Thursday, May 11, 2017

கல்வி

சுயகற்றலுக்கு வாய்ப்பளிக்கும் நூலகங்களில் மையம் கொள்ள வேண்டிய இலங்கையின் கல்வித்துறை  பின்லாந்தின் கல்விமுறை தரும் புதியசிந்தனை

இலங்கையின் அபிவிருத்திச் சூழலில் சமூக செயன்முறையின் முக்கிய அம்சமாக கல்வி காணப்படுவதுடன்; பாடசாலைகள் சமூகத்தில் முக்கியமான அங்கமாகக் காணப்படுகின்றன. மாணவரிடையேயான பல்வகைப்பட்ட ஆற்றல்களும், திறன்களும் பாடசாலையினூடாக விருத்தி செய்யப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத்தகைய நிலையில் மாணவர்களிடையே வளர்த்தெடுக்கப்படவேண்டிய அறிவுத் திறன, சிந்தனைத் திறன், தொடர்பாடற் திறன், தொழினுட்பத் திறன், ஊடகத்திறன், கணித அறிதிறன், செயலாக்கத் திறன் போன்ற முக்கிய திறன்களின் வரிசையில் அண்மைக் காலங்களில் மிக முக்கியமாக அதிகம் பேசப்படுகின்ற பதமாக தகவல் அறிதிறன் காணப்படுகின்றது. இது தேவையான தகவலைக் கண்டறிதல், மீளப்பெறல், பகுப்பாய்வு செய்தல், பயன்படுத்தல் முதலிய திறன்களின் தொகுதியாக அமைகின்றது.

ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ளும்  தேவையை முன்னிட்டு ஒரு மொழியின் அடிப்படையை மட்டும் கற்றுக் கொள்வதன் மூலம் வாசிப்பதற்கும் எழுதுவதற்குமான ஆற்றல் என்று பொருள் கொள்ளப்பட்ட எழுத்தறிவு அல்லது அறிதிறன் என்ற தனிப்பதமானது பொருட்துறைகளை நன்கு விளங்கிக் கொள்வதற்கான ஆற்றல், தகவலை நன்கு விளங்கிக் கொற்வதற்கும் தொழில்நுட்பக்கருவிகளை நன்கு கையாள்வதற்குமான ஆற்றல் என்ற விரிந்த வரைவிலக்கணத்தைக் கொண்ட தகவல் அறிதிறன் என்ற கூட்டுப்பதமாக அண்மைக் காலங்களில் வளர்ச்சியடைந்திருக்கின்றது. இந்நிலையில் மாணவர்களின் தகவலறிதிறன் மேம்பாட்டில் கல்விக்கொள்கை முக்கிய பங்கு வகிக்கிறது.

'பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு' (OCED) என்பது வளர்ச்சியடைந்த நாடுகளின் கூட்டமைப்பு. இதன் சார்பில்  தங்கள் நாட்டு மாணவர்களின் கல்வித் திறன் குறித்த ஆய்வு அவ்வப்போது நடைபெறும். இதற்கு PISA-Programme for International Students Assessment என்று பெயர். குறித்த ஆய்வின்படி உலகின் முன்னணி நாடுகளிடையே பின்லாந்து எப்போதும் முன் வரிசையிலேயே இடம் பிடிக்கிறது. இந்நாட்டின் கல்விக்கொள்கையின் இரகசியம் உலகக் கல்வியியலாளர்களின் புருவத்தை உயர்த்தி விட்டிருக்கிறது. 'அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்?' என அவர்களை எட்டிப்பார்க்க வைத்திருக்கிறது.
பின்லாந்து குடியரசு வட ஜரோப்பா கண்டத்தில் ஆர்டிக் பிரதேசத்தில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 338,424 சதுர கிலோ மீட்டர்கள். இதன் தலைநகர்: ஹெல்சிங்கி பல்லாயிரக்கணக்கான ஏரிகளும், காடுகளும், தீவுகளும் மற்றும் சதுப்பு நிலம் கொண்ட நாடாக விளங்குகிறது. எண்ணிலடங்கா ஆறுகள் நாடு முழுவதும் ஓடுவதால் சதுப்பு நிலங்கள் ஏராளம் உள்ளன. 2015 அனுமான கணக்கெடுப்புப்படி இந்நாட்டினர் மொத்தம் 5,483,424 பேர். இவர்களில் பெரும்பான்மை மக்கள் ஃபின் இனத்தவர்கள். ஃபின்னிஷ் மற்றும் ஸ்வீடிஷ் ஆகியவை ஆட்சி மொழிகளாக உள்ளன.  அலைபேசிகளின் மூலம் நமக்கு அறிமுகமான நோக்கியா நிறுவனத்தின் தாய்நாடு பின்லாந்து. உலக அளவில் 'கல்வியின் மெக்கா' என அழைக்கப்படுவதும் பின்லாந்துதான்.
பின்லாந்தின் தேசிய நூலகம் ஹெல்சிங்கியில் அமைந்துள்ளது. மொத்தக்குடித்தொகையான ஜந்தரை மில்லியன் மக்களுக்கும் தலா எட்டுநூல்கள் என்ற வகையில் சுமார் 40 மில்லியன் நூல்கள் பல்வேறு நூலகங்களிலும் பாதுகாக்கப்பட்டுள்ளன. 837 பொதுநூலகங்கள் 166 நடமாடும் நூலகங்கள்  58 நிறுவன நூலகங்கள் ஒரு கடலில் மிதக்கும் நூலகம் என சுமார் ஆயிரத்துக்குமேற்பட்ட நூலகங்களைக் கொண்ட பின்லாந்தை 'நூலகங்களின் தேசம்' என சர்வதேச நூலகச்சங்கங்களின் சம்மேளனம் (IFLA) வர்ணித்துள்ளது.

பின்லாந்தில் ஏழு வயதிலிருந்Nது ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது. அதுவரை சுயதேடலுக்கான சுதந்திரம் அக்குழந்தைக்கு வழங்கப்படுகிறது. எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ்சிறு மூளை, தனது சுற்றத்தின் ஒவ்வோர் அசைவில் இருந்தும் ஒவ்வோர் ஒலியில் இருந்தும் கற்கிறது. இலை உதிர்வதும், செடி துளிர்ப்பதும், இசை ஒலிப்பதும், பறவை பறப்பதும் குழந்தைக்கு அடிப்படைக் கல்வியாகிறது. குழந்தை தனது தகவற்சூழலிலிருந்தே தனக்கு தேவைப்படும் தகவலைக் கண்டறிவதற்கு முனைகிறது. இப்படிநிலையிலே குழந்தையின் தகவலறிதிறன் இயல்பாக முளைவிடத்தொடங்குகிறது.

இத்தகைய கல்விச்சூழலை இலங்கையின் இன்றைய கல்வி;ச்சூழலோடு ஒப்பிடும் போது இலங்கையின் கல்விக்கொள்கை மறுசீரமைக்கப்பட வேண்டிய தேவை உணரப்படுகிறது. பரீட்சை நோக்கிலான வகுப்பறைக்கல்வியில் அறிவு அதிவேக வளர்ச்சி அடையும் என்ற இலங்கையின் தற்காலக் கல்விக்கொள்கையை வேரோடு பிடுங்கி எறியும வகையிலமையும்; பின்லாந்தின் சுயதேடல் நோக்கிலான சுதந்திரக்கல்வி இலங்;கையில் நூலகங்களின் நுழைவாயிலை அகலத்திறந்து வைத்திருக்கிறது.

எங்கள் பண்டைய கல்விமுறையில் ஏழு வயதில் குருகுலக்கல்விக்குச் சென்றும் திண்ணைப்பள்ளிக்கும் சென்று கற்றதைப்போல ஏழு வயதில பள்ளிக்குச் செல்லும் பின்லாந்துக் குழந்தை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அண்ணளவாக ஆண்டின் பாதி நாட்கள்தான் பள்ளிக்கூடம் செல்கிறது. மீதி நாட்கள் விடுமுறையில் தன்னிச்சையாக வளர்கிறது. பாடசாலை இயங்கும் நேரம் இலங்கைப் பாடசாலைகளைப் போலன்றி மிக மட்டுப்படுத்தப்பட்டது.  அந்த நேரத்திலும்கூட, படிப்புக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இசை, ஓவியம், விளையாட்டு, மற்றும் பிற கலைகளுக்கும் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் ஓர் ஓய்வறை இருக்கிறது. படிக்கப் பிடிக்கவில்லை அல்லது சோர்வாக இருக்கிறது என்றால், மாணவர்கள் அங்கு சென்று ஓய்வு எடுக்கலாம். நூலகத்திற்குச் சென்று விரும்பியதைக்கற்கலாம். இதனால் தான் ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வோர் ஆண்டும் வெளியிடும் உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள் பற்றிய தரவரிசை ஆய்வில்; பின்லாந்து எப்போதும் முன்னணியில் இருக்கிறது.
இலங்கையில் வலுவான சமூகத்தின் உற்பத்தி மையங்களாகக் காணப்படும் பாடசாலைகள் பரிட்சைக்கான தயார்ப்படுத்தும் பொறிமுறை முனையங்களாக தம்மை தற்காத்துக்கொள்வதில், பெறுபேறுகளில் போட்டியிட்டுக்கொள்வதில் அதிக அக்கறை காட்டுகின்றன. இதன் விளைவாக மாணவரிடையே பிணக்குகள் அதிகரிக்கும் மனஅழுத்தம் போதைப்பாவனை என்பவற்றுடன் பாடசாலை இடைவிலகலும் அதிகரித்துக் காணப்படுகின்றன. ஆனால் பின்லாந்தின் கதை வேறு. அங்கு 13 வயது வரை தரம் பிரிக்கும் கலாசாரம் கிடையாது. கற்றலில் போட்டி கிடையாது என்பதால், சக மாணவர்களைப் போட்டியாளர்களாகக் கருதும் மனப்பாங்கும் இல்லை பரீட்சைகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் மன உளைச்சல்கள் மாணவர்களுக்கு இல்லை. தேர்ச்சி மதிப்பீட்டு அறிக்கைகள் இல்லை. தங்கள் பிள்ளையின் கற்றல் திறன் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என பெற்றோர்கள் விரும்பினால், தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம். தேர்வுகள் அடிப்படை முறைகளாக இல்லாத இந்தக் கல்வி முறையில் பயின்றுவரும் மாணவர்கள்தான், உலகளாவிய அளவில் நடைபெறும் பல்வேறு தேர்வுகளில் முதல் இடங்களைப் பிடிக்கின்றனர். சுயதேடல் நோக்கிலான கல்விக்கு அனுகூலமான பாடசாலை நூலகங்கள் இருந்தும் வாசிக்க வாய்பபளிக்காத இலங்கையின் பாடப்புத்தகக் கல்வி மாணவர்களின் சுயசிந்தனைத்திறனை மழுங்கடிக்கிறது.
இலங்கையில் இலவசக்கல்வி என்ற பெயரில் அனைவருக்கும் அடிப்படைக்கல்வி புகட்டப்படுகின்ற போதிலும் அதில் தனியார் துறையின் செல்வாக்கு மிகுதியாகவே காணப்படுகிறது. தனியார் பாடசாலைகள் சர்வதேச பாடசாலைகள் தனியார் கல்வி நிறுவனங்கள் மேலதிக வகுப்புக்கள் என நீளும் கல்வியை வைத்துப் பணமீட்டும் நடைமுறைகள் இலங்கைக் கல்விமுறையில் இன்னமும் பிரியாத வரமாக வளர்ந்து செல்கின்றன. பின்லாந்தில் தனியார் பாடசாலை முறை கிடையாது. அங்கு கல்வி என்பது முழுமையாக  அரசின் வசம். கோடீசுவரராக இருந்தாலும், நடுத்தர வர்க்கத்தினராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் அனைவரின் குழந்தைகளும் ஒரே பள்ளியில்தான் படிக்க வேண்டும் அனைவருக்கும் சம தரமுள்ள கல்வி என்ற உத்தரவாதம் உள்ளது. அதனால்; பின்லாந்தில் 99 சதவிகிதம் குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெற்றுவிடுகின்றனர். அதில் 94 சதவிகிதம் பேர் உயர்கல்விக்குச் செல்கின்றனர்.
இலங்கையில் ஆசிரியப்பணி என்பது பட்டதாரிகளுக்கான அடிப்படை வேலை வாய்ப்பாக அதிக எண்ணிக்கையில் அரசியல் தலையீடுகளைக் கொண்ட சேவைப்புலமாக இனங்காண முடிகிறது. குறிப்பாக ஆசிரிய பயிற்சிக்கலாசாலைகளில் பயிற்சிபெறாத சான்றிதழ்ப் பட்டதாரிகள் பாடத்தேர்ச்சிக்கும் கற்பித்தற்துறைக்கும் பொருந்தாத  ஆசிரிய நியமனங்கள் என நீளும் குறைபாடுகளிடையே அவர்களின் நடத்தைக்கோலப்பிறழ்வுகளால் மதிப்பிழக்கும் இலங்கை ஆசிரியத்தொழில் போல அல்லாமல் பின்லாந்தில் ஆசிரியர் பணி என்பது மிகுந்த சமூகக் கௌரவம் உடையது. மூன்றில் ஒரு பின்லாந்து குழந்தைக்கு, ஆசிரியர் ஆவதுதான் தன் வாழ் நாள் லட்சியமாக உள்ளது. அரசின் கொள்கை வகுக்கும் முடிவுகளில், திட்டங்களின் செயலாக்கத்தில் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.
பின்லாந்தில் மேல்நிலை வகுப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களில் இருந்து ஆசிரியர் பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஐந்து ஆண்டுகள் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் சேர்ந்து கடும் பயிற்சி எடுக்க வேண்டும். பிறகு, ஆறு மாத காலம் ராணுவப் பயிற்சி. ஒரு வருடத்துக்கு வௌ;வேறு பள்ளிகளில் நேரடியாக வகுப்பறையில் ஆசிரியர் பயிற்சி. ஏதாவது ஒரு பாடத்தில் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பது. குழந்தை உரிமைப் பயிலரங்கங்களில் பங்கேற்பது. நாட்டின் சட்டத் திட்டங்கள் குறித்த தெளிவுக்காக தேசிய அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ். தீயணைப்பு, தற்காப்புப் பயிற்சி, முதலுதவி செய்வதற்கான மருத்துவச் சான்று என ஆசிரியர் பயிற்சிக்கு சுமார் ஏழு வருடங்களைச் செலவிட வேண்டும். இப்படி ஆசிரியர்களை உருவாக்கும் விதத்தில் பின்லாந்து மேற்கொள்ளும் நெகிழ்ச்சியற்ற தரமான முயற்சிகள் தான், அங்கு கல்வியில் மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கி இருக்கிறது!
பெரும்பாலான இலங்கைப்பாடசாலைகள் மாணவர்களின் குடும்ப உறவிலோ உளநலனிலோ அக்கறைத்தன்மையை வெளிப்படுத்த இயல்பாகவோ அல்லது தற்செயலாகவோ தவறிவிடுகின்றன. வகுப்பறைகளில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை உள்வாங்;கி ஆசிரியர்களை அவதிப்பட வைக்கின்றன. ஆனால் பின்லாந்தின் போக்கு வித்தியாசமானது. ஒரு பள்ளியில் அதிகபட்சமாக 600 மாணவர்கள் இருக்கலாம்; அதற்கு அதிக எண்ணிக்கை கூடவே கூடாது. மாணவர்களுக்கு எந்தப் பாடம் பிடிக்கிறதோ அதில் இருந்து அவர்களே வீட்டுப்பாடம் செய்து வரலாம். ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மருத்துவர் இருப்பார். அவர், மாணவர்களின் உடல்நிலையை தனிப்பட்ட முறையில் கவனித்து ஆலோசனைகள் வழங்குவார். பிள்ளைகளின் மன வளர்ச்சியைக் குன்றச்செய்யும் முறையிலான  குறை கூறுதல், அவர்கள் கண்டு கொள்ளாதிருத்தல் போன்ற பழக்கங்கள் இங்கில்லை.  எனவே மகிழ்ச்சியின் நறுமணத்தில் திளைக்கும் குழந்தைகள், அறிவை ஆர்வத்துடன் சுவைப்பதில் புதிர் எதுவும் இல்லை.
பின்லாந்து கல்வி முறையின் இத்தகைய சிறப்புகள் குறித்து அறிந்து வருவதற்காக, உலகமெங்கும் உள்ள கல்வியாளர்களும், பிரதிநிதிகளும் அந்த நாட்டை நோக்கிக் குவிகின்றனர். உலகின் 56 நாடுகளில் இருந்து 15,000 பிரதிநிதிகள் ஒவ்வோர் ஆண்டும் செல்கின்றனர். நாட்டின் அந்நியச் செலாவணியில் கணிசமான சதவிகிதம் கல்விச் சுற்றுலாவின் மூலமே வருகிறது. ஆனால், இப்படி தங்களை நோக்கி வீசப்படும் புகழ்மாலைகளை பின்லாந்தின் கல்வியாளர்களும் அமைச்சர்களும் ஓடோடி வந்து ஏந்திக்கொள்வது இல்லை. அதற்கு அவர்கள் அடக்கமாகக் கூறும் பதில் ;, 'பின்லாந்து கல்வி முறைதான் உலகிலேயே சிறந்தது எனச் சொல்ல முடியாது ஏனெனில் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பின் ஆய்வில் எல்லா உலக நாடுகளும் பங்கேற்காத நிலையில் இப்படி ஒரு முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது. எங்களைவிட சிறந்த கல்விமுறையும் இருக்க வாய்ப்பு உள்ளது' என்பதே அவர்களின் பதில். தனக்குத்தானே முடிசூட்டிக்கொள்ளும் தற்பெருமையாளர்கள் நிறைந்த உலகத்தில் இது மதிக்கத்தக்க மனநிலை.
இப்போது நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய தருணம் இது. பெற்றோர்கள், கல்வியாளர்கள், கல்வி நிறுவனங்கள், ஆட்சியாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது. வாசிக்க கற்றுக் கொடுங்கள். நீங்களே முன்னுதாரணமாக இருங்கள். உங்களைப் பார்த்து அவர்கள் கற்றுக்கொள்வார்கள். குழந்தைகளுடன் அவர்கள் குறைகளைப் பற்றி அதிக நேரம் பேசாதீர்கள் நிறைகளை பற்றிப் பேசுங்கள். வாழ்வில் வெற்றிபெற்றவரைப்பற்றி பேசுங்கள், ஒவ்வொரு துறையிலும் சிறந்தவர்களைப்பற்றி பேசுங்கள். முதலில் நாம் மாற வேண்டும். மாற்றம் ஒன்றே மாறாதது. நல்ல மாற்றம் தான் வளர்ச்சியை தரும். பின்லாந்தின் கல்விமுறையிலிருந்து நாம் கற்றுக் கொண்டு மாறுவோம்!. சுயகற்றலுக்கும் சுதந்திரக்கல்விக்கும் வாய்ப்பளித்து வாசிப்பால் உயர்ந்த புதிய தேசத்தினைக் கட்டியெழுப்புவோம்.

பெண்மைக்குள்  பொதிந்திருக்கும் பேராற்றல் - 2


கரங்கள்.....

கண்ணின் மணிகளை விடவும் காத்திரமானவை.............
பெண்ணென்று பிறந்துவிட்டால்.... இவை
இம்மண்ணில் பெரிதும் வேண்டப்படுபவை.


கருவறை திறந்து மண்ணுக்கு வந்தபோது
பெற்றவள் மனதைப்
பெரும் வேதனைக்குள்ளாக்கிய
துன்பக் கரங்கள் இவை....

மருதாணி இட்டு நக அழகு பார்க்கவோ
கொக்கான் வெட்டிக் குதூகலித்து மகிழவோ
கைநிறைய  அள்ளி வளமாய் வாயில் போடவோ
வாய்ப்புகள் சிறிதுமற்ற வறுமைக் கரங்கள் இவை...

இன்னும்.. இன்னும் என்று கேட்டு
கைநிறைப்பவரை இன்று கண்டாலும்
இளமைப்பருவத்து இயலாமை கண்ணுக்குள் நிழலாட
ஏங்கித் தவிக்க வைக்கும் இயலாமைக் கரங்கள் இவை....

ஆரத் தழுவி... ஆசையுடன் தூக்கி ஏந்தி
உச்சி மோந்து உணர்வுடன் முத்தமிட
இடங்கொடுக்காத
மூட்டுக்கள் அற்ற கரங்கள் இவை....

உள்ளம் வெம்பி உருகிப் பெருக்கெடுத்து
வெளித்தள்ளும் கண்ணீரை
துடைக்கும் வலுவற்ற
துர்ப்பாக்கியக் கரங்கள் இவை....

மங்கைப் பருவத்தின் எண்ணச் சிறைக்குள்
இழுத்துப் போர்த்திக்கொண்டு
இனிய கனவுகள் காண்பதற்குத்
தடைக்கல்லாக இருந்திட்ட
வேதனைக் கரங்கள் இவை....


'வறுமையும் வலுக்குன்றிய தன்மையும் உலகப் பொதுவுடமை.
பெண்ணென்று பிறந்துவிட்டால் நித்தம் அது வதைச்சாலை...
பின்... இதிலென்ன புதுமை'

வறுமை அறியாமை, வலுக்குன்றிய தன்மை அத்தனையும் இணைந்த உலகப் பொதுக்குறியீடு இவள்..  இவளிடமிருந்து கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது?

வறுமை இவளைத் துரத்துகின்றது....
வசதியின்மையோ சுகாதாரக் குறைவுக்குக் கதவு திறக்கிறது...
அறியாமையின் அவசரம் சுத்தத்துக்குக் கதவு மூடுகின்றது...
காப்பற்ற இச்சிறுகுடில் உதிரம் உருக்கி சிறுகச் சேர்க்கும்
உணவுப் பொருட்களையே ஊர்த் திருடரிடம் தொலைக்கிறது.
பின் என்னதான் இருக்கிறது இவளிடம் கற்றுக்கொள்ள...?

துன்பச்சுமை அழுத்தித் துவண்டு சரிகையில்
தூக்கி நிறுத்தித் துணிவு தந்திட்ட வியத்தகு கரங்கள் இவை !

இரத்தலே இவளது தலைவிதி என்று ஏற்றுக்கொள்ளும்
உலகப் பொதுநிலையை உடைத்தெறிந்து
முழுமை உடலுக்கன்று. அது உள்ளத்துக்கே என்று
செய்து காட்டும் உயர்ந்த கரங்கள் இவை !

ஒன்றல்ல  இரண்டல்ல...
ஒன்பது உயிர்களுக்குப் பின்வந்த கடைக்குட்டி என்றாலும்
அங்கம் குறைந்தவர்களின் ஆரம்பப் பள்ளியைக்கூட
எட்டிப்பார்க்கவிடாத வறுமைச்சூழலுக்குள் அகப்பட்டுப்போனாலும்...
உருக்குலைந்து உணவுக்குக் கையேந்தி
உறவுகளுக்குச் சுமையாகிப் போகாமல்
உழைத்து உண்ண உதவிடும் உன்னத கரங்கள் இவை !

'கைபிடிக்க' தகுந்த கரம் இதுவோ? என்று எட்ட விலத்தியபோது
அன்புக் கணவனையே அருமைத்தங்கைக்கு
அர்ப்பணிக்கச் செய்திட்ட அனுதாபக் கரங்கள் இவை !

துணைவனாய் மாறித் துயர் தீர்த்தவன்,
ஊன்றுகோலாய் நின்று உதவி செய்தவன்,
உயிர் நீத்தபோது
தளர்ந்து போகாமல் நிமிர்ந்து நின்று
தனதும் தனது உயிர்களதும் உதரத்து நெருப்பைக்
குளிர்விக்கும் ஆற்றல் பெற்ற அற்புதக் கரங்கள் இவை !

முடியாது என்று முடிவாய் விலக்கிய பணியெல்லாம்
தாய் என்ற தகுதியைப் பெற்ற கையுடனே
தடுப்புச் சுவர்களை உடைத்தெறிந்து
சவால்களுக்கு முகங் கொடுத்த நிமிர்வுக் கரங்கள் இவை !

பெரிய பெரிய தாக்கங்களை ஏற்படுத்தும்
இச் சின்னச் சின்னக் காரியங்களை
இலாவகமாக நிறைவேற்றும் அதிசயக் கரங்கள் இவை  !



மனிதம் நிறைந்த இம் மண்

சிறிதளவாவது குளிர்விக்க உதவட்டும் !
இவ்வுயிர்களின் உதரத்து நெருப்பை...

சிறிதளாவது காட்ட உதவட்டும் !
பள்ளிப்பருவத்து இனிமைகளை...

சிறிதளவாவது குறைக்க உதவட்டும் !
இக் குஞ்சுக் கரங்களின் வேதனையை....

சிறிதளவாவது கட்டியெழுப்ப உதவட்டும் !
வாழ்க்கை மீதான இவளது பிடிப்பை...


மானுடம் என்றுமே மரணிப்பதில்லை

மானுடம் என்றுமே மரணிப்பதில்லை
வெற்றிமனை
மகளிர் உளவளத்துணை நிலையம்

பின்னணி :- ஆண்குரல்.

யுத்தம் வந்து இம்மண்ணை நித்தம் வதைத்தபோதும்,
வாழ்க்கைப்பாதை வறுமைப்புயலால் திசைமாறிப்போனபோதும்.
பண்பாட்டுப் படையெடுப்பு பலகாலம் இம்மண்ணின் அடையாளம் தன்னை அழிக்க முனைந்தபோதும்,
தன்னிய தேசமதில் தலைமிர்ந்து வாழ இன்னுயிர்கள் பல விலையாகிப் போனபோதும,;
அன்னிய தேசம் ஆக்கிரமித்த இடமெங்கும் மானுடத்தின் விலையை ஏலத்தில் விட்டபோதும்

இந்த மண் அழுதது, மக்கள் அழுதனர,; வாழவழியின்றிக் கலங்கினர், இருக்க இடமின்றி ஏதிலியாய் அலைந்தனர், இந்த இடத்தையும் பறிகொடுத்துத் தவித்தனர், தவழ்ந்த மண்ணைத் தவிக்கவிட்டு தம்வாழ்வு தேடிப்பறந்தனர,; மானுடத்தின் சிதைவை கண்முன்னே கண்டு கலங்கி நின்றனர், இத்தனை வதைகளைத்தாங்கிய போதும் மானுடத்தை மட்டும் இந்த மண் என்றுமே கைவிடவில்லை, இறத்த உறவுகளை, அந்நியன் கணைகளால், அங்கத்தை இழந்தவர் என்று பரிதவித்துப் போனதும் மானுடம் இங்கு மடிந்து விடவில்லை. எத்தனையோ துன்பங்களுக்குள்ளும் உயிர்ப்புடன் உலவும் மானுடத்தில் ஒன்றைத்தான் இங்கு தரிசிக்கப்போகிறோம்.

குரல் :- 01.
இந்தச் சிறிய அழகிய விழிகள் எட்டாத தொலைவை ஊடுருவிப் பார்ப்பதன் இரகசியம் தான் என்ன? தூக்கம் தொலைத்து நாளும் பொழுதும் கால்களுக்கு ஓய்வே இன்றி வருவதும்... எட்டி எட்டிப் பார்ப்பதும்... பின் திரும்புவதும்...

அம்மா என்று அன்பொழுகக் கூப்பிட தோளுக்கு மேல் வளர்ந்துவிட்ட பிள்ளை இருக்;கிறான்...
அன்பே என்று அரவணைத்து அத்தனையும் வழங்க அன்பான கணவனும் தான் இருக்கிறார்.

தன்னுறவை மறந்து... தன் சுற்றம் மறந்து தன் சுழல் மறந்து... யாருக்காக இந்தத் தவக்கோலம்...? இவ்வளவு ஆவலுடன் இவர் எதிர்பாத்திருக்கும் நபர் இவ்வளவு முக்கியமானவரா...?

அன்னையாய் இருந்து அரிச்சுவடி கற்றுக்கொடுக்க வேண்டிய வயதல்லவா இது. குமரிப்பருவத்தில் குழந்தையாகிப் போனதன் காரணம் தான் என்னவோ...?  இளமைக்காலத்தில் இனிய கனவெல்லாம் தொலைந்தது ஏன்?

சில்லென்று வீசும் இத்தென்றலின் திசையை பலவந்தமாகத் திருப்பியவர் யார்? இனிய இந்த நீரோடையில் கல்லெறிந்து குழப்பியவர் யார்? சின்ன வயதும் சிங்கார வாழ்வும் சீரழிந்து போனது காரணம் தான் என்ன? வறுமையா...? வன்முறையா...., ஏக்கமா.......? தாபமா......? புற உலகின் சிந்தனையின்றி தம் அக உலகிலேயே நித்தம் உலவும் இவர்கள் யார்....? உலக் இன்பங்களை துறந்துவிட்ட துறவிகளோ...? இல்லை....இல்லை......வாழ்வின் உயிர்த்துடிப்பு இங்கே அப்;படியே தெரிகிறதே.....?
கலைந்த கேசமும் கந்தல் ஆடையுமாக தெருவில் போவோர் வருவோர் எள்ளி நகையாட, சிறுவர்கள் கல்லால் எறிந்து மகிழ, கவனிப்பாரற்று அலைந்த பல முகங்களும் இங்கு தெரிகிறது.....? யார் இவர்கள்.....? எளிமையும், அழகும், துய்மையும் பொலிந்து நல்லதொரு ஆச்சிரமம் போன்று அமைதியான சுழலுடன் மிளிரும் இந்த இடம் யாருக்குச் சொந்தமானது....? யாராவது சொல்லுங்களேன்.... ? தாம் வாழும் சுழலின் அழகை அனுபவிக்கும் அளவிற்கு புறஉலக சிந்தனையுள்ளவர்களாக இவர்கள் தெரியவில்லையே.......? இந்த இடம் யாருடையது.

குரல் :- 02.
இதுவா......? இது.........? போட்டியும் பூசலும் பொறாமையும் வஞ்சகமும் நிறைந்த இவ்வுலகிலிருந்து பலவந்தமாகத் துரத்தப்பட்ட பல அப்பாவி மனங்கள் தமக்குத் தமக்கென்று சொந்த உலகங்களைச் சிருஷ்டித்து அதில் கோலோச்சிக் கொண்டிருக்கும் சமத்துவ சாம்ராஜ்யம்; இது. வெற்றிமனை என்பது இதன் பெயர்.......

குரல் :- 01.
வெற்றிமனை என்றால்.......?

குரல் :- 02

வாழ்க்கைச்சுமை தாங்காது வளைந்து போய்விட்ட பல மனங்களின் வாழ்விடம்,
கள்ளமில்லா வெள்ளை மனங்கள் குடிகொண்டிருக்கும் ஒரு புனித ஆலயம்,
வறுமையும் குடும்ப வன்முறையும் சேர்ந்து தெருவிற்கு விரட்டியப ல அபலைகளின் அபய இல்லம்.
மனிதக்குருதிக்கும் தசைக்கும் பேயாய் அலையும் ஆதிக்க வல்லுறுகளின் ஆக்கிரமிப்பில் சிதைந்து போய்விட்ட மனங்களின் மகாமண்டபம்.
மண்ணின் விடுதலைக்காக மரணத்தையே யாசிக்கும் மாவீரர்கள் மரணிக்கும் தறுவாயில் கூட மானுடத்தைக் கைவிட்டு விடவில்லை என்பதற்கான சிறந்த உதாரணம்.
தமழீழ மண்ணில் பெண்மனநோயாளர்களுக்கு நிழல் தரும் ஒரேயொரு இடம்.

குரல் :- 01.
இங்கு இருப்பவர்கள்...........?;;
குரல் :- 02.

அன்பெனும் அமுதுக்கு ஆலாய்ப் பறப்பவர்,
ஆசைகள் துரத்த அடி சறுக்கியவர்
இரக்கம் பார்த்ததால் இருந்ததை இழந்தவர்

ஈவிரக்கமின்றி தாக்கப்பட்டவர்,
உறவுகள் உறிஞ்சி உருவிழந்தவர்,
ஊனுறக்கமின்றி ஊரூராய் அலைந்தவர்,
எத்துக்கள் வீழ்த்த எழுத்திறன்னற்றவர்
ஏனென்று கேட்கவும் நாதியற்றவர்,
ஐயங்கூடி அறிவிழந்தவர்,
ஒன்றா இரண்டா இவர் பட்ட பாடு,
ஓ...! மௌனமே தினம் இவர் படும்

குரல் :- 01.
வெற்றிமனை என்று ஏன் பெயர் வைத்தார்கள்......?
குரல் :- 02.
வெற்றிமனைகளுக்கெல்லாம் தலையாய வெற்றி கட்டவிழ்த்து ஓடும் மனதைக் கட்டுக்குள் வைத்திருப்பதல்லவா.....? சமுதாய சகதிக்குள் ழூழ்கித்திசைதாறிப் போய்விட்ட மனங்களை அரவணைத்து அவர்களின் மனங்களை வெற்றிகொள்வதென்பது அத்தனை இலேசான காரியமா......என்ன.......?

குரல் :- 01.
அந்நியனின் ஆக்கிரமிப்பில் அல்லும் பகலும் அவலத்தை சுமந்த படி மண்மீட்பு ஒன்றையே தாரக மந்திரமாகக் கொண்ட இந்த மண்ணிற்கு இப்படியான மனைகளில் கவனஞ்செலுத்த நேரமேது.........?

குரல் :- 02
ஏன் இருக்காது......? அன்னியன் கணைகளால் நோயுற்றுப் போனதென்று தன்பிள்ளைக் குணவளிக்க எம்மண் மறுத்ததா.......?
வளமான எம் வாழ்வை வறுமைப் புயல் அழித்ததென்று வாழும் எம்மாசை பாழ்பட்டுப் போனதா......? இரந்துண்டு வாழும் இழிநிலை வந்ததென்று கொடுத்துண்ணும் குணத்தை நாம் எடுத்தெறிந்து விட்டோமா நட்டு வளர்த்தவர்  விட்டு விட்டுச் சென்றாரென்று பூத்துக் குலுங்க எம் பூஞ்செடிகள் மறுத்ததா...?
கூடிக் களித்த துணை கூடுவிட்டுப் போனதென்று பாடிக்களித்த எம் கவிக்குயில்கள் மறந்தனவோ.....? பின்......? மனதைத் தொலைத்துவிட்டு
வீதிக்கு வந்துவிட்டால் எமக்கு பாரமென்று இவ்வுறவுகளைச் சரிப்போமா.....? மாட்டோம்!

குரல் :- 01.
தத்தமது உலகில் சஞ்சரிக்துக் கொண்டிருக்கும் இவர்களை இவ்வுலகிற்குள் மறுமடியும் அழைத்துவர முடியாதா.....?

குரல் :- 02.
ஏன் முடியாது......? முடியும் என்ற நம்பிக்கையில், அவாவில், மன உறுதியில் தான் இத்தனை வேலைகளும் நடக்கிறது.

'வீக்கம் நிறைந்த இவ்வுலகில் மனதாக்கம் கூடி வருத்த ஊக்கங் கெட்டு நல் ஆக்கமெதுவுமின்றி தினம் ஏக்கமுடன் வாழும் இந்த மனங்களின் பாரத்தைப் போக்கத்தான் முயல்கின்றோம்......

போற்றத்தான் வேண்டாம் என்னை துற்றாமல் இருங்களேன் என சாற்றுவதற்கும் துணிவின்றி இங்கு தேற்றுவாரின்றி அடைபட்டுப் போன இம் மனங்களின் மன ஊற்றுக் கண்ணை திறக்கத்தான முயல்கிறோம்......

நடுக்கமுறும் மனதின் ஏக்கம் தடுத்து தினமும் மனத்துணிவைக் கொடுத்து இனியொரு தடைவ படுக்கவிடாமல் துக்கி நிறுத்தத்தான் முயல்கிறோம்.....

அப்பனின் ஆக்கிமிப்பில் ஆத்தாளின் அறிவீனத்தில் அடுத்துப்பிறந்தவரின் அசண்டையீனத்தில் தேடுவாரின்றி தினம் தினம் வரண்டு காரைக்கும், நெருஞ்சி;க்கும், தொட்டவுடன் முகம் சுருங்கும் தொட்டாச்ருங்கிக்கும், கார்குழலில் சூடும் கனகாம்பரமோவெனக் கண்டவரை மயக்கும் காட்டு மரங்களும், கட்டின்றி மேயவந்த கட்டாக்காலிகளுக்கும், களமாக மாறிய இந்;த கட்டற்ற மனங்களுக்கு பட்டறிவால் வேலியிட்டு, கண்டவரும் நுழையாமல் காப்பதற்குத்தான் இத்தனை பெரிதாய் முயற்சிக்கின்றோம்.

இவ்வுலகிற்குள் முற்றுமுழுதாக நுழைந்து விட்டவர்கள் காற்றுக் கொஞ்சம் பலமாக அடித்தால் சிறிது தடுமாறுவது தவிர தானாகவே தளம் பதித்து சிறுமரங்கள் இவைகள்...... இவ்வுலகிற்குள் வந்து வந்து போய்க்கொண்டிருப்பவர்கள் இவர்கள். பக்கத்துணையின்றி படர்ந்து வளர்வதற்கு இயலாத முல்லைக்கொடி போன்றவர்கள் இவர்கள். ஊட்டம் குறைந்து வெளிறிப்போய் பூத்துக்குலுங்கும் திறனின்றி சோர்ந்து நிற்கும் சிறு பூஞ்செடிகள் தான் இவைகள்.

குரல்:1
உள்ளம் உறங்கிவிட உறவுகள் கைவிடடுவிட உடல் உருவிழக்க தெருவிற்கு வந்து நிற்கதியாய் அலையும் இந்த மனங்களை அவைணைத்து காத்தல் என்பது சேவைகளுக்குள எல்லாம் மகத்தான சேவையன்றோ.....? இத்தகைய ஒரு மகத்தான சேவையை முன்னின்று செய்பவர்....?

பேட்டி
இணைப்பாளர் - பெ.அ.பு. நிறுவனம் வெற்றிமனைப் பெண்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு நிறுவனத்தின் புனர்வாழ்வு திட்டங்களில் பிரதானமானது. கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவருக்குமென பூரணி இல்லம் என்ற பெயரில் இங்கிய இந்த அமைப்பு காலமாற்றத்தில,; தேவைகள் பெருக,தனனித்தனி அமைப்புக்களாக மனநோயாளர்களுக்கு வெறிறிமனையாகவும் கைவிடப்பட்ட ஏமாற்றப்பட்ட பெண்களுக்கு மலர்ச் சோலையாகவும்,அநாதரவான சிறுவர்களுக்கு செற்தளிர் இல்லமாகவும் தனது வேலையை விஸ்தரிக்கிறது. இப்புணர்வாழ்வு இல்லங்களுக்கு வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் பப்படத்தொழிற்சாலை, தும்புத்தொழிற்சாலை பண்ணை போன்ற அபிவிருத்தி திட்டங்களையும் இது நிர்வகிக்கின்றது.
பொதுநலவிரும்பிகளின் அனுசரணையுடன் 11பேர் கொண்ட நிர்வாகக் குழுவின் வழிநடத்தலில் நேரில் வெற்றிமனையின் தற்போதைய இணைப்பாளராக இயங்குபவர் திருமதி கமலாம்பாள் அவர்கள்.
வெற்றிமனையின் பராமரிப்புச் செலவை ஈடுகட்டுவதற்கென முயற்சிகளை நிர்வாகக் குழு மேற்கொள்கிறது. பயனாளிகளின் போசாக்க நிலையை மேம்படுத்தும் நோக்குடன் சர்வதேச கெயார் நிறுவன உதவியுடன் பாற்பண்ணைத்தட்டம் நடைமுப்படுத்தப்படுகிறது. பொதுநல விரும்பிகளின் காருண்யத்தால் அன்பளிப்புக்கள் உடைகளாக, பொருட்களாக பணமாக பெறப்படுகிறது. ஈரம்நிறைந்த இதயங்கள் பிறந்தநாள் பரிசுஎ என்றும், தமது உறவினரின் திவசதிதிக்கான அன்பளிப்பென்றும் இவர்களின் வயிறை இடையிடையே குளிரப்பண்ணுகின்றனர். பயணாளிகளின் மனநலத்தை மேம்படுத்துவற்கென பலவிதமான திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறோம்.
வெற்றிமனை தொடரபான இவர்களின் மனப்பதிவுகளைக் கேளுங்கள்..... மனித நேயம் காக்க முழுமனதாய் உழைப்போம் என்கிறார்கள்...... உடைந்த உள்ளங்களுக்கு மறுவாழ்வு அளிக்கவேண்டியது எங்கள் கடமை. எனவே வெற்றிமனை வெற்றிகரமாக இயங்க மனிதநேயத்துடன் பணியாற்ற உறுதி எடுப்போம் என்கிறார்.
மருந்து மட்டுமன்றி அன்பும் அரவணைப்புமே இவர்களுக்கு அவசியம் எனவே உளவளம் காக்க உண்மையாய் உழைப்போம் என்கிறார். மருந்தும் மதியுகமும் செய்யாததை அன்பும், அரவணைப்பும் செய்யும். எனவே பணியாளர்களிலேயே அனைத்தும் தங்கியிருக்கிறது என்கிறார்.....



நினைவுப் பேருரை

நூலகமும் கல்வி அபிவிருத்தியும்

திரு. எம்.எஸ். இராசரத்தினம் நினைவுப் பேருரை
வட்டு மத்திய கல்லூரி பரிசளிப்பு விழா


சாதனைகள் செய்த பூரிப்பும் களிப்பும் நிரம்ப சாதனைகளுக்கான பரிசுகளைத் தட்டிச் செல்லக் காத்திருக்கும் மாணவர்கள், தமது இரத்தத்தில் உதித்த வாரிசுகளின்  இந்தச் சாதனைகளுக்கான உழைப்பில் கணிசமான பங்கு தமக்கே உரியது என்ற பெருமிதத்தில் அமர்ந்திருக்கும் பெற்றோர்கள், சாதனைகளுக்குக் களம் தந்த பெருமையில் உரிமையெடுக்கவெனக்  காத்திருக்கும் இக்கல்லூரியின் அதிபர் ஆசிரியர்கள், மற்றும் வட்டு மண்ணின் அறிஞர்கள் பெற்றோர்கள் நிறைந்திருக்கும் இவ்வவையிலே எனது வணக்கத்துக்குரியவர்களான அறிஞர்கள், பெரியோர்கள், பேராசிரியப் பெருந்தகைகள், மதிப்பிற்குரியவர்களான பெற்றோர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், எனது தோழமைக்குரிய நண்பர்கள், நூலக சமூகத்தினர், எனது பேரன்புக்கும் பாசத்துக்குமுரிய மாணவர்கள், குழந்தைகள்  உங்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.

வட்டுமண் எனக்கு சிறியளவில் பரிச்சியமான ஒரு மண். என்னைச் சுற்றியிருப்பவைகளை அவதானிக்கும் அறிவு இல்லாத ஒரு காலத்தில் எட்டிப்பிடித்து கட்டி அணைத்துக், கன்னத்தைக் கிள்ளி, எமது அழுகையில் ரசனை  காணும் எனது சித்தப்பா வட்டு மண்ணின் வாரிசு. 60 களின் இறுதிப் பகுதியில் இருக்கும் அவரை இன்றும் நாம் அழைப்பது வட்டுக்கோட்டைச் சித்தப்பா என்று தான். எட்ட நின்று வே வே காட்டும் எனக்கு வட்டு மண்ணை அவரிடமிருந்து அறிவது எவ்வாறு? அவரைத் தவிர அவரின் உறவுகள் கூட சரியாக ஞாபகமில்லை..

தொழிலுக்குள் நுழைந்த காலத்தில் சக ஊழியர்களாக இந்த மண்ணைச் சார்ந்தவர்கள் இருந்திருக்கின்றார்கள். ஆனாலும் ஏனோ வட்டு மண்ணை அவர்கள் நினைவூட்டவில்லை. அறியும் அவாவும் எனக்கு இருந்ததில்லை.

நூலகத் துறை விரிவுரையாளராகக் கடமையாற்றிய காலப்பகுதியில் கீழ்ப்படிவும் புதியதை அறியும் ஆர்வம் மட்டுமல்ல அதை அதற்குரிய அற, ஆன்மீக ஒழுக்க விதிமுறைகளுடன் பெற விரும்பிய ஒரு மாணவி. வட்டு தொழினுட்பக் கல்லூரியில் நூலக உதவியாளர் என நினைக்கிறேன். பத்மாசனி என்பது பெயர். கிராமியம் இன்னமும் கைவிட்டு விடாத அல்லது கைவிட விரும்பாத உண்மை, நேர்மை, அன்பு, ஆன்மீகம், கீழ்ப்படிவு போன்ற உயரிய பண்புகளைக் கொண்ட மாணவி ஒருவர் எனது கருத்தை அதிகம் ஈர்த்த போது தான் அவருக்கூடாக அவர் வாழும் மண் தொடர்பான எனது நேயம் முதன்முதல் கருக்கொண்டது.

2003ம் ஆண்டு என நினைக்கிறேன். வட்டு மத்திய கல்லூரியின் நூலக வாரத்தின் சிறப்புச் சொற்பொழிவாளராக திடீர் அழைப்பு. நான் இல்லாமலேயே எனது உதவியாளருடன் சாதுரியமாகப் பேசி எனது வருகையை உறுதிப்படுத்தி நான் இல்லாமலேயே அழைப்பிதழும் என்னை வந்தடைந்துவிட்டது. கல்வி அமைச்சின் ஆணைக்கு மட்டும் அடிபணியும் கல்விக்கூடங்களில் நூலகத்தில் வேலை செய்பவரை அழைக்கும் புதிய ஞானம் எப்படிப் பிறந்தது?. இதுவும் நிர்ப்பந்தமா அல்லது நியாயமான விருப்பமா? தடல்புடல் வரவேற்புடன் இந்தக் கல்லூரியில் நுழைந்தபோதும் கூட என்னைத் தெரிவு செய்தது யார் என்ற தேடலுடன் கண்கள் அங்குமிங்கும் அலைபாய்கிறது. பார்த்தால் மேடையில் நான் ஓரிரு தடைவை மட்டும் பார்த்த ஒரு முகம் என்னை எப்போது எப்படிச் சந்தித்தேன் என்பது பற்றி அசலான உணர்;வுடன் என்னை உங்கள் முன் அறிமுகப்படுத்துகின்றது. கடுமையான ஆசிரியராகப் பலருக்குத் தென்படும் நான் அவரின் விருப்பிற்குரிய ஆசிரியராக எப்படி மாறினேன் தெரியவில்லை. நூலகத் துறை சார்ந்து குமுதினி லோகநாதன் என்ற அந்த ஆசிரியரின்  ஆர்வமும், அர்ப்பணிப்பும், அயராத உழைப்பும் தான் முதன்முதலில் இந்த வட்டு மண் தொடர்பாக நூலகத் துறையின் இன்றைய நிலை சார்ந்து எனது ஆழமான சிந்தனைக்கு வழிகோலியிருக்கவேண்டும் என நினைக்கிறேன். அவர் மட்டுமல்ல அவரது அதிபர் திரு சபாரத்தினசிங்கி காட்டிய ஆர்வமும் துடிப்பும் கூட அடிக்கடி இந்தக் கல்லூரி எனது நினைவுகளில் வந்து போகத் தூண்டும் ஒன்று.

அண்மையில் பாடசாலை நூலக அபிவிருத்தி சார்ந்த ஒரு கருத்தரங்கில் வட்டு மண்ணின் அதிபர்கள், ஆசிரியர்களைச் சந்தித்திருக்கிறேன். இந்தச் சந்திப்புக்கு அடிகோலியவர் அன்றைய பிரதிக் கல்விப்பணிப்பாளராக இருந்த திரு. ரவிச்சந்திரன் அவர்கள். வலிகாமம் வலய அதிபர் ஆசிரிய நூலகர்கள் அனைவரையும்  ஓரிடத்துக்கு அழைக்கும் எனது தீர்மானத்தை தனது சாதுரியமான பேச்சால் திசை மாற்றி வட்டு இந்துக் கல்லூரியில் அதனை நடத்த அயராது பாடுபட்ட அவரது முயற்சி இந்த மண் சார்ந்து அவருக்கு இருந்த பற்றைத் தான் கோடிகாட்டியிருக்கிறது.

நினைவுப் பேருரைக்கும் வட்டு மண் தொடர்பான எனது பரிச்சியத்துக்கும் என்ன சம்பந்தம்.? சம்பந்தம் இருக்கிறது. அது கருத்துப் பரிமாற்றம்----- .  சுவரை நோக்கி ஏவப்படும் பந்து ஏவப்படும் இடத்துக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது எறிந்தவருக்கே திரும்ப வந்து அறைவது போன்று ஒரு வழிப் பாதிப்பாக எனது கருத்து இருப்பதில் எனக்கு எப்போதுமே சம்மதமில்லை. எந்த ஒரு நிகழ்விலும் நான் கலந்து கொள்ள ஒத்துக் கொள்வதோ அல்லது நிராகரிப்பதோ இந்த அடிப்படையில் மட்டும் தான். கருத்துப் பரிமாற்றத்தின் போது கருத்தை பெறுபவர் தொடர்பான ஒரு பொது மதிப்பீட்டுடன் தான் எனது கருத்துப் பரிமாற்றத்தின் போக்கை  மாற்றியமைப்பது எனது வழமை. எனவே இந்த அவை தொடர்பான எனது நோக்கு பற்றி உங்களுடனான எனது பகிர்வு இந்த மண் தொடர்பான எனது நோக்கினடிப்படையில் அமைந்ததொன்று.

சரியான தகவல் சரியான நேரத்தில் சரியான வாசகனிடம் போய்ச் சேருவதை உறுதிப்படுத்துவதே நூலகசேவையின் நோக்கம் என்பதன் அடிப்படையில் நூலகம் சார்ந்து பதிவுகளைத் தேடி உங்கள் பவளவிழா மலரில் பார்வையை ஓடவிட்டபோது வட்டு மத்திய கல்லூரியின் நூலகம் சார்ந்து பதிவு எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் நூலகம் சார்ந்த எனது உரைக்கு  ஒரு கரு கிடைத்தது. ஈழத்துக் கவி உலகின் மூவேந்தர்கள் என அழைக்கப்படுபவர்களில் ஒருவரான திரு. முருகையன் அவர்களின் பின்வரும் கவி வரிகள்
புத்துயிர்ப்பின் ஒத்துழைப்பினால்
கொள்கைத் தெளிவின் கூட்டியக்கத்தால்
அடாக் கொடுஞ் சுரண்டல், அழுத்தல்,
ஒடுக்கல், வெட்டுக்கொத்து, வெடி
கழுத்தறுப்புகள்
சற்றும் இல்லாத சுகாதாரமான
நீதிச்சூழலை ஏற்படுத்த முடியாதென்று
யார் சொன்னது?

கல்விக்கூடங்களாவது
முழு மலர்ச்சிக்குக் கைகொடுக்கக் கூடாதா?
என்ன நினைக்கிறீர்கள் பெரியோர்களே?

என்ற வினாவுடன் உங்கள் பவள விழா மலரில் முருகையன் தனது கவிதையை முடிக்கிறார் அதிலிருந்து நான் ஆரம்பிக்கின்றேன்

கல்விக் கூடங்கள் நிச்சயம் கைகொடுக்க முடியும்.
எதற்கு?  மனிதசமூகத்தின் முழு மலர்ச்சிக்கு
எவ்வாறு.? இது தான் இன்றைய நினைவுப் பேருரையின் கருவாக அமைகிறது.

மனித சமூகத்தின் முழு மலர்ச்சிக்கு இந்த மண்  கைகொடுப்பதற்கு நாம் முதலில் எம்மைப் பற்றி அறிதல் மிக முக்கியமானது. தமிழ்ச் சமூகத்தின் பொதுப் பண்பாக இருப்பது என்ன?

நாம்
தமிழ் இலக்கணத்தில் செய்வினை செயற்பாட்டு வினை என இரு வினைகள் உண்டு நாம் பெரும்பாலும் செயற்பாட்டு வினையாகத் தான் இருக்கின்றோம். செய்வினையில் அதாவது 'இந்தச் செய்வினையில்' எமக்கு ஆர்வமும் இல்லை. நம்பிக்கையும் இல்லை. சமூக ரீதியில் பார்த்தால் நாம் இயக்குபவர்கள் அல்ல. இயக்குவிக்கப்படுபவர்கள். அரசியல் ரீதியில் சிந்தித்தால் நாம் ஆள்பவர்கள் அல்ல. ஆட்படுபவர்கள். பொருளாதார ரீதியில் சிந்தித்தால் அடுத்தவரைத் தாங்குபவர்கள் அல்ல வளர்முக நாடுகளுக்குரிய பொதுப் பண்பான தங்கியிருப்பவர்கள் அல்லது உதவிக்குரியர்கள். கல்வி சார்ந்து பார்த்தால் மனித வளமாக தாமே உருவாகின்றவர்கள் அல்ல. பெற்றோரின் விருப்பிற்கமைய வலிந்து உருவாக்கப்படுபவர்கள். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இழுத்துப் பிடிக்கும் தன்மையை விட இழுபட்டுப் போகும் தன்மை எங்களிடம் அதிகம். இதில் மன ஆறுதல் தரும் விடயம் எதுவென்றால் சுயசார்பு, தனித்துவம் போன்ற பண்புகளை இன்னமும் வைத்துக் கொண்டு தலைநிமிர்ந்து நிற்கின்ற கிராமங்கள் எம்மிடம் அதிகம் உண்டு. இத்தகைய பண்புகளில் இருந்து கிராமியம் சற்றே தூர நிற்பது மட்டும் தான் ஆறுதல் தரும் ஒரு விடயம். வட்டு மண்ணும் கூட இந்த கிராமியப் பண்பு இன்னமும் மாறாத ஒரு மண்ணாகவே எனக்குப் படுகின்றது.

நாம் வாழும் சூழல்

மாறிவரும் சமுதாயமானது ஆற அமர இருந்து நல்லவை தீயவற்றை விலக்கக்கூடிய அறிவையோ அதற்கான நேர அவகாசத்தையோ கொடுக்கமுடியாதளவிற்கு பரபரப்பு மிக்கதாகவும் இயந்திரமயப்பட்டதாகவும்; இருப்பதானது புதிய தலைமுறையினரின் அறிவுத்தேடலிலும் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது நூலுணர்வு மிக்க எமது சமூகத்தின் புதிய தலைமுறையின் தேடலுணர்வையும் கணிசமானளவு பாதித்துள்ளதை மறுக்க முடியாது.

கற்றல் என்பது வாழ்க்கையினின்றும் எழும் ஒன்று. வாழ்க்கை அனுபவங்களின் ஒரு பகுதியை மட்டுமே பாடசாலைகள் மனிதனுக்கு வழங்க முடியும். தொழில் நோக்கம், அறிவு நோக்கம், ஒருமைப்பாடுடைய ஆளுமையை வளர்த்தெடுக்கும்; இசைந்த வளர்ச்சி நோக்கம், ஒழுக்க நோக்கம், ஓய்வு நோக்கம், சமூக நோக்கம் என பலதரப்பட்ட நோக்கங்களையும் சந்தித்திருக்கும் இன்றைய கல்வி முறையானது செயற்பாட்டளவில் செய்துள்ள சாதனைகள் மிக மிகக் குறைவு. கல்வித்திட்டங்களில் ஏற்படுத்தும் மாற்றங்களின் வேகத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் ஆசிரியர்களுக்கான பயிற்சியோ அவர்களிடம் மனமாற்றத்தைக் கொண்டு வருவதற்கான தூண்டுதல்களோ மிகக் குறைவு. வறுமை வேலையின்மை போன்ற பொருளாதாரக் காரணிகளின் தாக்கம் மிக அதிகமாக உள்ள எமது தேசத்தில் கல்வியின் முழு நோக்கமுமே தொழில் நோக்கமாகவே உள்ளது. மேலை நாட்டு அறிவியல் கண்டுபிடிப்புகளின் பாவனையாளராகவே இருக்கும் எமக்கு இக் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்துவதற்கான தேடலில் வாழ்வின் பெரும் பகுதி கழிந்து விட இக் கண்டுபிடிப்புகளின் உண்மையான பயன்பாடு என்ன இதன் நன்மைகள் தீமைகள் போன்றவற்றை அறிவதற்கான வாய்ப்புகளை இழந்து விடுகின்றோம்.

போட்டி மிக்க தொழில் சந்தையில் நின்றுபிடிப்பதற்கேற்ற வகையில் தான் எமது நகர்வுகள் இருப்பதன் காரணமாக வாழ்க்கைப் படிப்பிற்கான கால அவகாசமோ சிந்தனையோ எம்மிடம் அருகி வருவதே கண்கூடு. தொழில் சந்தையில் போட்டி போடக்கூடிய வல்லமையைத் தரும் பாடசாலைகளை நோக்கி தமது பிள்ளைகளை நகர்த்தும் பெற்றோர்கள,; பாடசாலைகளைப் பெறுபேறுகளின் அடிப்படையில் தரப்படுத்தும் கல்வித் திட்டங்கள், அந்தஸ்து மிக்க வாழ்க்கைக்குரிய மூலதனமாகக் கல்வியை கருதும் எமது சமூகத்தின் மனப்பாங்கு என்பன மாறும் வரை பாடசாலைகள் அறிவுக்கான அடித்தளங்களாக இருக்கும் வாய்ப்பு சாத்தியமற்றதொன்றாகும். பரந்துபட்ட வாசிப்பால் மட்டுமே அறிவுக்கான அடித்தளம் போடப்பட முடியும் என்பது உண்மையானால் பெற்றோர்கள், ஆசிரியர்கள், நூலகர்கள் என்ற முக்கூட்டுச் சக்திகளின் ஒருங்கிணைந்த செயற்பாட்டினூடாகவே இது அடையப்படமுடியும்.


எமது புரிதல்கள் தொடர்பாக எம்மிடையே மாற்றம் வேண்டும். மிக நீண்ட காலமாகவே கல்விக்கும் அறிவுக்குமிடையிலான இடைவெளியின் அளவு தொடர்பான தேடல் என்னிடம் ஆழமாக நிலைகொண்டிருந்திருக்கிறது. படிப்பு கல்வியைத் தரும் பரந்துபட்ட வாசிப்பு அறிவைத் தரும் என்பது நன்கு தெளிவாகத் தெரிந்திருந்தும் கூட கல்வியா அறிவா பெரிது என்ற வாதப்பிரதிவாதங்களின் அடிப்படையில்; கல்வியைப் பெரிதாக்கி கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கல்விக்கு அத்திவாரத்தை இட்டு என்னைச் செப்பனிட்ட பாடசாலையினையும் இன்றுவரை எனது  மனதில் பூசிக்கும் பேறு பெற்ற எழுத்தறிவித்த இறைவர்களையும்  அடியோடு ஒதுக்கிவிடவோ அல்லது அறிவை ஆழமாகப் பூசித்து கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் அறிவுக்கு ஆணிவேராக இருந்த நூலகத்தை ஒதுக்கிவிடவோ நான் தயாராக இல்லை. எனவே இரண்டுக்குமிடையிலான சமநிலையைத் தேடி ஓடிய எனது முயற்சி வீண் போகவில்லை.

'ஒரு மனிதன் கற்பது எவ்வாறு எனக் கற்றுக் கொள்வதே கல்வியின் இலக்காகும். கற்றுக் கொள்வதற்கான ஆற்றலானது அறிவை விட முக்கியமானதாகும். அறிவு, காலத்திற்கொவ்வாததாகப் போனாலும் கற்கும் திறனானது அனைத்து அறிவுகளுக்குமான திறவு கோலாக விளங்குகிறது'. என்ற கூற்று அறிவை விட கல்வி முக்கியம் என்ற கருத்துநிலையைத் தருகின்றது. அப்படியாயின் பாடசாலைகள் ஏன் அறிவுக்கான திறவுகோலாகச் செயற்பட முடியாதுள்ளது என்ற வினா எழுவதும் இங்கு தவிர்க்கமுடியாததாகிறது.

கல்வியின் முக்கியத்துவம் தொடர்பாக நாம் அறியக்கூடிய அல்லது எமக்குக் கிடைக்கக்கூடிய மேற்கத்தேய சிந்தனைகள்  கைத்தொழில் சமூகம் ஒன்றின் தோற்றத்துடன் இணைந்ததாக இருக்க, தமிழ்ச் சமூகத்தின் சிந்தனைகளோ இரு ஆயிரியங்களைக் கடந்து நிற்கிறது. 'கல்வி கரையில கற்பவர் நாள் சில மெல்ல நினைக்கின் பிணிபல' என்னும்  நாலடியார், 'தொட்டனைத்து ஊறும் மணற்கேணி  நாளும் கற்றனைத்து ஊறும் அறிவு'என்னும் திருக்குறள், 'நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான் கற்ற நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு' என்னும் ஓளவையின் முதுமொழி போன்றன எமக்கு உணர்த்தி நிற்பது கல்வியின் முக்கியத்துவம் என்பது தமிழ் மக்களால் இன்று நேற்று உணரப்பட்டதொன்றல்ல என்பதையே

கல்வியின் நோக்கங்களை குறுங்காலப் பயன்கள், நீண்டகாலப் பயன்கள், உடனடிப்பயன்கள் என மூவகைப்படுத்துகிறார் இந்திய கல்வியியல் சிந்தனையாளரில் ஒருவரான எஸ் சந்தானம் அவர்கள். ஓவ்வொரு மாணவனும் அன்றாடம் கற்கும் பாடங்களின் முடிவில் அவனிடம் எதிர்பார்க்கப்படுபவை உடனடிப்பயன்கள் எனவும், குறிப்பட்ட பாடம் ஒன்றை மாணவன் கற்பதனூடாக ஏற்படும் பயன்கள் குறுங்காலப் பயன்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. குறுங்காலப் பயன்களே கல்வியின் குறிக்கோள் என அழைக்கப்படுகின்றன. இந்தக் குறிக்கோள்கள் ஒவ்வொன்றும் நிறைவேறும்போது நீண்டகாலப் போக்கில் ஏற்படுபவை நீண்டகாலப் பயன்கள் எனப்படுகின்றன.

கல்வியின் நோக்கங்கள் பல எனினும் அதன் பிரதான நோக்கம் சுயசிந்தனையும் மனித நேயமுமிக்க மனிதனை உருவாக்குதல் ஆகும். சுயசிந்தனையுள்ள மனிதனை உருவாக்குவதற்கு அறிவுசார் சிந்தனை அவசியம்.. ஷஎதனையும் உற்றுணர்ந்து, சீர்தூக்கிப் பார்த்து, நிதானித்து, எதிர் விளைவுகள் பக்க விளைவுகளை அடையாளங் கண்டு ,பயன்விளைவு ஆராய்ந்து, அனுகூலங்கள் பிரதிகூலங்களை கருத்தில் கொண்டு, ஒன்றைக் கூறும்- நம்பும் -தீர்மானிக்கும்- தீர்வு காணும்- செயற்படுத்தும்- அறிவும் மனப்பாங்கும் உடைய உள்ளம் அறிவு சார் உள்ளம் என்றும் அத்தகைய சிந்தனை அறிவு சார் சிந்தனை என்றும் கூறலாம்ஷ என படியாதவனின் படிப்பு என்ற நூல் கூறுகிறது. 'தௌ;ளிய அறிவும் நன்நடத்தையும் கொண்ட பண்பட்ட மக்களை உருவாக்குவதே கல்வி' என்ற மாட்டின் லுதர், 'மனிதனை மனிதனாக வாழ வைப்பதே உண்மைக் கல்வி' என்ற சுவாமி விவேகானந்தர், 'அன்பை உணருதல், அன்பு காட்டுதல் என்றால் என்ன என்று கண்டுபிடித்தல், அன்பு காட்டுதல் என்பவையே கல்வி' என்ற இந்திய கல்விச் சிந்தனையாளர் ஜே.கிருஸ்ணமூர்த்தி, 'உன்னத மரபுகளையும் அன்பையும், இரக்கத்தையும் ஒருவரிடம் பேணி வளர்க்கவும் முழுமையான வாழ்க்கையை வாழ உதவுவதுமே கல்வி' என்ற கல்வியியலாளர் ராதாகிருஷ்ணன் போன்றோரின் சிந்தனைகள் எமக்கு வெளிக்காட்டுவது மனிதத்தை மனிதர்களிடம் உருவாக்குவதே உண்மைக் கல்வியின் நோக்கம் என்பதையே. அறிவுசார் சிந்தனையானது மனிதநேயத்துடன் இணைந்ததாக இல்லாது விடின் கல்வியின் நோக்கம் நிறைவேறுவது கடினம். அறிவு சார் சிந்தனையை உருவாக்குவதற்கு பரந்த வாசிப்புத் திறன் முக்கியம். தான் எதிர் கொள்ளும் பிரச்சனைகளிலிருந்து விடுவிப்பதற்கு தனித்துவமான, தனக்குத் தானே நீதிபதியாகக் கூடிய வல்லமையை அளிப்பது இந்த பரந்து பட்ட வாசிப்புத் திறனே. வாசிப்புத் திறனை ஊக்குவிக்கக்கூடிய பிரதான தளம் நூலகம் என்பதில் எவ்வித கருத்துமுரண்பாட்டுக்கும் இடம் இருக்காது.

பாடசாலைகள்.... மனிதன் சந்திக்கும் முதலாவது நிறுவனம். மனித வளர்ச்சிக் கட்டங்களில் இளமை, ஆர்வம், துடிப்பு, தேடல் அதிகம் உள்ள குழந்தைப்பருவம் முழுவதையும் தமதாக்கி அவர்களை நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைப்பதற்கான வழிப்படுத்தல் என்ற  மாபெரும் பொறுப்பை ஏற்று நிற்பவை. நூலக சேவையற்ற கல்வி ஆன்மா இல்லாத உடலுக்கு ஒப்பானது நாட்டின் எதிர்காலம் ஒப்படைக்கப்பட்டிருப்பது இன்றைய குழந்தைகளிடமே என்பது உண்மையானால் அந்த குழந்தைகளின் உள்ளத்தை கிட்டத்தட்ட 12 வருடங்கள் பண்படுத்தும் பாரிய கடமைப்பாட்டில் இருப்பவை. எந்தவொரு கல்விசார் நிறுவனத்தினதும் முதுகெலும்பாகத் தொழிற்படுவது என்ற வகையில் பாடசாலை நூலகங்கள் கல்விச்செயற்பாடு முழுமையடைவதற்கான ஆதார நிறுவனமாகத் தொழிற்படும் கடப்பாடுடையவை. மனித ஆளுமையின் ஆத்மீக, ஒழுக்க, சமூக கலாசார அம்சங்களின் விருத்திக்கு பாடசாலை நூலகம் மிக அவசியமானதொன்று. இது ஒரு தேசத்தின் பொருளாதார மேம்பாட்டுக்கு பங்களிப்பு செய்கிறது. வீட்டுச்சூழலில் இருந்து வெளியுலகுக்கு குழந்தை பிரவேசிக்கும் முதலாவது இடமாக பாடசாலைகள் இருப்பதனால் குழந்தையின் வாசிப்புப் பழக்கத்துக்கு அடித்தளம் போடும் நல்ல வாய்ப்பு பாடசாலை நூலகத்துக்கு ஏற்படுகிறது. ஒவ்வொரு கல்விசார் நிறுவனமும் சிறப்புடன் இயங்குவதற்கும் மாணவர்களின் கல்வி கலாச்சார ஆர்வங்களை ஊக்குவிப்பதற்கும் பாடசாலை நூலகம் முக்கிய கருவியாக இருப்பதனால் ஒவ்வொரு முதல்நிலை, இரண்டாம்நிலை, மூன்றாம் நிலைப் பாடசாலைகளுக்கும் பாடசாலை நூலகம் இருத்தல் மிக அவசியமானது. பாடல்கள், கதை சொல்லல் மூலம் முன்பள்ளிகளில் தனது துருவி ஆராயும் பண்புக்கு களம் அமைக்கும் குழந்தைகள் வாசிப்பு பழக்கத்தின் மூலமே இப் பண்பை கட்டியெழுப்பலாம் என்ற அறிவை பெறக்கூடிய இடமாக பாடசாலை நூலகங்கள் இருத்தல் அவசியமானது. இது மட்டுமன்றி புது முயற்சிகளில் இறங்கும் குழந்தையின் இயல்பை ஊக்குவிப்பது சுயசார்புக் கல்வி மட்டுமே. புதிய பாடத்திட்டங்கள், கணிப்பீடுகள் யாவும் இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது மட்டுமன்றி எழுத்தறிவிக்கும் இறைவர்களையும் கற்பிப்பதற்கு கற்பவர்களாக மாறவேண்டிய நிலையை நிர்ப்பந்திக்கிறது. வகுப்பறைக் கற்றல் கற்பித்தலுக்கான புதியதோர் அணுகுமுறையாக 2007இல் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் 5நு-மாதிரியானது (5நு- ஆழனநட) கற்றல் கற்பித்தல் செயற்பாட்டை முழுமைப்படுத்துவதற்கான காரணி என்ற வகையில் பாடசாலை நூலகத்தைத் தரமுள்ள நூலகமாக மாற்ற வேண்டியதன் அவசியத்தை  வலியுறுத்துகின்றது.

வாசிப்பைத் தூண்டக் கூடிய மிகப் பொருத்தமான இடம் நூலகங்களே. நூலகங்கள் அறிவுப் பதிவேடுகளின் சுரங்கம் எனப்படுகிறது.  'கடலைப் போன்றது நூலகம். மணலை விரும்புவோர் மணலை எடுக்கலாம்;;;. சிப்பி, சங்கு, சோகிகளைப் பொறுக்குவோர் அவற்றைப் பொறுக்கலாம்;. குளிப்போர் குளிக்கலாம்;.  காற்று வாங்க விரும்புவோர் காற்று வாங்கலாம்;. மீனினங்களைப் பிடிக்க விரும்புவோர் அவற்றைப் பிடிக்கலாம்;. வெறுமனே கரையில் இருந்து கடல் அலையைப் பார்த்து மகிழ விரும்புவோர் அவ்வாறு செய்யலாம்;. முத்தெடுக்க விரும்புவோர் முத்தெடுக்கலாம்.;; செல்கின்றவரது நோக்கம் எதுவோ அதனை அவர் நிறைவேற்றிக் கொள்ளலாம்' என்கிறார் தேர்ந்த வாசகர்களுள் ஒருவரான குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்கள்.

பொதுவான பொருட்துறைகளில் ஆர்வமுள்ளோரை ஒன்று சேர்த்து அவர்களுக்கென வாசிப்பு வட்டங்களை உருவாக்குதல், வாசிப்பு வட்டங்களுக்குத் தேவையான நூல்களையும் வாசிப்பு வட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கான இடத்தையும் தேர்ந்தெடுத்து வாசிப்பு வட்டங்கள் சிறப்பான முறையில் நடைபெற வழிவகுக்கலாம். வாராந்த மாதாந்த ரீதியில் நடைபெறும் இத்தகைய கருத்தூட்டல்களுக்கு உதவுமுகமாக நூலகங்கள் தமக்கென சிறியளவிலாவது கருத்தரங்கு மண்டபம் ஒன்றையும் கொண்டிருக்குமாயின் வாசிப்பு வட்டம் நடைபெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பேயே அவற்றுடன் தொடர்பான நூல்களை அம் மண்டபத்தின் ஒரு பகுதியிலேயே காட்சிப்படுத்தின் வாசகர்களுக்கு இலகுவாக இருக்கும். பெரும்பாலான பொதுநூலகங்கள் வாசகர் வட்டங்களை சிறப்பாக நடத்திவருவதையும் இங்கு குறிப்பிடவேண்டும்.

என்னைப் பற்றிய சிறு அறிமுகத்துடன் இந்த நினைவுப் பேருரையை நிறைவு செய்யலாம் என விரும்புகின்றேன். நூலகத் துறை நான் விரும்பி வரித்துக் கொண்ட துறை. பதவி உயர்வுக்கு மட்டும் படிக்கவென நூலகத் துறை கருதப்பட்ட 80களில் பதவியை நாடாது மாணவ நூலகராக அன்றி நூலகத்துறையில் வெறும் மாணவியாக நுழைந்த காலத்தில் நூலகவியல் துறையில் முதலாவது மாணவி என்ற பெருமையை இந்திய மண்  எனக்குத் தந்தது. தொழில் சார்ந்து நான் அனுப்பும்  ஒரு விண்ணப்படிவமே முதலாவதும் இறுதியுமானதுமாக இருக்கவேண்டும் என்ற பிடிவாதம் தொழிலுக்குத் தேவைப்படும் அடிப்படைத் தகுதியை விட கூடுதலான தகுதியுடன் இத்துறைக்குள் தற்போதைய வேலைக்குள் நுழையும் வாய்ப்பை ஏற்படுத்தியது. பதவிக்கு வந்த பின்னர் அன்றிலிருந்து இன்றுவரை ஆசிரியராக, ஆலோசகராக, சொற்பொழிவாளராக, விரிவுரையாளராக, சிறப்புரையாளராக, முதன்மை விருந்தினராக, சிறப்பு விருந்தினராக, என்று எத்தனையோ நிகழ்வுகளில் என்னைக் கௌரவப்படுத்தியதனூடாக அறிவு ஊறுவதற்கு உதவுகின்ற நூலக சமூகத்தைக் எமது தமிழ்ச் சமூகம் கௌரவப்படுத்தியிருக்கின்றது. இதிலிருந்து இன்னொரு படி மேற்சென்று சைவமும் தமிழும் தம் இரு கண்ணெனப் போற்றிய ஒரு அறிஞர், தமது மண் பெருமை பெற வேண்டும் என உழைத்த சமூகத் தொண்டர், தாம் பிறந்த மண் கல்வியில் தழைத்தோங்க வேண்டும் என நினைத்த உத்தமர், திரு எம். எஸ் இராசரத்தினம் அவர்களது  நினைவுப் பேருரைக்கு அழைத்து என்னையும் எனது நூலக சமூகத்தினரையும் கௌரவப்படுத்திய இந்த வட்டு மண்ணுக்கும் அதற்கான முயற்சியெடுத்த அதிபர் திரு சபாரட்ணசிங்கி அவர்களுக்கும் இந்த அவையிலே நன்றி கூறி எனது இந்த உரையை முடித்துக் கொள்கின்றேன்.

27-06-2008

சூரியப் புதல்விகள்

சூரியப் புதல்விகள்:
பாடல்கள் பற்றிய ஒரு பார்வை

மனிதனுக்கு உயிர்ப்பூட்டும் ஜீவசக்திகளில் முதன்மையானது இசை. தாயின் கருப்பையில் தொடங்கி கல்லறைக்கு போகும் வரை மனிதவாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் இசை வகிக்கும் பங்கு அளப்பரியது.எழுத்து வடிவ ஊடகங்களோ அல்லது கட்புல ஊடகங்களோ ஆற்றமுடியாத பணியை இசையால் ஆற்றமுடியும். பார்வைப்புலனற்றவர், படிப்பறிவு அற்றவர், பணவசதியற்றவர்  என பல்வேறு சமூக மட்டத்தினால் பயன்படுத்தப்படக் கூடியதும், குழந்தைகள் தொடங்கி முதியோர் வரை என பரந்துபட்ட சமூகத்தை சென்றடையக் கூடியதும், சமூகத்தின் சமூக, சமய, கலை, கலாச்சார, பண்பாட்டு அம்சங்களில் பரவலாக பயன்படுத்தப்படக் கூடியதுமான ஊடகமாக இசை அமைந்துவிடுகிறது.

மனித மனத்தின் உணர்வுகளும் மானுட வாழ்வின் அனுபவங்களும் கவிஞனின் கைவண்ணத்தில் வரிவடிவம் பெற்று இசைமழையில் குளித்து உயிர்ப்பூட்டும் குரல்கள் மூலமாக மீண்டும் சமூகத்திடமே பாடல்களாக சென்றடையும் போது இவை ஒரு காலத்தின் குரலாய் மாறி நிரந்தர இடத்தைப் பெற்றுவிடுகின்றன. மக்களிடையே சென்று மக்கள் மனதை ஊடுருவி, அவர்களின் உணர்வுகளில் மாற்றத்தை ஏற்படுத்தி அவர்களை செயலூக்கம் புரியச் செய்யும் வல்லமை இசைப்பாடல்களுக்கு உண்டு என்பதை நன்குணர்ந்துதான் மக்களை எழுச்சி கொள்ளச் செய்ய, குதூகலித்து மகிழ, சிந்திக்க, சிந்தனைக்குத் தெளிவூட்ட, வெட்கித் தலைகுனிய வைக்க, விழிப்புணர்வூட்ட, பெருமைப்பட, பெருமிதங் கொள்ளச் செய்ய, எதிரியை கேலி செய்ய, தன் உணர்வை வெளிப்படுத்தவென நூற்றுக்கணக்கான பாடல்களை இந்த மண்ணின் மக்கள் உருவாக்கினர். இன்றைய எமது சமூகத்தின் அடிநிலையை ஊடுருவி நிற்கும் போராட்ட வாழ்வின் யதார்த்தங்களை தமக்கென்றுள்ள தனித்துவ கலைபண்பாட்டு அம்சங்களினூடாக மக்கள் மனங்களில் பதியச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த வகையில் கடந்த ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி, விடுதலைப்புலிகள் மகளிர் படையினரால் வெளியிடப்பட்ட 'சூரியப்புதல்விகள்' ஒலிப்பேழை நாடா இன்றைய போராட்ட நிலையினை, போராட்ட வாழ்வில் பெண்களின் பங்களிப்பை இசையில் வடித்தெடுக்கும் ஒரு கலை முயற்சியாகவே கருதப்படுகின்றது. 'நேற்றிருந்த வாழ்வகற்றி புதியதோர் ஒளியைத் தேடி விரைந்த எம்மண்ணின் புதல்வியர் பற்றிய கானங்கள் இவை. விடுதலை வேண்டி உயர்ந்த இவர்களின் கரங்களால் உலகின் புருவங்கள் விரிந்தன. பெண்மை புதியதோர் அர்த்தமானது. நிலவுக்கும் மலருக்கும் காதல் செய். கவிதைக்கும் உவமைகளாய் உணர்த்தப்பட்டவர்கள் வீரத்தின் பொருளாகினர். எமது தேசத்தின் விடுதலை எமது இனத்தின் விடிவு என்ற உயரிய குறிக்கோளை நெஞ்சில் ஏற்றி நடத்து வந்த இந்தப் புதல்வியர் சுமக்கின்ற சுமைகள், அவற்றுக்காய் கொடுக்கின்ற விலைகள், தியாகங்கள், சாதனைகள் என்பவற்றைப் பாடுபொருளாக்கிய இக்கானங்கள் புதிய வீச்சும் எழுச்சியும் கொண்டவை' என்ற அறிமுக உரையுடன் தொடங்கி 10 பாடல்களைத் தாங்கிவரும் இவ்ஒலிப்பேழை விடுதலைப்புலிகள் மகளிர் படையணியின் 3வது பாடல் ஒலிப்பேழையாகும்.

1993ல் 'விழித்தெழுவோம்' என்ற ஒலிப்பேழை அம்புலி, பாரதி, தமிழவன், வசந்தமதி போன்ற போராளிப் பெண்கவிஞர்களின் உள்ளத்துணர்வுகளைத்; தாங்கி வெளிவந்தது. ஆதன் பின்னர் 1995 இல் 'நெருப்பு நிலவுகள்' என்ற ஒலிப்பேழை 'ஆழவேரோடிய சமுதாய வன்முறைகளைக் கடந்து, வேலித்திரைகளிலிருந்து விடுபட்டு விடுதலை வேண்டி நிற்கும் எமது வளர்ச்சி படிமுறை வளர்ச்சியல்ல, பாய்ச்சல் நிகழ்வு' என்ற அறிமுகத்துடன் விடுதலை கானங்களைச் சுமந்து வந்தது. கிட்டத்தட்ட 15 வருடங்களாய் மண்மீட்புப் போரில் தம்மை இணைத்துக் கொண்ட சூரியப் புதல்விகள் தமது பாதையில் எதிர்கொண்ட சவால்கள், சாதனைகளைப் பதியும் முயற்சியில் இந்த ஒலிப்பேழை ஓரளவு வெற்றி பெற்றிருக்கின்றது. ஐந்து பாடல்கள் சூரியப் புதல்வியின் சாதனைகளை, தியாகங்களை பதிவு செய்திருக்க மீதிப்பாடல்கள் சமூகத்தின் இன்றைய வாழ்நிலையை பதியும் முயற்சியில் இறங்கியிருக்கின்றன.

பொதுவாக பாடல்களை பாராட்டை எதிர்பார்த்துக் காத்திருப்பவை, பாடுபவரை மெய்மறக்கச் செய்பவை, சிறிது காலத்திற்கு நிலைத்து நிற்பவை, தலைமுறை கடந்தும் வாழ்பவை எனப் பலவாறாக வகைப்படுத்தலாம். பாடலின் வரிகளை திரும்பத் திரும்ப மீட்கும் சந்தர்ப்பங்களில் பாடலாசிரியன் வெற்றி பெறுகின்றான். பாட்டின் கருப்பொருளையும் மீறி வெறும் மெட்டுகளை அசைபோடும் நிலைக்கு பாடலைக் கேட்பவன் வரும் நிலையில் இசையமைப்பாளன் வெற்றியைத் தனதாக்கிக் கொள்கின்றான். கவிதையும் இசையும் இணைந்த கலவையை உயிர்ப்பூட்டும் குரலால் வெளிப்படுத்துவதன் மூலம் ரசிகன் மனதில் இடம் பிடிக்கும் நிலையில் அங்கு வெற்றி பாடகனிடம் போய் சேர்ந்து விடுகிறது. அனைத்திற்கும் மேலாக பாடலாசிரியரை, இசையமைப்பாளரை, பாகரை என பட்டிமன்றம் நடத்தப்போய் முடிவு தெரியாது குழம்பும் நேரங்களில் பாடல் சிரஞ்சீவித் தன்மையைப் பெற்று விடுகின்றது.

இவ்வாறு காலத்தால் அழியாத கானங்கள் என்ற வகையில் பெண்களின் சாதனைகளைப் பாடுபொருளாக்கி நிற்கும் ஐந்து அற்புதமான பாடல்களை இவ்ஒலிப்பேழை தாங்கி வந்திருக்கின்றது.

காற்றுக்கும் மழைக்கும் ஈடுகொடுக்க முடியாமல் வீழ்ந்து விடு;ம் பூங்கொடிகள் என்ற மூடக்கொள்கைகளால் முடையப்பெற்ற தத்துவம் 15 வருட கால போராட்ட வாழ்வில் தகர்க்கப்பட்டுவிட்ட செய்தியை இப்பாடல்கள் வெளிக்காட்டுகின்றன.

'வேலிப்பொட்டுக்கள் வெடித்து சரிந்தன. அடுக்களை சுவர்களின் இடுக்கண் தொலைந்தது' என்றும் 'நாளை மலர்ந்திடும் ஈழம் காத்திட நாமும் எழுந்ததனாலே, எம் தாழ்வு மனப்பள்ளத்தாக்குகள் எல்லாம் தலைநிமிர்ந்தே மலையாச்சு' என்றும் பெண்போராளிகளின் இன்றைய வாழ்நிலையை நிதர்சனமாக எடுத்துக் காட்டுகிறது போராளி தமிழ்க்கவி எழுதிய 'அந்த வானத்து நிலவை' என்று தொடங்கும் பாடல். மரபுகளால் இறுக்கமாக சூழப்பட்ட சமூக வாழ்நிலையை உடைத்தெறிந்து இளைய தலைமுறையுடன் இணைந்து போராடப் புறப்பட்டுவிட்ட, பேரக்குழந்தைகளையும் கண்டுவிட்ட ஒரு பெண் போராளியின் உள்ளத்து உணர்வுகளின் வெளிப்பாடே இப்பாடல். பாடகியையோ பாடலையோ குழப்பாமல் இங்கிதமாக நுழைந்து நெளிந்து வரும் இசை எம்மை துள்ளிக் குதிக்கச் செய்கின்றது. வயல் சூழ்ந்த கிராமமொன்றின் வயல் வரப்புகளில் உற்சாகமாக வாய் திறந்து பாட ஊக்குவிக்கின்றது.

பாடலும் இசையும் குரலும் சரிவரப் பொருந்தி கேட்பவர் மனத்தில் துக்கமா, சந்தோசமா, பெருமிதமா என்று இணங்காண முடியாமல் உள்ளம் முழுவதும்; நிறைந்திருக்கும் இன்னொரு பாடல் 'வீரமுடன் களமாடி வருகின்ற' எனத் தொடங்கும் ஒரு போராளிக் கவிஞனின் பாடல். தன்கண் முன்னே தனது தங்கையர் புரியும் சாதனைகளைப் பார்த்து அதன் மூலம் ஏற்பட்ட உணர்வின் வெளிப்பாடுகளை இசைமாலையாக்கி அதனை ஒரு அற்புதமான குரல் மூலம் வெளிப்படுத்தியிருக்கும் இப்பாடல் வேவுப்பெண் புலிகள் பற்றி வெளிவந்த முதலாவது பாடல் என்ற பெருமையைப் பெறுகின்றது.

'கண்ணி வயல்களில் ஏறி நடக்கையில் கால்கள் தவறிடக்கூடுமே
உம்மைக் கட்டியணைத்தழ தேகமுமின்றியே காலச் சருகுகள் மூடுமே'
'நிலமும் அதிராமல் நீரும் விலகாமல் நிழலெனப் போய் வருகின்றீர்
இந்த உலகம் உணராத சுமைகளைத் தாங்கவே
உங்களின் தோள்களைத் தருகின்றீர்'

என்ற வரிகள் அனுபவங்கள் பேசுகின்ற ஒரு கவிதையே. ஒரு பெண்ணின் சாதனையை ஆண் கவிஞன் ஏற்றிச் சொல்வதும், பெண் குரல் ஒன்று இப்பாடலின் உட்பொருளை தனது அகக்கண்ணால் உய்த்துணர்ந்து தனது அற்புதமான குரலால் இப்பாடலுக்கு மேன்மையும் புனிதத்தன்மையும் அளிப்பதுமே இப்பாடலின் சிறப்பம்சம். பாடலின் கருப்பொருளை, வரிவடிவத்தை முறிக்காது அதனை மென்மையாக சூழ்ந்து நிற்கும் இசையால் தனது ஆளுமையை இசையமைப்பாளர் வெளிப்படுத்தியிருப்பதும் இப்பாடலின் சிறப்பம்சமாகும்.

பெண்ணின் சாதனைகளை ஆண் ஏற்றி சொல்லும் இன்னொரு பாடல் 'நிலவுக்குள் நிலவொன்று' எனத் தொடங்கும் பாடல். பெண் போராளிகளை தங்கையாகப் பாவித்து அவளின் பெருமைகளை பாடும் ஒரு சகோதரனது உணர்வின் வெளிப்பாடாகவே இப்பாடல் அமைகிறது. 'பெண்ணுக்கு பெருமை தந்து பண்புக்கு உயிர்தந்து மண்ணிற்கும் விடிவைத் தேடும் என்னுயிரே' என்ற வரிகள் மூலம் தனது பண்பாட்டு அம்சங்களுக்குள் நின்று கொண்டு, தாயக மீட்புக்கும் உதவிசெய்து கொண்டு வாழும் சராசரி தமிழீழ பெண்ணை எமக்கு காட்டுகின்றான் பாடலாசிரியன். பாடலின் ஆரம்பத்தில் தனது உலகில் சஞ்சாரம் செய்யும் இசை மெல்ல மெல்ல இறங்கி பாடகனின் குரலுக்கு மெல்ல வழிவிடுகின்றது. தங்கையின் புகழ்பாடும் தமையனின் குரல் கேட்டு இசையும் கூட பெருமிதமும் குதூகலமும் அடைகிறது.

பெண்ணின் சாதனைகளை பெண்ணோ அல்லது ஆணோ ஏற்றி சொல்வதுடன் நின்றுவிடாது இயற்கையும் எவ்வாறு பெருமிதப்படுகின்றது என்பதை வெளிக்காட்டி நிற்கின்றது இன்னொரு பாடல். போராடப் புறப்பட்டு காவியமாகி தனது மடியில் உறங்கிக் கொண்டிருக்கும் எண்ணற்ற பெண் போராளிகளை கடலன்னை எவ்வாறு தாலாட்டுகின்றாள் என்பதை அற்புதமாக வெளிப்படுத்தி நிற்கும் இப்பாடல் விடுதலைப் போராட்டத்தின் சுமைகளைத் தாங்கி வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தமிழ் மகனின் உள்ளத்து வெளிப்பாடுகளாக இருக்கின்றது.

அது போல் கரும்புலிகளின் சாதனைகளை, அவர்களின் மன உரத்தை வெளிப்படுத்தி இருக்கும் இன்னொரு பாடல் 'உருக்கில் மனம் வரித்து' என்று தொடங்கும் ஒரு பாடல். மூன்று ஆண்கவிஞர்களும் இரு பெண்கவிஞர்களும் இணைந்து சூரியப்புதல்வியின் சாதனைகளை, தியாகங்களை பாடுபொருளாக்கி உலவவிட்டிருக்கின்றனர்.

இலக்கியங்கள் காலத்தின் குரலாய் ஒலிப்பவை. அந்தவகையில் போராடப் புறப்பட்டுவிட்ட சமூகத்தின் தற்போதைய வாழ்நிலையை தெட்டத் தெளிவாகப் பிரதிபலிக்கின்றன இரு பாடல்கள். இந்த மண்ணில் தாய் தந்தை பிள்ளைகள் என்று குடும்பமே மண் மீட்புக்காக கிளம்பியிருக்கும் நேரம் இது. கிளம்ப மனமில்லாது தயங்கி நிற்பவர்களைக்கூட தமது உச்சக்கட்ட ஆற்றல்களைப் பயன்படுத்தி தாயக விடிவுக்கு தோள் கொடுக்க வாருங்கள் என கூவியழைக்கும் நேரமும் இதுதான். அடுக்களையே அகிலம் என இருந்தவர்கள் இந்த 15 வருட குறுகிய போராட்ட வாழ்வில் சாதித்த சாதனைகள் அளப்பரியவையாக, கற்பனைக்கும் அப்பாற்பட்டவையாக இருந்தும், இன்றைய போராட்ட சுமையை சரிநிகர் சமானமாக அல்லது அதற்கும் கூடுதலாக தாங்கி நிற்கும் வளர்ச்சி பெற்றவையாக இருந்தும் ஆண் பெண் என்ற பேதத்திற்கு அப்பாற்பட்டு ஒட்டுமொத்த சமூகத்தையும் கூவியழைக்கும் தகுதியைப் பெற்றிருந்தும் கூட பெண் இனத்தை மட்டுமே போராட வாருங்கள் என இவர்கள் அழைப்பதன் மூலம் ஏதோ ஒரு விதத்தில் தமக்குள் ஒதுங்கி நிற்கி;ன்ற ஒரு போக்கு இப்பாடல் ஒலிப்பேழையில் வெளிப்படுவது யதார்த்தத்திற்கு புறம்பான ஒன்றாகவே தெரிகின்றது. 'தேசத்தின் விடுதலை' என்று தொடங்கும் முதலாவது பாடல் பெண் போராளி அம்புலியுடையது. அற்புதமான இசையும் உயிர்ப்பூட்டும் குரல்களும் இணைந்து கேட்பவரின் மனத்தில் விடுதலைப் போராட்டம் தொடர்பான சமூகத்தி;ன் உணர்வலைகளை சுமந்து நிற்கும் இப்பாடல் பெண்களின் பங்களிப்பை மட்டும் வேண்டுவதுடன் நின்றுவிடாது ஆண் பெண் இணைந்த பொதுச்சமூகத்தின் பங்களிப்பை வேண்டி நின்றிருந்தால் மிகவும் அற்புதமான பாடலாக அமைந்திருக்கும்.

ஆண் பெண் பேதத்தைக் கடந்து ஒட்டுமொத்த சமூகமே விடுதலைப் போராட்டத்தின் சுமையை தாங்கி நிற்கும் இன்றைய யதார்த்தத்திற்கு மாறாக அரைத்த மாவையே திருப்பி அரைப்பது போல் பெண்ணை விழித்தெழக்கோரும் பாடல்களும் இப்பாடல் ஒலிப்பேழையில் உள்ளடங்கி இருப்பதானது புறச்சூழல்கள் எவ்வளவுதான் மாறினாலும் அகமாற்றம் ஒன்றிற்கு மனித மனம் உட்படுவதற்கு இன்னமும் காலம் எடுக்கும் என்ற யதார்த்தத்தை கோடிகாட்டி நிற்கின்றது. பாடல்கள் எழுதப்பட்ட காலப்பகுதிக்கும் வெளியிட்ட காலப்பகுதிக்கும் இடையிலான இடைவெளியும் இக்குறைபாட்டுக்கு காரணமாக இருக்கக்கூடும். போராளிகளுக்கு சமதையாக பொதுமக்களும் எல்லைப்படையாக, சிறப்பு எல்லைப்படையாக, கிராமியப்படையாக ஒருங்கிணைக்கப்பட்டு சாதனைகள் படைக்கும் இக்காலப்பகுதியில் அவர்கள் பற்றிய ஒரு பாடலாவது இல்லாது இருப்பது இந்த ஒலிப்பேழையின் இன்னொரு பிரதான குறைபாடாகும்.

இன்றைய வாழ்வு நாளைய வரலாறு. எனவே வெறும் எதுகை மோனைகளிலும், உணர்ச்சியூட்டுவதிலும் கவனம் செலுத்துவதை கைவிட்டு இன்றைய சமூகத்தின் வாழ்நிலையை, அவர்களின் சுமைகளை, தியாகங்களை, அர்ப்பணிப்புகளை அப்படியப்படியே ஆவணப்படுத்த வேண்டிய தேவை எமது சமூகத்திற்கு உண்டு.

உப்புக்கரிக்கும் உதடுகள்

உப்புக்கரிக்கும் உதடுகள்
அணிந்துரை

கவிஞர் பற்றி----
அமைதியும் அடக்கமும் எளிமையும் பொருந்திய உருவம். பாசத்துக்கான ஏக்கமும் வாழ்க்கை பற்றிய நிச்சயமின்மையும், சமூகம் மீதான அக்கறையும் நிரம்பிய உள்ளம். அறிவுலகமும் உணர்வுலகமும் அடிக்கடி மோதும் போது வெளிக்கிளர்பவை தான் இவரின் கவிதைகள். இரு உலகிற்குள்ளும் தன்னிச்சையாக அலைபவர் இவர். தனி மனித உணர்வுகளுக்குள் நிற்கின்றார் என உணரும் முன்னமே சமூக உலகிற்குள் பாய்ந்து விடும் வேகம் இவருடையது.
சிறிது காலம் ஆங்கில ஆசிரியராக இருந்திருக்கின்றேன். க.பொ.த உயர்தரப் பிரிவில் நான்கு பாடங்களிலும் அதி திறமைச் சித்திகளை (4 யு) அதிலும் கலைப் பிரிவில் அத்தகையதொரு சாதனையை ஏற்படுத்திய பின்னரும் கூட 'ஆங்கிலம் தெரியாதவன் அறிவிலி' என்ற ஆழமான கருத்துநிலைக்குள் சிக்குப்பட்டு, தனக்கு அது வரவில்லையே என்பதற்காகத் தனது சாதனையே அர்த்தமற்றது என்ற விரக்தி நிலையில் அவர் இருந்த ஒரு காலத்தில் ஏற்பட்ட எனது அறிமுகம். அன்னிய மொழி. ஏன்பது உதட்டு நுனியில், ஆங்கிலப் பாணியில் பேசுவதற்கல்ல அம்மொழிலயிலுள்ள அரிய தகவல்களை எமது மொழிக்குக் கொண்டு வந்து எமக்கும் எமது சமூகத்துக்கும் பயன்படுத்துவதற்கே அந்த அறிவு என்ற எனது கருத்துநிலையை மிகக் கஷ்டப்பட்டு அவருக்குள் ஏற்படுத்தி அந்தத் தாழ்வுணர்ச்சியை மெல்ல மெல்ல நீக்கியதன் நன்றி வெளிப்பாடோ அல்லது கவிதை பற்றிய எனது நோக்கும் ஒரு சில மேடைகளில் அவை பற்றிய எனது கருத்து வெளிப்பாடுகளும், அச்சுருவம் பெற்ற எனது ஒரு சில கவிதைகளும், விமர்சனங்களும் தான் என்னை நோக்கி இழுத்ததோ என்னவோ அவரது ஆக்கங்களுக்கு அணிந்துரை வேண்டும் என்ற ஆழமான சுமையை ஏற்றும்  அன்பான அவரது வேண்டுகோளுடன்---

கவிதை பற்றி---
புதுக் கவிதை---  'சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொல் புதிது, சோதி மிக்க நவ கவிதை எந்நாளும் அழியாத மா கவிதை'  என்ற பாரதியின் வரிகளால் உரம் பெற்ற கவிதை. கவிதை தொடர்பான அச்சத்தைத் தூக்கியெறிந்து சிவதர்சினியைப் போன்று தனக்குச் சொந்தமான அனுபவங்களை அப்படியே ஒப்பனையின்றி வெளிப்படுத்தும் துணிவைக் கொடுத்த கவிதை.  அதே சமயம் வெட்டி எழுதும் வசனங்களுக்கும்  கவிதை எனப் பெயரிடும் அசண்டையீனத்தையும் கொடுத்த கவிதை.
எனது உணர்வின் வெளிப்பாடுகள் கட்டாயம் பதியப்பட்டே ஆக வேண்டும் என்ற வேட்கையின் வெளிப்பாட்டுக்கு ஆரம்பத்தில் பத்திரிகைகள் களம் கொடுத்தன. அந்த அங்கீகாரம் ஏற்படுத்திய நம்பிக்கை தந்த வலு இப்போது உப்புக் கரிக்கும் உதடுகள் என்ற தலைப்பில் ஏற்கனவே பதியப்பட்டவையும் புதிதாக உருவம் பெற்றவையும் இணைந்து அச்சுருவம் பெறுகின்றன.

கவிதையின் உள்ளடக்கம் பற்றி---
எனது உணர்வுகள் அப்பட்டமானவை. உணர்வுகளுக்கு ஒப்பனையிடும் எண்ணம் எனக்கு இல்லை. என் கவிதைகள் சொல்ல விழைவது எது என்பதை அறிவதற்கு சிரமப்பட வேண்டிய தேவையில்லை என்பது தான இவரது எண்ணப்பாடு.
யாரிடம் சொல்லியழ என்ற கவிதையே இவரின் முழு உணர்வையும் பிரதிபலிக்கப் போதுமானது.

உருக்குலைந்த என்னிதயத்தின்
உறைந்து போன குருதியே
என் கவியின் மையாகையில்---
குளிர்ச்சியும் கனிவும்
அருமையான சந்தமும்
எப்படி எனக்கு வரும்?

என்ற வினவலிலேயே  உணர்வின் வரிகளுக்கு உருவ அலங்காரம்  இருக்காது என்பது தெளிவாகிறது. உள்ளத்திலிருந்து அவ்வப்போது பீறிடும் உணர்வுகள் அடுத்தவர் மத்தியில் சிரிப்பை, கோபத்தை, கேலித் தனத்தை, வியப்பை, ஏளனத்தை  உண்டு பண்ணுமோ என்ற அச்சத்தில் வெட்டிக் கொட்டி, வேலி கட்டி, முடிந்தால் வித்துவத் தனத்தால் ஒரு படலையுங் கட்டி வெளியே பார்ப்பவருக்குப் பிரமையையும் உள்ளே புகுந்தவருக்குப் பரவசத்தையும் கொடுக்கும் முன்னெச்சரிக்கை உணர்வு பற்றியெல்லாம் வீணாக அலட்டிக் கொள்ளாது எனக்குரிய உணர்வுகள் இது. எந்தெந்தச் சூழலில் அவை வெளிக்கிளர்ந்தனவோ- காலையில் துயில் கலைந்த கையுடன் சில ---  குளித்து முடித்துச் சில -- சீவிச் சிங்காரித்துச் சில -- அழுது வடித்து ஆற்றில் இழந்து சில --- உணர்வுகள் வற்றி சடமாகச் சில--  என்று அத்தனை உணர்வுகளையும் அப்படியே சமூகத்தைப் போய்ச் சேர விட்டுள்ளமை தான் இக்கவிதைகளுக்குள்ள தனித்துவம்.
எனினும் கூட கவிதைகள் முழவதும் ஆக்கிரமித்திருக்கும் தவித்தல், தேடுதல், ஏங்குதல், இதயம் வெடித்தல், குருதி உறைதல் போன்ற சொல்லாட்சிகள் தமிழ்ச் சமூகத்தின் பெரும்பாலான பெண்களுக்கு  வீட்டுச் சூழலும் சமூகச் சூழலும் அளித்த பரிசு.
இவர் சொல்ல விழையும் இரு பிரதான கருப் பொருளில் முக்கியமானது முதன்மையானது தூய அன்புக்கான ஏக்கம் --- முத்தமே சொத்தாக, முடியும் நேரத்தில் அழுத்தி முத்தமிட்ட அன்னையின் பிரிவு தந்த ஏக்கம்--- தன்னையே மட்டும் நேசிக்கும் அன்பிற்கான ஏக்கம்.--- தூய நட்பிற்கான ஏக்கம்--- அதற்கும் மேலே சமூகத்தின் நலன் மீதான ஏக்கம்---
இந்த ஏக்கம் இயல்பாகவே விரக்தி நிலைக்கு இட்டுச் செல்கின்ற போதும் கூட இவரால் வெகுண்டெழ முடியவில்லை. அன்பு பொய்யென்று உணர்ந்த பின்னரும் வெகுண்டெழ முடியாது தனக்குள்ளேயே குமைந்து, குழைந்து வெளிப்படும் உணர்வுகளுக்குரியவர் இவர்

அனைத்திலுமே நீ வெற்றுச் சொல்லாகி
உள்ளமதில் ரணத்தை ஏற்படுத்தினாலும்
உடைக்காதே என் மனதை என்று
சொல்ல முடியவில்லை என்னால்.

இடையிடையே கட்டளைக் கவிதைகள் மூலம் வாழ்வு பற்றிய நேர்க்கணிய அணுகுமுறை வெளிப்பட்ட போதும் கூட இவரது சூழலும், இவரது சமூகச் சூழலும் இணைந்து நம்பிக்கையீனம் என்ற வட்டத்துக்குள்ளேயே இவரைச் சுழல விடுகின்றன. சமூகம் பற்றிய இவரது நம்பிக்கையீனம் இவரது எதிர்பார்ப்பு என்ற கவிதையில் ஆழமாக வெளிப்படுகின்றது. இது இவரது தவறல்ல. போர் மலிந்த, போலிகளும் பகட்டுகளும் அரியணையில் வீற்றிருக்கின்ற இன்றைய சூழலில் போலியற்ற தூய வாழ்க்கைக்காக ஏங்கும் எவருக்கும் ஏற்படக் கூடிய நம்பிக்கையீனம் தான் இது. வேண்டுவது இது தான என்ற கவிதையில்

சின்னத் திரைகளின் சிற்றின்பத்துள்
சிலையாகிப் போகும் சீர் கெட்ட வாழ்வு
இனி எமக்கு வேண்டாம்
சன்னங்கள் உமிழ்ந்து உடலைச்
சல்லடையாக்கும் துப்பாக்கிகள்
மனித நேயத்துக்கு புதைகுழி தோண்டும் போலி மனிதர்கள் வேண்டாம்

என்று சற்று அழுத்திக் கூறும் வல்லமை இருந்தாலும்,

விடியும் எனக் காத்திருந்த வேளையில்
இருள் விடையாயமைந்தது
முடியும் எனக் காத்திருந்த வேளையில்
இடைவெளி அதிகரித்து நீண்டது.

ஞாபகங்கள் சேரத் தொடங்கிய
அந்த நாள் தொடங்கியே
இயந்துபோய்விட்டதாக
என்னுள்ளே உணர்ந்து கொள்கின்றேன்

என இறுதியில் எதிர்பார்ப்பு என்ற கவிதையில்; நம்பிக்கையீனத்தில் முடிவடைகின்றன எல்லாமே.

இவரது கவிதைகளில் இரண்டாவது பிரதான கருப்பொருள் சமூக நலன் மீதான அக்கறை.

மூடிய சிறைச்சாலை
உன் ஆயுள் வரை---
திறந்தவெளிச் சிறைச்சாலையே

எங்கள் ஆயுள் வரை என்று அடக்குமுறையின் அவலத்தை மட்டும்  பதிவுசெய்யவில்லை இவர்.

யாருமே இல்லாததால்
இப்போதெல்லாம்
தனக்குள்ளே கதைத்துக்கொள்கின்றாள்'

என்ற வரிகளில் அறியாமைச் சகதிக்குள் வீழ்ந்து கிடக்கும் பெண்ணின் அவலத்தையம்  ஆழமாகப் பதிவு செய்கிறார். தன்னைச் சுற்றியுள்ள அவலங்களை மட்டும் பதிவு செய்வதுடன் தனது பணியை மட்டுப்படுத்தாது அதற்குமப்பால் உலகைப் பார்க்கும் பண்பு இவருக்கு உண்டு என்பதை வெளிப்படுத்தி நிற்கிறது அரவாணியின் கதறல் என்ற கவிதை. அரவாணிகளின் உணர்வுகள் சோகங்களை நூல்கள் வாயிலாக மட்டுமே அறிந்திருந்தபோதும் கூட

எங்கள் வாழ்க்கை அகராதியில்
நாங்கள் தேடும் ஒவ்வொரு சொற்களுமே
விபரீதமாகச் சிரிக்கிறது
நெருஞ்சி முட்களாக

என்று அவர்களின் உணர்வுகளை ஆழமாகப் பதிந்து செல்வதற்கான அறிவைக் கொடுத்தது சமூக நலன் மீதான இவரது அக்கறையே.
இயற்கையின் அனர்த்தங்கள், சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை பதிவு செய்கிறது 'உப்புக் கரிக்கும் உதடுகள்' என்ற கவிதை. போர் அனர்த்தங்கள் தனி மனிதனில் குறிப்பாக பெண்களில் ஏற்படுத்தும் தாக்கங்களைப் பதிவு செய்கிறது 'சிறையிருக்கும் நண்பிக்கு'என்ற கவிதை. சீதனக்கொடுமையை அழகாகப் பதிவு செய்கிறது ' மரண சாசனம்'

பொதுவாகவே பெண்களின் படைப்புகள் தன்னை, தனது சோகங்களை, அச்சோகங்களுக்குக் காரணமான ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பை சாடுவதையோ அல்லது அதனை ஒழிப்பதற்கான அதுவுமன்றி உடைப்பதற்கான வழிவகைகளை தேடுவதையோ இலக்காகக் கொண்டிருக்கும் நிலையில் அதிலிருந்து சற்று மேலுயர்ந்து ஆண்பெண் என்ற பேதத்துக்குமப்பால் பொது மனிதனாக நின்று சமூகத்தைப் பார்க்கும் படைப்பாளியாக சிவதர்ஷினியைப் பார்ப்பது மனதுக்கு மகிழ்வைத் தருகிறது.

கவிதைத் தொகுப்பு முழுவதையும் படித்து முடித்தவர்களுக்கு ஏற்படும் உணர்வுகளில் முக்கியமானது சமாதானம், வேலைநிறுத்தம், கலாசாரச் சீரழிவு, சீதனக் கொடுமை, பாதிப்புற்றோர் நட்பு என்று பன்முகப் பார்வையைக் கொண்டவர் சிவதர்ஷினி என்ற உணர்வே. தன்னுணர்வுக்குள் சிக்குப்பட்டு நிற்பவர்களுக்கு உருவ உத்தித் திறன்கள் இருக்குமளவிற்கு பன்முகப் பார்வை இருப்பதில்லை. சமூக நலன் மீதான உண்மையான அக்கறை உள்ளவர்களுக்கெ தமமைச்சுற்றி நடப்பதை ஆழ ஆராய்ந்து படைப்பிலக்கியம் வாயிலாக சமூகத்திற்கு அனுப்பும் வல்லமை உண்டு என்ற யதார்த்தத்திற்குள் தான் இவரும் நிற்கிறார் என்பது மனதுக்குள் ஆறுதல் தரும் ஒன்று. இவர் பணி தொடர என்றும் என் நல்லாசிகள்.


அருளானந்தம் ஸ்ரீகாந்தலட்சுமி
01-07-2005



யாழ்ப்பாணப் பெட்டகம்

அணிந்துரை
தன்னைச் சுற்றியுள்ளவை மீதான மனிதனின் அவதானிப்புகள், அவ் அவதானிப்புகளை பரிசோதனைக்குள்ளாக்கி தீர்வு காண முயலும் மனித மூளையின் ஆற்றல், தான் பெற்ற அறிவை அடுத்துவரும் பயன்படுத்தும் வகையில் ஆவணப்படுத்தும் மனித விருப்பு, தனது விருப்பங்களை செயலுருப்படுத்துவதற்கு அவ்வப்போது மனிதன் உருவாக்கிய கருவிகளின் அபரிமித வளர்ச்சி -  இன்றைய உலகின் வியத்தகு அறிவியல் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைவது இவற்றின் இணைப்பே. 18ம் 19ம் நூற்றாண்டுகளின் கைத்தொழில் புரட்சி தகவல் பதிவேடுகளின் பௌதிக ரீதியான வளர்ச்சிக்கு வேகமூட்ட 19ம் நூற்றாண்டின் தொழில்நுட்பப் புரட்சியானது பெருக்கத்தை அபரிமிதமாக்கி பின்னரைப்பாதியில் தகவல் யுகமொன்றின் தோற்றப்பாட்டிற்கு வித்திட்டு கைத்தொழில் சமூகமாயிருந்த மனித சமூகத்தை தகவல் சமூகமாய் மாற்றுவதற்கான நிர்ப்பத்தத்தை உருவாக்கியது. பிரித்தானிய அறிவியலாளரான ரிம் பேணர்ஸ் லீ 1989இல் இவ்வுலகிற்கு அளித்த உலகளாவிய வலைத்தளமும்  1991இல் அதன் அறிமுகமும் மனித சமூகத்தின் இதுநாள் வரையிலான தகவல் பதிவேடுகளை  தன்னால் முடிந்தவரை ஓரங்கட்ட முயற்சிக்கிறது. மனித வாழ்வின் அனைத்து தேவைகளையும் சிறிய கணினித் திரைக்குள் சாதிக்க இணையம் உதவுகிறது. தகவல் உருவாக்கத்தினதும் பெறுதலினதும் அளவிலும் வகையிலும் ஒவ்வொரு தேசத்தினதும் பொருளாதார அரசியல் சமூக சூழலானது பாதிக்கப்பட்டுள்ளது. உலகை வடிவமைக்கும் ஆற்றல் பெற்ற சக்தியாக உருவெடுத்துள்ள தகவலை அணுகுதல் பகிர்தல் பயன்படுத்தல் என்பவற்றில் வெற்றி பெற்ற ஓரு உலகில் நாம் வாழ்கிறோம்.
தகவல் குறித்த தேடல் ஆவணப்படுத்தல் என்ற சிந்தனையை நோக்கி இயல்பாகப் பயணிக்கின்றது. இன்றைய நிகழ்வு நாளைய வரலாறாகுவதற்கு அது ஏதோ ஒரு வகையில் பதியப்படுவது அவசியமாகிறது. பதியப்படாதவை அனைத்தும் மறைந்து போகின்றது. உரு, வரி, வடிவம், அலை ஆகிய நான்கு வகைப்பட்ட தகவல் வெளிப்பாட்டு வடிவங்களினூடாக இந்த நிகழ்வு பதியப்படுவதும், பாதுகாக்கப்படுவதும் அடுத்த தலைமுறைக்குக் கையளிக்கப்படுவதும் தொடர்ச்சியாக நடைபெறும்போது சமூகம் ஒன்றிற்குரிய அறிவுத் தொகுதி அதன் அறிவிலும் ஆழத்திலும் கனதிமிக்கதாக மாறுகின்றது. சமூகம் ஒன்றின் ஒட்டுமொத்த அடையாளத்தையும் சமூக உறுப்பினர் ஒவ்வொருவரும் அறிந்து கொள்வதற்கு ஒன்றுக்கொன்று தொடர்புடைய நிகழ்வுகள் வௌ;வேறு காலங்களில் வெள்வேறு வடிவங்களில் பதியப்படுவதும் அவை பொதுப்பயன்பாடு கருதி ஓரிடப்படுத்தப்படுவதும் அவசியமானது.  
கடந்த காலத்தை பதிவு செய்வதற்கென 19ம் நூற்றாண்டின் தொழில்நுட்ப யுகம் இந்த உலகிற்கு பரிசளி;த்த மிகச் சிறந்த ஊடகம் ஒளிப்படங்கள். சொற்களைவிட உரத்துப் பேசும் ஆற்றல் படங்களுக்குண்டு என்பதால் எந்தவொரு ஊடகத்தினதும்; - அது பத்திரிகையோ அல்லது பருவ இதழோ – ஆயுளைக் கூட்டவோ குறைக்கக்கூடிய ஆற்றல் விம்பங்களுக்கு உண்டு. மனித வரலாற்றின் ஆரம்பக் கட்டங்களிலிருந்து இன்றைய தகவல் யுகம் வரை ஆற்றல் மிக்க ஊடகமாகவும் அதிக கவனிப்பைப் பெற்ற ஊடகமாகவும் இருப்பது விம்பங்களே. தன்னைச் சூழவுள்ள உலகை மீள உருவாக்கும் மனித  விருப்பமானது குகை ஒவியங்களிலிருந்து ஆரம்பித்து இன்றைய இணைய விம்பங்கள் வரை நீடித்து எங்கும் வியாபித்திருக்கிறது. மனித வாழ்வின் பெறுமதிமிக்க கணங்களை விம்பங்களாக வடித்தெடுக்க எண்ணும்; மனித விருப்பும் அவ்வாறு பதியப்பட்ட நினைவுகளை சேமித்து பாதுகாப்பதற்கான மனிதனுடைய உளத்தூண்டலும் ஒளிப்படங்கள் மனித வாழ்வில் செலுத்தும் தாக்கத்தை உய்த்துணரப் போதுமானது.
மனிதர்கள், நிகழ்வுகள், மற்றும் இடங்களின் அழகையோ அல்லது துயரத்தையோ எவ்வித கலப்படமுமின்றி வெளிக்காட்டும் ஆற்றல் ஒளிப்படங்களுக்கு உண்டு. ஒளிப்படங்கள்  ஏற்கனவே பகிரப்பட்ட தகவல்களின் பயன்பாட்டிற்கு மேலும் வலு சேர்க்கக்ககூடியது. வாசிப்பதையும்; கேட்பதையும் விட உணர்வும் சதையுமாக ஒன்றைப் பார்ப்பதற்கு வலு அதிகமென்பதால் தான் வரி வடிவங்களை விடவும் ஒளிப்படங்கள் ஆற்றல் மிக்க ஊடகமாக உலகை ஆக்கிரமிக்கக்கூடியதாக உள்ளது.  வாசகனைச் சென்றடைவதில் வரி வடிவங்களைவிட வரைபுகளுக்கு ஆற்றல் அதிகம் என்பதால் தான் இணையத்தின் அதிக பக்கங்கள் இன்று நிரப்பப்பட்டிருப்பது விம்பங்களினால் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வர். வெறும் வரி வடிவத்தைவிட இடையிடையே விம்பங்களுடன் கூடிய புத்தகங்கள் வாசகனை அதிகம் ஈர்க்கும் சக்தி வாய்ந்தவை. ஏனைய கட்புல ஊடகங்களை விடவும் ஒளிப்படங்கள் துல்லியத்தன்மை மிக்கவை. ஓவியமொன்றின் நம்பகத்தன்மையானது அதனை வரையும் கலைஞனின் திறனில் தங்கியுள்ளது. ஓவியத்தில் எதைச் சேர்ப்பது எதை விலக்குவது என்பதன் தீர்மானமும் ஓவியனின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளிலேயே தங்கியிருக்கிறது. ஆனால் ஒளிப்படங்கள் அப்படியன்று. ஒளிப்படக்கருவி எதை மையப்படுத்துகின்றதோ அது எவ்வித கலப்படமும் இன்றி உள்ளதை உள்ளபடியே உலகிற்கு தரும்.
நிச்சயமற்ற வாழ்வியலை அடிப்படைப் பண்பாகக் கொண்ட எந்தவொரு சமூகத்தினதும் வரலாற்றை ஆவணப்படுத்துவதற்கான மிகச் சிறந்த ஊடகமாகக் கருதத்தக்கது அத்தகைய சமூகத்தினது வாழ்வியலை விம்ப முறையில் ஆவணப்படுத்தலாகும். கணினித் தொழினுட்பம், தொலைதொடர்புத் தொழினுட்பம், கட்புல செவிப்புல தொழினுட்பம், நுண்பிரதியாக்கத் தொழினுட்பம் என்பன இணைந்த தகவல் தொழினுட்பச் சூழல் ஒன்று விம்ப ஆவணப்படுத்தலுக்கான அற்புதமான வாய்ப்பை  ஏற்படுத்தும் என்பதையே இன்றைய உலகளாவிய வலைத்தளத்தின் பெரும்பகுதி விம்பங்களினால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது தெளிவாக்குகின்றது.  பார்ப்பதற்கும் தேடுவதற்கும் விம்ப ஆவணவாக்கத்திற்கு அதிக பங்குண்டு. இங்கு விம்பங்கள் என்னும் பதம் படங்கள், வரைபுகள், ஒளிப்படங்கள், ஓவியங்கள், புகைப்படங்கள் என்பவற்றுக்கான ஒரு பொதுப்பதமாக விளங்குகின்றது.
1937இல் விமானப் பேரழிவை உலகிற்கு கொண்டுவந்த சாம் சேரா, 1945இல் நாகசாகியில் வெடித்த அணுகுண்டின் வானளாவிய புகைப்படலத்தை படம் பிடித்த சார்ள்ஸ் லெவி, 1972இல் வியட்னாமில் யுத்தத்தின் பயங்கரத்தை வெளிக்கொணர்ந்த நிக் யூட், 1993இல் சூடானில் வறுமையின் கோரத்தைப் படம் பிடித்த கெவின் காட்டர், 2001இல் தகர்ந்து கொண்டிருந்த உலகின் அதியுயர உலக வர்த்த மையத்திலிருந்து வெளியே பாய்ந்த நபரை படம் பிடித்த ரிச்சர்ட் ட்ரு, 2004இல் ஒஸ்விச் நச்சு வாயுக்கூடத்தின் சுவர்களிலுள்ள நகக்கீறல்களை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டிய  சைமன் றொபேட்சன் என காலத்துக்குக் காலம் உலகின் கவனத்தை ஒற்றை விம்பத்தினூடாக திசைதிருப்பும் வல்லமையை ஏற்படுத்தியிருக்கின்றனர் ஒளிப்படவியலாளர்கள். வாழ்வின் இனிய கணங்களை, இயற்கையின் அழகை மட்டுமன்றி பேரழிவின் அவலத்தை, வறுமையின் கோரத்தை, யுத்தத்தின் பயங்கரத்தை, விபத்தின்; அதிர்வினை உள்ளது உள்ளபடியே உணர்வுகளுடன்  வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றது விம்ப உலகம்.  
உலகின் பல சமூகங்கள் போன்றே நீண்ட காலமாக யுத்தத்தின் கோரப்பிடிக்குள் சிக்கி தொலைந்த புத்தகமாகிப் போன ஈழத்தமிழ்ச்சமூகத்தின் இன்றைய வாழ்வியலில் தற்போது இருப்பதை விடவும் இழந்தவை மிக அதிகம். உலகின் மனச்சாட்சியை உலுக்கிய எத்தனையோ விம்பங்களின் வரிசையில் இடம்பிடிக்கும் வல்லமையை  தருமளவிற்கு யுத்தத்தின் கோர முகங்களை சந்தித்திருக்கிறது இந்த மண். இனக்கலவரத்தின் இரத்தக்கறைகள், ஆக்கிரமிப்பின் கோரப்பற்கள், இடப்பெயர்வின் அவலங்கள், யுத்தத்தின் அழிவுகள், பண்பாட்டுத் தொலைப்புகள், சிதைந்த கட்டிடங்கள், சீரழிந்த வாழ்வு, விடிவிலாக் காலைகள், வீரத்தின் விளைநிலங்கள், இருள் கிழித்த அதிர்வுகள், உயிரின் நாற்றுமேடைகள், கடலலையின் தவிப்புகள், கானகத்தின் தீ வரிகள், உறங்காத கண்மணிகள், சமர்க்களத்தின் சரித்திரங்கள், அலை கிழித்த குருவிகள், கார்த்திகையின் பூமுகங்கள், தீயெரித்த புத்தகங்கள், மண் புதைந்த மழலைகள், மௌனித்த உயிர்கள், தியாகத்தின் மூச்சொலிகள்  போன்ற ஈழத்தமிழரின் வாழ்வியற் கோலங்களை  ஒற்றை விம்பத்திற்குள் சிறைப்பிடித்த உன்னத படைப்பாளிகளையும் அவர்களின் அற்புதப் படைப்புகளையும்  இந்த மண் கொண்டிருந்தபோதும் அவற்றை உலக அரங்கில் நிலைநிறுத்தும் வல்லமையைத் தேடியவாறே வழுக்கிச் செல்லும் ஈழ வரலாற்றின் இறுதிப்பக்கங்களில் அவை இல்லை என்றே நினைத்திருக்க வரலாறு தானே நிரப்பிச்சென்ற வல்லுறவின் விம்பம் ஒன்று 2009 இல் இசைப்பிரியா என்ற வடிவில் வையகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது மட்டுமன்றி உலகெங்கணுமுள்ள அசையும் அசையா ஊடகங்களின் அதிக பக்கங்களை நிரப்பியது.  எஞ்சியிருந்தவையும் புனர் வாழ்வு, புனருத்தாரணம் என்ற பெயரில் உருமாறிப் போக உரு மாறிய வேகத்திற்;கு ஏற்ப ஈழத்தமிழ்ச் சமூகத்தின் ஆவணப்படுத்தும் ஆர்வம் ஈடுகொடுக்காமையால் எம்மிடம் எஞ்சியிருப்பவை மிகமிகச் சொற்பமே. இந்தச் சொற்பங்களை ஏதோ ஒரு வேகத்திலும் ஓர்மத்திலும் குருவி சேர்க்கும் குறுணிபோல் சிறுகச் சிறுக சேகரித்து உருவாக்கப்பட்டதே 'யாழ்ப்பாணப் பெட்டகம்' என்ற அரிய விம்பங்களின் கருவூலமாகும்.
மரபுரிமைகளைப் பாதுகாக்கவேண்டும் என்ற உயரிய சிந்தனையிலிருந்து 2005 ஆம் ஆண்டு கருக்கொண்ட 'யாழ்ப்பாணப் பெட்டகம்' என்ற  வரலாற்றுக் கருவூலத்திலிருந்து பொறுக்கியெடுக்கப்பட்ட 1000 விம்பங்களும் அவற்றி;ன் விபரங்களும் ஆளுமைகள், மற்றும் வணக்கஸ்தலங்கள் என்ற இரு தொகுதிகளாக நூலுருவம் பெறுகின்றன. நூலாக்க முயற்சியின் ஆரம்ப கட்டங்களில் ஆளுமைகள், வணக்கஸ்தலங்கள், ஏனைய மரபுரிமைகள் ஆகிய மூன்று தலைப்புகளின் மூன்று தொகுதிகளை வெளியிடும் நூலாசிரியரின் திட்டம் நிதிப்பற்றாக்குறையை முன்னிட்டு இரு தொகுதிகளாக மாற்றப்பட்டிருப்பது இங்கு கவனத்தில் கொள்ளற்பாலது. யுத்தத்தால் சிதைவடைந்து அனைத்தையும் இழந்து நிற்கும்  ஈழத்தமிழ்ச் சமூகத்தின் வாழ்வியலை விம்ப வடிவில் ஆவணப்படுத்தும் அருள்சந்திரனின் முயற்சியானது  காலத்தின் மிக அவசியமான தேவையாகும்.
அறிவின் வழி விரியும் கற்பனைகளின் புலக்காட்சியும் உருக்களின் வழி விரியும் உண்மைகளின் புறக்காட்சியும்; என மனிதனைச் சூழ்ந்துகொள்ளும் சமூகஊடகங்களின் தகவற் சுனாமியில் ஒவ்வொரு தமிழனும் வாசிக்கவேண்டிய வரலாற்றின் பக்கங்களும் படிமங்களும் தப்பிப்பிழைத்திடல் கடினம். அதிலும் போரும் இழப்பும் வாழ்வாகிப்போன தமிழின இருப்பினையும் இல்லாமற்போன அதன் உண்மைகளின் புறக்காட்சிகளையும் கண்களில் சேகரித்து, மேவிப்பாயும் வரலாற்று வெள்ளத்தில் வழிந்தோடிவிடாமல் தூக்கிநிறுத்திப் பாதுகாப்பது அதைவிடக் கடினம்.
பண்பாடுமிக்க மனிதர்களாக உலகில் தலைநிமிர்ந்து தமிழ் மக்கள் வாழவும், தம்மொழி, தம்மதம், தம்நிலம் என்பவற்றைப் பேணிப் பாதுகாக்கவும் ஓவ்வொரு தமிழனும் வரலாற்றைப் பேணும் பெரும் பொறுப்புடையவனாகிறான். இவன் இயல்பாகக் காணவேண்டிய காட்சிகளை, அறிவோடு இயைந்திட்ட வரலாறுகளை செயற்கையாக கண்காட்சிகளாக காட்டவேண்டிய காலகட்டமே இன்று நீண்டுசெல்கிறது. இந்நிலையில்  மனிதனை ஆக்கிரமித்திருக்கும் சமூகஊடகங்களின் அதேபாணியில் எம்தமிழின் ஆளுமைகளையும் வழிபாட்டிடங்களையும் காட்டிடத் துடிக்கின்ற இத்தொகுப்புகளின் துடிப்பும் போக்கும் இயல்பாகவே ஈர்ப்புச்சக்தியைக்  கொண்டிருக்கிறது. இதுவே முன்னைப் பழமைக்கும் பின்னைப் புதுமைக்கும் பாலமாய் அமைந்த பெருமையும் பெறுகிறது.
தொகுதி ஒன்று  யாழ்ப்பாணப் பிரதேசத்தில் இதுவரை வாழ்ந்து மண்ணுக்குப் பெருமை சேர்த்து மறைந்து போன ஆளுமைகளை ஆவணப்படுத்துகின்றது. பிரதேசரீதியாக இனமொன்றின்  மனித ஆளுமைகளை ஆவணப்படுத்தலென்பது தனித்துவமான சவால்கள்மிக்க வரலாற்றுப் பணியாகிறது. வாழ்க்கை வரலாற்றுத் தகவல்களின் துல்லியத்தன்மை தகவல் சேகரிப்பவரின் கைகளிலேயே அதிகம் தங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக அவரது தகவற் திறன்களிலும் மொழியாற்றலிலும் குறித்த சமுகத்தின் மீதான அக்கறையிலும் தங்கியுள்ளது. ஏற்கனவே நூலகங்களில் இருக்கின்ற முதலாம் நிலைத் தகவல் வளங்களான பத்திரிகைகள், சஞ்சிகைகள், மலர்கள், கல்வெட்டுக்கள் போன்றவை ஆளுமைகள் சார்ந்த விம்பங்களை ஆவணப்படுத்துவதற்கான மூலாதாரங்களாக இருப்பினும் விம்பங்களின் துல்லியத்தன்மை கேள்விக்குள்ளாகும்போது மேலதிக தேடலை நோக்கி ஆய்வாளனை நகர நிர்ப்பந்திக்கும் என்ற யதார்த்தம் கணிசமானளவு விம்பங்களை முதல்நிலைத் தரவுகளாக இந்நூலில் உள்ளடக்க வேண்டியதன் அவசியத்தை ஆய்வாளனுக்கு ஏற்படுத்தியிருப்பது புலனாகின்றது. கணிசமான விம்பங்கள் குறித்த ஆளுமைகளின் உறவினர்களிடம் நேரே சென்று அவர்களிடமிருக்கும் தரவுகளிலிருந்து பெறப்பட்டவையாகும்.
தொகுதி இரண்டு யாழ்ப்பாணப் பிரதேசத்திலுள்ள முந்நூறுக்கும் மேற்பட்ட வணக்கஸ்தலங்களை ஆவணப்படுத்துகின்றது. வணக்கஸ்தலங்களில் 200 சைவாலயங்கள்;, 75 கத்தோலிக்க ஆலயங்களினதும், 15 பள்ளிவாசல்களும், 3 விகாரைகளினதும் சுருக்க வரலாறும் அவற்றின் ஆரம்ப மற்றும் தற்போதைய நிலையிலுள்ள வர்ணப் புகைப்படங்களும் பதிவிடப்பட்டுள்ளன. இத்தொகுதியிலும் கணிசமான விம்பங்கள் நூலாசிரியரால் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரே சென்று எடுக்கப்பட்டவையாகும்.
பொதுவாகவே இத்தகைய தொகுப்பாக்கங்கள் இரண்டாம்நிலைத் தரவுகளிலேயே பெரிதும் தங்கியிருப்பவை என்பதனால் உசாத்துணை நூல்களாகக் கருதப்படுபவை. இதிலிருந்து சற்று மாறுபட்டு இத் தொகுப்பாக்கங்கள் முதலாம் நிலைத் தரவுகளை கணிசமானளவில் கொண்டிருப்பதனால் உசாத்துணைப் பண்பு கொண்டதாக அமையக்கூடிய தொகுப்பாக்கங்களிலிருந்து சற்று வேறுபட்டு முதல்நிலைத் தகவல் வளங்கள் என்ற பண்பையும் இத்தொகுப்புகள் கொண்டிருக்கின்றன. இலகுவான தேடுகையை கருத்தில் கொண்டு இத்தகைய ஆக்கங்கள் அகர வரிசையில் உள்ள ஒழுங்கமைப்பையே தமக்குள் கொண்டிருக்கும் இதிலிருந்து சற்று மாறுபட்டு தேர்ந்த வாசகனது உயர்திறன்மிக்க தேடுகைக்கு உதவும் பொருட்டு ஒன்றுடனொன்று தொடர்புடைய ஒரே துறை சார்ந்த ஆளுமைகளை ஒன்றாக குழுமப்படுத்தி  முறை சார்ந்த ஒழுங்கமைப்பை பேணும் புதிய முயற்சி ஒன்றை இங்கு அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இதற்கமைய ஆளுமைகள் சார்ந்த பதிவுகள் அகர வரிசையிலமைந்த பரந்த பொருட்தலைப்புகளின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றது.  
சமுகவியல் நோக்கில் சமூகமொன்றின் வளர்ச்சிப் போக்கினைத் தீர்மானிக்கவல்ல காரணிகளாக சமுகவியலாளர்கள் கூறுகின்ற நிலைபேறாக்கம், புதுமையாக்கம், ஆவணவாக்கம் போன்ற சிந்தனைகள் செயலுருப்பெறுகின்ற இன்றைய சூழலில் இவ்வாக்கம் சமுக அசைவியக்கத்திற்கான புதியபாதையொன்றினை இனங்காட்டிநிற்கிறது. நூலகவியல் நோக்கில் தேசியநூலகமொன்றினை ஒத்த நிறுவனங்களால் தேசியரீதியாக முன்னெடுக்கப்படவேண்டிய ஆவணப்படுத்தலுக்கான செயலூக்கத்தைத் தரவல்ல சிறுநகர்வாக இதனைக் கணிக்கவேண்டியுள்ளது. வரலாற்று நோக்கில் பாவலர் சரித்திர தீபகம், ஈழத்துத் தமிழ்ப்புலவர் சரித்திரம் போன்ற வாழ்க்கை வரலாற்று நூல்களுடன் ஒரே இறாக்கையில் அமைவிடம் பெறுவதற்கான தகுதிப்பாட்டை இந்நூல் கொண்டிருக்கின்றது. உளவியல் நோக்கில் சமுதாயத்தில் ஆக்கத்துடன் தொடர்புடைய அனைத்து சமூகத்தினரோடும் நெருக்கமான தொடர்பினைப் பேணிநிற்பதுடன் ஆக்கத்தில் இடம்பெறும் ஆளுமைகளின் சந்ததியினர்க்கு மனத்திருப்தியையும் நிறைவையும் தரும் உளத்தூண்டலுக்குரிய ஆவணமாகவும் செல்வாக்குச் செலுத்துகிறது.
அருள்சந்திரனின் அர்ப்பணிப்பு,  சமூகநேசம் என்பவற்றைவிட ஆவணப்படுத்தலுக்கான தயார்ப்படுத்தலில் அவரது செம்மைத்தன்மை ஆக்கத்தின் மற்றோர் தரமான குறியீடாகிறது. மேலும் இடையறாத அவரது தேடலின் விளைவாய் தொகுப்பில் இடம் பெறும் அறுநூறுக்கும் மேற்பட்ட ஆளுமைப்பதிவுகளும் முந்நூறுக்கும் மேற்பட்ட வணக்கஸ்தலங்களும் எதிர்காலத்தில் எமது சமூகத்திற்கான இருப்பிற்கும் வளர்ச்சிக்கும் இன்றியமையாதவை. இப்பாரிய பணிச்சுமையினைத் தாங்கி அதன் முடிவுறுத்தி தொகுத்து தயக்கங்களின் தாக்கத்திலிருந்து மேலெழுந்து ஆக்கமொன்றை வெளிக்கொணர்தலென்பது வெறும் பாராட்டுதல்களுக்காகவன்றி அதன் பின்புலத்திலிருக்கும் வலிகளையும் இடர்ப்பாடுகளையும் தாங்கி முளைத்தெழும் வல்லமை படைத்த விருட்சமொன்றிற்கான விதையின் புறப்பாடாகிறது.
ஈழத்து வரலாற்றின் இன்றைய பக்கங்களை நிரப்பிச்செல்லும் அருட்சந்திரனின் பெறுமதிமிக்க இந்த நூலுக்கு அணிந்துரை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
விருட்சமாய் நிமிர வாழ்த்துக்களுடன்

அருளானந்தம் ஸ்ரீகாந்தலட்சுமி
பிரதம நூலகர்
யாழ் பல்கலைக்கழகம்
01-12-2016

Wednesday, May 10, 2017

Children In Search of Light

Children
  In Search of Light



Children are

-          the buts that appear now with the hope of blooming and spreading their fragrance in future
-          the seedlings that grow and spread out into branches with an intention to protect the welfare of the society
-          the pillars that have to be carefully erected to support the future society

Children are so sweet. Their characters are different like different fragrance each flower has, yet are loved by everyone. We are attracted by their love, their activeness, their playfulness, their sense of companionship and by their curiosity of exploring. Children’s world is delightful in nature. Joy, merriment and laughter are the main qualities they possess. They passionately love others and expect the same in return.

The creators of our future innovations and the leaders of the future society are to emerge from among these children. In keeping with the maxim that “man is not born but made” several methods are adopted in the western society to bring up their children without ruining their feelings.

But in this soil…..

Children are the direct victims of systematic forms of repression unleashed by the Sinhala chauvinistic government. Ethnic oppressive measures have not only taken the lives of our children and maimed their limbs but have severely affected their psychological well being.

Look at this Child…

Children’s world is usually full of joy. They enjoy lighting crackers at festivals. But the experience of numerous bomb blasts and shelling has severely deprived this boy from enjoying the sound of crackers even at Christmas. or Pongal

Is there any mother who doesn’t feed her child without showing the moon? Or is there any child who doesn’t derive pleasure in seeing this moon? But,   because he was one among the crowd who were scattered squealing with horror, when the army dropped Para lights during the massive displacement, this innocent boy is still unable to get out of that experience of horror which the moonlight reminds him of and he is afraid to look up at the moon thereafter.

Whenever this boy hears the sound of this vehicle that reminds him of the helicopter, he speeds away and takes refuge in his mother’s lap. There are so many a sign of distress among the children
(Interview with Doctor)

Displacement…

the super power missile that severely affects the human minds especially on women and children. When flocks of birds are brutally uprooted and forced to flee from their nests, the most affected are the young ones. Displacement has the profound physical, emotional and developmental impact on children that increases their vulnerability. Do they know the economic blockade and cutting off of the food ration? Or does this innocent know his father who lost his hands and the mother tired of begging for their meals. Their biggest need of course food for their hunger and a lap for their comfort. This is the stage where they eagerly seek for love and affection at every moment. This mother is busy otherwise unable to enjoy the fun and frolics of her child. This baby has lost its mother and needs to be soothed.

This is the next stage where the child’s interest to know about the mystery of new world starts. This also the stage where a child doesn’t want to give up the affection of its mother and at the same time wants to enjoy the new environment. Sigmund Freud, the famous psychologist called this the ‘stage of Latency’. This is also the stage where children’s venture to expose their ability and expect appreciation for their efforts. If we ignore this need they develop a feeling of inferiority complex. Signs of mental distress are clearly exposed in this stage.

But what happens here…?

These are the ones who bear the burden of ethnic oppression directly on their shoulders. Ethnic oppression has crippled these growing minds and prevented them from enjoying their childhood.  Even though they are brought up in a hut they are trained to adjust to their environment and enjoy their environment. The war has forced them to displace and the mode of living is changed to bitter heights thereby turning them into misfits.

The Sri Lankan army, being unable to show their might directly to the LTTE, has chosen to bombard and massacre the innocent. The Sri Lankan government takes pride in showing the world how they protect the rights of the children. See how the government forces are cleverly performing the task planned by the government.

The result is this….

A group of children longing to go to school takes up the responsibility of bearing the family burden instead of their fathers who have been  arrested by the army and the mothers who perished by the shelling.

Another group is staggering in the street without having any inclination to schooling with no one to look after them or to guide them or to cherish them.

Yet another group though afford school exist with empty look and sigh of without the joy of children world. .

However, ethnic oppression has failed in on aspects here. Though in the grip of poverty and the means of life is meager, these are the examples to show that the curiosity of a child cannot be curbed in anyway and to prove that the learning at this stage depends more on seeing than hearing.

These are the games that the Indian army taught the children who had enjoyed playing in any kind of environment whether in the land or sea, fitting well to them. The irony here in this army vs. tiger game is that nobody is willing to play at the army side.

What lessons do these high tech toys produced by the very same countries who advocate numerous activities for the development of children and their rights, with the intention of profit earnings? They may be used to teach or show their nation’s greatness and bravery. But for us, they are very helpful to teach the children tricks to protect themselves from the enemy. Resources for making these toys may differ in palaces and huts. But creativeness of minds is the same everywhere, the hands which were used to make traps to kill squirrels before the war, are now making hand guns. Children who once insisted on buying dolls do now concentrate on guns. The magic of making a missile using an empty orex pen and a rib of a palm leaf can be seen only in this soil.

The imprints made in the minds of children are eternal, like writing on stones. Can anybody advise these children to forgive the culprit who had killed their mothers? Can we ask them to worship the one who had maimed their fathers or raped their sisters? Are you going to tell them to calm down and forget these who had forcefully occupied their land and had massacred their loved ones before their own eyes?

Carrying the scars of ethnic oppression, the architects of the future nation are immune to the present situation and became smart though suppressed again and again.

These pillars that will bear the future nation are waiting for the opportunity to avenge the enemies who have deprived them of the joys of life.

Starting from the leader of the nation to the ordinary citizen there is more a concerted effort of these nation’s assets who, shaken by the atrocities committed by the Sri Lankan government are staggering on street with no one to support them.

See the wonder of this man who is considered as the demon of death to his enemy, showing humanness and showering love in abundance to these children.

 See the wonder of these hands that are ready to destroy the enemy in order to redeem the mother land, supporting the world of children. There are numerous plans here to look after these children with proper care, to give them love and affection, to educate them and to make their life happy.

To the eyes of the traitors, it may seem like a training camp for child soldiers, but for us, these are the homes of love, of charitable activities performed by the men and women to this soil to the distresses and orphans.

We will never permit these children to be ruined without care and protection. There are being taught humanity and patriotism. Present generation is going to give them not guns but the independent nation

No one needs to teach the fact that the aim of this militancy is to defend ourselves from those who try to destroy our racial and nation’s identity. Each and every one who takes arms today
-          had unfortunately lost one or more in their family, their parents & sisters.
-          had gone with an intention of saving their loved ones from the ordeal they had already experienced
-           had felt that they should achieve the independent land to make their younger generation to live with happiness.
-          had taken oath that the recapture of the land is their duty not their sacrifice.

Any body can easily find the answers for the big cry that ‘ the children are forcibly recruited and induced to become combatants’ in the speech delivered by the UN special representative for children at the  Hotel Oberoi, Colombo, when he had visited  Sri Lanka three years ago.

“ Those who have experienced violence today will be the conveyor-belt of violence to the next generation”                         Olara Ottunnu

It is difficult to understand why the International community is so concerned about children joining in armed struggle, since there are many children’s violations which have to be addressed to so seriously in the countries whether they are under armed conflict or not.

It is a well known fact that Sri Lanka has a worldwide record for child prostitution and sexual abuse of children. There is a place in Hikkaduva to train the children to become professional sex workers and at the end of the training children are issued certificate for their sexual ability. European & Asian tourists are very much attracted by these young professionals. India is well known for child labor and Japan is becoming popular in child prostitution.

It is the greatness of our Motherland to preserve herself without being caught up in the snare of mass media, which has full of news about child abuse, drug abuse, liquor, stealing, child labor and child prostitution worldwide.

It is the greatness of our people to give joy and pleasure to the children through some specific cultural outlets.

All those who care for the welfare of the children are relieved by the fact this liberation struggle has prevented the perversions that is gaining momentous all over the world entering this territory.

If it is true that man is influenced by the environment, the children are the most affected ones. There should be effective change in the environment if we feed that the behavior of a child should change. The notion that the environment in a war situation will change if only there is no ethnic oppression- is very is very difficult for the oppressors to digest. There is no doubt that the great gift which Sri Lankan oppressive government is going to donate to this soil is the legion of undaunted minds, nurtured by the atrocities of the war, and confirmed in the pursuit if the goal of freedom.


விழுதாகி வேருமாகி

விழுதாகி வேருமாகி
பார்வையும் பதிவும்


மனித வாழ்வில் தம்மால் செயலுருப்படுத்த முடியாத அல்லது செயலுருப்படுத்த நினைக்காத சிந்தனைகள் வழி பிறக்கும் சொற்கள் சொற்றொடர்களுக்குள்ளேயே சொர்க்கத்தைக் காண்பதில் உவகையும் உளத்திருப்தியும் அடையும் மனிதர்கள் நிரம்பிய சமூகமொன்றில், கிட்டத்தட்ட இரு தசாப்தங்கள் தாம் வரித்துக் கொண்ட இலட்சியம் ஒன்றிற்காக உயிர் கொடுத்து, உடல் உறுப்புகளைக் கொடுத்து, உள்ளத்து விருப்பங்களைக் கொடுத்து, நிறைவேற்றிய மாபெரும் பணியின் ஒரு சிறு பகுதிக்கு சொல் வடிவம் கொடுக்கும் அரிய முயற்சியின் வெளிப்பாடே விழுதாகி வேருமாகி என்ற இந்த போரியல் வரலாற்று ஆவணம்.

ஷஎமது போராட்டத்தின் வரலாற்றை அதன் ஆழத்திலும் அகலத்திலும் அதன் யதார்த்தக்; கோலத்திலும் தரிசித்துக் கொள்வது கடினம். போர் பற்றிய அறிவு ஞானம் இல்லாத பழமையில் புதைந்து போன வரலாற்றாசிரியர்களால் எமது பெண் போராளிகளின் வரலாற்றை துல்லியமாக கிரகித்தறிவது சிரமம்ஷ எதிரி மட்டும் அறிந்ததை எல்லோரும் அறியட்டும் என்ற தலைப்பில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் மனப்பதிவுகளை சுமந்து நிற்கும் முன்னுரையில் காணப்படும் மேற்கண்ட வாசகம் இந்நூல் தொடர்பான பார்வை ஒன்றை உருவாக்கும் முயற்சியில் சிறு தயக்க நிலையை ஏற்படுத்தியிருப்பினும் கூட எந்த ஒரு பொருளினதும் மெய்ப்பொருளைக் காண்பதற்கு பார்த்து, கேட்டு, படித்து, உணர்ந்து, அனுபவித்து பெற்ற புலன் வழி அறிவை, புலனுக்குப் புறம்பாக உள்ள பகுத்தறிவின் துணை கொண்டு சீர்தூக்கிப் பார்க்கும் உரிமையும் அதற்கான ஆற்றலும் இம் மண்ணில் வாழும், இம் மண்ணை நேசிக்கும் ஒரு பிரகிருதிக்கு இருக்கும், இருக்க முடியும் என்ற உள்ளுணர்வு தந்த தூண்டல் இங்கு உங்கள் முன் நூல் பற்றிய பார்வையாக விரிகிறது.

எந்தவொரு நூலையும் மதிப்பிடும் பணியில் கவனத்தில் கொள்ளப்படும் அம்சங்கள் மூன்று. நூலின் உருவமைப்பு, உள்;ளடக்கம், அதன் உயிர்
;
பாதை திறப்பினால் வேறு பயன் கிடைத்ததோ இல்லையோ  மண்ணின் வளத்தையும் மனதின் உரத்தையும் சிறப்பாகப் படம் பிடிக்கும் அட்டைப்படத்துடன், பார்ப்பவர் கண்களுக்கு படிக்க தூண்டும் ஆர்வத்தை ஏற்படுத்தும் கணினி அச்சமைப்புடன் எமது கரங்களில் ஒரு நூல் தவழ்கிறது. இது தான் உருவமைப்பு சொல்லும் சேதி.

உள்ளடக்கம் சொல்லும் சேதி சற்று வித்தியாசமானது.
ஷஎதிரி மட்டுமே அறிந்ததை எல்லோரும் அறியட்டும் என்ற தேசிய தலைவரின் மனப்பதிவைச் சுமந்து,
ஷகால விரிப்பில் கட்டவிழுந்து கொண்டிருக்கும் ஓர் படையணியின் இராணுவ சாதனைகள் உயிர்த்துடிப்புடன் பசுமையான நினைவுகளுடன் இங்கு பதிவாக்கப்பட்டுள்ளதுஷ என்ற அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச் செல்வனின் பாராட்டுக்களை உள்வாங்கி,
ஷஇது இரத்தத்துளிகளால் எழுதப்பட்ட உண்மை மனிதர்களது கதை. எங்களுக்குள் இருந்தது ஒரு குடும்ப உறவு. இந்த வாழ்விலும் இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும்--- போர் அரங்குகளில் அணிகளைக் களமிறக்கும் ஒவ்வொரு தடவையும் என் மனம் இறுகும்ஷ என வரலாற்றை ஆக்கியோரின் வரலாற்றை இரைமீட்கும் தளபதி விதூஷாவின் உள்ளத்து உணர்வுகளைத் தாங்கி பெண்கள் அணியின் முதல் வித்தான மாலதிக்கு வீரவணக்கம் செய்து,
ஷபோர் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. அது எங்களுக்குப் புரிகிறது. பொருளாதாரப் போர் கருத்தியல் போர் எல்லாமே பாதை திறப்பின் பின்னர் வலுத்து வருகிறது.. தனியார் நிறுவனங்கள் கொட்டுகின்ற சல்லிக் கற்களுக்குள்ளும் படை படையாக ஊற்றுகின்ற தாரின் கீழும் இவர்களின் வியர்வையும் இரத்தடும் தசைத்துணுக்குகளும் புதைந்து போய்க்கொண்டிருக்கின்றன. மாயப்போர்களாலும் காலவெள்ளத்தாலும் அழியாதவர்களாக தலைமுறை கடந்தும் வாழ்பவர்களாக இவர்களை நிலைநிறுத்தவே இந்நூலை எழுதினோம். என  கதை பிறந்த கதையை தமக்கேயுரிய நடையில் பணிவுடன் சமர்ப்பிக்கின்ற புரட்சிகா,காந்தா,மலைமகள் ஆகிய மூன்று போராளிகளதும் உணர்வுகளைத் தாங்கி,
567 பக்கங்களில் 11 அத்தியாயங்களில் படையணி எதிர் கொண்ட வரலாற்றுச் சமர்களின் இராணுவ புவியியல் வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கி சமர் புரிந்த அமைவிடங்களின் நிலவுருவப்படங்களுடனும், படையணியின் வரலாற்றை விளக்கும் மூன்று பக்க கவிதையுடனும் வித்தாகிப்போன 1117 மாவீரர்களின் பட்டியலுடனும் உள்ளடக்கம் கச்சிதமாக ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது.
உள்ளடக்கம் சொல்லும் இன்னொரு செய்தி நூலின் ஒழுங்கமைப்பு. பாதை திறப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற நிகழ்கால வினாவொன்றுடன் தொடங்கி மீண்டும் நிகழ்காலத்தைத் தொட்டு நிற்கின்ற உள்ளடக்க அமைப்பு. யாழ் மண்ணை விட்டு முழுதாக வெளியேறிய மக்களைப் பிடித்திருந்த அதே இறுக்கம் எழுத்துநடையிலும்---

இராணுவம் வரப்போவதை அறிந்த தளபதி விதூஷாவின் பரபரப்பு படையினரால் இழப்பு படையினருக்கு இழப்பு ஷகண்ணாடியை சிறு கல்லொன்றால் உடைத்து தன் வீரப்பிள்ளையின் படத்தை உரித்து எடுத்து சேலைக்குள் மறைத்தவாறு தேம்பி அழுது கொண்டே கிளாலிக்கடற்கரையை விட்டு திரும்பும் அந்த மூதாட்டி யினைப்போல் மக்களின் துயரங்கள்ஷ அனைத்தும் அதற்கேயுரிய இறுக்கமான உணர்வுடன்-- இந்த இறுக்கம் முல்லைத்தள மீட்பில் தளர்ந்து, மீPண்டும் ஆனையிறவு தோல்வியில் துவண்டு, வெற்றி நிச்சயம் நடவடிக்கையை தீரமுடன் தாங்கி, மன்னார் போர்முழக்கத்தை பம்பலாய் வரவேற்று, ஆனையிறவில் அட்டகாசமாய் நுழைந்து, சாவகச்சேரியை விட்டு துயருடன் மீண்டும் பின்வாங்கி, இறுதியில் போர்நிறுத்தத்தின் பின்னரும் கிட்டத்தட்ட காவியா மதி போன்ற திறமை மிக்க தளபதிகள் உட்பட 100 போராளிகளை விழுங்கிய தீச்சுவாலை நடவடிக்கையின் வலியைத் தாங்கி--  இவை உணர்வின் வரிகள் அதனால் தான் எழுத்துக்கள் கூட இவர்களைப்போல் இறுக்கங்களையும் வலிகளையும் குதூகலங்களையும் அதற்குரிய ஒழுங்கில் அனுபவிக்கிறதோ--?

உயிரின்றி உடலால் பயனில்லை. எனவே இவை உயிர் சொல்லும் சேதிகள்;.
எந்தவொரு நூலும் அது கொண்டுள்ள கருத்தின் அடிப்படையில் புத்துயிர் தருவது தகவலைத் தருவது உயிர்ப்பூட்டுவது என மூவகைப்படுகிறது. உண்மையோ பொய்யோ நல்லதோ தீயதோ படிப்பவருக்கு ஒரு புதிய உணர்வை, புதுவித எழுச்சியை, புதுவித கிளர்ச்சியை, பொழுதுபோக்கு உணர்வை தருபவை புத்துயிர் தரும் நூல்கள் எனப்படும் அப்பட்டமான உண்மையிலிருந்து வடித்தெடுக்கப்பட்ட ரோல்ஸ்ரோயின் புத்துயிர்ப்பு, மக்சிம்கோர்க்கியின் தாய், லியோன் யூரிஸின் எக்ஸ்சோடஸ் இவ்வகையைச் சார்ந்தது. வரலாறு, அரசியல், புவியியல் போன்று எடுத்துக் கொண்ட பொருட்துறை தொடர்பாக பொதுவான தகவலை உள்ளடக்குபவை தகவலைத் தரும் நூல்கள் எனப்படும். இவை இரண்டையும் தவிர பொருளாதார தத்துவத்தை புகுத்திய அடம்ஸ்மித்தின் தேசங்களின் செல்வம் போன்று, பொதுவுடமைத் தத்துவத்தை தந்த கார்ல் மாக்ஸின் மூலதனம் போன்று உயிரின உருவாக்கத்தை விளக்கிய டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு போன்று மனிதனின் அறிவைத் தூண்டுகின்ற சிந்திக்க செய்கின்ற மனிதனையும் சமூகத்தையும் முன்னேற்றுகின்ற உயிர்ப்பூட்டும் நூல்கள் எம்மிடம் மிகவும் குறைவே. அதிலும் இந்த மூன்று அம்சங்களும் ஒருங்கு சேர அமைந்திருக்கும் அற்புத வாய்ப்பு ஒரு சில நூல்களுக்கே அமைந்து விடுகின்றது

விழுதாகி வேருமாகி என்ற இந்த வரலாற்று நூல் தான் சொல்ல நினைத்ததை ஒளிவு மறைவின்றி சொல்லும் பாங்கில் போரியல் வரலாற்றுத் தகவலை தரும் ஒரு நூலாகிறது. எப்படி---?
ஆனையிறவில் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று தடவைகள் சமர்க்களத்தின் தோல்விகளை ஒப்புக் கொள்வதில்----
ஷமழை சொரியும் இருளோடும் இருண்ட எம் மனங்களோடும்-- பூநகரி நோக்கி வந்தது எமது படகுகள் மட்டுமே-- எம் மனங்களெல்லாம் அரியாலையில், சாவகச்சேரியில், வண்ணாத்திப் பாலத்தில் இன்னும் இன்னும் எம் உறவுகளின்; உயிர் பிரிந்த களங்களில்--- ஒவ்வொரு சோடி விழிகளாலும் படகுகள் நனைந்தன---ஷ என பலத்த உயிரிழப்புகளுடனான பின்னடைவைச் சந்தித்ததை நினைவு கூர்வதில்---
ஷஎமது படையணி பங்கு கொண்ட அனேக சமர்களில் தட்;சாயினியின் கால்கள் நடந்திருக்கின்றன. களங்களில் அவர் காட்டும் வெஞ்சினம், உடனிருக்கும் போராளிகளில் அவர் வைத்திருக்கும் அன்பு, பராமரிப்பு, வழிகாட்டல், தவறு சிறிதென்றாலும் தயவு தாட்சண்யம் இல்லாமல் அவர் வழங்கும் ஒறுப்பு, அதன் பின்னரான விளக்கம்--- ஈடு செய்யமுடியாத இழப்பு இது. பொறுப்புகளை ஈடு செய்யலாம் மனிதர்களை ஈடு செய்வது இயலாத காரியம்-- என சக போராளி ஒருவரின் திறமையை வெளிப்படையாக அளவிடுவதில்---
ஷஎங்களுடைய எல்லாப் பொறுப்பாளர்களுமே எமது பொறுப்பிலிருந்து ஒருபடி கீழிறக்கப்பட்டோம்ஷ - காற்று இறக்கப்பட்டோமஷ; என புளியங்குளம் வெற்றிச் சமரில் கூட உயிரிழப்புக்களைக் குறைப்பதில் கூடுதல் கவனம் எடுக்காமைக்காக காத்து இறக்கப்பட்டதை பெருந்தன்மையுடன் ஒப்புக் கொள்ளுவதில்------
குறுஞ்சி என்ற மருத்துவப் போராளியின் புதிய கள அனுபவத்துடன் தளபதி விதூஷா மல்லுக்கட்டியதை வெளிப்படுத்துவதில்---
வெடிபொருட்களை இழந்ததை, கஞ்சியே களவாழ்க்கையாக மாறிய பொருளாதாரப் பி;ன்னடைவைச் சொல்வதில்---
என்று பல இடங்களில் இந்த ஒளிவுமறைவற்ற தன்மை பேணப்படுகிறது.
சொல்லப்படும் தகவல்கள் சமர்க்களங்களை வழிநடத்தியவர்களின் நேர்காணல்கள் மூலம் மேலும் வலுவூட்டப்பட்டிருப்பது நம்பகத்தன்மையை கூட்டுகிறது.
வெறுமனே பொதுத் தகவலைத் தரும் பணியுடன் நின்று விடாமல் களமுனைகள் இராணுவ தள அமைப்புகள் வீதிகள் வெட்டைகள் காடுகளின் தன்மைகள் அமைவிடங்கள் என இம் மண்ணில் நடந்தேறிய வரலாற்றுச் சமர்களின் வழித்தடங்கள் பற்றி அறிய விழைபவருக்கு மிகச் சிறந்த ஒரு குறிப்புதவு நூலாக இது கருதப்படக்கூடியது. அதுமட்டுமன்றி வரலாற்றுச் சமர்களில் பங்கெடுத்தவர்களின் விபரங்களைத் தருவதில் வாழ்க்கை வரலாற்று நூலின் பண்புகளை ஓரளவிற்கு இது கொண்டுள்ளது.
ஷ நெருக்கடியான கட்டம் வந்த பின்னர் மைதிலியைக் களம் இறக்கித் தான் அந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வந்தோம் மைதிலியால் தான் அது முடியும் என சமருக்கு பொறுப்பான தளபதி தீபனால் ஒத்துக்கொள்ளப்படும் அளவிற்கு தனித்துவம் வாய்ந்த, யாழ் பின்னடைவின் போது தாடை உடைந்து குற்றுயிரும் குலையுயிருமாய் தப்பி பரந்தனில் கண்மூடிய அந்த அற்புதமான வேவுப்புலி போராளி லெப்.கேணல் மைதிலி---
எந்த இருளிலும் தடுமாற்றம் இல்லாத நிதானம் மிக்க காவியா--- நிர்வாகத் திறன் மிக்க மதி, அமைதியான, உறுதியான, அப்பழுக்கில்லாத அந்த வீரமகள் நிஸ்மியா-- கிளாலி நடவடிக்கையில் துணிவுடன் போரிட்ட கப்டன் துளசிராம், லெப். அறிவரசி;, வெற்றி நிச்சயம் படைநடவடிக்கையில் ,தனது முதல் கள அனுபவத்திலேயே அகழியில் தேங்கிவிட்ட இரத்தம் தன பாதங்களை நனைத்ததையும் பொருட்படுத்தாமல் மன உறுதியை வெளிப்படுத்திய இந்நூலின் ஆசிரியர்களால் பெயர்குறிப்பிட மறந்துவிட்ட? அந்த புதிய போராளி எத்தனையோ சண்டைகளுக்கு ஈடு கொடுத்து தமிழ் மண்ணை முத்தமிட்ட அந்த வீரமகள் லெப். திருக்கோதை--- இப்படி நூலுக்குள் உச்சரிக்கப்படும் ஒவ்வொரு பெயருமே தளபதி விதூஷாவின் வார்த்தைகளில் சொல்வதானால் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒவ்வொரு கதாநாயகி. சிலசமயம் ஒரு அத்தியாயத்துக்குள்ளேயே பல கதாநாயகியர்.

சொல்லப்பட்டவற்றை இலகுவான மொழிநடையில் எவரையும் ஈர்க்கும் வகையில் எழுதப்பட்டிருப்பதில் இது ஒரு புத்துயிர் தரும் நூலாகிறது. எப்படி---?

ஷசில்வண்டுகளின் பின்னணி இசைக்கேற்ப நடைபெற்றுக்கொண்டிருந்த மின்மினிகளின் குழு நடனம் காவற் கடமையில் நின்றவர்களின் தனிமையைப் போக்கியதுஷ என இயற்கை மீதான நேசிப்பில்--
ஷஅட அநியாயமே! இதுவா காஞ்சோண்டி--? முன்னே போய்க்கொண்டிருக்கும் வழிகாட்டிகள் அவற்றிலே முட்டாமல் மோதாமல் இலாவகமாக வளைந்து நெளிந்து போக நாங்களோ அதைப் புரிந்து கொள்ளாமல் ஒரு காஞ்சோண்டியையும் மிச்சம் விடாமல் உரசி உரசி கைகளால் தொட்டு விலக்கி இயற்கை மீது எமக்கிருக்கும் பேரன்பை வெளிப்படுத்தியவாறு சென்றால் கடிக்காமல் வேறென்ன செய்யும்? ஷ என்றும் ஷஇது என்னடா கரைச்சலாகக் கிடக்கு.ஏற்கனவே இசைக்குழ மாதிரி நகர்ந்;து கொண்டிருக்கிறம். அதுக்குள்ள இதுகள் (மின்மினிகள்) லைற் போட்டுக் காட்டிக் கொண்டிருக்குதுகள்-- என இயற்கையின் இடைஞ்சலையும் சுவைபடக் கூறும் தன்மையில்
ஷநல்ல நிலையிலிருந்த 113 இராணுவ சடலங்களை செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்து விட்டோம்.. ஆனால் மன்னகுளத்தின் நீண்ட அடர்ந்த காட்டு மரங்களிடையே இழக்கப்பட்ட சிறப்பு அணியினரின் மானம் மரியாதை கௌரவத்தை எடுத்து ஒப்படைக்க எந்தச் சங்கமும் முன்வரவில்லைஷஎன இராணுவத்தின் படு தோல்வியை எள்ளல் தொனியில் வெளியிடுவதில்--
ஷமீனைக் கொட்டி நீங்கள் கடற்கரையைக் குப்பையாக்குறீங்கள் எண்டு தான் நாங்கள் வாங்கிச் சமைச்சுச் சாப்பிடுறம் என்று யாருமே சாப்பிடாத நெத்தலியைவிடவும் பெரிய, சூடையைவிடவும் சிறிய அந்த மீனை சாப்பிட வேண்டிய இல்லாமையை வெளியிடாமல் சப்பைக் கட்டு கட்டுவதில்---
இப்படி நூல் முழுவதும் ஆங்காங்கே புத்துயிர் கொடுக்கும் இத்தகைய எழுத்துக்கள் ஷஇந்நுலை உருவாக்கிய கரங்கள் துப்பாக்கிக்கு மட்டுமல்ல எழுதுகோலுக்கும் பழக்கப்பட்டு நாட்கள் பலஷ என்பதை அறுதியிட்டுக கூறுகின்றன. அன்றைய களமுனை ஏடான சுதந்திரக்காற்று தாங்கிவந்த தரமான ஆக்கங்கள் அனேகமானவற்றுக்கு அவர்களே சொந்தக்காரர்களாக இருந்தனர் என்ற தளபதி கருணாவின் கூற்று இங்கு கருத்தில் கொள்ளப்படக்கூடியது. எழுதப்பட்ட மொழிநடையில் கதை சொல்லும் பாங்கில் இது இலக்கிய அந்தஸ்துக்குள் நுழையக்கூடியதோ என்ற பிரமை இருப்பினும் கற்பனையின் சாரம் கடுகளவும் இல்லாத இந்நூல் கதை சொல்லும் பாங்கில் மட்டுமே புத்துயிர் தரும் நூலின் வகைக்குள் அடங்குகிறது.

சொல்ல நினைக்காத எத்தனையோ செய்திகளை படிப்பவரின் சிந்தனையில் புதிதாக உருவாக்கும் பாங்கில் இது ஒரு உயிர்ப்பூட்டும் நூலாகிறது. எப்படி--?
ஷபெறுமதி மிக்க வீராங்கனைகளின் உயிர்கள,; ஐநூற்று அறுபத்தாறு தூக்கமற்ற இரவுகள் ,மழைக்காலங்களில் நனைந்தவாறும் நீர் நிறைந்த பதங்கு குழிகளோடும் கழிந்த நாட்கள் வெய்யில் காலங்களில் நா வரண்டு மர இலைகளில் வழியும் பனி நீரையும் விடாது பொலித்தீன் பைகளில் சேகரித்துக் குடித்த நாட்கள், இராணுவம் நகரும் திசைகளில் எல்லாம் பதுங்குகுழிகளை அமைத்தவாறே நகர்ந்த நாட்கள், நீண்ட தொலைதூர சுமை தாங்கிய நடைப்பயணங்கள், ஓயாத சண்டைகளால் உண்டான உடல் களைப்பு, எல்லாவற்றையும் கடந்து ஓயாத வழிப்புடன் மாலதி படையணி போரிட்டது. என்ற இந்த செய்தி சொல்லும் சொல்லாத செய்தி என்ன?

கிடுகுவேலிக் கலாச்சாரத்துக்கு பழக்கப்பட்டுப்போன பெண்கள் சமூகம் ஒன்றில்---  குடும்ப கௌரவம், சாதிக்கெடுபிடி, அந்தஸ்து போன்ற வேலிகளுக்குள் நின்று கொண்டே உணர்வுகளுக்கு தீனி போடும் சமூகம் ஒன்றில்-- சமர்க்களங்களில் நின்றுபிடிக்கும் ஆற்றல் இவர்களுக்கு எப்படி வந்தது? அணிகலன்கள்; பூக்கள் பொட்டுகளிலிருந்தும் சீதனக் கொடுமைகளிலிருந்தும்  தப்பிக்கும் பொருட்டு புலிகளாக மாறியவர்கள் என முற்போக்குப்(?) பெண்ணியவாதிகளின் சாட்டையடிகளுக்குள் அகப்பட்ட புலிப் பெண்களுக்கு மரணம் அருகில் இருந்தபோதும் இயற்கை மீதான நேசிப்பு, இல்லாமையைக் கூட சுவைபடக் கூறும் உணர்வு எப்படி வந்திருக்க முடியும்? இயக்கத்துக்கு போனவர்களை சமூகம் தீண்டத்தகாதவர்களாக தள்ளி வைக்கும் என்ற இவர்களின் தீர்க்க தரிசனங்களின் முன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி குழந்தை குட்டிகளுடன் வாழவும் தேவையேற்படும் போது போரில் முகம் காட்டவும் புலிப்பெண்ணால் எப்படி முடிந்தது?. அவர்கள் நினைப்பது போல் இதற்கும் பயிற்சியளித்தார்களோ ஆண் புலிகள்? இது பெண்ணின் மொழி.  இக்கட்டான நிலையிலும் இயற்கையை நேசிக்கும் ஆற்றல், இல்லாமையிலும் இதயத்தை விட்டுவிடாத ஆற்றல், தோல்வியையும் பெருமனத்துடன் ஒப்புக்கொள்ளும் ஆற்றல், பெரு வலியையும் தாங்கிக் கொள்ளும் ஆற்றல் புலிப்பெண்ணுக்கு மட்டுமல்ல உலகில் உள்ள எந்தப் பெண்ணுக்கும் இயல்பானதொன்று. எனவே இங்கு இட்டுக் கட்டவேண்டிய அவசியம் யாருக்கும் இருக்காது என்றே தோன்றுகிறது. எத்தனையோ வாதப்பிரதிவாதங்கள், கண்டனங்கள், கேலிகள் மத்தியிலும் தமிழீழப் பெண்ணியத்தின் புதிய செல்நெறியை காட்டும் சிறந்த குறியீடாக இந்நூல் பரிணமிக்கப் போவதை காலம் எடுத்து சொல்லும். அதுமட்டுமன்றி தாயக விடுதலையில் விளக்கு ஏந்திய பெருமாட்டிகளாக மட்டும் தமிழ்ப் பெண் பயனபடுத்தப்படவில்லை. ஆண் பெண் என்ற அடையாளத்துக்கும் அப்பால் சென்று சமர்க்களங்களில் சரித்திரமாகி உறங்குபவர்களையும் சரித்;திரமாக இன்றும் உலா வருபவர்களையும் சுமந்திருக்கும் இந்நூல் தமிழீழப் போராட்ட வரலாற்றில் மறைக்க முடியாத மறக்க முடியாத உண்மைகளை வெளிக்கொணரும் அரிய நூலாக ஷவருங்காலத்துக்கான பாதையைத் தேடுவதில் கடந்த காலம் பற்றிய கண்ணோட்டம் அவசியமானது. துரதிருஷ்டவசமாக கடந்த கால வரலாறு என்பது பெண்களின் வரலாற்றை புறக்கணித்த இருட்டடிப்புச் செய்த ஒருபக்கச் சார்பான வரலாறாக இருக்கும் வரை இது எப்படிச் சாத்தியப்படும்-- பெண்களது பங்கு மறுக்கப்பட்ட வரலாறு கி;பி 3000 வருடங்களுக்கு முன்பே தோன்றிவிட்டது. ஆனால் பெண்களது வரலாறோ 19ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் தான் ஆரம்பித்தது. பெண்கள் இறுதியில் ஆண்களுக்கோ வரலாற்றுக்கோ இரையாகிவிடாது வலிமை வாய்ந்தவர்களாக வெல்லற்கரியவர்களாக மீண்டெழுந்தனர்ஷ என்ற றோசலின் மைல்ஸ் என்ற பெண் எழுத்தாளரின் வார்த்தைகளின் சாட்சியாக என்றும் வலம் வரும்.
முழுமை என்பது எதற்குமே சாத்தியமற்றது என்பதற்கு இந்நூலும் விதிவிலக்காக இருக்க முடியாது.
எத்தனையோ இராணுவ அம்சங்களை, போரியல் வியூகங்களை, தோல்விகளை வெளிப்படையாக எல்லோருக்கும் அறியச் செய்த இந்நூல் தென்மராச்சிக்குள் இராணுவம் திடீரென நுழைந்ததை அதை புரிந்து படைநகர்வை தடுக்க தளபதி ஒருவர் பதைபதைத்ததைஷ மண்வெட்டியால் ஒருமுறை தானும் கொத்த முன்னரே இராணுவத்தை நாம் எதிர்கொண்டோம்ஷ என உயிரிழப்புகள் உடமை இழப்புகள் பற்றி வெளிப்படையாக ஒத்துக்கொள்ளும்; நூல் அந்த மாபெரும் பின்னடைவின் காரணம் ஷகண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் ஏதோ காரணங்களுக்காக அன்று அவ்விடத்துக்கு வந்திருக்கவில்லைஷ என்ற ஒற்றை வாக்கியத்தில் தொங்கிக்கொண்டிருப்பது  இதன் கனதியைக் குறைக்கிறது.
எழுதியவர்களும் எழுதப்பட்டவர்களும் ஒரே குடும்பத்தவர்கள் என்பதனால் அன்னியோன்னியம் கூடி போராளியின் பெயருக்கு முன்னால் கொடுக்கப்படும் அந்த பதவிநிலை அடிக்கடி மாயமாய் மறைந்து விடுகிறது போலும். ஆட்டைக்கடித்து மாட்டைக் கடித்து இறுதியில் சிறப்புத் தளபதி கேணல் விதூஷா கூட வெறும் விதூஷாவாய்--- இராணுவக் கட்டமைப்பில் இந்த பதவிநிலைகள் மிக முக்கியமானவை என்பது அடுத்தவர் சொல்லித்தான் தெரியவேண்டும் என்றில்லை.
5.0 படையணியை உருவாக்குவதில் வெற்றிபெற்ற ஒரு படையணிக்கு இறுதிக்காலங்களில் எல்லைப்படைகளாய் உதவிய மக்களின் பங்களிப்பை நிர்வகிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லையோ என்ற வினா மனதில் எழுவதைத் தடுக்கமுடியவில்லை.
களமுனைகள் இருந்த இடங்களை சுலபமாக எவரும் அறிவதற்கும் ஒன்றுக்கு மேற்பட்ட சமர்களில் கலந்து கொண்ட போராளிகளின் விபரங்களை அறிவதற்கும் ஏதுவாய் நூலின் இறுதியில் இடப்பெயர்கள் ஆட்களின் பெயர்கள் சமர்களின் பெயர்களும் அவற்றிற்கான பக்க எண்களும் உள்ளங்கிய ஒரு சொல்லடைவு கொடுக்கப்பட்டிருந்தால்--- கனதி இன்னும் கூடியிருக்கும்.
சமர்க்களம் தொடர்பான சர்வதேச ஊடகங்களின் அபிப்பிராயங்களை ஒன்றிரண்டுடன் விட்டுவிடாமல் நூலின் இடையிடையே அவற்றிற்குரிய காலக் குறிப்புகளுடன் இணைத்திருப்பின்; கனதி இன்னும் கூடியிருக்கும்.