Tuesday, February 04, 2014

புலர்வு



உனது காலம் இவ்வளவு தான் என்றபடி 
இருளைப் புறந்தள்ளி 
கிழக்கு மெல்ல வெளுக்கிறது

மழைக்குள் நனைந்து 
ஈரம் உறுஞ்சிய பச்சை விறகுகளில்
நெருப்பு மெல்லப் பற்றிப் பிடிக்கிறது

மக்கிப் போனதென்று நினைத்திருந்த 
பயற்றம் விதைகளில் சில 
நேற்றுப் பெய்த மழையில் 
மெல்ல முளைவிட்டிருக்கிறது

நீண்ட காலமாய் மௌனம் காத்த
எலுமிச்சை மரத்திலிருந்து 
முகைகள் வெளிக்கிளம்பிய அதிசயம் 
நேற்றுத் தெரிந்தது.

வானம் எப்போதும் நீலம்தான்
மப்பும் மந்தாரமும் இடையிட்டு வருபவை
நினைவுகளின் உந்துதலில் கரங்கள் உயர்ந்து 
விழிக்கடை நீரை மெல்லத் துடைத்தது.

ஜனவரி 1990



No comments: