்துக்கு ஆதாரமாய் விளங்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் ஒரேயொரு உயிரி இந்தப் பூமியிலே மனிதன் மட்டுமே என்ற பேருண்மையை அனைவருக்கும் உணர்த்தி நிற்கும் பண்பாட்டு விழா இது..., நன்றி மறப்பது நன்றன்று உன்ற உயரிய போதனையை அந்த போதனைக்குரியவர்கள் திராவிடர்  என்ற ஒப்பற்ற உண்மையை தொடர்ந்து வரும் தலைமுறைகளுக்கும் உணர்த்திக்கொண்டிருக்கும் விழா இது.  கண்முன்னே நடப்பதை அவதானித்து, அதன் வழி ஆராய்ச்சி செய்து, ஒரு முடிவுக்கு வந்து, அந்த முடிவை நிரூபித்துக் காட்டும் அறிவியல் நடவடிக்கைக்கு ஆட்படாமல் இருந்த காலத்திலேயே உயிர்களுக்கு உதவும் இயற்கைச் சக்திகளான நிலம், நீர், காற்று, நெருப்பு, ஒளி போன்றவறற்றில் ஒளியே முதன்மையானது என கண்டபிடித்த மனித மூளையின் அற்றலை ஆண்டாண்டு காலமாய் உணர்த்திக்கொண்டிரக்கும் அறிவியல் வழா இது...  அறியாமை நிலையில் அச்சம் காரணமாக ஏற்பட்ட கண்டுபிடிப்புகளில் அறிவியல் வளர்ச்pயால் மூட நம்பிக்கைகளாகப் புறந்தள்ளப்பட்ட எத்தனையோ ஆதிகால அறியாமையின் பாற்பட்ட அச்சத்தின் வழி ஏற்பட்ட கண்டுபிடிப்புகளில் புறந்தள்ளப்படமுடியாமல் இன்றும் நிலைத்திருக்கு உன்னத விழா இது... ( பேட்டி)
இயற்கை வழிபாடுகளுக்கு இறைமை கற்பிக்கும் அளவுக்கு மனித சிந்தனை விரிவடைந்து, பண்பாட்டுப் படையெடுப்புகள் வழி புதுப்புது வழிபாடுகளை உள்வாங்கி, நீண்ட இந்து மத பாரம்பரியங்களுக்குள் நடைபயின்று, கணிசமானளவு அர்த்தங்களையும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் அறியாமைகளையும் உள்வாங்கி, மனிதனின் சிந்தனை, அழகுணர்ச்சி, விருப்பங்கள் அனைத்தும் இணைந்து இன்றைய வாழ்நிலையை அப்படியே பிரதிபலிக்கக்கூடியவகையில் விதவிமான கோலங்கள், நிறைகுடம், பானை வகைகள், சர்க்கரைப் பொங்கல், பழவகை, பலகார வகைகள் என்று களை கட்டியிருக்கும் இப் பொங்கல் விழா வடமராட்சி, வலிகாமம் போன்றவற்றின் கில பகுதிகளில் இன்றுங்கூட அதன் ஆரம்ப வடிவம் குலையாமல் புதிய மண்பானை, பானையை ஊறுபடுத்தாத புதிய மண் அடுப்பு, மனிதனைவிட மகிமை வாய்ந்தவன் சுவையை விரும்ப மாட்டான் என்ற உண்மை பொதியும் வகையில் மாட்டுப்பாலும் அரிசியும் கலந்த பால் பொங்கல் என்று பின்பற்றப்படுகின்றது. (பேட்டி)

பானை உடைதல், பால் பொங்கிச் சரிய முதல் உள்ளுக்குள் சுழித்தல் அபசகுனம் என்ற ஆழமான நம்பிக்கையால், மண் பானையை விட்டு உலோகப் பானைகளுக்கு மாறும் வழமை உண்டெனினும் குச்சு வீடு முதற்கொண்டு கோபுர வீடு வரை மண்பானையே இன்றும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது. அவரவர் பொருளாதார நிலைகளுக்கேற்ப அழகுணர்ச்சி கூடி முதன்மை கொடுக்கப்படவேண்டிய மண்பானையும் அடுப்பும் மூலைக்குப் போய்விடுவதும் உண்டு. பசுப்பால் தவிர்த்து தேங்காய் பாலில் பொங்கும் வழக்கமும் கருப்பஞ்சாறு விலக்கி, முக்கனிகளைப் புறந்தள்ளி, அடுத்தநாட்டு அப்பிள் முதலிடம் பெறுவதும் உண்டு.

மனிதனின் முதலாவது கண்டுபிடிப்பு என்று பகுத்தறிவுடன் சிந்திப்பவரும் சரி,
மாக்கோலம், மஞ்சள் கோலம், பூக்கோலம் என்று புதுப்புது வடிவம் எடுத்து இன்று ஈழமே கோலமாய் மாறும் இந்தக் கோலத்துக்கும் ஒரு வரலாறு உண்டு( பேட்டி)

மதங்களைக் கடந்து, மங்கல நிகழ்வுகள் அனைத்திலும் முதன்மை இடம் வகிக்கும் இந்த நிறைகுடத்துக்கும் அர்த்தம் உண்டு.
தைப்பொங்கலுக்கு முதல்நாளே வீடுகள் அனைத்தும் பழையன கழித்து, புதியன புகுத்தி, அசுத்தம் நீக்கும் நிகழ்வு இந்தியாவில் போகிப் பண்டிகை என்ற  பெயரில் வீடு வாசல் சுத்தமாக்கும் நிகழ்வு, தைப்பொங்கல் அன்று சூரியனுக்கு விழா எடுக்கும் அதே பவ்வியத்துடனும் புனிதத்துடனும் அடுத்தநாள் உழவுக்கு உதவும் கோமாதாக்களுக்குப் பொங்கும் நிகழ்வு,

No comments: