Tuesday, February 04, 2014
விழுந்து கிடப்பதேன் ?
பாதகரின் பாதம் பட்டு
நோயுற்றுப் போனதென்று
தன் பிள்ளைக் குணவளிக்க
எம் மண் மறுத்ததா....?
வளமான எம் வாழ்வை
வறுமைப் புயல் அழித்ததென்று
வாழும் எம்மாசை யென்ன
பாழ்பட்டுப் போனதா....?
கூடிக்களித்த துணை
கூடுவிட்டுப் போனதென்று
பாடிக் களிக்க வென்ன
கவிக்குயில் மறந்ததா....?
விழுதுகள் தன்னை
விலக்கி விட்டதென்று
வேரின் படிமானந்தான்
தேய்ந்து போய் விட்டதா.....?
நட்டு வளர்த்தவன்
விட்டுவிட்டு சென்றானென்று
பூத்துக் குலுங்க எம்
பூஞ்செடிகள் மறுத்ததா.....?
அணைத்த கரங்கள்
அநாதரவாய்; விட்டதென்று
அன்பெனும் ஈரம்
வற்றித்தான் போனதா....?
கனக்கக் காய்த்த மரம்
கல்லெறி பட்டதென்று
காய்க்கும் தொழில்தனை
கைவிட்டு விட்டதா.....?
இரந்துண்;டு வாழும்
இழிநிலை வந்ததென்று
கொடுத்துண்ணும்;;;;; குணத்தை நாம்
எடுத்;தெறிந்து விட்டோமா.....?
அந்நியன் கணைகளால்
அங்கந் தொலைந்ததென்று
வாழும் மனவுரத்தை
மனிதன் தான் இழந்தானா.....?
மனதைத் தொலைத்து விட்டு
வீதிக்கு வந்தாரென்று
பாரம் எமக்கென்று - எம்
உறவுகளை சரிப்போமா....?
நீமட்டும் இங்கு
எல்;லாமே தொலைந்ததென்று
எழும்பும் திறனின்றி
விழுந்து கிடப்பதேன்....?
டிசம்பர் 1992
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அத்தனை வரிகளும் தூண்களாய் என்னைத் தூக்கி நிறுத்தின. இதை எழுதும்போது கவிஞர் மனம் எத்துணை நோவினை அனுபவித்திருக்குமென எண்ணி மாழ்கிறேன்.
நீமட்டும் இங்கு
எல்;லாமே தொலைந்ததென்று
எழும்பும் திறனின்றி
விழுந்து கிடப்பதேன்....?
இன்றுவரை இதுதான் தொக்கு நிற்கும் கேள்வி.
Post a Comment