Tuesday, February 04, 2014

முதன்மை விருந்தினர் உரை இணுவில் மத்திய கல்லூரி பரிசளிப்பு விழா


சாதனைகள் செய்த பூரிப்பும் களிப்பும் நிரம்ப சாதனைகளுக்கான பரிசுகளைத் தட்டிச் செல்லக் காத்திருக்கும் மாணவர்கள், தமது இரத்தத்தில் உதித்த தமது வாரிசுகளின்  இந்தச் சாதனைகளுக்கான உழைப்பில் கணிசமான பங்கு தமக்கே உரியது என்ற பெருமிதத்தில் அமர்ந்திருக்கும் பெற்றோர்கள், சாதனைகளுக்குக் களம் தந்த பெருமையில் உரிமையெடுக்கவெனக்  காத்திருக்கும் இக்கல்லூரியின் அதிபர் ஆசிரியர்கள், மற்றும் இணுவை மண்ணின் அறிஞர்கள், பெற்றோர்கள் நிறைந்திருக்கும் இவ்வவையிலே எனது வணக்கத்துக்குரியவர்களான எழுத்தறிவித்த இறைவர்கள், அறிஞர்கள், பெரியோர்கள், பேராசிரியப் பெருந்தகைகள், மதிப்பிற்குரியவர்களான பெற்றோர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், எனது தோழமைக்குரிய நண்பர்கள், நூலக சமூகத்தினர், எனது பேரன்புக்கும் பாசத்துக்குமுரிய மாணவர்கள், குழந்தைகள்  உங்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.

 ஒரு மனிதனைச் செதுக்குவதில் அவன் வாழும் சூழல் மிக முக்கியமானது. இந்த மண்ணுக்குரிய சகல அம்சங்களதும் வார்ப்பாகத் தான் நான் இருக்கின்றேன். இருக்கவும் விரும்புகின்றேன். நீங்களும் கூட விரும்பியோ விரும்பாமலோ இந்த சூழலிடமிருந்து தப்பிக்கவே முடியாது. பொதுவாகவே தமிழச் சமூகத்தில் போதனைகள் எடுபடுவதில்லை. முக்கியமாக இணுவை மண்ணில் இந்த எடுபடாத தன்மை சற்று அதிகம் என்பதை நீங்கள் அனைவருமே உணருவீர்கள். இங்கு ஒவ்வொருவரும் தாம் நடந்து கொள்ளும் முறையினு10டாக அடுத்தவருக்கு வழிகாட்டலை மேற்கொள்ளலாமே தவரி வேறு எந்த வகையிலும் அறிவூட்டலை மேற்கொள்வது சாத்தியமில்லை. இந்த வகையில்  என்னைப் பற்றிய ஒரு சிறு அறிமுகத்துடன் எனது முதன்மை விருந்தினர் உரையை ஆரம்பிக்க விரும்புகின்றேன். நான் பிறந்து வளர்ந்த இச் சூழல், இச்சூழலுடன் அடிக்கடி நான் முரண்படும் சந்தர்ப்பங்கள், இந்த முரண்பாடுகளை எதிர்கொள்ளப் பயன்படுத்தும் தந்திரோபயங்கள், மீண்டும் இந்தச் சூழல் என்னை தன்னுள் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற உந்துதலுடன் நான் மேற்கொள்ளும் முயற்சிகள் எல்லாம் சேர்ந்து  நான் யார் என்பது தொடர்பாக எனக்குள் அடிக்கடி எழும் வினாவுக்கு பதில் சொல்லும் வகையில் ஆரம்பிக்கின்றேன்.

 கல்வித் தகுதிக்கான கற்றல் செயற்பாட்டிலிருந்து அறிவு ஊறுவதற்கான கற்றல் செயற்பாட்டுக்குள் என்னை நுழைத்துக் கொண்ட காலம் முதலாய் கல்விக்கும் அறிவுக்கும் இடையில் ஒரு இணைப்பைத் தேடித் தான் எனது பெரும்பாலான தேடல் இருந்தது. கற்கக் கற்க அறிவு ஊறும் என்ற வள்ளுவன் வாக்கு உண்மையானால் கற்றல் கற்றலாக மட்டும் ஏன் நிற்கிறது என்ற வினவல் இந்தத் தேடல் நோக்கி என்னை உந்தித் தள்ளியது. படிப்பு கல்வியைத் தரும் பரந்துபட்ட வாசிப்பு அறிவைத் தரும் என்பது நன்கு தெளிவாகத் தெரிந்திருந்தும் கூட கல்வியா அறிவா பெரிது என்ற வாதப்பிரதிவாதங்களின் அடிப்படையில்; அறிவைப் பெரிதாக்கி பொய்மைகளே உண்மைகளாய் திசையின்றி அலைந்த என் இரண்டாவது பத்துக்களை கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் என்னைச் செப்பனிட்ட பாடசாலையினையும் இன்றுவரை எனது  மனதில் பூசிக்கும் பேறு பெற்ற எழுத்தறிவித்த இறைவர்களையும் சுமைகளின் அழுத்தங்களுக்புள் தப்பிப் பிழைப்பதற்கான உபாயங்களைத் தந்த பல்கலைக்கழகங்களையும் அடியோடு ஒதுக்கிவிடவோ அல்லது கல்வியைப் பெரிதாக்கி கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் ஒத்ததுகளைப் பிணைக்கும் ஒவ்வாமைகளை விலக்கும் அறிவுக்கு ஆணிவேராக இருந்த நூலகத்தை ஒதுக்கிவிடவோ நான் தயாராக இல்லை. எனவே இரண்டுக்குமிடையிலான சமநிலையைத் தேடி ஓடிய எனது முயற்சி வீண் போகவில்லை.

பாடசாலைகளில் அறிவைத் தருவதற்கும் திறன்களை விருத்தி செய்வதற்குமென பயிற்சியும் அறிவுறுத்தலும் வழங்கும் செய்முறை கல்வி எனப்படுகின்றது. படிப்பு, அனுபவம் அல்லது கற்பித்தல் போன்றவற்றால் அறிவும் திறனும் பெறும் செய்முறை கற்றல் எனப்படுகின்றது. (ழுஒகழசன னiஉவழையெசல) இதிலிருந்து தெரியவருவது அறிவு என்பது முடிவுப் பொருள் கல்வி  என்பது முதற் பொருள்.

கற்பதை கசடு அற கற்கவோ கற்பிக்கவோ வேண்டும் என்பதிலும் எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்பதிலும் எனக்கு ஆழமான நம்பிக்கை உண்டு. இந்த வாசகங்களை நான் பாடப்புத்தகத்தில் படிக்கவில்லை. நூலகத்திலும் பெற்றுக்கொள்ளவில்லை. வீட்டு முன்புறம் உள்ள போட்டிக்கோவில் அமர்ந்திருக்கும் இரண்டாம் வகுப்புப் படித்த அப்பாவிற்கும் வீட்டின் பின்புற அறையில் மருமகன் பார்வையிலிருந்து தவிர்த்திருக்க விரும்பும் பாலபண்டிதையான எனது ஆச்சி அதாவது அம்மாவின் தாய்க்கும் இடையில் இடையிடையே நடைபெறும் இலக்கிய தூதுகளிலிருந்து பொறுக்கியெடுத்ததே இவை. பொறுக்கியெடுத்தவற்றை அப்படியே அணியும் எண்ணமும் கூட எனக்கு எப்போதுமே இருந்ததில்லை. 'எதனையும் உற்றுணர்ந்து, சீர்தூக்கிப் பார்த்து, நிதானித்து, எதிர் விளைவுகள் பக்க விளைவுகளை அடையாளங் கண்டு, பயன்விளைவு ஆராய்ந்து, அனுகூலங்கள் பிரதிகூலங்களை கருத்தில் கொண்டு, ஒன்றைக் கூறும்- நம்பும் -தீர்மானிக்கும்- தீர்வு காணும்- செயற்படுத்தும்- அறிவும் மனப்பாங்கும் உடைய உள்ளம் அறிவு சார் உள்ளம் என்றும் அத்தகைய சிந்தனை அறிவு சார் சிந்தனை என்றும் படிப்பு என்ற நூலில் படியாதவன் கூறும் விளக்கத்தின் உதாரணமாக இருக்க நான் விரும்பியமையால் ஐம்புலன்வழி பெறும் உற்றறிவு, ஊடுருவறிவு, கற்றறிவு, காண்பறிவு, தொட்டுணர்அறிவு அனைத்தையும் கேள்விக்குள்ளாக்க விழைகிறேன்.

கல்வியின் முக்கியத்துவம் தொடர்பாக நாம் அறியக்கூடிய அல்லது எமக்குக் கிடைக்கக்கூடிய மேற்கத்தேய சிந்தனைகள்  கைத்தொழில் சமூகம் ஒன்றின் தோற்றத்துடன் இணைந்ததாக இருக்க, தமிழ்ச் சமூகத்தின் சிந்தனைகளோ இரு ஆயிரியங்களைக் கடந்து நிற்கிறது. 'கல்வி கரையில கற்பவர் நாள் சில மெல்ல நினைக்கின் பிணிபல' என்னும்  நாலடியார், 'தொட்டனைத்து ஊறும் மணற்கேணி  நாளும் கற்றனைத்து ஊறும் அறிவு'என்னும் திருக்குறள், 'நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான் கற்ற நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு' என்னும் ஓளவையின் முதுமொழி போன்றன எமக்கு உணர்த்தி நிற்பது கல்வியின் முக்கியத்துவம் என்பது தமிழ் மக்களால் இன்று நேற்று உணரப்பட்டதொன்றல்ல என்பதையே

 'ஒரு மனிதன் கற்பது எவ்வாறு எனக் கற்றுக் கொள்வதே கல்வியின் இலக்காகும். கற்றுக் கொள்வதற்கான ஆற்றலானது அறிவை விட முக்கியமானதாகும். அறிவு, காலத்திற்கொவ்வாததாகப் போனாலும் கற்கும் திறனானது அனைத்து அறிவுகளுக்குமான திறவு கோலாக விளங்குகிறது'. என்ற கூற்று அறிவை விட கல்வி முக்கியம் என்ற கருத்துநிலையைத் தருகின்றது. அப்படியாயின் பாடசாலைகள் ஏன் அறிவுக்கான திறவுகோலாகச் செயற்பட முடியாதுள்ளது என்ற வினா எழுவதும் இங்கு தவிர்க்கமுடியாததாகிறது. சிறுவயதிலேயே எழுதவும் படிக்கவும் தெரிய வேண்டும். அத்துடன் நல்லொழுக்கமும் தெய்வ பக்தியும் ஊற வேண்டும். இதன் பின்னர் சிறுவருக்கு எத்தொழில் கற்க வேண்டும் என ஆர்வம் உண்டாகின்றதோ அதனைப் போதிக்க வேண்டும். என்கிறார் விபுலானந்தர்.

கற்பித்தலின் முதலாவது கொள்கை எதையுமே யாருக்கும் கற்றுத் தர முடியாது. ஒரு மனிதனுள் ஏற்கனவே மறைந்து கிடக்கும் அறிவைத் தான் அவருக்குப் போதிக்க முடியும். அப்படி இல்லாத எதனையும் அவருக்குப் பயிற்றுவிக்க முடியாது. ஆசிரியர் தனது ஞானத்தை மாணவருக்குள் செலுத்துவதோ அவருள் கிடக்கும் அறிவை வெளியே கொண்டுவருவதும் இல்லை. மாறாக அறிவு புதைந்திருக்கும் இடத்தை மாணவருக்குச் சுட்டிக் காட்டி மேற்பரப்பிற்கு அதை இயல்பாக எப்படி வரவழைப்பத என்பதை அறிவுறுத்தலே ஆசிரியரது பணி. மாணவரின் வளது ம்;டத்துக்கு அமைய ஆசிரியரின் உதவி கூடிக் குறையுமேயன்றி பயிற்சி முறை மாற்றமில்லை.

இரண்டாவது கொள்கை ஒரு மனது எவ்வாறு வளர வேண்டும் என்பதை அந்த மனதையே தீர்மானிக்க விடுவது. ஆசிரியரோ பெற்றோரோ தாம் விரும்பிய வடிவத்தில் குழந்தையேச் செதக்க முடியாது. செதுக்கவும் கூடாது. அது காட்டுமிராண்டித் தனம.  ஒரு பிறவி தனக்கே உரிய சுயதர்மத்தைக் கைவிடும்படி வற்புறுத்துவது அந்த ஜீவனுக்கு இழைக்கப்படும் நிரந்தரத் தீங்காகும்.

மூன்றாவது கொள்கை நமது முனைப்பு அருகிலிருப்பதிலிருந்து தொலைவிலிருப்பதற்குப் போகும் முயற்சியாக இருக்க வேண்டும். எமது முனைப்பு தற்போது என்னவாக இருக்கிறதோ அதில் தொடங்கித்தான் என்னவாக இருக்க வேண்டுமோ அந்த நிலைக்குச் செல்ல வேண்டும்.  நமது தற்போதைய பாரம்பரியம், தற்போதைய சுற்றுப்புறச் சூழல், எமது நாடு, எமக்கு ஊட்டமளிக்கும் எமது மண், நாம் சுவாசிக்கும் காற்று, நாம் காணும் காட்சிகள், கேட்கும் ஒலிகள், எமக்குப் பழக்கமாகிப் போன வழக்கங்கள் அனைத்துமே எமது இயல்பிற்கு அடித்தளமாக உள்ளன. இந்த அடித்தளத்திலிருந்து தான் மனிதனது கல்வி தொடங்க வேண்டும். அவருக்கு இயல்பாக அமைந்துள்ள வார்ப்பிலிருந்து தான் வேலையைத் தொடங்க வேண்டும். புதிய கருத்துக்களை முன் வைக்கலாமேயன்றி வற்புறுத்தக் கூடாது.  இது கீழைத்தேய சிந்தனை மகான் அரவிந்தரினது.

குழந்தைகளுக்குக் கற்றுத் தரவேண்டுமானால் அவர்களை நேசிக்க வேண்டும். ஆசிரியர் ஒவ்வொரு குழந்தையின் இதயத்துக்கும் வழி கண்டு பிடிக்க வேண்டும். குழந்தையின் நெருக்கத்தை ஆசிரியர் உணரவேண்டும். குழந்தையின் குதூகலத்தையும் வருத்தத்தையும் அனுபவிக்கவேண்டும். குழந்தையின் இடத்தில் தன்னை வைத்துப் பார்க்க வேண்டும். தானும் ஒரு குழந்தையாக இருந்திருக்கிறோம் என்பதை ஆசிரியர் மறக்கக்கூடாது என்ற  ரஷ்ய எழுத்தாளர் வசீலி சுகம்வீனஸ்கி அவர்களின் கருத்துக்கு ஏற்ப எமது ஆசிரியர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது. கேள்விக்குறி.

 'குழந்தைகளினுடைய மனதின் இரகசியத்தையும், ஆசிரியர் பயிற்சி என்னும் கலையையும், ஆசிரியரின் திறமைகளையும் அறிய முற்படுகையில் ஒவ்வொரு குழந்தையிடமும் நான் எனது ஆசிரியனை, ஆசானைக் காண்பேன்' என்ற  வாசகத்தின்  உண்மையை, பயனைச் சரிபார்த்து குழந்தைகளின் நடவடிக்கைகளின் உட்பொருளினுள் ஆழப் புகுவதன் மூலம், குழந்தையின் உள்ளாற்றல்களைப் பயன்படுத்தி, அன்பு பரந்த மனப்பாங்கு, நகைச்சுவை உணர்வு, துடியார்வம், யதார்த்தத்தை அறியும் ஆக்கபூர்வமான அணுகுமுறை ஆகியவற்றைத் தட்டியெழுப்பி இவர்களுக்கு அவசியமான சமூக அம்சங்களை அளிக்கலாம் என உறுதியாக நம்பி ஆறுவயதுக் குழந்தைக்கு படிப்பு சொல்லிக் கொடுப்பதை தனது மிக விருப்புக்குரிய தொழிலாக ஏற்ற ருஷ்ய விண்வெளிக்கழகத்தின் தலைவரும் இயற்பியல் விஞ்ஞானியுமான அமனஷ்வீலியின் கூற்றுஜஅமனஸ்வீலிஸ என்பன ஆரம்பக்கல்விப்; பருவத்தின் அத்தியாவசியத்தையும் வீட்டுச் சூழல் ஒன்றிலிருந்து முதன்முதலான பாடசாலை என்ற நிறுவனத்திற்குள் நுழைகின்ற ஆறு வயது குழந்தையின் முக்கியத்துவத்தையும் தெளிவாகக் காட்டப் போதுமானது.

நிகழ்காலத்தில் தகவலை விளங்கிக் கொள்வதனூடாகவும், ஏற்கனவே எம்மிடம் உள்ள தகவலுடன் அதை இணைப்பதனூடாகவும் பெறப்படுவதே அறிவாகும்.  செய்முறைப்படுத்தப்பட்ட தரவைத் தகவல் எனக் கொள்வது  போன்று செய்;முறைப்படுத்தப்பட்ட தகவலை அறிவு எனக் கருத முடியும். அறிவு மனித மனத்தின் அகநிலைப்பட்டது. உள்ளுக்குள்ளேயே உருவாவது. வெளியிலிருந்து பெறப்பட முடியாதது. தகவலோ வெளிநிலைப்பட்டது. மிக நீண்ட காலம் உறுதியுடன் நீடித்து  நிலைத்திருக்கின்ற தகவலே அறிவு என்கிறார் வெயிஸ்மன் .  'அறிவு என்பது இருவகை. எமக்குத் தெரிந்த அறிவு ஒரு வகை, எமக்குத் தெரியாத தகவலை எங்கே பெறலாம் என்ற அறிவு இன்னொரு வகை' என 18ம் நூற்றாண்டிலேயே  அறிவு அகநிலைப்பட்டது, தகவல் வெளிநிலைப்பட்டது என அறிவையும்  தகவலையும் தெளிவாகப் பிரித்துக் காட்டிய அறிஞர் சாமுவேல் ஜோன்சனின் கூற்றும் இங்கு கருத்தில் கொள்ளப்படக்கூடியது. அறிவு பலதரப்பட்ட உட்பொருட்களில்  நிலை கொண்டிருக்கும். தனிநபர் ஒருவரின் உள்ளக அறிவாற்றல் அமைப்பின் ஒரு மூலக்கூறாக நிலை கொண்டு தனிநபர் நுண்ணறிவாகத் தீர்மானம் எடுத்தல் செய்முறைக்கு இது அவருக்கு உதவலாம். சமூக நினைவகத்தில் நிலை கொண்டு சமூக நலனுக்கு உதவலாம். நூலக தகவல் நிறுவனங்களில் பதிவேடுகளின் வடிவில் நிலை கொண்டு நூலக தகவல் நுண்ணறிவாக அங்குள்ள தொழிற்திறன் சார்ந்த, சாராத அலுவலர்களின் அனுபவம் நுண்ணறிவு என்பவற்றின் தொகுப்பாக நிலைகொண்டிருக்கலாம். கணினி என்று வரும்போது  நிபுணி அமைப்பில் நிலை கொண்டு அறிவுத் தளத்தின மூலக்கூறாக  இயங்கி அவற்றின் அபிவிருத்திக்கு உதவலாம்.

கல்வி என்பது கற்றல் கற்பித்தல் பற்றிய தெளிவான இலக்குகளையும் நோக்கங்களையும் கொண்டதாக இருக்க வேண்டும். கற்பிப்பவருக்கு அந்தஸ்தை வழங்காமல் கல்வியை வளர்க்கவோ வழங்கவோ முடியாது.

இந்த மண் சார்ந்து இன்று நான் காணும் காட்சிகள் அனைத்தும் மண்ணுக்கும் மனதிற்குமான பிணைப்பில் விரிசலை ஏற்படுத்தும் காட்சியாகவே அமைகிறது.

கற்றல் எனப்படுவது படிப்படியாக நடத்தையில் பொருத்தப்பாட்டை அடைவதாகும் என்கிறார் ஸ்கின்னர் அவர்கள். மனதின் சக்தியால் உந்தப்பட்டு தன் செயல்களால் ஒருவன் பெறும் மாற்றங்களையே கற்றல் என நாம் கூறுகின்றொம்.. கற்றல் என்பது வாழ்க்கையினின்றும் எழும் ஒன்று. வாழ்க்கை அனுபவங்களின் ஒரு பகுதியை மட்டுமே பாடசாலைகள் மனிதனுக்கு வழங்க முடியும். தொழில் நோக்கம், அறிவு நோக்கம், ஒருமைப்பாடுடைய ஆளுமையை வளர்த்தெடுக்கும்; இசைந்த வளர்ச்சி நோக்கம், ஒழுக்க நோக்கம், ஓய்வு நோக்கம், சமூக நோக்கம் என பலதரப்பட்ட நோக்கங்களையும் சந்தித்திருக்கும் இன்றைய கல்வி முறையானது செயற்பாட்டளவில் செய்துள்ள சாதனைகள் மிக மிகக் குறைவு. கல்வித்திட்டங்களில் ஏற்படுத்தும் மாற்றங்களின் வேகத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் ஆசிரியர்களுக்கான பயிற்சியோ அவர்களிடம் மனமாற்றத்தைக் கொண்டு வருவதற்கான தூண்டுதல்களோ மிகக் குறைவு. வறுமை வேலையின்மை போன்ற பொருளாதாரக் காரணிகளின் தாக்கம் மிக அதிகமாக உள்ள எமது தேசத்தில் கல்வியின் முழு நோக்கமுமே தொழில் நோக்கமாகவே உள்ளது. மேலை நாட்டு அறிவியல் கண்டுபிடிப்புகளின் பாவனையாளராகவே இருக்கும் எமக்கு இக் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்துவதற்கான தேடலில் வாழ்வின் பெரும் பகுதி கழிந்து விட இக் கண்டுபிடிப்புகளின் உண்மையான பயன்பாடு என்ன இதன் நன்மைகள் தீமைகள் போன்றவற்றை அறிவதற்கான வாய்ப்புகளை இழந்து விடுகின்றோம்.

போட்டி மிக்க தொழில் சந்தையில் நின்றுபிடிப்பதற்கேற்ற வகையில் தான் எமது நகர்வுகள் இருப்பதன் காரணமாக வாழ்க்கைப் படிப்பிற்கான கால அவகாசமோ சிந்தனையோ எம்மிடம் அருகி வருவதே கண்கூடு. தொழில் சந்தையில் போட்டி போடக்கூடிய வல்லமையைத் தரும் பாடசாலைகளை நோக்கி தமது பிள்ளைகளை நகர்த்தும் பெற்றோர்கள,; பாடசாலைகளைப் பெறுபேறுகளின் அடிப்படையில் தரப்படுத்தும் கல்வித் திட்டங்கள், அந்தஸ்து மிக்க வாழ்க்கைக்குரிய மூலதனமாகக் கல்வியை கருதும் எமது சமூகத்தின் மனப்பாங்கு என்பன மாறும் வரை பாடசாலைகள் அறிவுக்கான அடித்தளங்களாக இருக்கும் வாய்ப்பு சாத்தியமற்றதொன்றாகும். பரந்துபட்ட வாசிப்பால் மட்டுமே அறிவுக்கான அடித்தளம் போடப்பட முடியும் என்பது உண்மையானால் பெற்றோர்கள், ஆசிரியர்கள், நூலகர்கள் என்ற முக்கூட்டுச் சக்திகளின் ஒருங்கிணைந்த செயற்பாட்டினூடாகவே இது அடையப்படமுடியும்.

மாறிவரும் சமுதாயமானது ஆற அமர இருந்து நல்லவை தீயவற்றை விலக்கக்கூடிய அறிவையோ அதற்கான நேர அவகாசத்தையோ கொடுக்கமுடியாதளவிற்கு பரபரப்பு மிக்கதாகவும் இயந்திரமயப்பட்டதாகவும்; இருப்பதானது புதிய தலைமுறையினரின் அறிவுத்தேடலிலும் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது நூலுணர்வு மிக்க எமது சமூகத்தின் புதிய தலைமுறையின் தேடலுணர்வையும் கணிசமானளவு பாதித்துள்ளதை மறுக்க முடியாது.

எமது புரிதல்கள் தொடர்பாக எம்மிடையே மாற்றம் வேண்டும். 'தௌ;ளிய அறிவும் நன்நடத்தையும் கொண்ட பண்பட்ட மக்களை உருவாக்குவதே கல்வி' என்ற மாட்டின் லுதர், 'மனிதனை மனிதனாக வாழ வைப்பதே உண்மைக் கல்வி' என்ற சுவாமி விவேகானந்தர், 'அன்பை உணருதல், அன்பு காட்டுதல் என்றால் என்ன என்று கண்டுபிடித்தல், அன்பு காட்டுதல் என்பவையே கல்வி' என்ற இந்திய கல்விச் சிந்தனையாளர் ஜே.கிருஸ்ணமூர்த்தி, 'உன்னத மரபுகளையும் அன்பையும், இரக்கத்தையும் ஒருவரிடம் பேணி வளர்க்கவும் முழுமையான வாழ்க்கையை வாழ உதவுவதுமே கல்வி' என்ற கல்வியியலாளர் ராதாகிருஷ்ணன் போன்றோரின் சிந்தனைகள் எமக்கு வெளிக்காட்டுவது மனிதத்தை மனிதர்களிடம் உருவாக்குவதே உண்மைக் கல்வியின் நோக்கம் என்பதையே. அறிவுசார் சிந்தனையானது மனிதநேயத்துடன் இணைந்ததாக இல்லாதுவிடின் கல்வியின் நோக்கம் நிறைவேறுவது கடினம். அறிவு சார் சிந்தனையை உருவாக்குவதற்கு பரந்த வாசிப்புத் திறன் முக்கியம். தான் எதிர் கொள்ளும் பிரச்சனைகளிலிருந்து விடுவிப்பதற்கு தனித்துவமான, தனக்குத் தானே நீதிபதியாகக் கூடிய வல்லமையை அளிப்பது இந்த பரந்து பட்ட வாசிப்புத் திறனே.

என்னைப் பற்றிய சிறு அறிமுகத்துடன் இந்த முதன்மை விருந்தினர் நிறைவு செய்யலாம் என விரும்புகின்றேன். நூலகத் துறை நான் விரும்பி வரித்துக் கொண்ட துறை. பதவி உயர்வுக்கு மட்டும் படிக்கவென நூலகத் துறை கருதப்பட்ட 80களில் பதவியை நாடாது மாணவ நூலகராக அன்றி நூலகத்துறையில் வெறும் மாணவியாக நுழைந்த காலத்தில் நூலகவியல் துறையில் முதலாவது மாணவி என்ற பெருமையை இந்திய மண்  எனக்குத் தந்தது. தொழில் சார்ந்து நான் அனுப்பும்  ஒரு விண்ணப்படிவமே முதலாவதும் இறுதியுமானதுமாக இருக்கவேண்டும் என்ற எனது பிடிவாதம் தான் தொழிலுக்குத் தேவைப்படும் அடிப்படைத் தகுதியை விடக் கூடுதலான தகுதியுடன் இத்துறைக்குள் நுழைந்து தற்போதைய வேலையையே முதலும் முடிவும் ஆக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியது. எனக்கு பல்கலைக்கழகத்தின் எனது மாதிரிகளாகத் தொழிற்பட்ட ஆசான்களே என்னை பொருளியல் துறைக்குள் விரிவுரையாளராக வலிந்து உள்வாங்க எத்தனையோ தடைவைகள் முயற்சித்தபோதும் நான் விரும்பி வரித்துக் கொண்ட இத்துறையை விட்டு அகற்ற முடியவில்லை. பதவிக்கு வந்த பின்னர் அன்றிலிருந்து இன்றுவரை ஆசிரியராக, ஆலோசகராக, சொற்பொழிவாளராக, விரிவுரையாளராக, சிறப்புரையாளராக, முதன்மை விருந்தினராக, சிறப்பு விருந்தினராக, என்று எத்தனையோ நிகழ்வுகளில் என்னைக் கௌரவப்படுத்தியதனூடாக அறிவு ஊறுவதற்கு உதவுகின்ற நூலக சமூகத்தைக் எமது தமிழ்ச் சமூகம் கௌரவப்படுத்தியிருக்கின்றது. இதிலிருந்து இன்னொரு படி மேற்சென்று நூலகத் துறை சார்ந்த ஒருவரை முன்மை விருந்தினராக அழைத்த பெருமையையும் இணுவில் மண் தனதாக்கிக் கொண்டுள்ளது. நான் எட்டு வருடங்கள் ஓடியாடித் திரிந்த இந்தப் பாடசாலையிலேயே முதன்மை விருந்தினராக உங்கள் முன் நிற்கும் இந்தச் சந்தர்ப்பத்தை வழங்கி  என்னையும் எனது நூலக சமூகத்தினரையும் கௌரவப்படுத்திய இந்த மண்ணுக்கும் அதற்கான முயற்சியெடுத்த அதிபர் திரு சதானந்தம் அவர்களுக்கும் இந்த அவையிலே நன்றி கூறி எனது முதன்மை விருந்தினர்  உரையை முடித்துக் கொள்கின்றேன்.

09-07-2008

No comments: